Tuesday, 23 August 2016

தந்தை இறந்துவிட்டால்வளர்ப்பு தந்தையின் பெயரில் பாஸ்போர்ட்வழங்கலாம் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு:

மதுரை :

   தந்தை இறந்து விட்டால், வளர்ப்பு தந்தையின் பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த நிஜிஸ் ஆர்சிபால்டு என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் அவருடைய தந்தை ஆலிவர் சமர் கடந்த 2000 ஆண்டு இறந்துவிட்டதாகவும் அதன் பின்னர் அவருடைய தாயார் 2வது திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
    இதனை தொடர்ந்து தன்னுடைய பாஸ்போர்ட்டில் இறந்த தந்தையின் பெயருக்கு பதில் வளர்ப்பு தந்தையின் பெயரை ஏற்க மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மறுத்துவிட்டதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் எனவும் கோரியிருந்தார்.
    இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, வளர்ப்பு தந்தையின் பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம் என கூறி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து 4 வாரத்துக்குள் மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment