Thursday, 31 December 2015

இந்தியாவில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை...100,00,00,000

 Thu, Dec 31, 2015, 16:51 [IST] டெல்லி:  

டெல்லி : இந்தியாவில் 100 கோடி செல்போன் இணைப்புகள் இருப்பதாக புள்ளி விவரத் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 120 + கோடி என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதத்திலேயே இந்தியாவின் செல்போன் இணைப்புகள் எண்ணிக்கை 100 கோடியைத் தொட்டு விட்டதாக டிராய் தெரிவித்துள்ளது. அதி வேகமாக இந்தியாவில் செல்போன் துறை வளர்ந்து வருவதாகவும், சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் செல்போன் சந்தாதாரர்கள் உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. அதிகரிப்பு... சமீப காலமாக இந்தியாவில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருவதாகவும், சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களைக் குறைத்ததைத் தொடர்ந்து இது மேலும் அதிகரித்துள்ளதாகவும் டிராய் தெரிவிக்கிறது. கூடுதலாக... கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 70 லட்சம் செல்போன் இணைப்புகள் கூடுதலாக சேர்ந்துள்ளன என்று கணக்கு கூறுகிறது. இந்த திடீர் உயர்வுதான் மொத்த எண்ணிக்கையை 100 கோடியாக உயர்த்த உதவியுள்ளது. சீனர்கள்... ஆனால் இந்த விஷயத்தில் நம்மை சீனா கடந்த 2012ம் ஆண்டிலேயே முந்தி விட்டது. அந்த ஆண்டில்தான் சீனாவில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 100 கோடியைத் தொட்டது. பெருமை... இதுகுறித்து மத்திய ஐடி மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவி பிரசாத் கூறுகையில், "இது நிச்சயம் நமக்கு பெருமையான தருணமாகும். தொழில்நுட்பத்தில் இந்தியா மிக வேகமாக உயரத்தைத் தொட்டு வருவதை இது நிரூபிப்பதாக உள்ளது" என்றார். மொத்த எண்ணிக்கை... 100 கோடி என்பது 100 கோடி இந்தியர்கள் என்று அர்த்தம் கிடையாது. மொத்த இணைப்புகளின் எணணிக்கைதான் 100 கோடிஎன்பதாகும். பீகார்... இந்தியாவில் பீகார் போன்ற மிகவும் வறுமையான மாநிலங்களில் செல்போன் பரவல் என்பது சற்று குறைவாக உள்ளதாகவும் டராய் கூறுகிறது. அங்கு 54 சதவீதத்திற்கும் கீழாக செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை உள்ளதாம். செல்போனில் இணையம்... இந்தியாவில் பெரும்பாலான செல்போன் பயன்பாட்டாளர்கள் செல்போனில்தான் இணையத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். எனவே ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி விஸ்வரூபத்தை எட்டியுள்ளதாகவும் டிராய் தெரிவிக்கிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/india-hits-one-billion-mobile-phone-subscribers-243508.html

துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கர தீ விபத்து

 Posted by: Fri, Jan 1, 2016, 0:22 [IST]
 

துபாய்: துபாய் நாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றான புர்ஜ் கலீஃபா அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கர தீ விபத்து நிகழ்ந்துள்ளது. துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா என்ற இடத்தில் உள்ள 63 அடுக்கு மாடி ஆடம்பர ஹோட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எதிர்பாராதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உலகில் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றான இந்த கட்டிடத்தில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவம் அறிந்த தீ அணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தீ விபத்திற்கான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை. தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் தெரியவில்லை.


Read more at: http://tamil.oneindia.com/news/international/fire-breaks-in-dubai-skyscraper-243518.html

Wednesday, 30 December 2015

நாகர்கோவிலை சேர்ந்த இளம் விஞ்ஞானி மாஷா நஸீம், மைசூர் பல்கலைகழகத்தில் நடைபெறவுள்ள 103 வது இந்திய அறிவியல் மாநாட்டில் உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளார்.



நாகர்கோவிலை சேர்ந்த இளம் விஞ்ஞானி மாஷா நஸீம், மைசூர் பல்கலைகழகத்தில் நடைபெறவுள்ள 103 வது இந்திய அறிவியல் மாநாட்டில் உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் வாரத்தில் இந்திய அறிவியல் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. 103 வது மாநாடு மைசூரில் நடைபெற உள்ளது. ஜனவரி 3 முதல் 7 வரை 5 நாட்கள் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் உட்பட பல நாடுகளிலிருந்து 20 ஆயிரம் விஞ்ஞானிகள் கலந்து கொள்கின்றனர்.

இம்மாநாடு உலகின் மிகப்பெரிய சர்வதேச அறிவியல் மாநாடு என கருதப்படுகிறது. மைசூர் பல்கலைக்கழகத்தில் சுமார் 50க்கு மேற்பட்ட அரங்குகளில் தனித்தனியே பல்வேறு அமர்வுகளுடன் நடைபெற உள்ளது. குழந்தைகள் அறிவியல் மாநாடு, பெண்கள் அறிவியல் மாநாடு மற்றும் புகழ்பெற்ற அரசுத்துறை நிறுவனங்கள் பங்கேற்கும் பெருமை மிகு இந்தியா என்ற அறிவியல் கண்காட்சி என பல்வேறு பெரும் பிரிவுகளாக இம்மாநாடு நடைபெறுகிறது.

இதில் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இளம் விஞ்ஞானி மாஷா நஸீம் தனது சாதனை பயணத்தினை மாணவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். 5 துணை தலைப்புகளின் கீழ் 1 மணி நேர அமர்வாக இவரது உரை அமைக்கப்பட்டுள்ளது. மாஷா நஸீம் சென்னையில் பட்ட மேற்படிப்பு பயின்று வருகிறார். அண்மையில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பேரில் ஒருவராக, அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துவோம் மாஷா நஸீம் அவர்களை

சவுதி: ரூ.6.64 கோடி நஷ்டஈடு தரத் தவறிய பிலிப்பைன்ஸ் கொலையாளியின் தலை துண்டிப்பு

 Posted by:  Wed, Dec 30, 2015, 11:41 [IST] 


ரியாத்: சவுதி அரேபியாவில் சூடானைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த பிலிப்பைன்ஸை சேர்ந்த நபருக்கு பொது மக்கள் முன்னிலையில் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் கொலையானவரின் குடும்பத்திற்கு ரூ.6 கோடியே 64 லட்சம் நஷ்ட ஈடு அளிக்கத் தவறியதை அடுத்து தண்டனை நிறைவேற்றப்பட்டது. பிலிப்பைன்ஸை சேர்ந்தவர் ஜோஸ்லிடோ லிடாசான் ஜபான்டா(35). டைல்ஸ் போடுபவரான அவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு அவர் சூடானை சேர்ந்த ஒருவரை கொலை செய்ததாகவும், கொள்ளையடித்ததாகவும் ரியாத் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜபான்டாவுக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால் கொலையானவரின் குடும்பத்திற்கு ரூ.6 கோடியே 64 லட்சம் நஷ்ட ஈடு அளித்தால் அவரது மரண தண்டனை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஜபான்டாவின் குடும்பத்தார் மற்றும் பிலிப்பைன்ஸ் அரசால் ரூ.3 கோடியே 24 லட்சம் தான் திரட்ட முடிந்தது. ஆனால் அந்த பணத்தை ஏற்றுக் கொண்டு ஜபான்டாவுக்கு மன்னிப்பு வழங்க கொலையானவரின் குடும்பத்தார் மறுத்துவிட்டனர். இதையடுத்து செவ்வாய்க்கிழமை பொது இடத்தில் வைத்து ஜபான்டாவின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Read more at: http://tamil.oneindia.com/news/international/filipino-man-beheaded-saudi-arabia-failed-pay-1-million-ba-243407.html

அமைச்சரவையை மாற்ற முடியாமல் மோடி தவிப்பு : திறமையான நபர்கள் கிடைக்காததால் திணறுவதாக தகவல்

Modi is unable to change the cabinet as anxiety : reported lack of skilled individuals










டெல்லி: மத்திய அமைச்சரவையில் நியமிக்க திறமையான நபர்கள் கிடைக்காமல் பிரதமர் மோடி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியடைந்ததையடுத்து அமைச்சரவை சகாக்கள் சிலர் மீது மோடி அதிருப்தியில் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பீகார் தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுவான அரசு பணிகளிலும் திறமையை காட்டத் தவறியவர்களை நீக்கிவிட்டு புதிய அமைச்சர்களை நியமிக்க மோடி முடிவு செய்தாலும், திறமையான நபர்கள் கிடைக்காததால் அந்த முடிவு கைவிடப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனிடையே அடுத்த ஆண்டு துவக்கத்தில் அமைச்சரவையில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்ய பிரதமர் மோடி முனைப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு பாதுகாப்புத் துறையை வழங்க மோடி விரும்புவதாகவும் கூறப்படுகிறது. சிறுபான்மையினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் இணை அமைச்சர்களான கிரிராஜ் சி்ங், நிரஞ்சன் ஜோதி ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. உள்நாட்டு முக்கியத்துவம் வாய்ற்த இலாகாவுக்கு சுஷ்மா ஸ்வராஜ் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. காங்கிரஸ் அளவுக்கு திறமையான நபர்கள் இல்லாததால் மத்திய அமைச்சரவை எதிர்பார்த்த அளவு செயல்படவில்லையென பாஜக துணை தலைவர் வினய் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இந்நி்லையில் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் டெல்லயில் சந்தித்து அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசித்த முடிவெடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஐ.ஐ.டி மட்டும்தான் வாழ்க்கையா?


டந்த வாரம் இறந்த 14 வயது மாணவனோட சேர்த்து, இந்த வருடம் மட்டும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருக்கும் கோட்டா இன்ஸ்டிடியூட்டில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் மட்டும் 30 பேர். இத்தனை மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்ள காரணம், ஒன்றுதான்.. மன அழுத்தம்!

ஐ.ஐ.டி.யில் தேர்வாக வேண்டுமென்று, பள்ளி படிக்கும் போதே, 'எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டி'  என்று இந்த வகுப்புகள் நடத்தப்படுகிறது. மாணவன் பதினோரம் வகுப்புக்கும் , பன்னிரெண்டாம் வகுப்புக்கும் ஒரே நேரத்தில் படிக்கணும். அதே நேரம், ஐ.ஐ.டி போன்ற பெரிய நிறுவனங்களின் நுழைவு தேர்வுக்கும் படிக்கணும். இதை சமாளிக்க முடியாமல், மனதளவில் அதிகமாக பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஐ.ஐ.டி.யில் இருக்கும் 10 ஆயிரம் இடங்களுக்கு 13 லட்சம் மாணவர்கள் போட்டி போடுகிறார்கள். இந்த போட்டியை வைத்து, ஐ.ஐ.டி கோச்சிங் என்று பணம் பார்க்கும் நிறுவனங்கள்,  வருடம் முழுக்க காலை முதல் மாலை வரை மாணவர்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. மாணவர்களை அந்த வட்டத்துக்குள்ளேயே சிந்திக்க வைக்கிறது.
 
இதைப்பற்றி சேலத்தை சேர்ந்த கல்வி ஆர்வலர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், "பெற்றோரிடமும், கல்வி  தேர்வு முறையிலும் மாற்றம் வரும் வரை இது போன்ற தற்கொலைகள் தொடரும்" என்றார்.

ஒரு மாணவனுக்கு எவ்வளவு திறன் இருக்கு, அவனால் என்ன படிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள பெற்றோர்தான் முதலில் அக்கறை செலுத்த வேண்டும். தாங்கள் விரும்பும் படிப்பை படிக்கும் சக்தி தங்களின் பிள்ளைகளிடம் இருக்கா, இல்லையானு யோசிக்க மாட்டேன் என்கிறாங்க. கடின உழைப்பால் பிள்ளைகளை அதிக செலவில் படிக்க வைப்பவர்கள், தங்களின் பிள்ளைகளின் ஆற்றல், திறன் பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு எதிர்காலம் குறித்து ஒரு தெளிவான ஐடியா இல்லாதபோதும் கூட, பிள்ளையால் என்ன படிக்க முடியும் என்பதை தெரிந்துக்கொண்டுதான் வழிக்காட்ட வேண்டும். மாறாக தங்களின் விருப்பத்தை திணிக்க கூடாது.
இது ஒரு மாணவனுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட மன அழுத்தம் இல்லையே. 30 பேருக்கு அதே அழுத்தத்தில் தற்கொலை என்னும்போது கூட, தங்களின் கல்வி முறையில் தவறு உள்ளது என புரியவேண்டாமா? பரவலாக மாணவர்கள் மன அழுத்தத்தினால் தற்கொலை முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.இல்லையென்றால், மன அழுத்தத்தோடு இருக்கிறார்கள்.
நாட்டின் வருங்காலத்தை உருவாக்குபவர்கள் இன்று இவ்வளவு மன அழுத்தத்தில் இருக்கிறார்கள், இறந்து போகிறார்கள் என்று அரசாங்கத்திற்கும் அக்கறை வேண்டும். அதற்கான மாற்றத்தை உருவாக்க வேண்டும்.

இந்த முடிவை எடுக்கும் மாணவர்கள், பெரும்பாலும் பன்னிரெண்டாவது படிப்பவர்கள்தான். பத்தாவது வரும் போதே மன அழுத்தம் ஆரம்பிக்கிறது. பதினோராம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு வரும் போது இன்னும் அதிகமாகிறது. பதினோரம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தகுதி தேர்வு நடத்த வேண்டும். அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களை மட்டும்தான் பன்னிரெண்டாம் வகுப்பில் ஐ.ஐ.டி கோச்சிங்குக்கு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் மன அழுத்தம் குறையும். ஐ.ஐ.டி நுழைவு தேர்வுகள், பொது தேர்வு முடிந்து அடுத்த நாள் வைக்கணும். இருபது நாள் கழித்து தேர்வு வைத்தால்,  இடைப்பட்ட நாட்களில் மாணவர்கள் அதுநாள் வரை படித்த விசயங்கள் மறந்துபோக ஆரம்பிக்கும். ஆசிரியர்களும் 2 வருட பாடத்தை 20 நாட்களில் எப்படி நடத்த முடியும்? 

தேர்வுகள் எல்லாம் எளிமையாக பாஸ் பண்ண வைக்க வேண்டும். ஆனால், சென்டம் எடுக்க கடினமா இருக்கணும். அதுதான் ஆரோக்கியமான தேர்வு. உதாரணத்துக்கு போன வருஷம் ஜே.இ மெயின் தேர்வில் 360 மதிப்பெண்ணுக்கு 105 மார்க் தான் கட் ஆப். இதில் 310 மார்க் வாங்கினவர்கள் 100 பேர் தான். 270 மார்க் 1000 பேரும், 210 மார்க் 10,000 பேரும், 140 மார்க் 50,000 பேர் வாங்கியிருக்காங்க.  முழு மார்க் வாங்கினால்தான்  ஐ.ஐ.டி என்று இல்லாமல், 140 மார்க் வாங்கினாலே ஐ.ஐ.டி.க்கு அடுத்த அளவில் இருக்கும் என்.ஐ.டி.யில் அட்மிசன் கிடைக்க வாய்ப்புகள் இருக்கு.
 
இதுவே தமிழ்நாடு பொதுத் தேர்வில், 200/200 மார்க் 9,000 பேர் வாங்குகிறார்கள். இதை பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்கள். அதனால் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்குகிறார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது. இந்த பொதுத் தேர்வு ஆரோக்கியமானதும் கிடையாது. பொதுத் தேர்வு 50 கேள்விகள் எல்லா மாணவர்களுக்கும் எளிமையாக இருக்க வேண்டும். அடுத்த 50 கேள்விகள் கடினமாக இருக்க வேண்டும். அதில் 90 சதவீதம் மார்க் வாங்குபவர்களைதான் ஐ.ஐ.டி.க்கு போக அனுமதிக்க வேண்டும். 4.30 மணிக்கு பள்ளி நேரம் முடிந்து, 5.30 முதல் 9.30 மணி வரை ஐ.ஐ.டி கோச்சிங் கொடுக்கிறாங்க. சனிக்கிழமை, ஞயிற்றுகிழமைகளில் ஐ.ஐ.டி அட்வான்ஸ் மற்றும் மெயின் தேர்வுக்கு, சிறப்பு வகுப்புகள் எடுக்கிறாங்க... தேர்வுகளும் வைக்கிறாங்க. ஒரு பொது விடுமுறை கூட விட்டு வைப்பதில்லை. ஒரு நாள் கூட ரெஸ்ட் இல்லை.

இந்தாண்டு, நல்ல ரிசல்ட் கொடுத்தாதானே அடுத்தாண்டு, நிலையா நிற்க முடியும் என கல்வி நிறுவனங்களும் அதிக அளவு கோச்சிங் கொடுக்கிறாங்க. அடுத்தடுத்து படி படி என சொல்லும் பள்ளி, கோச்சிங் ஒரு பக்கம்... இவ்வளவு செலவு செய்து படிக்க மாட்டேன் என்கிறான் என சொல்லும் பெற்றோர்கள் மறுபக்கம். அப்ப அந்த மாணவர்களுக்கு மன அழுத்தம் எந்த அளவில் இருக்கும்? எந்த கல்வி நிறுவனமும் ஞாயிற்றுக்கிழமை இயங்க கூடாது. மாணவர்களுக்கு ரெஸ்ட் கொடுக்கணும் என முதலில் கொண்டு வரவேண்டும்.

எல்லா ஊர்களிலும் இன்று ஐ.ஐ.டி கோச்சிங் பெரிய பிசினஸ் ஆகிவிட்டது. ஒவ்வொரு கோச்சிங் இன்ஸ்டிடியூட்டிலும், பிள்ளைகளை படிக்க வைக்க குறைந்தது ஒரு லட்சம் அவசியம். எந்த பள்ளியில் ஐ.ஐ.டி கோச்சிங்கும் சேர்த்து நடத்துக்கிறார்களோ அங்குதான் பெற்றோர்கள் அலை மோதுகிறார்கள். எங்க பள்ளியில் படித்தவர்கள் 100 பேர் ஐ.ஐ.டி.யில் தேர்வாகியிருக்கிறார்கள் என நிறைய விளம்பரம் கொடுக்கப்படுகிறது. இது முற்றிலும் தவறு. கல்விக்கு விளம்பரம் தேவையில்லை. அந்த பள்ளி நிறுவனத்தின் சாதனைகளை அவர்களின் இணையதளத்தில் போட்டுக்கொள்ளலாம். இப்படி ஊர் முழுக்க விளம்பரப்படுத்தும்போது, பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

ஐ.ஐ.டி என்பது பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு நல்ல சாய்ஸ்தான். உங்களின் பிள்ளை பத்தாவது சி.பி.எஸ்.சி தேர்வில் 9/10 க்கு மேல் மார்க்ஸ் இருந்தா, ஐ.ஐ.டி.க்கு படிக்க வைக்கலாம். ஆனால், 7/10, 8/10 வாங்கின பிள்ளைகளை ஐ.ஐ.டி.க்கு திணிக்காதீர்கள். சேமிப்பை பிள்ளைகளின் படிப்பில் கொட்டுகிறார்கள். பிள்ளைகள் படிக்க திணறும்போது, 'நான் கஷ்டப்பட்டு இவ்வளவு செலவு பண்ணி படிக்க வைக்கிறேன், நீ சரியா படிக்க மாட்டேன் என்கிறாய்' என்று வார்த்தைகளால் ஒரு குற்ற உணர்ச்சியை பிள்ளைகள் மனதில் விதைகிறார்கள். 'அய்யோ, அம்மா அப்பா பாவம்... நம்மளாலதான் சரியா படிக்க முடியல!' என நாளடைவில் மாணவர்கள் வருந்தப்பட ஆரம்பிக்கிறார்கள்.

பத்தாவது, பன்னிரெண்டாவது படிக்கும் மாணவர்களுக்கு நிறைய தன்னம்பிக்கை வகுப்பு, யோகா, ஒருநாள் விடுமுறை போன்றவை அதிகமாக தேவைப்படுகிறது. ஐ.ஐ.டி மட்டும்தான் உலகமா? மாணவர்கள் சாதிக்க, உலகத்தில் இன்னும் நிறைய துறைகள் இருக்கின்றன..! 

புத்தாண்டு இரவில் இதெல்லாம் செய்யாதீர்கள்! - சொல்கிறது காவல்துறை


ங்கிலப் புத்தாண்டு பண்டிகையை வரவேற்கும் விதமாக,  சாலைகளில் நடக்கும் கொண்டாட்டத்தில் நடந்து முடிகிற அசம்பாவிதங்கள் ஆண்டுதோறும் கூடிக் கொண்டே போகின்றன. அதிலும் தமிழகத் தலைநகர் சென்னையில் இது ஏகத்துக்கும் அதிகரிக்கிறது!

மெரீனா,  ஈ.சி. ஆர். போன்ற கடற்கரைச் சாலைகளில் சீறிப் பாயும் வாகனங்களால் நடக்கும் உயிரிழப்பு விபத்துகள், மெரீனா தொடங்கி மாமல்லபுரம் வரை  கடல் குளியலில் எதிர்பாராமல் நடந்து விடும் மூச்சுத்திணறல் மரணங்களை கடுமையான கண்காணிப்பு, எச்சரிக்கை மூலம் காவல்துறையினர் நினைத்தால் தடுத்து விட முடியும். உச்சக்கட்ட மது விருந்தால் இறக்கிறவர்களை மட்டும்தான் போலீசாரால் தடுக்க முடியாது.
டிசம்பர் 31- நள்ளிரவுக் கொண்டாட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர என்ன மாதிரியான வியூகத்தை  ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்?  என போலீஸ் ஏரியாவில் கேட்டதில் , வந்த தகவல்கள்... 

#புத்தாண்டில்  மது அருந்திவிட்டு பொது இடங்களில் கொண்டாட்டம் என்ற பேரில் ஆடிக் கொண்டிருக்கக் கூடாது. மீறினால் நடவடிக்கைதான்... எல்லாமே அளவோடு இருந்து விட்டால், ஆண்டின் முதல் நாள்தானே என்ற மனித நேயத்தோடு கண்டும் காணாமலும் இருந்து விடுவோம்.

# நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறுகிற அத்தனை அசம்பாவித சம்பவங்களுக்கும் ஹோட்டலின் மேலாளர், உரிமையாளரே பொறுப்பு. ஹோட்டல்களில் போடப்படுகிற மேடைகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அனுமதியை ஹோட்டல் நிர்வாகம் பெற வேண்டும் என்பதை உறுதிப்படுத்தச் சொல்லியிருக்கிறோம்.
# அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நட்சத்திர ஹோட்டலை திறந்து வைத்து கேளிக்கைகளை தொடர கண்டிப்பாக அனுமதி கிடையாது.  அதேபோன்று மது ஆதிக்கத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களை நீச்சல் குளத்தில் இறங்க ஹோட்டல் நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

# ஈ.சி.ஆர். பகுதிகளில் இருக்கிற ஒருசிலர் தங்களுக்கு சொந்தமான பண்ணை வீடுகளை "பெஸ்டிவல்-ரென்ட்" என்ற பெயரில் நாளொன்றுக்கு ரூ. 50 ஆயிரம் முதல் பல லட்ச ரூபாய் என்றளவில் வாடகைக்கு விடுவதாக கடந்த ஆண்டே புகார்கள் எழுந்தது. ரகசிய சோதனையில் அந்த வீடுகளை வாடகைக்கு எடுத்து வைத்து சமூக விரோதச் செயல்களில், குறிப்பாய் போதை ஊசி, வரம்பு மீறிய  உல்லாசங்களில் ஈடுபட்டவர்களைப் பிடித்து நடவடிக்கை எடுத்தோம். பண்ணை வீட்டின் அதிபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தோம்.

# குடித்து விட்டு கார், பைக் போன்ற வாகனங்களை  ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து, வாகனம் பறிமுதல்  என்பதோடு அவர்களுடன் காரிலோ, பைக்கிலோ சேர்ந்து பயணிக்கும் நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யலாமா என்றும் திட்டம் ஆலோசனையில்  உள்ளது.

இத்தனைக்  கெடுபிடிகள் இருந்தாலும், மெரீனா கடலில் குளிக்க சென்று இறக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதும்  சாலை விபத்துகளில் இறக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் கூடிக்கொண்டேதான் போகிறது. புத்தாண்டு சமயம் டிசம்பர் 31- இரவு 11 மணியிலிருந்து 12 மணிவரை கூடுகிற அல்லது வாகனங்களில் சீறிப்பாய்கிற மனிதத் தலைகள் மட்டும் ஐந்து லட்சம் முதல் எட்டு லட்சம் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அதே வேளையில் மெரீனா, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர், மாமல்லபுரம் கடற்கரை மணற் பரப்பில் மட்டுமே பத்து லட்சத்தில் தொடங்கி ஐம்பது லட்சம் பேர் உலவுகிறார்கள். இது ஒரு மணிநேரக் கணக்கு மட்டுமே. சாலைகளில் சீறிப் பாயும் வாகனங்கள், நட்சத்திர ஓட்டல், பண்ணை வீடுகள், கடற்கரை மணல் வெளிகள், சுற்றுலா மற்றும்  வழிபாட்டுத் தலங்கள் என்று ஒட்டு மொத்த மக்களையும் பல்வேறு இடங்களில்  பாதுகாப்பு அளிக்க வேண்டிய கூடுதல் கடமை போலீசாருக்கு.

குறிப்பாக வேகமாய் பறக்கும் வாகனங்கள் மூலமும், கடலில் குளித்தல் மூலமும் அதிகபட்சமாய் பறிபோகும் உயிர்களை தடுத்துக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் போலீசாருக்கு இருக்கிறது.

சாலை விபத்துகளுக்கு பிரதான காரணமாக ஒட்டுமொத்த அளவுகோலில் நிற்பது மது அருந்திவிட்டு வானம் ஓட்டுதலே என்பது இறுதி முடிவாக உள்ளது. கடலில் , நீர்நிலைகளில், இன்னபிற கொண்டாட்ட பொழுதுகளில் உயிரிழப்புக்கு காரணமாக  சொல்லப்படுவதும் மது அருந்தி விட்டு இவைகளில் ஈடுபடுதலே என்பதும் இதன் முடிவாக இருக்கிறது.

புத்தாண்டை கொண்டாட பொதுமக்கள் தயார்... உயிர்கள் பறி போகாதபடி அவர்களை காப்பாற்ற போலீஸ் தயாரா ? என்ற கேள்வியைத்தான் (அவர்களின்  ஆள் பற்றாக்குறை சோகம் இருந்தும்) நாம் கேட்க வேண்டியுள்ளது.

2014 மே- இறுதி நிலவரமாக தேசிய குற்ற ஆவணக் காப்பகமும், இதர சமூக ஆர்வல குழுமங்களும் அளித்துள்ள  சாலை விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த ஒரு விவரம் இங்கே... 

இந்திய அளவில், சாலை விபத்து : 67,255 , காயம் மட்டும் : 77,725, இறப்பு : 15,190. நாட்டின் மொத்த விபத்தில் 14.9% தமிழ்நாட்டில்தான் நடக்கிறது.

2013-ம் ஆண்டை விட 2014-ம் ஆண்டு 1.5%  கூடுதலாய் விபத்துகள் நடந்துள்ளன.
உயிரிழப்பில் உ.பி. முதலிடமும், மகாராஷ்டிரா இரண்டாமிடமும், தமிழகத்துக்கு மூன்றாமிடமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

டூ வீலர் மூலம் ஏற்பட்ட விபத்துகள்  26.4%, லாரி, கனரக வாகனங்கள் மூலம் 20.1%, கார்கள் மூலம் 12.1%,  வாகனங்கள் பழுது காரணமாக 2.8%, மோசமான வானிலை காரணமாக, 5.3%, மதுபோதையில் வாகனத்தை இயக்கியதின் காரணமாக 2.6% என்ற அளவில் விபத்துகள் நடந்திருக்கின்றன.

நகர்ப்புறங்களில் 54.7% அளவும், கிராமப் புறங்களில் 45.3% அளவும் விபத்துகள் நடந்துள்ளன. இதில் தேசிய நெடுஞ்சாலைகளில் 5,189, மாநில சாலைகளில் 5,090, விரைவுச் சாலைகளில் 155, பிற சாலைகளில் 4,756 என்ற கணக்கில் உயிரிழப்பு சம்பவங்கள் 2014- மே மாதம் வரையிலான கணக்கில் வருகின்றன.

உலக மக்கள் தொகையில் 17.5% மக்கள் வாழ்கிற இந்தியாவில் சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு மட்டுமல்ல... கடலில், நீர் நிலைகளில், இன்னபிற சூழல்களில் கவனக் குறைவாகவும், போதிய வழிகாட்டல் இல்லாமலும் இறக்கிறவர்களின் எண்ணிக்கை 2020-க்குள் முதல் இருபது இடங்களை பிடிக்கக் கூடும் என்ற கவலை சமூகவியலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

1970-ல் லட்சத்துக்கு 2.7% சதவீதம் (13 பேர்) மட்டுமே  சாலை விபத்தில் உயிரிழந்த நிலை மாறி, 2011-ல் 11.8% உயிரிழப்பும், 42.3% காயமும் என்ற நிலைக்கு சாலை விபத்துகள் எகிறியது. நாட்டிலுள்ள மொத்த வாகனத்தில் 13.9% சதவீதம் தமிழ்நாட்டில்தான் புழக்கத்தில் இருக்கின்றன.

Tuesday, 29 December 2015

வாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...!

பாக்., போனால் 'குளோஸ்!' சிவசேனா விமர்சனம்

பதிவு செய்த நாள்: டிச 29,2015 00:48
  மும்பை,:'பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்ட யாரும், அரசியலில் நீண்ட காலம் நீடித்ததில்லை' என, பா.ஜ.,வின் தோழமைக் கட்சியான சிவசேனா விமர்சித்துள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள, சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான, 'சாம்னா'வில் வெளியாகியுள்ள தலையங்கம்:பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, எல்.கே.அத்வானி, பாகிஸ்தான் சென்ற போது, அந்நாட்டின் முதுபெரும் தலைவரான, முகம்மது அலி ஜின்னாவின் கல்லறைக்கு சென்றார்; அவரை புகழ்ந்து பேசினார். அதன் பின், அத்வானியின் அரசியல் வாழ்க்கை சரிவை சந்தித்தது; தற்போது, கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு உள்ளார். பா.ஜ., மூத்த தலைவர் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, பாகிஸ்தானுடனான உறவை புதுப்பிக்கும் நோக்கில், இரு நாடுகள் இடையே பஸ் போக்குவரத்தை துவக்கினார். இந்தியாவுக்கு வந்த, பாக்., முன்னாள் அதிபர் முஷாரப்பை, ஆக்ராவில் வாஜ்பாய் சந்தித்தார். அதன்பின், அவரால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது.

தற்போது, பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தானுக்கு சென்று, அந்நாட்டு அதிபர் நவாஸ் ஷெரீபை சந்தித்து பேசியுள்ளார். இதே காரியத்தை, காங்., பிரதமர்கள் செய்திருந்தால், பா.ஜ., தலைவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பரா என, ஒட்டு மொத்த நாடே கேள்வி கேட்கிறது. பாகிஸ்தான், சாபமிடப்பட்ட மண். லட்சக்கணக்கான அப்பாவி இந்தியர்களின் ரத்தம் உறைந்த பூமி அது. அங்கு சென்ற இந்திய தலைவர் யாரும், நீண்ட காலம் அரசியலில் நீடித்ததில்லை. இவ்வாறு தலையங்கத்தில் கூறப்பட்டு உள்ளது

2017 மார்ச் முதல் அஞ்சலகங்கள் வங்கிகளாக செயல்படும்: மத்திய அமைச்சர் தகவல்

பதிவு செய்த நேரம்:2015-12-29 19:49:03


புதுடெல்லி: அஞ்சலகங்கள் வங்கிகளாக மாறும் திட்டம் 2017 மார்ச் மாதம் முதல் தொடங்கும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அஞ்சலகங்களை பேமன்ட் பேங்க் எனப்படும் பணம் வினியோகிக்கும் வங்கிகளாக மாற்றும் திட்டம் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும். அஞ்சலகங்களில் தொடங்கப்படும் பேமன்ட் வங்கியுடன் இணைந்து செயல்பட உலக வங்கி, பார்கிலே நிறுவனம் உள்ளிட்ட 40 சர்வதேச நிதி அமைப்புகள் ஆர்வம் காட்டி யுள்ளன.  பேமெண்ட் வங்கி தொடங்க 11 நிறுவனங்களின் விண்ணப்பங்களை கொள்கை அளவில் ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து வருகிற ஆகஸ்ட் மாதம் தபால் துறை உள்ளிட்டவற்றை பேமன்ட் வங்கிகளாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பதுறை சார்பில் டிசம்பர் 25ம் தேதி முதல் சிறந்த நிர்வாக வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஹரித்துவார், ஆஜ்மீர் உள்ளிட்ட இடங்களில் வைபி ஹாட் ஸ்பாட் உள்பட 25 வசதிகளை ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார். மேலும் அவர் கூறுகையில், புதிய திட்டங்களை தொடங்குவதில் பிஎஸ்என்எல் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டிசம்பர் 20ம் தேதி வரை 33 ஆயிரத்து 702 கிராமங்களுக்கு தொலை தொடர்பு வசதி கிடைக்கும் வகையில் 75 ஆயிரத்து 593 கிமீ தொலைவுக்கு ஆப்டிகல் பைபர் கேபிள் பதிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் மார்ச் மாதத்திற்குள் 50 ஆயிரம் கிராமங்களுக்கும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1 லட்சம் கிராமங்களுக்கும் தொலை தொடர்பு வசதி மேம்படுத்தப்படும். டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விரிவுபடுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இணைய சேவை சென்று சேர்வதற்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு

Posted by: Admin Tue, Dec 29, 2015, 18:30 [IST]
 

தூத்துக்குடி: தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பெய்துவரும் கன மழையால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளதால் பேரிடர் தடுப்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதேபோன்ற கன மழை அடுத்த 24 மணி நேரங்களில் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் தொடரும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது. ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் மேலும் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. அம்மாவட்ட கலெக்டர் எம்.ரவிக்குமார், இன்று ஆய்வு கூட்டம் நடத்தி, பேரிடர் தடுப்பு பற்றி ஆலோசித்தார். தூத்துக்குடியில், இன்று காலை கன மழை பெய்த நிலையில், மாலையில் லேசான சாரல் விழுந்தது. தேசிய பேரிடர் மீட்பு படை தூத்துக்குடிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. 83 இடங்களில், மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/rains-lash-southern-coastal-tn-districts-admin-on-alert-243375.html

அதிமுக - தேமுதிக கலவரத்துக்கு காரணம் காவல்துறையா...?


தஞ்சாவூர் ; தஞ்சாவூரில் தேமுதிக- அதிமுக கட்சியினரிடையே எழுந்த மோதலின் எதிரொலியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட  50 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இருகட்சியினரிடையே எழுந்த இந்த மோதலை காவல்துறையினரே திட்டமிட்டு ஏற்படுத்தியதாக பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது இப்போது.
விஜயகாந்த் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டதுக்கு திட்டமிட்டு முதல்வர் ஜெயலலிதா படம் போட்டு அதிமுகவினரால் திறக்கப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை அருகே அனுமதி வழங்கியதன் மூலம் கலவரத்துக்கு காரணம் காவல்துறையே என புகார் வாசிக்க தொடங்கியுள்ளனர் தஞ்சாவூரில்.தேமுதிக தலைவர் விஜயகாந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி தஞ்சாவூரில் நேற்று ஆர்பாட்டம் நடத்தினார். அப்போது மேடை அருகே பேருந்து நிறுத்த நிழற்குடையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை தொண்டர்கள் அகற்றினர்.

இதனால் கூட்டம் முடிந்து விஜயகாந்த் சென்றவுடன் அதிமுக நிர்வாகிகள் அந்த இடத்தில் திரண்டு தேமுதிகவினர் வைத்திருந்த விஜயகாந்த் பிளக்ஸை கிழித்தனர். கட்சியின் கொடியை தீ வைத்து கொளுத்தினர். இதனால் தஞ்சையில் இரு கட்சியினரிடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த தகவல் தமிழகம் முழுவதும் பரவியது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட தேமுதிக தொண்டர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கபட்டு அவர்களும் தாக்கபட்டனர்.
இவை எல்லாம் நடந்தது காவல்துறையினர் முன்னிலையில் என்பதுதான் வேதனை. இது குறித்து நம்மிடம் பேசிய அரசியல் ஆர்வலர் ஒருவர்,“ எதிர்கட்சி தலைவராக உள்ள விஜயகாந்த் அரசுக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அரசுக்கு எதிராக அவர் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கிய காவல்துறையினர் மெத்தனமாக நடந்து கொண்டதுதான் பிரச்சனைக்கு காரணம்.

அதிமுகவினரால் திறக்கப்பட்ட அந்த நிழற்குடையில் ஜெயலலிதாவின் படமும், அவர் பெயரும் பெரிதாக எழுத்தப்பட்டு பளீரென இருந்தது. விஜயகாந்த பேசிகொண்டே இருக்கும்போது முதல்வர் படத்தை பார்த்தார்.
உடனே அதை மறைக்க சொன்னார். தலைவரை ஜெயலலிதா படம் டென்ஷன் படுத்தியதாக கருதிய அவரது தொண்டர்கள் ஜெ படத்தை மறைப்பதற்கு பதிலாக விஜயகாந்த பிளக்ஸை எடுத்துவிட்டார்கள். உடனே விஜயகாந்த் என் படத்தை எடுத்தால் அந்த அம்மா படத்தையும் எடுக்க வேண்டும் என சொன்னார். தொண்டர்கள் உடனே அந்த படத்தை நீக்கிவிட்டார்கள் இதுதான் இவ்வளவு கலவரத்துக்கும் காரணம்.

அதிமுகவுக்கு எதிராக கடும் விமர்சனத்தை வெளியிடும் கட்சிக்கு அந்த இடத்தில் அனுமதி கொடுத்தது காவல்துறையினர் செய்த முதல் தவறு. குறைந்தபட்சம் ஏதேனும் சிக்கல் வராதவண்ணம் முன்னெச்சரிக்கையாக அந்த இடத்தில் பாதுகாப்புக்கு போலீஸை நிறுத்தி இருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. பிரச்னை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே உள்நோக்கத்துடன் அந்த இடத்தில் காவல்துறையினர் அனுமதி வழங்கியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
சமீபத்தில் தேர்தல் கூட்டணிக்காக மக்கள் நல கூட்டு இயக்கத்த சேர்ந்தவர்கள் விஜயகாந்தை சந்தித்தார்கள். திமுக தலைவர் கருணாநிதியும் கூட்டணிக்கு அழைத்தார். விறுவிறுப்பான அரசியல் காய்நகர்த்தல்கள் நடந்துவரும் வேளையில் முக்கிய தலைவராக விஜயகாந்தை ஏதேனும் பிரச்னையில் சிக்கவைத்து முடக்க மேலிட உத்தரவின்பேரில் காவல்துறை இப்படி நடந்துள்ளனர்” என்றார்.

சம்பவத்தின்போது காவல்துறையினர் முன்பே அதிமுகவினர் பெரும் மோதலை நிகழ்த்தினர். ஆனால் விஜயகாந்த் உள்ளிட்ட 50 பேர் மீது இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த காவல்துறை இதில் 13 பேரை கைது செய்துள்ளனர் இப்போது. பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், முதல்வரை அவதுாறு பேசியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் விஜயகாந்த் தரப்பினர் மீது வழக்கு பதிந்த காவல்துறை மிகவும் தாமதமாகவே அதிமுகவினர் மீது வழக்கு பதிந்துள்ளனது. அரசியல் கட்சிகளின் வழக்கமாக விளையாட்டுக்களுக்கு காவல்துறையினரும் துணை போகலாமா...



By: விகடன் 

விஜயகாந்த் துப்பிய சம்பவம்: மாறுபடும் கட்சிகளின் பார்வை

Updated: December 29, 2015 12:30 IST
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்து துப்பிய சம்பவம் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
பொதுவாக ஊடகத்துறை மீது ஏதாவது ஓர் அரசியல்வாதி விமர்சனம் செய்தால் மற்ற கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரண்டு ஏதோ தாங்கள் தான் தேசத்தின் நான்காவது தூணின் உற்ற நண்பர் போல் குரல் கொடுப்பர். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சம்பந்தப்பட்ட அரசியல் தலைவரை சரமாரியாக விமர்சிப்பர்.
ஆனால், இந்த முறை விஜயகாந்த் பத்திரிகையாளர்களை கடுமையாக விமர்சித்து துப்பிய சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்க ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் தயக்கம் காட்டினர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பல்வேறு கட்சியினரும் விஜயகாந்த்தை தங்கள் கூட்டணிக்கு அழைத்துவரும் நிலையிலும் அவரை விமர்சிக்க தயக்கம் காட்டினர்.
விஜயகாந்த் செயல் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்கூறும்போது, "விஜயகாந்த் தெரிவித்த கருத்துகளுடன் நான் உடன்படுகிறேன். ஆனால், அவர் அதை தெரிவித்த விதத்தை நான் ஆதரிக்கவில்லை" என்றார்.
அதிமுக செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரானசி.ஆர்.சரஸ்வதி கூறும்போது, "இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேசத்தின் நான்காவது தூணை யாராவது இவ்வளவு தரக்குறைவாக விமர்சிப்பது தகுமா? இதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, "முதல்வராக பதவியேற்ற பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயலலிதா வாரம் தவறாமல் பத்திரிகையாளர்களை சந்திப்பேன் என்றார். ஆனால், அவர் சொன்னபடி நடந்து கொண்டாரா? இல்லை நீங்கள்தான் அவரை சந்தித்தீர்களா? இந்தக் கேள்வியை நான் நீண்ட காலமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். முதலில் நீங்கள் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். பின்னர் நான் விஜயகாந்த் தொடர்பான உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன்" என்று மழுப்பினார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "இவ்விவகாரத்தில் நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என ஒற்றை வரியில் சொல்லி நழுவிவிட்டார்.
பாமக முதல்வர் வேட்பாளரும், எம்.பி.யுமானஅன்புமணி ராமதாஸ் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "அவர் பெயரை மக்கள் மாற்றிவிட்டனர். இனி அவரை விஜயகாந்து'தூ' எனவே கூப்பிடுவார்கள். அவரிடம் கூட்டணி குறித்து பேச செல்லும் கருணாநிதி, வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன், இளங்கோவன் ஆகியோருக்கு ஓர் அன்பான எச்சரிக்கை செய்கிறேன். அவரிடம் பேசும்போது சற்றே தள்ளி நின்று பேசுங்கள். இது என் வேண்டுகோள்" என்றார்.
அரசியல் தலைவர்கள் பலர் மழுப்பலாகவும், நாசுக்காகவும் கருத்து தெரிவித்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட விஜயகாந்த், "நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். யாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏதாவது தவறு செய்தால் மக்களிடம் மட்டுமே மன்னிப்பு கேட்பேன்" எனக் கூறியுள்ளார்

சசிகலாவுக்கு ’நம்பர்-2’ அந்தஸ்து! -வெளியாகிறதா அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

மிழக சட்டசபைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்து கட்சிகளிலும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. கட்சியின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களை நடத்துவதிலும், கூடவே கூட்டணிக்கான ரகசிய தூது விவகாரங்களிலும் அனல் பறக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,  ஆண்டு இறுதியில் (31.12.2015) நடத்தும் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு மீது தனிக்கவனம் விழுந்திருக்கிறது.
சென்னை திருவான்மியூரில், ஶ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழுவை நடத்தவிருக்கிறது. சுமார் 4,500 பேர் ஒரே நேரத்தில்,  எந்தப் பகுதியில் இருந்தும் மேடையில் இருக்கும் ஜெயலலிதாவை பார்க்கும் வகையில் மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான தீவிரப் பணியில் கடந்த மூன்று நாட்களாக, கட்சி அலுவலகப் பொறுப்பாளர் மகாலிங்கம் ஈடுபட்டு வருகிறார்.  ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய அமைச்சர்கள் கொண்ட டீம்,  இதற்கான சூப்பர்வைசிங் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை 'எட்ட' நின்று (மட்டும்) கவனித்து,  ரிப்போர்ட் கொடுக்கும்படி மேலிடம் தரப்பில் சொல்லி விடப்பட்டிருக்கிறதாம்.

2016 தேர்தலுக்கு முன் அ.தி.மு.க எதிர்கொள்ளவிருக்கிற பொதுக்குழு என்பதால், பொதுக்குழுவின் முடிவுகள், தீர்மானங்களின் வடிவங்கள் குறித்த எதிர்பார்ப்பும் உச்சத்தில் இருக்கிறது. 'இந்தப் பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் ஏதேனும் அறிவிப்பாக வர வாய்ப்பு இருக்கிறதா?’ என்று கட்சி வட்டத்தில் விசாரித்தோம்.

'புலி வருது, புலி வருது கதையாக ஒவ்வொரு செயற்குழு, பொதுக்குழுக்களிலும்  ‘உடன்பிறவா சகோதரி’ சசிகலாவுக்கு மிக முக்கியப் பொறுப்பு அளிக்கப்படும் என்கிறார்கள். ஆனால், இந்த முறை அப்படி அது ஹேஷ்யமாக இருக்க வாய்ப்பில்லை. தலைமைக்கு அடுத்த இடத்தில் சசிகலாவை 'அமர' வைக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள் நம்பிக்கையும் உறுதியுமாக!

அப்ப, கட்சிக்குள்ள இரண்டு 'அம்மா'வா..?

Monday, 28 December 2015

இனி எளிதான வழியில் உங்கள் பாஸ்போர்ட் ECNR பெறலாம்: மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தகவல்!

Dec 28/12/2015




ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் பெறுவதற்கான வழிமுறைகள் சுலபமாக்கப்பட்டுள்ளன என்று, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ். மணீஸ்வர ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைக்காக வெளிநாடு செல்லும் பொதுமக்களிடம் ஈ.சி.என்.ஆர். (குடியுரிமை ஆய்வுச்சான்று அவசியம் இல்லை) பாஸ்போர்ட் பெறுவதற்கு தனியார் முகவர்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது. அவ்வாறு ஏமாற்றப்படும்பட்சத்தில், அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திலோ புகார் அளிக்கலாம்.


ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் பெற அரசு பொது சேவை மையம் மூலம் ஆன்-லைனில் பதிவு செய்யலாம். இதற்கு, ரூ.1,655 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பதிவு செய்யப்படும் விண்ணப்பத்தை அருகில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களுடன் வருமான வரி செலுத்திய ரசீது, நிரந்தரக் கணக்கு வைப்பு எண், வேலை தொடர்பான ஆவணங்களையும் இணைத்து வழங்கவேண்டும்.
ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் பெறுவது தொடர்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த 4 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்



வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 4 தினங்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பருவமழைக்காலம் முடிய 3 தினங்களே உள்ள நிலையில் தென் தமிழக பகுதியில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று நிலவரப்படி, ராமேஸ்வரத்தில் 7, பாம்பன், ராமநாதபுரம் 6, ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி 3, பாபநாசம் 2 செ.மீ மழை பெய்தது. தொடர்ந்து இன்று காலை முதல் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை மற்றும் சூறாவளிக்காற்று காரணமாக, கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
இந்நிலையில், அடுத்த 4 தினங்களுக்கு அதாவது 29-ம் தேதி முதல் 1-ம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம் ஸ்பைஸ் ஜெட் புதிய “ஆபர்”!!


கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய “ஆபர்”இந்தியாவில் தனியார் விமான நிலையமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் குறைந்த கட்டணத்தில் ஒருவழி பயணம் செய்ய புதிய 4 நாள் டிக்கெட் விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது.புத்தாண்டு சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ள 4 நாட்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகை அறிவித்துள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இதுகுறித்து தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 15 முதல் ஏப்ரல் 12 வரை ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் உள்நாட்டுப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மிகக் குறைந்த கட்டணமாக ரூபாய் 716 செலுத்தி ஒருவழி பயணம் செய்யலாம் என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று துவங்கப்பட்ட இந்த சலுகை வரும் டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வழி பயணத்திற்கான ரூபாய் 716 கட்டணத்தில் வரிசலுகை ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு www.spicejet.com இணையதளத்தை அணுகலாம் என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானமா? இனிமேல் காஸ் மானியம் கிடையாது




புதுடில்லி: 
ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்தை தாண்டுபவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் காஸ் சிலிண்டர்களை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, ஆண்டுக்கு மானிய விலையில் 12 காஸ் சிலிண்டர்கள் பெற்று வருகின்றனர். அதற்கு மேல் காஸ் சிலிண்டர் வேண்டுமானால், சந்தை விலைக்கு தான் வாங்க வேண்டும்.

இது தொடர்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் 'டுவிட்டரில்' கூறுகையில், "ஆண்டு வருமானம் 10 லட்ச ரூபாயை தாண்டுபவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை காஸ் சிலிண்டரை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது, மானியம் தேவைப்படும் ஏழைகளுக்கே மானியம் வழங்கப்பட வேண்டும் என்ற அரசின் கொள்கை முடிவின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.

தற்போது, எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தொழிலதிபர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் மானிய விலை காஸ் சிலிண்டரை திரும்ப கொடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். வசதி படைத்தவர்கள் திருப்பி கொடுக்கும் மானிய விலை காஸ் சிலிண்டர், தேவைப்படும் ஏழை மக்களுக்கு திருப்பி வழங்கப்படும் எனவும் கூறினார்.இது தொடர்பாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து நாட்டில் 16 கோடி நுகர்வோர்களில், சுமார் 50 லட்சம் பேர் தங்கள் மானிய விலை காஸ் சிலிண்டரை திரும்ப கொடுத்துள்ளனர். திருப்பி கொடுக்கப்பட்ட மானிய விலை காஸ் சிலிண்டர்கள் அனைத்தும், மண்ணெண்ணை, கரி, சாணம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, மானிய விலை காஸ் சிலிண்டரின் விலைக்கும், மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலைக்கும் இடையிலான வித்தியாசம் கணிசமாக குறைந்துள்ளது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. புகார் எதிரொலி விஜயகாந்த் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Post by : 28/12/2015


தஞ்சை

 தஞ்சையில் தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம் நடந்தபோது, பயணிகள் நிழலகத்தில் மின்னொளி பலகையில் இருந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை பார்த்து அந்த படத்தை பார்த்தால் கோபமாக வருகிறது. அதை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் தொண்டர்களிடம் கூறியதால் அந்த படம் அகற்றப்பட்டு உடைக்கப்பட்டது என்றும், இதனால் பொதுசொத்துக்கு சேதம் விளைவித்த விஜயகாந்த் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தஞ்சை சட்டமன்ற அ.தி.மு.க. உறுப்பினர் ரெங்கசாமி போலீசில் புகார் கூறியிருந்தார்.

இதையொட்டி தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் தஞ்சை மாவட்ட தே.மு.தி.க. 8 நிர்வாகிகள் மற்றும் 50 நபர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தஞ்சை மாநகராட்சி ஆணையர் குமாரும் புகார் அளித்து இருக்கிறார்.

தாத்ரி படுகொலை வழக்கில் திருப்பம்; பசு இறைச்சி அல்ல ஆட்டிறைச்சி: விசாரணையில் தகவல்

Updated: December 28, 2015 15:46 IST 
பசு இறைச்சி வைத்திருந்ததாக தாத்ரியில் மொகமது இக்லாக் என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்தின் மீதான உ.பி. விலங்கு மருத்துவத் துறையின் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் கவுதம புத்தர் மாவட்டம் தாத்ரியை அடுத்துள்ள பிசோதா கிராமத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி இரவு பசுவை பலி கொடுத்து அதன் இறைச்சியை முகமது இக்லாக் (58) குடும்பத்தினர் சாப்பிட்டதாக வதந்தி பரவியது.

இதைத் தொடர்ந்து 200 பேர் கொண்ட கும்பல் இக்லாக் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியது. இதில் இக்லாக் அதே இடத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. சகிப்பின்மை குறித்த விவாதங்கள் தலைதூக்கியது. எதிர்க்கட்சிகள் பாஜக மீது கடும் விமர்சனங்களை வைத்தன.

இந்நிலையில் உத்திரப்பிரதேச விலங்கு மருத்துவத் துறை விசாரணை மேற்கொண்டது. அதில் மொகமது இக்லாக் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டது பசு இறைச்சி அல்ல அது ஆட்டிறைச்சியே என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக 15 பேர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாகும் இந்த அறிக்கை.

இது குறித்து இக்லாக்கின் மூத்த மகன் சர்தஜ் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவிக்கும் போது, “நாங்கள் இதனை அப்போதிலிருந்தே தெரிவித்து வருகிறோம். எங்கள் வீட்டின் ஃபிரிட்ஜில் இருந்தது ஆட்டிறைச்சி. எங்கள் உறவினர் ஒருவர் எங்களுகுக் கொடுத்தது. மாட்டிறைச்சி அரசியலை வைத்து லாபம் அடையும் நோக்கத்துடன் கூடிய அரசியலின் தூண்டுதலினால் உருவான வெறிக்கும்பலால் எங்கள் தந்தை கொல்லப்பட்டுள்ளார். இனி என் தந்தை உயிருடன் வரப்போவதில்லை. இனி யாருக்கும் இப்படி நிகழக்கூடாது என்று நான் இந்நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

துபாயில் இனி விசா கேன்சலில் சென்றால் 6 மாதம் தடை இல்லை!


December 28, 2015

அமீரக வாழ் சகோதரர்களுக்கு ஒரு நற்செய்தி! அமீரகத்தில் புதிய சட்டம். இந்த புதிய சட்டம் வரும் 2016 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது! மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்.
http://dubaiofw.com/uae-labour-cancel-6-months-ban/

சவுதிக்கு வேலை சென்ற இடத்தில் முதலாளியால் அடித்து சித்ரவதை செய்யப்பட்ட 3 பேர் நாடு திரும்பியுள்ளார்



sa-lgflag
சவுதிக்கு வேலை சென்ற இடத்தில் முதலாளியால் அடித்து சித்ரவதை செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 3 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிபாத் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் பைஜு, அபிலாஷ்(21) மற்றும் விமல் குமார். சவுதியில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி ஒரு ஏஜென்சி அவர்களிடம் பணம் பெற்றுள்ளது.
அவர்களை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சவுதிக்கு அந்த ஏஜென்சி அனுப்பி வைத்துள்ளது. அவர்களை அவர்களின் முதலாளி அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் மூன்றில் ஒருவர் தாங்கள் அடி வாங்குகையில் அதை செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டார்.
அந்த வீடியோ தீயாக பரவி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. வீடியோவை பார்த்து தான் கேரள அரசும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் அந்த 3 வாலிபர்களையும் மீட்க நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு கடந்த 26ம் தேதி நாடு திரும்பினர். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்களை அவர்களின் உறவினர்களும், நண்பர்களும் வரவேற்றனர்.
ஊர் திரும்பிய அபிலாஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,வீடு கட்ட கடன் வாங்கியிருந்தேன். வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்தால் கடனை அடைத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால் நடக்கவில்லை என்றார்.

சட்டசபை தேர்தல்: ஜன. 15-க்குள் வேட்பாளர் பட்டியல்; திமுக சதியால் அன்புமணிக்கு எதிராக சகாயம்- ராமதாஸ்

 Posted by: Mon, Dec 28, 2015, 15:20 [IST] 



கன்னியாகுமரி: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஜனவரி 15-க்குள் வெளியிடுவோம் என்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை அன்புமணி ராமதாஸுக்கு போட்டியாக களமிறக்க தி.மு.க.தான் சதி செய்வதாகவும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட பா.ம.க. பொதுக் குழுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், சட்டசபை தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் பொங்கல் பண்டிகைக்குள் வெளியிடப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார். இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: பா.ம.க .முதல்வர் வேட்பாளர் அன்புமணியின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் சகாயம் ஐ.ஏ.எஸ்-முதல் வேட்பாளராக வரவேண்டும் என சொல்கிறார்கள். அன்புமணியின் வளர்ச்சியை பிடிக்காத திமுகவினர்தான் இதன் பின்னணியில் உள்ளனர். சகாயம் கிரானைட் ஊழல் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டவர். அவர் தனது அறிக்கையை தற்போதுதான் தாக்கல் செய்துள்ளார். அவரால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்? தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் சகாயத்தால் எப்படி ஒரு கட்சியை இப்போது தொடங்கி மக்களை சந்திக்க முடியும்? எனக்கு தெரிந்தவரை சகாயத்திற்கு தற்போது தீவிர அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை. அவர் குடிமைப்பணியில் தொடரவே விரும்புகிறார். ஆனால் சிலர் வேண்டுமென்றே விஷமனத்தனமான பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sagayam-as-cm-is-dmk-ploy-says-ramadoss-243272.html

Sunday, 27 December 2015

மக்கா மஸ்ஜிதுல் ஹரமில் பாங்கு சொல்லிவந்த முஅத்தின் மரணம்!




Dec 27/12/2015

புனித ஹரமின் முஹத்தின்களில் ஒருவரான  முஹம்மது சிறாஜ் அவர்கள் ஹரமில் எழுப்பிய இறுதி பாங்கோசை
மிக சிறப்பு வாய்ந்த பணிகளில் ஒன்று தான் முஹத்தின் பணி சாதரண பள்ளிகளிலேயே முஹத்தினாக பணியாற்றுவது சிறப்பு வாய்ந்த பணியாக கருதபடும்போது, உலகில் இறைவனை வணங்குவதற்காக முதல் முதலில் எழுப்பபட்ட ஆலயத்தில் முஹத்தினாக பணியாற்றுவதின் சிறப்பை நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை.
ஆம் மக்காவில் அமைந்துள்ள புனித ஹரமின் முஹத்தின்களில் ஒருவர் தான் முஹம்மது சிறாஜ் அவரது உலகவாழ்வு 25.12.2015 நிறைவுக்கு வந்தது.
புனித ஹரமின் புனித பணியில் இருந்த முஹம்மது சிறாஜ் அவர்களின் மண்ணறையும் மறுமையும் சிறக்க நாம் பிரார்த்திப்போம்.
முஹம்மது சிறாஜ் அவர்கள் மரணத்திற்கு முன்பு இறுதியாக ஹரமில் எழுப்பிய பாங்கோசையை தான் நீங்கள் காட்சியில் காண்கின்றீர்கள்

கூட்டணியில் இருப்பதாக கூறுபவர்கள் கூறிக் கொண்டே இருக்கட்டும்- பாஜகவுக்கு விஜயகாந்த் பொளேர் பதில்

 Posted: Sun, Dec 27, 2015, 13:25 [IST] 

சென்னை: நாங்கள் கூட்டணியில் நீடிக்கிறோம் என கூறுபவர்கள் கூறிக் கொண்டே இருக்கட்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் அக்கட்சிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்கிறது என்று அக்கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆனால் விஜயகாந்த், இந்த கருத்தை தொடர்ந்து நிராகரித்து வருகிறார். விடாப்பிடியாக தேமுதிக எங்களுடன் இருக்கிறது என்று மீண்டும் மீண்டும் பா.ஜ.க. கூறி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது: நாங்கள் கூட்டணியில் இருப்பதாக கூறுபவர்கள் கூறிக் கொண்டே இருக்கட்டும். எங்களைப் பொறுத்தவரையில் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்பதற்கு இன்னமும் காலம் இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கும். கூட்டணி தொடர்பாக நேரம் வரும் போது அறிவிப்பேன். 2016ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக நிச்சயம் ஆட்சியைப் பிடிக்காது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுகவின் 37 எம்.பி.க்கள் என்னதான் செய்து கொண்டிருந்தார்கள்? இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/vijayakanth-upset-over-bjp-s-claim-on-alliance-partner-243202.html

Saturday, 26 December 2015

வேலைக்கு வேட்டு வைக்கும் செல்ஃபி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!


நியூயார்க்: இளைஞரிகளிடம் காணப்படும்  செல்ஃபி மோகம் அவர்களது வேலைவாய்ப்புகளுக்கே வேட்டு வைத்துவிடக் கூடியது என செல்ஃபி பழக்கம் குறித்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இளைஞர்களிடையே தற்போது செல்ஃபி மோகம் அதிகரித்து, பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினமும் தன்னையோ, தனது நண்பர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு லைக் அள்ளிவரும் இன்றைய தலைமுறையினருக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக தனது ஆராய்ச்சி முடிவை வெளியிட்டு உள்ளது அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகம்.

செல்ஃபி பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் சமீபத்தில் அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
அதில், செல்ஃபிக்களை அடிக்கடி பதிவேற்றும் மனிதர்கள் பலர், ஆளுமை மீது நம்பிக்கை கொள்ளாத, வெளித்தோற்றத்தின் மூலம் மட்டும் அனைத்தையும் எதிர்கொள்பவராக இருக்கின்றனர். இயல்பாகவே கூட்டு முயற்சியில் ஈடுபாடு இல்லாதவராகவும், சுய கட்டுப்பாடு அற்றவர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர்.

மேலும், இப்படி செல்ஃபி எடுப்பதை வைத்து மனிதவள மேம்பாட்டாளர்கள் நம்மை எடை போடும் வேலையை மிக சுலபமாக செய்து முடித்து விடுகிறார்கள். பொதுவாக வேலைக்காக ஆட்களைத் தேர்வு செய்யும்போது, சமூக வலைத்தளங்களில் இருக்கும் அவர்களது செல்ஃபிக்கள் மூலம் அவர்களின் இயல்பை தெரிந்துகொள்ள முடிவதாகவும்,  மனிதவள ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதேபோல், பணியில் இருந்து கொண்டே, செல்ஃபிக்களை எடுத்து பதிவேற்றம் செய்து கொண்டிருந்தால், நிச்சயம் அவர்கள் அந்த நிறுவனத்தின் மேல் அதிகாரியால் சந்தேகப் பார்வையோடு அணுகப்படுவார்கள்" என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் எல்லையில் நிலவும் பதற்றத்திற்கு அதிக முக்கியத்துவம்: சர்டாஜ் அஜிஸ்


2:54 AM | டிசம்பர் 27, 2015


இஸ்லாமாபாத், டிச. 27-
இந்தியா - பாகிஸ்தான் இடையே அடுத்த மாதம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் எல்லைப் பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழலை குறைக்கும் விஷயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் வானொலி ஒன்றில் பேசிய சர்டாஜ், ”இருநாட்டு தலைவர்களின் சந்திப்பிறகு, வெளியுறவுச் செயலாளர்கள் அளவிலான சந்திப்பு ஜனவரி மத்தியில் நடைபெற முடிவு எட்டப்பட்டது.” என்றார்.,

மேலும், இந்த பேச்சுவார்த்தை மூலம் இருநாடுகளிடையேயான எல்லாம் பிரச்சனையும் உடனடியாக தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கவில்லை. பேச்சுவார்த்தையில் தொடக்கத்தில் எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து அதிக கவனம் செலுத்தப்படும்.

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பும் வழியில், பிரதமர் மோடி திடீரென்று பாகிஸ்தான் சென்றார். லாகூர் நகரில் அந்த நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசினார்.” என்றும் கூறியுள்ளார்.

காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு



ஸ்ரீநகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப் படையினர். | படம்: பிடிஐ.
கிராம பாதுகாப்பு குழு உறுப்பினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தாயும் அவரது 3 வயது மகனும் பலியான சம்பவத்தை கண்டித்து, ஹுரியத் மாநாட்டு கட்சி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் கிராம பாதுகாப்பு குழு உறுப்பினர் முஷ்டாக் அஹமது என்பவர் சில தினங்களுக்கு முன் ஷமிமா அக்தர் என்ற பெண்ணையும், அவரது 3 வயது மகன் தோஹித்தையும் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் கிலானி ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை நேற்று மூடப்பட்டன. பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும், ஆட்டோ, கார் ஆகிய தனியார் போக்குவரத்து இயக்கப்பட்டன. எனினும் இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.

கடந்த 19-ம் தேதி தேசிய மாநாட்டு கட்சி தலைவர் இஷ்தியாக் அஹமது என்பவரை, கிராம பாதுகாப்பு குழு உறுப்பினர் கேவல் சர்மா என்பவர் துப்பாக்கியால் சுட்டதால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் ஒரு கொலை சம்பவம் நடந்திருப்பது ஜம்மு-காஷ்மீர் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து கிராம பாதுகாப்பு குழுவை கலைக்கும்படி பிரிவினைவாத அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. எனினும் அதற்கு வாய்ப்பு இல்லை என துணை முதல்வர் நிர்மல் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.