
டெல்லி: மத்திய அமைச்சரவையில் நியமிக்க திறமையான நபர்கள் கிடைக்காமல் பிரதமர் மோடி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியடைந்ததையடுத்து அமைச்சரவை சகாக்கள் சிலர் மீது மோடி அதிருப்தியில் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பீகார் தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுவான அரசு பணிகளிலும் திறமையை காட்டத் தவறியவர்களை நீக்கிவிட்டு புதிய அமைச்சர்களை நியமிக்க மோடி முடிவு செய்தாலும், திறமையான நபர்கள் கிடைக்காததால் அந்த முடிவு கைவிடப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனிடையே அடுத்த ஆண்டு துவக்கத்தில் அமைச்சரவையில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்ய பிரதமர் மோடி முனைப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு பாதுகாப்புத் துறையை வழங்க மோடி விரும்புவதாகவும் கூறப்படுகிறது. சிறுபான்மையினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் இணை அமைச்சர்களான கிரிராஜ் சி்ங், நிரஞ்சன் ஜோதி ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. உள்நாட்டு முக்கியத்துவம் வாய்ற்த இலாகாவுக்கு சுஷ்மா ஸ்வராஜ் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. காங்கிரஸ் அளவுக்கு திறமையான நபர்கள் இல்லாததால் மத்திய அமைச்சரவை எதிர்பார்த்த அளவு செயல்படவில்லையென பாஜக துணை தலைவர் வினய் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இந்நி்லையில் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் டெல்லயில் சந்தித்து அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசித்த முடிவெடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment