Sunday, 27 December 2015

கூட்டணியில் இருப்பதாக கூறுபவர்கள் கூறிக் கொண்டே இருக்கட்டும்- பாஜகவுக்கு விஜயகாந்த் பொளேர் பதில்

 Posted: Sun, Dec 27, 2015, 13:25 [IST] 

சென்னை: நாங்கள் கூட்டணியில் நீடிக்கிறோம் என கூறுபவர்கள் கூறிக் கொண்டே இருக்கட்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் அக்கட்சிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்கிறது என்று அக்கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆனால் விஜயகாந்த், இந்த கருத்தை தொடர்ந்து நிராகரித்து வருகிறார். விடாப்பிடியாக தேமுதிக எங்களுடன் இருக்கிறது என்று மீண்டும் மீண்டும் பா.ஜ.க. கூறி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது: நாங்கள் கூட்டணியில் இருப்பதாக கூறுபவர்கள் கூறிக் கொண்டே இருக்கட்டும். எங்களைப் பொறுத்தவரையில் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்பதற்கு இன்னமும் காலம் இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கும். கூட்டணி தொடர்பாக நேரம் வரும் போது அறிவிப்பேன். 2016ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக நிச்சயம் ஆட்சியைப் பிடிக்காது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுகவின் 37 எம்.பி.க்கள் என்னதான் செய்து கொண்டிருந்தார்கள்? இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/vijayakanth-upset-over-bjp-s-claim-on-alliance-partner-243202.html

No comments:

Post a Comment