Saturday, 26 December 2015

வேலைக்கு வேட்டு வைக்கும் செல்ஃபி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!


நியூயார்க்: இளைஞரிகளிடம் காணப்படும்  செல்ஃபி மோகம் அவர்களது வேலைவாய்ப்புகளுக்கே வேட்டு வைத்துவிடக் கூடியது என செல்ஃபி பழக்கம் குறித்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இளைஞர்களிடையே தற்போது செல்ஃபி மோகம் அதிகரித்து, பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினமும் தன்னையோ, தனது நண்பர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு லைக் அள்ளிவரும் இன்றைய தலைமுறையினருக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக தனது ஆராய்ச்சி முடிவை வெளியிட்டு உள்ளது அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகம்.

செல்ஃபி பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் சமீபத்தில் அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
அதில், செல்ஃபிக்களை அடிக்கடி பதிவேற்றும் மனிதர்கள் பலர், ஆளுமை மீது நம்பிக்கை கொள்ளாத, வெளித்தோற்றத்தின் மூலம் மட்டும் அனைத்தையும் எதிர்கொள்பவராக இருக்கின்றனர். இயல்பாகவே கூட்டு முயற்சியில் ஈடுபாடு இல்லாதவராகவும், சுய கட்டுப்பாடு அற்றவர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர்.

மேலும், இப்படி செல்ஃபி எடுப்பதை வைத்து மனிதவள மேம்பாட்டாளர்கள் நம்மை எடை போடும் வேலையை மிக சுலபமாக செய்து முடித்து விடுகிறார்கள். பொதுவாக வேலைக்காக ஆட்களைத் தேர்வு செய்யும்போது, சமூக வலைத்தளங்களில் இருக்கும் அவர்களது செல்ஃபிக்கள் மூலம் அவர்களின் இயல்பை தெரிந்துகொள்ள முடிவதாகவும்,  மனிதவள ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதேபோல், பணியில் இருந்து கொண்டே, செல்ஃபிக்களை எடுத்து பதிவேற்றம் செய்து கொண்டிருந்தால், நிச்சயம் அவர்கள் அந்த நிறுவனத்தின் மேல் அதிகாரியால் சந்தேகப் பார்வையோடு அணுகப்படுவார்கள்" என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment