Wednesday, 30 December 2015

நாகர்கோவிலை சேர்ந்த இளம் விஞ்ஞானி மாஷா நஸீம், மைசூர் பல்கலைகழகத்தில் நடைபெறவுள்ள 103 வது இந்திய அறிவியல் மாநாட்டில் உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளார்.



நாகர்கோவிலை சேர்ந்த இளம் விஞ்ஞானி மாஷா நஸீம், மைசூர் பல்கலைகழகத்தில் நடைபெறவுள்ள 103 வது இந்திய அறிவியல் மாநாட்டில் உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் வாரத்தில் இந்திய அறிவியல் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. 103 வது மாநாடு மைசூரில் நடைபெற உள்ளது. ஜனவரி 3 முதல் 7 வரை 5 நாட்கள் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் உட்பட பல நாடுகளிலிருந்து 20 ஆயிரம் விஞ்ஞானிகள் கலந்து கொள்கின்றனர்.

இம்மாநாடு உலகின் மிகப்பெரிய சர்வதேச அறிவியல் மாநாடு என கருதப்படுகிறது. மைசூர் பல்கலைக்கழகத்தில் சுமார் 50க்கு மேற்பட்ட அரங்குகளில் தனித்தனியே பல்வேறு அமர்வுகளுடன் நடைபெற உள்ளது. குழந்தைகள் அறிவியல் மாநாடு, பெண்கள் அறிவியல் மாநாடு மற்றும் புகழ்பெற்ற அரசுத்துறை நிறுவனங்கள் பங்கேற்கும் பெருமை மிகு இந்தியா என்ற அறிவியல் கண்காட்சி என பல்வேறு பெரும் பிரிவுகளாக இம்மாநாடு நடைபெறுகிறது.

இதில் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இளம் விஞ்ஞானி மாஷா நஸீம் தனது சாதனை பயணத்தினை மாணவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். 5 துணை தலைப்புகளின் கீழ் 1 மணி நேர அமர்வாக இவரது உரை அமைக்கப்பட்டுள்ளது. மாஷா நஸீம் சென்னையில் பட்ட மேற்படிப்பு பயின்று வருகிறார். அண்மையில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பேரில் ஒருவராக, அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துவோம் மாஷா நஸீம் அவர்களை

No comments:

Post a Comment