Monday, 29 February 2016

காரில் சென்றாலும் ஹெல்மெட் – பெங்களூரு போலீசின் அக்கறையால் அதிர்ச்சி!!!


காரில் சென்றாலும் ஹெல்மெட் அணிய வேண்டுமா?: பெங்களூரு போலீசின் அக்கறையால் அதிர்ச்சி!!!
பெங்களூரு மல்லேசுவரத்தில் வசித்து வருபவர் பிரகாஷ். பாரதீய ஜனதா பிரமுகரான இவருக்கு,  நேற்று முன்தினம்,  பெங்களூரு மாநகர போக்குவரத்து போலீசாரிடம் இருந்து அபராதம் கட்டும்படி ரசீது ஒன்று வந்தது. அந்த ரசீதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
காரணம், அந்த ரசீதில் ‘அவருடைய காரின் பதிவு எண் குறிப்பிடப்பட்டு இருந்ததோடு, பசவேசுவரா சர்க்கிளில் கடந்த 4-ந் தேதி சென்றபோது,  பின் இருக்கையில்  பயணம் செய்தவர் ஹெல்மெட் அணியாமல் இருந்துள்ளார். இதனால் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும்‘ என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அவர் உடனடியாக மாநகர போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இஸ்லாமிய பெண்கள் கல்வி கற்க கூடாது!? ஏன்? காஸா பாலஸ்தீன் இஸ்லாமிய பெண்கள் விளக்கம்.


இஸ்லாமிய பெண்கள் கல்வி கற்க கூடாது!? ஏன்? காஸா பாலஸ்தீன் இஸ்லாமிய பெண்கள் விளக்கம்.
இஸ்லாத்தில் பெண்கள் கல்வி கற்க கூடாது என்று பொய் அவதூறு சொல்பவர்களுக்கு இந்த செய்தி எப்படி இருக்கும்?
காஸா இஸ்லாமிய பல்கலை கழகத்தில் இன்று இடம்பெற்ற 34 வது பட்டமளிப்பு விழா

காஸா இஸ்லாமிய பல்கலை கழகத்தில் இன்று இடம்பெற்ற 34 வது பட்டமளிப்பு விழா
ஆயிரம் குண்டுகள் வந்து வீழ்ந்தபோதும்,
அதிநவீன ஆயுதங்கள் வந்து அச்சுறுத்தியபோதும்

தயங்காமல் அறிவியலில் தடை பல 
தாண்டி பயணிக்கும் பலஸ்தீனம்.
-அல்மஷூறா நியூஸ்

வரவேற்பதா..? விமர்சிப்பதா...? பட்ஜெட் குறித்து விஜயகாந்த் ரியாக்‌ஷன்.

Updated on February 29, 2016

   ​வரவேற்பதா..? விமர்சிப்பதா...? பட்ஜெட் குறித்து விஜயகாந்த் ரியாக்‌ஷன்
மக்களின் எதிர்பார்ப்புகளை ஜெட் வேகத்தில் செயல்படுத்தி, மக்களின் டார்கெட்டை பூர்த்தி செய்யவேண்டும் பட்ஜெட் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்ஜெட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து 35,984 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மேலும், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு முன்னுரிமை அளித்திருப்பதும், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை பெருக்கிடும் வகையில் திறன் மேம்பாட்டு மையங்கள் அதிகரிக்கவும், சிறு, குறு தொழில் முனைவோருக்கு வருமான வரிவிலக்கு ஒரு கோடியிலிருந்து இரண்டு கோடியாக அதிகரித்திருப்பதும், 2018க்குள் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி ஏற்படுத்தப்படும் என கூறியிருப்பதும், புகையிலை பொருட்களுக்கு வரியை உயர்த்தியிருப்பதும் இந்த பட்ஜெட்டின் வரவேற்கத்தக்க அம்சங்களாக விஜயகாந்த் பட்டியலிட்டுள்ளார்.
ஆனால், புதிய திட்டங்களோ, விவசாய பயிர் விளைச்சல் பாதிப்புகளுக்கான இழப்பீடு வழங்குவது குறித்தோ, விவசாயிகளும், சாமான்ய மக்களும் பயன்பெறும் வகையில் விவசாய விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்வதற்குரிய திட்டமோ, விவசாய விளைபொருட்களுக்கு ஏற்ற விலை நிர்ணயம் செய்வது குறித்தோ, எந்தவித அறிவிப்பும் இல்லாதது மிகுந்த வேதனையை தருவதாக விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பட்ஜெட்டை பொறுத்தவரையில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போல வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒருங்கே உள்ளடக்கிய பட்ஜெட்டாகவே இதை பார்க்கமுடிவதாகவும், மத்திய அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை ஜெட் வேகத்தில் செயல்படுத்தி, மக்களின் டார்கெட்டை பூர்த்தி செய்யவேண்டும் என்று விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு


பெட்ரோல் விலை குறைப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு
டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.47 உயர்த்தப்பட்டுள்ளது
பெட்ரோல், டீசல் விலை மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

2016-17 மத்திய பட்ஜெட்: ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் - முதியோருக்கு ரூ.1 லட்சம் மருத்துவ காப்பீடு.

புதுடெல்லி, பிப்.29

பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:–300 கிராமங்கள் மேம்படுத்தப்படும். நகர்ப்புறங்களில் உள்ள வசதிகள் அனைத்தும் இந்த 300 கிராமங்களில் செய்து கொடுக்கப்படும். 2018–ம் ஆண்டு மே மாதத்துக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும்.நடப்பு மாதம் வரை 5,542 கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் இந்தியா திட்டப்படி நில ஆவணங்கள் மின்னணுமயமாக்கப்படும். கிராமங்களில் கணினி வழி கல்வி கொண்டு வரப்படும்.தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.9000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.87,765 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.2016–17ல் விவசாயத்துக்கு ரூ.9 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எழுந்திடு இந்தியா திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.கல்வி சான்றிதழ்களை மின்னணு முறையில் பாதுகாக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும். 62 புதிய நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும்.சிறு தொழில்முனைவோர் துறைக்கு ரூ.5 ஆயிரம் கோடி வழங்கப்படும். நாடு முழுவதும் 3 ஆயிரம் பொதுமருந்து கடைகள் தொடங்கப்படும். நாடு முழுவதும் 1,500 பன்முக திறன் மேம்பாடு மையம் அமைக்கப்படும்.அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.பி.எப். புதிய உறுப்பினர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு 8.33 ஓய்வு பங்களிப்பு வழங்கப்படும்.அனைத்து மாவட்டங்களிலும் சிறுநீரக பிரச்சினை குறித்து சிகிச்சை அளிக்க மையங்கள் ஏற்படுத்தப்படும். நின்று போன 85 சாலை திட்டங்கள் மீண்டும் தொடங்கப்படும்.பெண் தொழில்முனைவோருக்கு நிதியுதவி செய்யப்படும்.சிறு கடைகள் வைத்து இருப்பவர்கள் வாரம் முழுவதும் விருப்பத்தின் அடிப்படையில் 7 நாட்களும் கடையை திறந்து வைத்து செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோருக்கு உதவ தேசிய மையம் உருவாக்கப்படும்.தேசிய வேலைவாய்ப்பு பதிவேட்டில் 3.5 கோடி பேர் வேலை கேட்டு பதிவு செய்துள்ளனர். 50 ஆயிரம் கி.மீ. மாநில சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.உள் கட்டமைப்புக்கு ரூ.2 லட்சத்து 2,246 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்பகுதிகளில் கல்வியறிவு ஊக்குவிக்கப்படும்.உயர் கல்விக்கு நிதி வழங்க ரூ.1000 கோடியில் புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும்.நாடெங்கும் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் 160 விமான நிலையங்கள் உருவாக்கப்படும். அணுமின் சக்தி உற்பத்திக்கு ரூ.3000 கோடி ஒதுக்கப்படும்.நடப்பு நிதியாண்டில் 10 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களை சந்தைப்படுத்த 100 சதவீத அன்னிய நேரடி முதலீடுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. 6 கோடி குடும்பங்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவு வழங்கப்படும்.50 ஆயிரம் கி.மீ. தூர மாநில சாலைகளும் மேம்படுத்தப்படும். பங்கு விலக்கல் துறையின் பெயர் முதலீடு மற்றும் பொது சொத்து துறை என்று மாற்றப்படும். உள் கட்டமைப்புக்கு ரூ.2.21 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

புதிய கட்சி தொடங்கினார் தமீமுன் அன்சாரி...


மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து பிரிந்த தமீமுன் அன்சாரி, ’மனிதநேய ஜனநாயக கட்சி’யை தொடங்கினார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியை ஆதரிப்பது என்பது குறித்து சென்னையில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்:மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்.


இந்தியாவில் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் 34 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், செய்தியாளர்கள் மத்தியில் அந்தக் கடிதம் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் ஆகிய மதச் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் கவலையளிக்கின்றன. மதச் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய, உங்களது (மோடி) அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவோரை நீதியின் முன் நிறுத்த வேண்டும்.
ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும்படி பாதுகாப்புப் படைகளுக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டும்.
சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்திலுள்ள 50 கிராமப் பஞ்சாயத்துகள், ஹிந்து அல்லாத மதங்களின் பிரசாரம், வழிபாடு உள்ளிட்டவற்றை தங்களது கிராமங்களில் தடை செய்யும் தீர்மானத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவேற்றின. அந்தத் தீர்மானத்துக்கு பின்னர், பஸ்தர் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைகளும், அடக்குமுறைகளும் அதிகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. கிறிஸ்தவ குடும்பங்களுக்கு உணவு, குடிநீர் மறுக்கப்படுவதுடன், அவர்கள் ஹிந்துக்களாக மாற வற்புறுத்தப்படுகின்றனர்.
அதேபோல், மாட்டிறைச்சி மீதான தடை நடவடிக்கையானது, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிப்பதாக இருக்கிறது. மேலும், கல்வி, வேலைவாய்ப்புகளில் சீக்கியர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும் கவலையளிக்கின்றன என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Sunday, 28 February 2016

விஜயகாந்துடனான கூட்டணி பேச்சு சுமூகமாக இருந்தது: பிரகாஷ் ஜவடேகர்.

Updated on February 28, 2016

   ​விஜயகாந்துடனான கூட்டணி பேச்சு சுமூகமாக இருந்தது: பிரகாஷ் ஜவடேகர்
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு சுமூகமானதாக இருந்தது என்று பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டில் இச்சந்திப்பு நடைபெற்றது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவுடன் பாரதிய ஜனதா கூட்டணி அமைப்பது குறித்து விஜயகாந்துடன் ஆலோசனை நடைபெற்றது.
இந்த சந்திப்பில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் பங்கேற்றனர். 
விஜயகாந்தை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், இந்த சந்திப்பு சமூகமானதாக இருந்ததாகவும், இன்னும் ஒரு வாரத்தில் கூட்டணி குறித்து முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ஜவடேகர், தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு பிரதமர் மோடி 2 ஆயிரம் கோடி ரூபாய் அளித்ததாலேயே, 14 லட்சம் பேர் பயனடைந்ததாக கூறினார். 
ஆனால் மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசுகள் நற்பெயர் சம்பாதித்து கொள்ளவதாகவும் அவர் பேசினார்

பாஜக கூட்டணிக்கு சம்மதம் சொன்ன ச.ம.க. சரத்குமார்... கட்சி நிர்வாகிகளையும் மாற்றினார்!

Posted by: 28, 2016, 

சென்னை: பாஜக கூட்டணியில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இன்னும் இரு தினங்களில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது சமத்துவ மக்கள் கட்சி. ஆனால், அதிமுக தங்களை வளரவிடவில்லை, கறிவேப்பிலையாக பயன்படுத்தியது என்ற பரபரப்புக் குற்றச்சாட்டுடன், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கடந்தவாரம் அறிவித்தார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரான சரத்குமார். அதனைத் தொடர்ந்து திமுக அல்லது பாஜகவுடன் அவர் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு யாரும் தன்னை இதுவரை அணுவவில்லை என சரத்குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை நேற்றிரவு சரத்குமார் நேரில் சந்தித்தார். அப்போது தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் நரேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின்போது பாஜக கூட்டணியில் சேர சரத்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறாது. இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் சரத்குமார் கூறுகையில், ‘பாஜகவினர் என் வீட்டுக்கு வந்து என்னை சந்தித்தார்கள். கூட்டணியில் சேருமாறு அழைத்தனர். கொள்கை அளவில் அதை ஏற்றுக்கொண்டேன். மற்ற விவரங்கள் 2 நாளில் பேசி முடிவு செய்வோம். அதன்பிறகு அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்' என்றார். புதிய நிர்வாகிகள் அறிவிப்பு: இதற்கிடையே, சமத்துவ மக்கள் கட்சியின் புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பை சரத்குமார் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தென் சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்பட்டு தென் சென்னை தெற்கு மாவட்டத்திற்கு த.பொன்ராஜ் மாவட்ட செயலாளராகவும், தென்சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு எம்.எம்.ஆர்.மதன் மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தொகுதிச் செயலாளர்களாக சோழிங்கநல்லூர் தொகுதிக்கு எஸ்.நாராயணன், ராயபுரம் தொகுதிக்கு கே.விஜயன், திருவொற்றியூர் தொகுதிக்கு ஆர்.கோட்டீஸ்வரன், மாதவரம் தொகுதிக்கு எம்.பாலசுப்பிரமணி, வில்லிவாக்கம் தொகுதிக்கு எம்.ஏ.ஆண்டனி, தி.நகர் தொகுதிக்கு கே.ஆர். குணசேகரன், பல்லாவரம் தொகுதிக்கு பி.எஸ்.முருகேசன் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்'' என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் தற்காலிக போர்நிறுத்தம் வந்தது


                  உள்நாட்டுப் போருக்கு சுமார் 3 லட்சம் உயிர்களை பறிகொடுத்த பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பாட்டின்படி சிரியா நாட்டில் இன்றுமுதல் தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.
மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில் அதிபர் ஹபீஸ் அல் ஆசாத் தொடர்ந்து 29 ஆண்டு காலம் ஆட்சி நடத்தினார். 
அவர் 2000-ம் ஆண்டு மறைந்த பின்னர், அவரது மகனான பஷர் அல் ஆசாத் அதிகாரத்துக்கு வந்தார். 16 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல் நடந்தபோது எதிர்ப்பின்றி 99 சதவீத ஓட்டுக்களை கைப்பற்றி வெற்றி பெற்ற அவர், பின்னர் நடந்த தேர்தலிலும் அமோக வெற்றி பெற்றார்.
பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில், 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்பட சுமார் மூன்று லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 80 லட்சம் மக்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி ஜோர்டான், மற்றும் லெபனான் உள்ளிட்ட பல அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த 3-6-2014 அன்று நடைபெற்றது. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் 73.42 சதவீதம் அளவுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் 88.7 சதவீதம் வாக்குகளை பெற்று பஷர் அல் ஆசாத் மீண்டும் வெற்றி பெற்றார். இதன் மூலம் சிரியாவின் அதிபராக தனது பதவியை மூன்றாவது முறையாக பஷர் அல் ஆசாத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்
இருப்பினும், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக மக்களும், மக்கள் ஆதரவு புரட்சிப்படையினரும் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 
சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷியாவும், கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுக ஆதரவாக அமெரிக்காவும் உள்ள நிலையில் அரசுக்கும் எதிர்ப்பு குழுக்களுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்தால்தான் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரும் என்பதால் ஐக்கிய நாடுகள் சபையின் யோசனைப்படியும், அமெரிக்காவின் தலையீட்டினாலும் இருதரப்பினருக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அரசுதரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. எனினும், எதிர்ப்பு குழுக்கள் இந்த பேச்சுவார்த்தையை நிராகரிப்பதாக அறிவித்திருந்தன. இந்நிலையில், சிரியாவில் உள்ள முக்கிய எதிர்ப்பு குழுக்களின் தலைவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி, இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு அவர்களை வலியுறுத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். இதையடுத்து, இன்று ஜெனிவா நகரில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க சிரியா அரசுக்கு எதிரான குழுக்கள் சம்மதம் தெரிவித்தன.
சிரியாவில் அமைதி நிலவ நிரந்தர தீர்வை ஏற்படுத்துவது தொடர்பாக ஜெர்மனி நாட்டின் முனிச் நகரில் 17 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது.
கிளர்ச்சியாளர்கள் மற்றும் சிரியா அரசு அதிகாரிகள் இடையே நேரடியாக அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வடிவமைப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அமெரிக்க, ரஷியா, ஈரான், ஜெர்மனி உள்ளிட்ட உலகின் பலமிக்க 17 நாடுகள் நடத்திய இந்த ஆலோசனை கூட்டத்தில் சிரியாவில் நிரந்தர அமைதி ஏற்பட அரசியல்ரீதியான தீர்வை முன்னெடுத்து செல்ல வசதியாக சிரியா ராணுவம் மற்றும் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் தனிநபர் போராளி குழுக்கள் மற்றும் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளர்ச்சியாளர்கள், ஹெஜ்புல்லா இயக்கப் போராளிகள் மற்றும் ரஷியா ஆதரவுப் படைகள் உள்பட அனைத்து தரப்பினரும் வெள்ளைக் கொடியை ஏந்தி போரை கைவிட வேண்டும். இருதரப்பினரும் தங்கள்வசம் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் மக்களை விடுவிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கு மேற்கண்ட 17 நாடுகளும் ஒருமனதாக சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அங்கு தடைப்பட்டுள்ள மனிதநேய நிவாரண உதவிகளை உடனடியாக மேற்கொள்ளவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிவாரண உதவிகள் மிக அவசரமாக தேவைப்படும் இடங்களிலும், போராளிகளால் கைப்பற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கும் நிவாரண உதவிகளை அனுப்பும் பணிகள் தொடங்கின.
இதையடுத்து, அமெரிக்காவும், ரஷியாவும் சேர்ந்து உருவாக்கி கையொப்பமிட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்ம் ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) நேற்று பின்னிரவு 12 மணியில் இருந்து இங்குள்ள டமாஸ்கஸ், அலெப்போ, அல் கலாசே, ஜோபர் உள்ளிட்ட முந்தைய போர்க்களப் பகுதிகள் இன்று காலையிலிருந்து அமைதியாக காணப்படுகின்றன.
எனினும், தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறிக்கொண்டு ரஷிய விமானப்படைகள் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டால் இந்த அமைதி சீர்குலைந்து மீண்டும் போர் பதற்றம் உருவாகலாம் என நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.

ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது திருடனிடம் சிக்கிக் கொண்டால்.


ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது திருடனிடம் சிக்கிக் கொண்டால், கவனமாகச் செயல்பட்டு நமது பணத்தைக் காப்பாற்றிக் கொண்வதுடன் திருடனையும் பிடிபடவைக்க முடியும்.
ATM ன் பயன்பாடு நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் அதிகரித்துள்ளது. இதனால் பெரும்பாலானவர்கள் ATM ஐ பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், திருடர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ATM ல் பணம் எடுக்கும்போது, திருடர்கள் பணத்தைப் பரித்துச் செல்வது ஆங்காங்கே தொடர்ந்து நடந்து வருகின்றது.
இத்தகைய திருட்டைத் தடுப்பதற்காகவும், திருடர்களைப் பிடிப்பதற்காகவும், ATM மையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
எனினும், இப்படிப்பட்ட இக்கெட்டில் சிக்கிக்கொள்ளும் போது, நாம் நமது பணத்தையும் பரிகொடுக்காமல், திருடனை பிடிபட வைப்பதற்கும் வழிவகை உள்ளது. ஆனால் இது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.
நாம் ATM ல் பணம் எடுக்கச் செல்லும்போது திருடன் நம்மை மிரட்டி, பணத்தை ATM ல் இருந்து எடுத்துக் கொடுக்கச் சொல்லி மிரட்டினால், நாம் நமது ATM Pin நம்பரை தலைகீழாக பதிவு செய்யவேண்டும்.
அதாவது, 5678 என்பது நமது பிண் நம்பர் என்றால் 8765 என்று பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்யும்போது, பணம் எண்ணப்படும். ஆனால் வெளியே வராமல் பாதியில் நின்றுகொள்ளும் அத்துடன் காவல்துறையினருக்கும் தகவல் சென்றுவிடும்.
இதனால் நமது பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதுடன் திருடனையும் சிக்கவைக்க முடியும்.

விஜயகாந்த்துடன் பேசிக் கொண்டிருக்கிறோம், வந்துருவார்.. சொல்வது குஷ்பு.


தேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் பேசி வருகிறோம். அவர் நிச்சயம் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இணைவார் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். சென்னை காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால், அவருடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து பேசவில்லை. சின்னச் சின்ன கட்சிகள் எவற்றோடும் கூட்டணி குறித்து பேசவில்லை. தற்போது பாஜகவின் நிலைமைதான் மோசமாக இருக்கிறது. யாராவது தங்களை கூப்பிட மாட்டார்களா என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள். அந்த ஏக்கம் மக்களுக்கு தெரிகிறது என்றார் குஷ்பு.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சீட்டு: வெளியே வராத சீக்ரெட் தகவல்.


பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி உள்ளது. இவை அல்லாத அனைத்து கட்சிகளுடன்  கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றவர், சற்று நிதானித்து, அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடப்பதை மறுக்கவில்லை என்றார்.
இந்த நிலைடயில், அதிமுக – பாஜக கூட்டணி திரைமறைவு பேரம் வெளியே பாஜக தலைவர் மூலமே வாய்தவறி வந்தவிட்டது.
நமக்கு தெரிந்த அரசியல் சோர்ஸ் மூலம் திரட்டிய தகவலில், அதிமுக பாஜக கூட்டணி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்தியில் உள்ள அரசை அனுசரித்து சென்றால் மட்டுமே மாநிலத்திற்கு அதிக நிதி கிடைக்கும் என்பதை ஜெயலலிதா நன்கு உணர்ந்துள்ளார்.
வரும் சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு சுமார் 10 முதல் 20 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளது.
மேலும், குறிப்பாக சொத்துகுவிப்பு வழக்கில் அதிமுகவுக்கு பாஜக உதவும் என்ற நம்பிக்கையிலே கூட்டணி உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

Saturday, 27 February 2016

புதுப்பட்டினத்தில் SDPI கட்சி அலுவலகம் திறப்பு !

Yesterday 28th Feb 2016 SDPI office opening ceremony in puduppatinam bus stand KADERMYDN complex

த‌யி‌ரி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம்: தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது.


த‌யி‌ரி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம்: தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் -பி யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும். பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. த‌கயி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் -சி யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌ ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து. அப்நர‌ண்டீ‌‌ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும். மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம். சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த து‌ணியை‌ பா‌தி‌த்த இட‌த்‌தில க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

எலுமிச்சையின் ஏழு வகைப் பயன்கள் பற்றி தெரிவோம்!


எலுமிச்சையின் ஏழு வகைப் பயன்கள் பற்றி தெரிவோம்!
1. வெளியூர் பயணத்தின்போது சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் இருக்க, எலுமிச்சைச் சாற்றைக் கையோடு எடுத்துச் செல்லலாம். எலுமிச்சைச் சாறு, சிறுநீரை அதிகரித்து, தொற்றுக்கள், நச்சுக்களை வெளியேற்றுகிறது.

2.பொதுவாக, புளிப்புத் தன்மைகொண்ட பழங்கள், ரத்தக் குழாயைச் சுத்தப்படுத்தும். எலுமிச்சை, ஆன்டிஆக்ஸிடன் டாகச் செயல்பட்டு, ரத்தத்தைச் சுத்திகரிக்கும். ஆன்டி பாக்டீரியலாகவும் இருப்பதால், தோல் நோய்களை அண்ட விடாது.

3. காலையில் வெந்நீரில் 5 - 10 மி.லி. எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

4. வாய் துர்நாற்றம், பல்லில் வலி, ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால், எலுமிச்சைச் சாற்றை, மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளிக்கச் சரியாகும்.

5. கபம் அதிகம் இருந்தால், காலையில் எழுந்ததும் சளியுடன் கூடிய எச்சில், வாந்தி வருவது போன்ற உணர்வு இருக்கும். இவர்கள், 10 மி.லி. எலுமிச்சைச் சாற்றுடன் அய்ந்து மி.லி. இஞ்சிச் சாறு, சிறிது தேன் சேர்த்து, சுடுநீரில் கலந்து குடிக்கலாம். சட்டென நிவாரணம் கிடைக்கும்.

6. சிலருக்கு, வயிற்றில் காற்று அடைத்ததுபோல், அழுத்த மாக இருக்கும். இதற்குச் சுடுநீரில் எலுமிச்சைச் சாறு, வறுத்துப் பொடித்த சீரகம் அரை டீஸ்பூன், சிறிது தேன் கலந்து அருந்தலாம். சட்டென காற்று வெளியேறி, வயிறு லேசாகும். மலச்சிக்கல் பிரச்சினையும் இருக்காது.

7. மூல நோய் இருப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டி, அதில் கறுப்பு உப்பு கலந்து, வாயில் அடக்கிக்கொள்ளலாம். வலி, வீரியம் குறையும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ள 222 Senior Lecturer, Lecturer, Junior Lecturer பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நிறுவனம்:
ஆசிரியர் தேர்வு வாரியம்

பணியிடம்:
தமிழ்நாடு,

காலியிடங்கள்:
222

பணிகள்:
Senior Lecturer - 35
Lecturer - 119
Junior Lecturer - 68
தகுதி:
Senior Lecturer - Master Degree with not less than 50% marks and M.Ed Degree with not less than 55% marks and Teaching Experience for a period of not less than 5 years.
Lecturer - Master Degree with not less than 50% marks in Tamil, Telugu, English, Mathematics, Physics, Chemistry, botany, Zoology, History and Geography and M.Ed., for Lecturers in Languages or Subjects and M.P.Ed., degree for Lectures in Physical Education with not less than 55% marks.
Junior Lecturer - Master Degree with not less than 50% marks in Tamil, Telugu, English, Mathematics, Physics, Chemistry, botany, Zoology, History and Geography and M.Ed Degree with not less than 55% marks.
வயது வரம்பு (31.07.2016-ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
57 வயதுக்கும் மேல் இருக்க கூடாது

ஊதிய அளவு:
Senior Lecturer - Rs.15600 - 39100 + GP Rs. 5700/-
Lecturer - Rs.9300 - 34800 + GP Rs. 4800/-
Junior Lecturer - Rs.9300 - 34800 + GP Rs. 4800/-
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://trb.tn.nic.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு நடைபெறும் நாள்:
பின்னர் தெரிவிக்கப்படும்

ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
பின்னர் தெரிவிக்கப்படும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
https://www.dropbox.com/s/ylj3npauqmyibm8/trb.jpg?dl=0&raw=1
பாட திட்டங்களை பதிவிறக்கம் செய்ய:
http://trb.tn.nic.in/DTERT2016/26022016/SCERTSYL.pdf

அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தர்மபுரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 17 தொழில்நுட்பம், பதிவு எழுத்தாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தர்மபுரி
அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தர்மபுரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 17 தொழில்நுட்பம், பதிவு எழுத்தாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:
அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தர்மபுரி

பணியிடம்:
தர்மபுரி, தமிழ்நாடு

காலியிடங்கள்:
17

பணிகள்:
தொழில்நுட்பம் - 16
பதிவு - 1

தகுதி:
தொழில்நுட்பம் - ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.
பதிவு - எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (09.01.2016ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதிய அளவு:
தாழில்நுட்பம் - ரூ. 5200-20200 + 2400 தர ஊதியம்
பதிவு - ரூ. 4800-10000 + 1400 தர ஊதியம்

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://gptdharmapuri.org   என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதிகள், சாதி (சுய கையொப்பமிட்ட) சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 12.04.2016 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
THE PRINCIPAL
GOVERNMENT POLYTECHNIC COLLEGE
BOOMANDAHALLI VILLAGE,
BAISUHALLI POST,
DHARMAPURI - 635205
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி:
12.04.2016

அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
https://www.dropbox.com/s/1qvfbq84a71iujx/GPT%20Dharmapuri%20Recruitment%202016%5B3%5D.png?dl=0&raw=1

சவூதி மன்னர் சல்மான் சிறு குறிப்பு‬.!


அந்த காலத்தில் மன்னர்கள் கொடை வள்ளல்கள் என கதையில்தான் கேட்டு உள்ளேன் ஆனால் இன்று கண்முன்னே பார்கிறேன் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அள சவூத் அவர்களின் உருவில்.
மார்க்கம் மற்றும் நவீன அறிவியல் படித்த சல்மான் அவர்கள் 1963 ஆண்டு பிப்ரவரி மாதம் அர் ரியாத் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அவர் பொறுப்பேற்றபோது அர் ரியாத் என்பது சவூதியில் ஒரு சாதாரண நடுத்தர நகரமாக இருந்தது அதை தன்னுடைய ஆட்சி திறமையால் உலகத்தரம் வாய்ந்த நகரமாக (Mid-Sized Town to Major Urban Metropolis) மாற்றினார், தற்போது நாட்டின் தலைநகரமாக திகழ்கிறது,
இவருடைய திட்டமிட்ட நகர வடிவமைப்பால் நகரில் சாலைகள் பறந்து விரிந்து ஒரு நேர்கோடு போல் இன்றும் காட்சி அளிக்கின்றன.
நகரில் பிச்சை எடுப்பதை தடைசெய்து மறுவாழ்வு மைய்யங்களை நிறுவி அதன் மூலம் பிச்சை எடுப்பவர்களை பிடித்து மறுவாழ்வு அளித்தார்.
பாலைவன மையப்பகுதியான அர் ரியாத் மாநகரை உருவாக்க இயற்கை சார்ந்த பெரும் சிரமங்களை சந்தித்தார் இருப்பினும் அர் ரியாத்தை வர்த்தக மற்றும் வணிக ரீதியாக மத்திய கிழக்கு ஆசியாவில் பணக்கார நகரமாக தரம் உயர்த்தினார்.
நகரை கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம், வணிகம் என அனைத்திலும் தன்னிறைவு பெற வைத்தவர், குறிப்பாக உலகிலேயே மிக பெரிய பெண்கள் பல்கலைகழகமான நூறா பல்கலைகலகத்தை நிறுவ அப்போதைய மன்னர் அப்துல்லாஹ்விடம் அடித்தளமிட்டவர் இவர்தான்.
இன்னும் ஏராளம் உள்ளன...!!!!!
இவரின் மார்க்கம் மற்றும் ஆட்சி திறமையை கண்டு வியக்கிறேன்.
எல்லா_புகழும்_இறைவன்_ஒருவனுக்கே‬

10 மற்றும் + 2 மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வுக்கு கல்வித்துறை புதிய கட்டுபாடுகள்!


பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்.1-ம் தேதி நிறைவு பெறுகிறது. 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 15-ம் தேதி தொடங்கி ஏப்.13-ம் தேதி நிறைவு பெறுகிறது. அதையொட்டி அரசு பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கல்வித் துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது குறித்து விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி , “பொதுத் தேர்வுகள் நடைபெறும் மைய வளாகம் அலைபேசிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் யாரும் தங்களது அலைபேசியை தேர்வு மையத்துக்கு கொண்டுவரக் கூடாது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் முழுவதுமாக தாமே அடித்துவிடும் நிகழ்வு ஒழுங்கீனச் செயல் எனக் கருதப்படும். அக்குறிப்பிட்ட மாணவரின் தேர்வு முடிவு நிறுத்தப்படுவதுடன், அடுத்த இரு பருவங்களுக்கும் அவர் தேர்வு எழுத அனுதிக்கப்படமாட்டாது.
பிளஸ்-2 தமிழ், ஆங்கிலம் தேர்வுகளுக்கு 30 பக்க கோடுபோட்ட விடைத்தாள் வழங்கப்படும். உயிர் தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு 22 பக்க விடைத்தாளும், கணினி அறிவியல் பாடத்திற்கு 75 மதிப்பெண்களுக்கான ஓ.எம்.ஆர். தாளும், அத்தோடு 30 பக்க விடைத்தாளும் வழங்கப்படும். கணக்குப் பதிவியல் பாடத் தேர்வு விடைத் தாளில் 1 முதல் 14 பக்கங்கள் கோடு போடாமலும், 15 முதல் 40-வது பக்கம் வரை கோடுபோட்ட விடைத்தாளும் வழங்கப்படும். மற்ற அனைத்துத் தேர்வுகளுக்கும் 38 பக்க விடைத் தாள்கள் வழங்கப்படும்.
விடைத்தாள் வழங்கப்படும் போது மாணவர்கள் பக்க எண்ணிக்கையை சரிபார்த்து உறுதிசெய்துகொள்ள வேண்டும். தனது முகப்புச்சீட்டில் உள்ள புகைப்படம், பெயர், பாடம், பயிற்று மொழி ஆகிய விவரங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். விடைத்தாளின் எந்தப் பகுதியிலும் தனது தேர்வு எண்ணையோ அல்லது பெயரையோ குறிப்பிடக் கூடாது.
குறிப்பிட்ட சில விடைகளை கோடிட்டு அடிக்க நேர்ந்தால், “மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது” என்ற குறிப்பு ரையை பேனாவினால் எழுத வேண்டும். கையொப்பம் இடக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது” என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் அ.புகழேந்தி தெரிவித்தார்.

பயணத்தின் போது கொண்டு வரும் லக்கேஜ்ஜில் கயிறுகளைக் கட்ட வேண்டாம் – ஏர் இந்தியா அறிவிப்பு !


லக்கேஜ் கட்ட கயிறுகளை பயன்படுத்த வேண்டாம் - ஏர் இந்தியா அறிவிப்பு ! 
விமானத்தில் பயணிக்கும் பொழுது நாம் கொண்டு செல்லும் லக்கேஜ் மற்றும் இதர பொருள்களின் மீது கயிறுகளை கட்டி பாதுகாப்பாக கொண்டு செல்வது வழக்கம்.
இவ்வாறு கயிறுகளை பயன்படுத்துவதால், விமான நிலையத்தில் லக்கேஜ்ஐ இழுத்து செல்லும் கன்வேயர் பெல்டில் இக்கயிறுகள் சிக்கி நிறைய அசம்பாவிதங்கள் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு லக்கேஜ் கட்ட கயிறுகளை பயன்படுத்த வேண்டாம் என சவுதி தமாம் கிங் பஹத் ஏர்போர்ட் அதிகாரிகள் அறிவுருத்தி சவுதியில் உடனடியாக அமல்படுத்தினர். இது விரைவில் அனைத்து விமான நிலையங்களிலும் அமலுக்கு வரும் என தெரிகிறது.

மருத்துவ உலகின் புதிய புரட்சி: தோலின் உயிரணுக்கள் மூலம் மூளைப்புற்று நோயை குணப்படுத்தும் முறை கண்டுபிடிப்பு !!!

நியூயார்க், பிப்.27-

மனிதத் தோலில் உள்ள உயிரணுக்களை (செல்களை) குருத்தணுக்களாக மாற்றி மனிதர்களின் மூளையில் உருவாகும் கிலியோபிளாஸ்டோமா என்ற புற்றுக்கட்டியை குணப்படுத்தும் நவீனவகை மருத்துவத்தை அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கிலியோபிளாஸ்டோமா என்ற மூளைப் புற்றுக்கட்டிக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சிக்கலானதாக கருதப்படுகிறது. இந்த சிகிச்சையில் உயிர்பிழைக்கும் வாய்ப்பு 30 சதவீதம் மட்டுமே உண்டு. மீதி நோயாளிகள் சிகிச்சை தொடங்கிய இரண்டு ஆண்டுகள்கூட உயிர் வாழ்வது கடினம் என்ற நிலைதான் நீடித்து வருகிறது.
புற்றுக்கட்டியை ஆபரேஷன் மூலம் நீக்கிவிட்டாலும் புற்றின் பாதிப்பு மூளையின் ஆழ்ந்த பகுதிவரை ஊடுருவி விடுவதால் ஆபரேஷனுக்குப் பிறகு அங்கிருந்து வெளியாகும் தாக்கம் மீண்டும் புதிய கட்டியாக உருவாகி விடும்.
இந்நிலையில், வடக்கு கரோலினா மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் பாதிக்கப்பட்ட நோயாளியின் தோலில் இருக்கும் உயிரணுக்களை ‘பைப்ரோபிளாஸ்ட்ஸ்’ எனப்படும் குருத்தணுக்களாக மாற்றி அதைவைத்தே கிலியோபிளாஸ்டோமா மூளைப்புற்றைக் கொன்று, குணப்படுத்த முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த குருத்தணுக்கள் ஒருவித புரதத்தை வெளிப்படுத்தியவாறு மூளையின் வெளிப்புறம் மட்டுமின்றி ஆழ்ந்த பகுதிகளுக்கும் சென்று செயலாற்றுவதால் கிலியோபிளாஸ்டோமா-வை முழுமையாக கொல்வதுடன் மீண்டும் புற்று ஏற்படாதவாறு பாதுகாக்கின்றன என்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக, இந்த புதிய முறையின் மூலம் எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் புற்றின் தீவிரத்துக்கேற்ப 160 முதல் 220 சதவீதம் வரை வெற்றி கிடைத்துள்ளது. இனி, அடுத்தகட்டமாக மனிதர்களின் தோலில் உள்ள செல்களான உயிரணுக்களை ஸ்டெம் செல் எனப்படும் குருத்தணுக்களாக மாற்றி சிகிச்சை அளிப்பதன் மூலம் கிலியோபிளாஸ்டோமா எனப்படும் மூளைப்புற்றை பூரணமாக குணப்படுத்திவிட முடியும் என இந்த ஆய்வுக்குழுவின் தலைவரான ஷான் ஹிங்டன் உறுதியுடன் கூறுகிறார். 

38,411 பசுமை வீடுகள் வழங்கும் திட்டம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 17,000 சதுர அடி கட்டட பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், கூட்டரங்கம், பயிற்சிக் கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் 1 கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள்; நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அலுவலகக் கட்டடம்;
கடலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 41 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 21 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள்;
அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பூர், திருவள்ளூர், தூத்துக்குடி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 10 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 87 ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள்;
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெறும் அலுவலர்கள் தங்குவதற்கு ஏதுவாக, ஓய்வு அரங்கம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உடற்பயிற்சி அரங்கம், யோகா அரங்கம், இணையதள வசதியுடன் கூடிய கணினி அறை ஆகிய வசதிகளுடன் 11 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயிற்சியாளர்கள் தங்கும் விடுதி;
அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, திருப்பூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 10 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 35 வட்டார ஊராட்சி சேவை மையங்கள்;
அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 105 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 762 கிராம ஊராட்சி சேவை மையங்கள்;
கோயம்புத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தேனி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 38 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 31 பாலங்கள்;
கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 13 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 பேருந்து நிலையங்கள்;
அரியலூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிக் கட்டடங்கள்;
ராமநாதபுரம், சிவகங்கை, திருவண்ணாமலை, மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் 1 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 சமுதாயக் கூடங்கள்;
காஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 2 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் விற்பனைக் கூடங்கள், மீன் வலைப்பின்னல் கூடங்கள், மீன் ஏலம் விடும் அரங்கம் மற்றும் மீன் கொள்முதல் மையம்;
அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 32 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 302 அங்கன்வாடி கட்டடங்கள், 44 தானியக் கிடங்குகள், 6 பொது விநியோகக் கடைகள், 2 சுகாதார மையங்கள், 3 ஆண்கள் சுகாதார வளாகங்கள், 2 பயிற்சிக் கூடங்கள், 2 விளையாட்டு மைதானங்கள், 4 சமையல் கூடங்கள், 3 நாடக மேடைகள், 2 பேரிடர் மேலாண்மை கட்டடங்கள், 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 3 ஊராட்சிக் கூட்டமைப்பு கட்டடங்கள்;
என மொத்தம் 273 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் 92 லட்சம் உறுப்பினர்களைக்கொண்டு 6 லட்சத்து 8 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. இதில் ஊரகப்பகுதிகளில் சுமார் 4 லட்சத்து 23 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இக்குழுக்களுள் 15 முதல் 20 வரை உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் பணிகளை மேற்பார்வையிடுவதற்கும் வழிநடத்துவதற்கும் ஒரு சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுனர் என்ற அளவில் தமிழ்நாட்டில் சுமார் 20,000 சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுனர்கள் ஊரகப்பகுதிகளில் உள்ளனர். மகளிர் சு­ய உதவிக் குழுக்கள் தாங்கள் நடத்தும் கூட்டங்கள், சந்தா தொகை செலுத்துதல், சேமிப்பு, உட்கடன் விவரம், கடனை மீளச் செலுத்துதல் போன்ற பணிகளுக்காக பல்வேறு பதிவேடுகளை பராமரிக்கவும், பதிவு செய்யவும், செயல்பாடுகளை மேற்பார்வையிடவும் அம்மா கைபேசி திட்டம் என்ற புதிய திட்டம் துவக்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அதன்படி, முதற்கட்டமாக, தமிழகத்தில் உள்ள 20,000 சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுனர்களுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அம்மா கைபேசிகளை வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக, 3 சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுனர்களுக்கு அம்மா கைபேசிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று வழங்கி, துவக்கி வைத்தார்.
அம்மா கைபேசி திட்டத்தின் கீழ் சமுதாய பயிற்றுனர்களுக்கு கைபேசியுடன் சிம் சேவையும் இலவசமாக வழங்கப்படும். சிம் கார்டு பயன்பாட்டிற்கான மாதாந்திர கட்டணத்தை தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். மேலும், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நவீன கைபேசியில் ஒருவருக்கொருவர் பேசுதல், குறுஞ்செய்திகள் அனுப்புதல், புகைப்படம் எடுத்தல், ஜிபிஆர்எஸ் இணைய தொடர்பு வசதி போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதல்–அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் 807 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 38,441 சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளை வழங்கும் அடையாளமாக 2 பயனாளிகளுக்கு சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று வழங்கி, துவக்கி வைத்தார்.
2012–2013 மற்றும் 2013–2014ஆம் ஆண்டுகளில் மாநில அளவில் அதிக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கி சிறப்பாகச் செயல்பட்டு முதலிடம் பெற்றமைக்கான விருதினை இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மகேஷ் குமார் ஜெயினுக்கும்,
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி 2012–2013ஆம் ஆண்டு இரண்டாம் இடமும், 2013–2014ஆம் ஆண்டு மூன்றாவது இடமும் பெற்றமைக்காக, அவ்வங்கியின் தலைவர் ஆர். இளங்கோவனுக்கும்,
பல்லவன் கிராம வங்கி 2012–2013ஆம் ஆண்டு மூன்றாவது இடமும், 2013–2014ஆம் ஆண்டு இரண்டாவது இடமும் பெற்றமைக்காக, அவ்வங்கியின் தலைவர் எஸ். சுரேஷ் குமாருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மேயர் சைதை துரைசாமி, தலைமைச் செயலாளர், ஞானதேசிகன், ஷீலா பாலகிருஷ்ணன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் கா. பாஸ்கரன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வி. அமுதவல்லி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

என்னை மிரட்டினார் பிரியங்கா…


சென்னை: வேலூர் சிறையில் தன்னை சந்தித்த பிரியங்கா காந்தி, மிரட்டும் தொனியில் பேசியதாகவும், எந்த ஒரு வசதியையும் செய்து தரக்கூடாது என்று சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார், ராஜிவ் கொலை வழக்கில் 25 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும், நளினி. நளினியின் தந்தை சங்கர நாராயணன் மறைவையடுத்து சென்னை, கோட்டூர்புரத்தில், நடைபெற்ற, அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக 12 மணி நேரம் மட்டும் நளினி பரோலில் வெளியில் விடப்பட்டார். அப்போது, ஜூனியர் விகடன் இதழுக்கு நளினி அளித்த பேட்டியில் இருந்து சில பகுதிகள் இதோ: பரோல் கிடைக்கும் என்று கடைசி நிமிடம் வரை நம்பவில்லை. என் தந்தையின் உடல்நிலை மோசமானதை அடுத்து, கடந்த ஒரு மாதமாக பரோல் கேட்டுப் போராடினேன். கிடைக்கவில்லை. அவர் இறந்தபிறகுதான், பரோல் கிடைத்தது.
வேலூர் சிறையில் பிரியங்கா காந்தி, சில வருடங்கள் முன்பு, நளினியை தனிமையில் சந்தித்து பேசினார். அதுகுறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள நளினி, அவர் பேசிய முழு விவரத்தையும் இப்போது சொல்ல முடியாது. ஆனால், அவர் என்னிடம் மிகவும் மிரட்டல் தொனியில் பேசினார். அங்கிருந்து பிரியங்கா கிளம்பும்போது, எனக்கு எந்த வசதியும் செய்து தரக் கூடாது என்று சொல்லிவிட்டுச் சென்றார். இவ்வாறு நளினி கூறியுள்ளார்.

Friday, 26 February 2016

3 எளிய வழிமுறை, பாஸ்போர்ட் உடனே உங்கள் கையில்.


பாஸ்போர்ட் சுலபமாக நீங்களே எப்படி வாங்குவது? , இதை பின்பற்றுங்கள், உடனே பெற்றிடலாம்
பாஸ்போர்ட் பிராந்திய  அதிகாரியிடம் கேட்கப்ட்ட கேள்விகளும் அதற்கான உரிய பதில்களையும் ஒரு இணையத்தில் கிடைக்கப் பெற்றது
உண்மையில் இந்த பரபரப்புக்கும் டென்ஷனுக்கும் அவசியமே இல்லை. இங்கே காலில் கஞ்சியைக் கொண்டது போல் கடைசி நேர த்தில் பாஸ்போர்ட் வாங்க வருபவர்கள் தான் டென்ஷனை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உண்மை யில் நிதானமாக விண்ண ப்பித்தால், தபால் மூலமே பாஸ்போர்ட், வீடு தேடி வந்து விடும். அலைச்சலே வேண்டாம். டென்ஷ னும் வேண்டாம்.’’ எல்லோருக்கும் வெளிநாடு போகும் வாய்ப்பு இல்லாவிட்டாலும், ஒரு ஐடென்டிடி கார்டாகவாவது பாஸ் போர்ட் வாங்கி வைத்துக் கொள்ளலாம். அல்லது சிலரு க்கு எதிர் காலத்தில் வெளிநாடு போகும் வாய் ப்பும் ஏற்படலாம்.
பாஸ்போர்ட் வாங்குவது என்பதே ரொம்ப கஷ்டமான வேலை என்ற கருத்து எல்லோருக்குமே இருக்கிறது. இதைச் சுலபமாக எப்படி வாங்குவது?
முன்பு விண்ணப்பம் பூர்த்தி செய்வது கொஞ்சம் சிக்கலாக இருந் ததாக மக்கள் நினைத்ததால், இப்படித் தோன்றியிருக்கலாம் இப் போது மிக எளிதாக்கி விட்டோம்.
ஃபார்ம்_1 என்ற விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, 3 பாஸ்போர்ட் அளவிலான ஃபோட்டோக் கள், வசிப்பிடத்துக்கு சான்றாக, ரேஷன் கார்டு, தற்போது உள்ள பேங்க் ஸ்டேட் மெண்ட், டெலிஃபோன் பில், மின்சார ரசீது, தண்ணீர் வரி ரசீது, வாக்காளர் அட்டை, மூன்று வருடத்திற்கான வரு மானவரி அசெஸ்மெண்ட் ஆர்டர், புகழ் பெற்ற கம்பெனிகளில் வேலை செய்ப வராக இருந்தால், அந்த கம்பெனியின் லெட்டர் ஹெட்டில் இருக்கும் அப்பாயி ண்ட்மென்ட் ஆர்டர் போன்று மேலே சொன்ன 8 ஆவணங்களில் ஏதாவது ஒன் றையும், வயது சான்றிதழும் இணைத்து, விண்ணப்பத்தைக் கொடுக்க வேண்டும். அரசாங்க அலுவலராக இருந்தால், தடையில்லாச் சான்றிதழையும், (No objection certificate) சேர்த்து கொடுக்க வேண்டும்.
இங்கே இவ்வளவு கூட்டம் இருக்கிறதே! இந்த கூட்டத்தில் விண் ணப்பிப்பது சிரமமாக இருக்காதா?
இங்கே வந்துதான் கொடுக்க வேண்டுமென்பதில்லை. சென்னையை ப் பொறுத்தவரை எக்மோரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவ லகம் அல்லது அண்ணாநகர், அடையாறு மற்றும் பூக்கடையிலுள்ள டெபுடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் தேர்ந்தெடுக் கப்பட்ட ‘ஸ்பீட் போஸ்ட்’ அலுவலகங்கள், மற்றும் மாவட்ட பாஸ் போர்ட் மையங்களில் விண்ணப்பங்களை வாங்கி, பூர்த்தி செய்து அங்கேயே தந்துவிட்டுப் போகலாம்! முறைப்படி. போலீஸ் விசாரணை முடிந்ததும், எங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும். பாஸ்போர்ட் கொடுப்பதும் இங்கேயிருந்துதான்! எல்லாம் சரியாக இருந்தால் ‘ஸ்பீட் போஸ்டில்’ பாஸ்போர்ட் வீடு தேடி வந்துவிடும். இதில் எந்தப் பிரச்னையும் கிடையாது.
யாருக்காவது பாஸ்போர்ட் கொடுக்க மறுப்பது உண்டா?
பொதுவாக எல்லா இந்தியர்களும், பாஸ்போர்ட் வாங்கத் தகுதியான வர்கள் தான். ஆனால், போலீஸ் விசா ரணையில் அவர்களுக்குத் திருப் திகரமாக இல்லையென்றாலோ, அல் லது அவர்கள், ஏதாவது சட்டம் மற் றும் தேச விரோதமான நடவடிக்கைக ளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரியவந் தாலோ, அவர்களுக்கு பாஸ்போர்ட் தருவதில்லை.
ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட் டை எத்தனை வருடங்களுக்குப் பயன் படுத்தலாம்?
ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டை பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப் போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்க ளுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.
வெளிநாட்டில் வசிக்கும் காலங்களில்
பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டியிருந்தால் என்ன செய் வது?அந்தந்த நாட்டிலுள்ள, இந்திய தூதரகத்தில் சென்று புதுப்பித் துக் கொள்ளலாம்.
பாஸ்போர்ட் வாங்குவது எவ்வ ளவு சுலபமாக இருக்கிறது. இத ற்குப் போய் எதற்காக டென்ஷ னாக வேண்டும்? ரிலாக்ஸ்டாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்களேன்!
‘தட்காலில்’எப்படி பாஸ்போர்ட் வாங்குவது?
முன்பு ‘தட்கால்’ முறையில் பாஸ்போர்ட் வாங்க வேண்டுமென் றால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற ஏதாவது ஓர் உயர் அதிகாரி யிட மிருந்து சான்றிதழ் வாங்கி வர வேண்டு ம். அவசரத்திற்காகத்தான், அதிக பணம் கொடுத்து பாஸ்போர்ட் வாங்குகிறார் கள். அந்த அவசரத்தில், இந்த சான்றிதழ் வாங்குவது சிரமமாக இருப்பதால், கீழ் வரும் 14 ஆவணங்களில் ஏதாவது மூன்றையும் நோட்டரி பப்ளிக் சான்ற ளித்த உறுதி மொழிப்பத்திரம் (Affidavit) ஒன்றையும் இணைத்துக் கொடுத்தால் போதும், 7 நாட்களுக்குள் பாஸ்போர்ட் கொடுக்கப்படும். போலீஸ் விசாரணை உண்டு.
1. வாக்காளர் அடையாள அட்டை
2. மத்திய அல்லது மாநில அரசு, பொதுத்துறை அரசு நிறுவனங்கள், உள்ளாட்சித்துறை அலுவலக ங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கொடுக்கப்படும் அடையாள அட்டை.
3. ஜாதி சான்றிதழ் (எஸ்.ஸி./எஸ்.டி./ஓ.பி.சி.)
4. தியாகி அடையாள அட்டை
5. துப்பாக்கி லைசன்ஸ்
6. அசையாச் சொத்துக்களின் ஆவணங்களான பட்டா, பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் போன்றவை.
7. ரேஷன்கார்டு
8. பென்ஷன் வாங்குபவராக இருந்தால் அது தொடர்பான ஆவணங்கள்.
9. ரெயில்வே அடையாள அட்டை.
10. வருமானவரி அடையாள அட்டை (Pan Card)
11. வங்கி, விவசாயி மற்றும் போஸ்ட் ஆஃபீஸ் பாஸ்புக்.
12. படிக்கும் கல்வி நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட அடையாள அட்டை
13. ஓட்டுனர் உரிமம்.
14. பிறப்பு சான்றிதழ்
பாஸ்போர்ட் கட்டணம்
விண்ணப்பப்படிவம் ரூ.10/_
சாரண பாஸ்போர்ட்டுக்கு ரூ.1,000/
தட்காலுக்கு ரூ. 2,500/_
18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.600/

அனைத்து சமுதாயத்திற்கும் உதவும் முஸ்லிம்கள் சவூதியில் வாழும் இந்தியர்களுக்கு ஓர் நற்செய்தி.


இந்தியாவில் இருந்து சவூதிக்கு வந்து சம்பளம் மற்றும் கஷ்டமான வேலைகளில் சிக்கி  கஷ்டப்படும்  நமது இந்திய சொந்தங்களுக்காக தகவல் மற்றும் உதவி ஆலோசனைகளை வழங்க நமது சகோதரர் செய்யது அலி அவர்கள் தயாராக உள்ளார்கள்.
மேலும்,இறந்தவர்களின் உடல்களை நமது நாட்டிற்கு கொண்டு செல்லவும், தகுந்த நேரடி உதவிகளையும் அளிக்க 24 மணிநேரமும் நமது சகோதரர் தயாராக இருக்கிறார். 
குறிப்பு :இச்சேவை அனைத்து மதத்தவர்களுக்கும் பொருந்தும். 
 இது முழுக்க முழுக்க இலவச சேவை. 
அவரின் அலைபேசி மற்றும் பெயர். 
சகோதரர்_
செய்யது_அலி: 00966-563710437.,
நன்றி Whats app குழுமம்

பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் இணையவழி பட்டா மாறுதல் வசதி :: மின்னணு சேவை மையம் மூலம் செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு.


    பட்டுக்கோட்டை உட்பட தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் செயல்படும் மின்னணு சேவை மையம் மூலம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் திரு.என்.சுப்பையன்.
இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
தமிழ்நாடு அரசின் ஆணைப்படி முதன்முதலில் திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் பரிசோதனை அடிப்படையில் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
தொடர்ந்து திருவிடைமருதூர், பேராவூரணி, பூதலூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், பாபநாசம் ஆகிய வட்டங்களில் அமல்படுத்தப்பட்டது.
இதன் மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் இனி இணையவழி பட்டா மாறுதல் செய்து கொள்ளலாம்.
தொடக்கவேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள மின்னணு சேவை மையம், வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மின்னணு சேவைமையம் ஆகிய இடங்களில் தனி பட்டா, கூட்டு பட்டா, உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் ஆகிய இனங்கள் தொடர்பாக மனு செய்யலாம்.
விண்ணப்பித்த 2 அல்லது 3 நாள்களில் ஆணை கிடைத்துவிடும். இத்திட்டத்தில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு இல்லை. பட்டா தயாராகிவிட்ட தகவல் விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசிக்கு அனுப்பப்படும். இதேபோல,மேல் முறையீடும் இணையவழியில் மேற்கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.

புதுப்பட்டினத்தை அடுத்து அதிராம்பட்டிணம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொலைவெறி தாக்குதல் :: 3 பேர் படுகாயம் - வலைகள், மீன்களை பறித்துச்சென்று இலங்கை கடற்படை அட்டூழியம்.


புதுப்பட்டினத்தை அடுத்த அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேர் 3 விசைப்படகுகளில் அதிராம்பட்டினம் அருகிலுள்ள கீழத்தோட்டம் துறைமுகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
கார்த்தி, மாதவன், சிலம்பரசன், சுப்பிரமணியன், சுரேஷ், பன்னீர், மற்றொரு சுரேஷ், விக்னேஷ், அருள்
பாண்டி,மகாலிங்கம், நாகூரான், சிவானந்தம், மற்றொரு கார்த்தி உள்ளிட்ட 13 மீனவர்கள் மறுநாள் புதன்கிழமை (பிப்.24) காலையில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அதிராம்பட்டினம் மீனவர்களை கயிற்றால் சரமாரியாகத் தாக்கினராம். இதில், நாகூரான், சுரேஷ், சிவானந்தம் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். மேலும், படகிலிருந்த வலைகள், மீன்களை இலங்கை கடற்படையினர் பறித்துச் சென்று விட்டனராம்.
இதையடுத்து, புதன்கிழமை மாலை மீனவர்கள் கரை திரும்பினர். இதில் காயமடைந்த 3 மீனவர்களும் அதிராம்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
தகவலறிந்த கீழத்தோட்டம் மீனவர்கள் சங்கத்தலைவர் பால்ராஜ் இந்திய கடலோர பாதுகாப்புப் படையினருக்கும், அதிராம்பட்டினம் கடலோர காவல் குழுமத்துக்கும் புகார் அளித்துள்ளார்.

சிரியாவில் அமெரிக்கா- ரஷ்யாவின் தாக்குதல்கள் இன்று நள்ளிரவு முதல் நிறுத்தம்- அதிபர் ஆசாத் மீது ஒபாமா.


வாஷிங்டன்: பஷார் அல் ஆசாத் அதிபர் பதவியில் இருந்து விலகும் வரை சிரியாவில் அமைதி இருக்காது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் போர் நிறுத்தம் கொண்டு வருவது என்று அமெரிக்காவும், ரஷ்யாவும் முடிவு செய்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ரஷ்ய அதிபர் புதினும் தொலைபேசி மூலம் பேசி முடிவு செய்தனர். போர் நிறுத்தம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் ஒபாமா தேசிய பாதுகாப்பு குழுவுடன் வியாழக்கிழமை சிரியா குறித்து கலந்தாலோசித்தார். சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகும் வரை போராளிகள் தங்களின் போராட்டத்தை நிறுத்த மாட்டார்கள் என்று ஒபாமா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் ஆசாத் பதவி விலகினால் மட்டுமே சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்து, மக்களை ஒன்று சேர்க்க முடியும். சிரியாவில் எப்பொழுதும் அமைதி நிலவ வேண்டும் என்று ஆசாத் நினைத்தால் அவர் பதவி விலக வேண்டும். சிரியாவில் 5 ஆண்டுகளாக நடக்கும் பிரச்சனையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் போர் நிறுத்தம் மூலம் இந்த பிரச்சனை தீருமா என்று பார்க்க வேண்டும். போர் நிறுத்தம் குறித்து பலரும் விமர்சிக்கலாம். ஆனால் சிரியாவில் நடக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிக்காவிட்டால் வரலாறு நம்மை கடுமையாக சாடும் என்றார். ஆசாத் பதவி விலக வேண்டும் என்று ஒபாமா ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம்: ஜெ. அதிரடி- பின்னணி என்ன?


முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், வேளச்சேரி பகுதி செயலர் எம்.கே.அசோக் எம்எல்ஏ உள்பட ஐந்து பேரை கட்சி பொறுப்பில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார். இவர்கள் அனைவரும் நிதியமைச்சர் ஓபிஎஸ்-ஸின் தீவிர ஆதரவாளர்கள் ஆவர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதிமுகவில் உட்கட்சி விவகாரங்களை களை எடுக்க கட்சி பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தீவிரம் காட்டி வருகிறார். நிதியமைச்சராக உள்ள ஓபிஎஸ் மீது நேரிடையாக இல்லாமல் மறைமுகமாக ஜெயலலிதாவின் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், அவர் வகித்து வந்த அனைத்துலக எம்ஜிஆர் மன்ற பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதே போன்று தேனி மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் எல்லப்பட்டி முருகன், திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர செயலர் கே.மாரியப்பன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். பழனி நகர கழக செயலராக வி.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போன்று தென் சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி பகுதி செயலர் பொறுப்பில் இருந்து வந்த எம்.கே.அசோக் எம்எல்ஏ அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த இடத்திற்கு 177வது அதிமுக செயலளாரும், கவுன்சிலருமான எம்.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். 
இதே போன்று நீக்கப்பட்ட இன்னொரு முக்கியமான நபர் மீனவர் பிரிவு துணைச் செயலராக இருக்கும் டி.ரமேஷ் ஆவார். இவர் மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ராஜலட்சுமிக்கும், ஓபிஎஸ்-க்கு நெருங்கிய ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருமே ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளர்கள் ஆவர். ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை,  தலைமை செயலக வட்டாரத்தில் இருக்கும் ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி காரணம்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுகவில் விருப்ப மனுக்கள் அண்மையில் வழங்கப்பட்டது. ஜெயலலிதாவை பொறுத்தவரையில் நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை அறிவிப்பது கிடையாது. தானாகவே முடிவெடித்து வேட்பாளர்களை அறிவித்துவிடுவார். மேலும், தற்போது அமைச்சர்களாக உள்ளவர்களின் கருத்துகளையும் ஜெயலலிதா கேட்பாரா என்பதும் கிடையாது.
இந்த நிலையில் தேனியில் உள்ள அமைச்சர் ஓபிஎஸ் வீட்டில் கடந்த ஒரு வாரமாக கூட்டம் அலைமோதி வருகிறது. இதனை அறிந்த ஜெயலலிதா, உளவுத்துறை மூலம் தகவல் அறிய உத்தரவிட்டுள்ளார். அவர்கள், தேர்தல் சீட்டுக்காக வருவதாக உளவுப்பிரிவு, ஜெயலலிதாவிடம் தகவல் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்தே ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளர்களை கட்சி பொறுப்பில் இருந்து ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார். 
இதனிடையே, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதற்கான இன்னொரு காரணமும் கிடைத்துள்ளது.
முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம் நீக்கப்பட்டதற்கு, சசிகலாவின் கணவர் நடராஜனை சந்தித்து பேசியதே காரணம் என்று கூறப்படுகிறது. 
எம்.கே.அசோக் எம்எல்ஏ, டி.ரமேஷ் ஆகியோர் கட்சிக்காரர்களை மட்டுமின்றி, மாவட்டச் செயலாளர்களையும் மதிப்பதே கிடையாதாம். இதனாலே இவர்கள் இரண்டு பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் எல்லப்பட்டி முருகன், திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர செயலர் கே.மாரியப்பன் ஆகியோர் அம்மா நூறாண்டு காலம் வாழக வேண்டும் என்ற வேண்டுதலுடன் தைபூசத்தையொட்டி பழனிக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர். அப்போது, 'போர்படைத் தளபதி சசிகலா' என்று பெரிய பேனர் வைத்துள்ளனர். இதனாலேயே இவர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

'விஜயகாந்தின் மூத்த மகனுக்கு துணை முதல்வர் பதவி வேணும்னு பேச்சுவார்த்தையாம்..

Posted Date : 12:40 (26/02/2016)

விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், 93 வயது தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம் என்று கடுமையாக விமர்சித்துள்ள அதிமுக தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி,  "விஜயகாந்தின் மூத்த மகனுக்கு துணை முதல்வர் பதவி வேணும்னு பேச்சுவார்த்தை நடத்துறாங்களாம். இந்த கூட்டணி மட்டும் நடந்தது என்றால் தமிழகம் அவர்களை புறக்கணிக்கணும்" என்றும் காட்டமாக கூறினார். 
  தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழாவை அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் அமர்க்களப்படுத்தி வருகின்றனர். கூடவே பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி எடத்தெரு கீழப்புதூரில் திருச்சி ஏர்போர்ட் பகுதி கழகம் சார்பாக பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது.
ஏர்போர்ட் பகுதி கழக செயலாளர் வெல்லமண்டி சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசு தலைமை கொறடா மனோகரன், அதிமுக தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி, திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயா, துணைமேயர் ஜெ.சீனிவாசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இந்த கூட்டத்தில் பேசிய நிர்மலா பெரியசாமி, " சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த தேமுதிக மாநாட்டில் எம்.ஜி.ஆர் நுழைவாயில் வைக்கப்பட்டிருந்தது. கருப்பு எம்.ஜி.ஆர் என விஜயகாந்தை வர்ணிக்கிறார்கள். தங்களுடைய கட்சிக்கு செல்வாக்கு உயரக்கூட எங்கள் தலைவரைத்தான் நீங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. எம்.ஜி.ஆர் எங்களுக்கு மட்டும்தான் சொந்தம். இனி அவரை அதிமுகவை தவிர வேறு எவரும் பயன்படுத்தக்கூடாது. அந்த மாநாட்டில் விஜயகாந்தின் மனைவி,  அம்மாவை ஒருமையில் திட்டிருயிருக்கிறார். தேமுதிகவுக்கு 11 சதவீதமாக இருந்த வாக்கு வங்கி இப்போது 4 சதவீதமாக குறைந்துள்ளது. தேய்ந்துபோன தேமுதிக, அடுத்த தேர்தலில் அடியோடு அழிந்துபோகும்.
ஓட்டுக்காக திட்டங்கள் கொண்டுவராமல், தமிழகத்திற்காக தொலை நோக்கு பார்வையில் அம்மா உணவகம், அன்னதானத் திட்டம், குடும்பத்துக்கு 20 கிலோ அரிசி என மக்களுக்காக கொண்டுவந்த திட்டங்கள் ஏராளம்.
 இப்படிப்பட்ட அம்மாவை இந்த பிரேமலதா கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.  இவர் என்னத்துக்காக காய் நகர்த்திக்கிட்டு இருக்கிறார் என்றால், விஜயகாந்த் அல்சேமர் டிமென்சியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என நம்பதகுந்த நண்பர்கள் மூலம் எனக்கு தகவல் கிடைத்துள்ளது.  அவர் பேச வந்ததை 5 நிமிடங்களுக்கு மேல் மறந்துபோவார், அவர் என்ன பேசுகிறார் என அவருக்கே தெரியாது. சரக்கு அடிப்பதை தாண்டி, தொடர்ச்சியாக ட்ரக்ஸ் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டார்னு சொல்லுறாங்க. அதனால்தான் இப்படி விஜயகாந்த் உளறி கொட்டுகிறார். அப்படிப்பட்டவரை மேடையில் ஏற்றி, கணவர் ஒண்ணும் இல்லை. நான்தான் இனி எல்லாம் என விளம்பரம் தேடி வருகிறார் பிரேமலதா. கட்டுன புருசனை அசிங்கப்படுத்தும் மனைவி பிரேமலதாவாகதான் இருக்க முடியும். இதுக்கு நடுவுல விஜயகாந்தின் மூத்த மகனுக்கு துணை முதல்வர் பதவி வேணும்னு பேச்சுவார்த்தை நடத்துறாங்களாம். அதனால் நமக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லை. இந்த கூட்டணி மட்டும் நடந்தது என்றால் தமிழகம் அவர்களை புறக்கணிக்கணும். விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், 93 வயது தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம்.
  
இவர்களோடு பாமக, மதிமுக, தேமுதிக நமக்கு எதிராக களம் இறங்குறாங்களாம், இந்த பம்பரம், மாம்பலம், முரசு சின்னம் எல்லாம் கிடைக்க, அவர்களுக்கு அரசியலில் அங்கீகாரம் கிடைக்க யார் காரணம், எங்க முதல்வரம்மாதான் காரணம். ஒரு குடிகாரர் எதிர்க்கட்சி தலைவராக எங்க கட்சி தொண்டர்கள் உழைப்புதான் காரணம்.  சென்னை கொளத்தூர் தொகுதியில்,  2004 தபால் ஓட்டில் ஜெயித்த ஸ்டாலின் எல்லாம் இங்கு அம்மாவை விமர்சனம் செய்கிறார். அவங்க டாடி கருணாநிதி அடுத்து ஆட்சியை பிடிக்கும் கனவில் இருக்கிறார். உங்கள் கனவுகளுக்கு தமிழக மக்கள் சமாதி கட்டுவார்கள்.
தமிழகத்தை காக்க சபதம் ஏற்போம். பண்ருட்டியார் சொன்னாரே, தமிழகத்தில் முதல்வர் பதவி வேக்கன்சி இல்லைன்னு, அப்படித்தான் எங்கம்மா இருக்க, எப்படி உங்களால் முதல்வராக முடியும். எங்கம்மாதான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர்" என முடித்தார்.
-நன்றி விகடன். 

SDPI : இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமத்திய அரசையும், ஐ.நா வையும் வலியுறுத்தியும், ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டம்!


பாலஸ்தீனை ஆக்கிரமித்த இஸ்ரேல் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் பூர்விக குடிமக்களை அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்து அகதிகளாக்கி அவர்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்து வருகிறது. கடந்த 8 ஆம் தேதி தொடங்கி தற்போது வரை 14 நாட்களாக பாலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் நிகழ்த்தி வரும் கொடூர தாக்குதலில் இதுவரை 500 க்கும் அதிகமான அப்பாவி மக்களும், குழந்தைகளும் பலியாகியுள்ளனர். தொடர்ந்து வான்வழி மற்றும் தரைவழி மூலமும் கொடூர தாக்குதலை இஸ்ரேல் நடத்திவருகிறது.
இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டி தனமான தாக்குதலை இந்தியாவும் ஐ.நா வும் கண்டிக்க வேண்டும். இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மாபெரும் ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டம் சென்னை அடையாரில் உள்ள ஐ.நா வின் குழந்தைகள் நல அலுவலகமான யுனிசெப் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமை வகித்து உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது; அப்பாவி பாலஸ்தீன மக்களின் மீதான இஸ்ரேலின் மூர்கத்தனமான தாக்குதலை கடுமையாக கண்டிக்கின்றோம். மேலும் இந்திய அரசானது சியோனிச இஸ்ரேல் உடனான தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை பிராந்தியத்தில் அமைதி திரும்பும் வரை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இஸ்ரேல் பெண்கள், குழந்தைகள் என்று கூட பார்க்காமல் அப்பாவி மக்கள் மீது எந்தவகையிலும் ஏற்று கொள்ள முடியாத, வெறுக்கத்தக்க தாக்குதலை நடத்துவதற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி தனது வேதனையையும், கடுந்துயரத்தையும் தெரிவித்துக்கொள்கின்றது. பாலஸ்தீன விவகாரத்தில் மனித உரிமைகள் பேணப்படுவதில் உலக நாடுகளின் மௌனம் அவர்களின் பாசாங்குத்தனம் மற்றும் இரட்டை நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது.
இதேபோல், மத்திய ஆசிய விவகாரங்களில் ஆளும் பா.ஜ.க அரசின் மாறுபட்ட பேச்சுகள் அதிர்ச்சியை தருகின்றன. மேலும் இரண்டு அவைகளிலும் இஸ்ரேலிய படுகொலை கண்டன தீர்மானம் நிறைவேற்றுவதை இந்த அரசு மூடிமறைக்க முயன்றபோது அரசின் பாசாங்குத்தனம் வெளிப்பட்டது.
பிரதம மந்திரி நரேந்திர மோடி தனது பிரிக்ஸ் மாநாட்டு உரையில் தனது கவலையை குறிப்பிட்டு, நாடுகளுக்கு இடையேயான மோதல்களை வெறும் வேடிக்கை பார்ப்பது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தனது உரையில் குறிப்பிட்டார். குறிப்பாக மத்திய ஆசியாவில் வாழும் 70 லட்சம் இந்தியர்களை கருத்தில் கொண்டு பிராந்திய அமைதியில் எனது அரசு கூடுதல் கவனம் செலுத்தும் என்று குறிப்பிட்டார்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்த நாளில் இருந்தே இந்தியா பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. இஸ்ரேல் உதயமாகி பல வருடங்களுக்கு டெல்லியில் தூதரகம் தொடங்க இந்தியா அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது. அரபு நாடுகளுக்கு வெளியே இருந்து பாலஸ்தீனை ஆதரித்த முதல் நாடு இந்தியா. 1980 வரை இஸ்ரேலை இந்தியா புறகணித்தது. தற்பொழுது இஸ்ரேலுடன் வலுவான உறவுகளை கொண்டிருந்தாலும் பாலஸ்தீன மக்களின் விடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. ஜனநாயக ரீதியாக 2006 ல் ஹமாஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இஸ்ரேல் நடத்தும் மிக கொடூரமான மூன்றாவது தாக்குதல் இது. தற்பொழுது நடைபெறும் தாக்குதலுக்கு காரணம் ஹமாஸ் மற்றும் பாதாஹ் இடையே ஏற்பட்ட ஒப்பந்தமே என நம்ப படுகின்றது.
1967 ல் இருந்து தனது கட்டுபாட்டில் இருக்கும் பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் அப்பட்டமான போர் குற்றமே. இஸ்ரேலை உலக நீதிமன்றத்தின் முன் நிறுத்தவதும் தனது தாக்குதலை நிறுத்தும் வரையில், ஆக்ரமிக்கபட்ட பகுதியில் இருந்து வெளியேறும் வரை இஸ்ரேலை புறக்கணிப்பது அரபு நாடுகள் மற்றும் மனித உரிமை ஆணையங்களின் கடமை.
காசா பகுதியின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், அப்பாவி பொதுமக்கள் மீது ஏவப்படும் உயிர்கொல்லி ஆயுதங்கள் இவை காலம் காலமாக பரப்புரை செய்யப்பட்ட பாலஸ்தீன மக்கள் அழித்தொழிப்பு நடவடிக்கையின் இறுதிகட்டம். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகளை போதுமான அரசியல் மற்றும் தூதரக அழுத்தங்கள் மூலம் இஸ்ரேலின் கொடிய தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது உரையில் அவர் தெரிவித்தார்.
போராட்டத்தில் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தொண்டு ஹனிபா, கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், வட சென்னை மாவட்ட தலைவர் முகம்மது ரஷித், பொது செயலாளர் கரீம், மத்திய சென்னை மாவட்ட தலைவர் முகம்மது நாஜிம், பொது செயலாளர் இஸ்மாயில், தென் சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், பொது செயலாளர் அன்சாரி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஷேக் முகம்மது அலி, பொது செயலாளர் அஹமது, காஞ்சிபுர மாவட்ட தலைவர் பிலால், பொது செயலாளர் அபூபக்கர் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் இஸ்ரேலின் கொடியை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
போராட்டத்தை தொடர்ந்து , இஸ்ரேலை கண்டித்தும் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும் யுனிசெப் அலுவலகத்தில் ஐ.நா அதிகாரியிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது

Thursday, 25 February 2016

ரூ.500 செலவில் 5 ஆண்டுகளுக்கு மின்சாரம்! பட்டையை கிளப்பும் செங்கல்பட்டு பொறியியல் பட்டதாரி தாஜூதீன்!


இன்றைய கால கட்டத்தில் விளக்கு என்றால் அது மின்சார விளக்குதான். மின்சாரம் இல்லாத வாழ்க்கையை யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. மின்சாரம் இல்லையென்றால், உலக இயக்கமே இன்று ஸ்தம்பித்து போய் விடும். 1831ல், காப்பிடப்பட்ட தாமிரக்கம்பி சுருளின் இடையே காந்தத்தை முன்னும் பின்னும் நகர்த்தினால் மின்சக்தி உற்பத்தி ஆகும் என்பதை மைக்கேல் பாரடே கண்டுபிடித்து வெளியிட்டார். 1858ல் அருவிகளின் ஊடே டர்பைன்களை சுழலச் செய்து மின்சக்தி பெற முடியும் என்பதை அமெரிக்கா அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து நீர் மின்சாரம் உருவானது.
பிறகு நிலக்கரியை எரித்து, நீரைக் கொதிக்க வைத்து, அதில் கிடைக்கும் நீராவியைக் கொண்டு டர்பைனை சுழல வைத்தார்கள். அனல் மின்சாரத்தை உற்பத்தி செய்தார்கள். காலப்போக்கில் அணு சக்தியை பயன்படுத்தி அணுமின்சாரம் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து காற்றின் மூலமும். அந்த வகையில் நடைமுறைக்கு வந்திருக்கும் புதிய மின் உற்பத்திக்கான அடித்தளம், சூரிய ஆற்றல் எனப்படும் சோலார் சக்தி.
அது என்ன சூரிய ஆற்றல்?
சிலிகானை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட போட்டோ வோல்ட்டை செல்களின் மீது சூரிய ஒளி கதிர்கள் விழும்போது அது மின்சாரமாக மாற்றப்படுகிறது. சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க இரண்டு முக்கிய வழிகள் உண்டு. ஒன்று நேரடியாக சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவது. இதற்கு போட்டோ வோல்டாயிக் என்று சொல்வார்கள். இரண்டாவது கொஞ்சம் சுற்றி வளைப்பது. அதாவது, சூரிய ஒளியால் தண்ணீரை ஆவியாக்கி, அதை வைத்து டர்பைன் என்ற சுழலியை சுற்ற வைத்து மின்சாரம் தயாரிப்பது.
சூரிய ஒளியானது சோலார் பேனல் மீது பட்டு அதிலிருந்து மின்சாரம் வரும். இது பகலில் மட்டும் பயன்பாட்டை தரும். நமக்கு இரவில்தான் மின்சாரம் தேவை. ஆகவே பகலில் கிடைக்கும் மின்சாரத்தை சேமித்து வைத்து, அதை தேவைக்கேற்ப கொடுக்க பேட்டரியை பயன்படுத்த வேண்டும்.
4 டியூப் லைட், ஒரு மின்விசிறி, ஒரு டிவி, ஒரு ஏசி, ஒரு கம்ப்யூட்டர், இரண்டு மணி நேரம் தண்ணீர் ஏற்றும் மின் மோட்டார் ஆகிய மின் சாதனங்களை 12 மணி நேரம் சூரியஒளி மூலம் பயன்படுத்த – சோலார் தகடுகள், பேட்டரி என அமைக்க – சுமாராக ரூ.2 லட்சம் வரை செலவாகும். மானியமாக 81 ஆயிரம் ரூபாயை அரசு தரும். மீதமுள்ள ரூ.1.19 லட்சத்தை நாம்தான் செலவு செய்ய வேண்டும். ஒரு முறை செலவு செய்தால் போதும் குறைந்தது 20 ஆண்டுகளுக்கும் மேல் பயன்பெற முடியும். மழைக்காலங்களில் சோலார் தகடுகள் இயங்குமா என்ற தயக்கம் வேண்டாம். காரணம் சூரிய ஒளியில் இருக்கும் போட்டான் கதிர்களை கிரகித்துதான் மின்சாரம்
தயாரிக்கப்படுகிறது.
எனவே பகலில் மேகமூட்டமோ, மழையோ இருந்தாலும் சோலார் தகடுகள் போட்டானை கிரகித்து மின்சாரத்தை உற்பத்தி செய்து விடும். இந்த வகையில் சூரிய ஆற்றலை பயன்படுத்த லட்சக்கணக்கில் செலவாகும் என்பதால் சூரிய மின்சாரம் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது. இந்த நிலையை மாற்றும் வகையில் – ரூ.500 மதிப்பீட்டில் 5 ஆண்டுக்கு பயன்படும் வகையில் சூரிய சக்தி விளக்கை
கண்டுபிடித்துள்ளார் பி.டெக் பட்டதாரியான செய்யது தாஜூதீன்.
செங்கல்பட்டுதான் சொந்த ஊர். அப்பா அஹசனூதீன், கால்நடை மருத்துவர். அம்மா, ஜெரினாசுல்தான். நான் மூணாவது பையன். அன்பான, தங்கமான குடும்பம். செயின்ட் ஜோசப் மேல் நிலைப்பள்ளில படிச்சுட்டு சென்னை வந்தேன். பி.டெக் முடிச்சேன். படிப்பு முடிஞ்சதும் ஒருநாள் இணையதளத்துல இருந்தப்ப தென்அமெரிக்காவை சேர்ந்த ஒரு நண்பர் அறிமுகமானார்.
நண்பர்களானோம். மூணு வருஷங்களுக்கு முன்னாடி அவரோட வழிகாட்டுதலோட எரியும் விளக்கை சூரிய ஒளில தயாரிச்சேன். குறைஞ்ச செலவுதான் ஆச்சு. முதல்ல வீட்டுல பயன்படுத்தினேன். நல்ல பலன். உடனே செங்கல்பட்டுல இருந்த நண்பர்கள், உறவினர்களுக்கு எல்லாம் செய்து காட்டினேன். எல்லாருக்குமே பரம திருப்தி. இந்த நேரத்துல சமூக அக்கறை கொண்ட பார்த்திபன் அறிமுகமானார்.
‘ரொம்ப குறைஞ்ச செலவுல ஐந்து ஆண்டுகள் பயன்படுத்தறா மாதிரி சூரிய விளக்கை தயாரிச்சிருக்கீங்க. இது ஏழைகளுக்கு பயன்படணும்’னு சொன்னார். என்னுடைய நோக்கமும் அதுவாகவே இருந்ததால மும்பைக்கு போனேன். தாராவில பத்து நாட்கள் வரை தங்கினேன். அங்க இருந்த சிமென்ட் கூரை வீடுகளுக்கு இந்த சூரிய விளக்கை தயாரிச்சுக் கொடுத்தேன்…’’ என்று சொல்லும் தாஜூதீன், ரூ.20 செலவில் இருட்டான வீடுகளில் பகலில் மட்டும் வெளிச்சம் கொடுக்கும் வகையில் சூரிய மின்விளக்கை செய்து கொடுத்திருக்கிறார். இதன் செய்முறையையும் அங்குள்ள இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.
ரூ.20 மதிப்புள்ள சூரிய விளக்கு செய்யும் முறை:
முதலில் ஏ4 சீட் அளவில் புதிய அலுமினிய தகடு ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு 1 லிட்டர் அல்லது 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட காலியான பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக் கொள்ள வேண்டும். பாட்டில் அளவு தகட்டில் துளையிட்டு, அதனுள் பாட்டிலை பொருத்த வேண்டும். கீழ்பகுதி முக்கால் பரப்பும், மேல் பகுதி கால் பங்கும் கொண்டிருக்க வேண்டும்.
பின்னர் பாட்டிலில் 90% சுத்தமான தண்ணீரை நிரப்ப வேண்டும். அந்த நீரில் 20 எம்.எல், பிளீச்சிங் கலவையை சேர்க்க வேண்டும். இதன் பிறகு அந்த பாட்டிலை வீட்டின் மேற்கூரையில் துளையிட்டு பொருத்த வேண்டும். பாட்டிலின் கீழ்பகுதி வீட்டிற்குள்ளும், மேல் பகுதி சூரிய வெளிச்சம் படும்படி கூரையின் மேற்பரப்பிலும் இருக்க வேண்டும். சூரிய வெளிச்சம் பாட்டிலின் கலவை மேல்பட்டு, பாட்டிலின் கீழ் பகுதி 50 வால்ட் வெளிச்சத்தை கொடுக்கும்.
இந்த விளக்கு 5 வருடம் வரை பாதுகாப்பாக இருக்கும். இத்தகைய சூரிய ஒளி விளக்குகளை தாராவி ராஜீவ்காந்தி நகரில் சுமார் 50 வீடுகளுக்கு பொருத்தியுள்ளார் தாஜூதீன். இதனிடையே இரவிலும் எரியும் வகையில் சூரிய விளக்கை இப்போது கண்டுபிடித்துள்ளார் என்பதுதான் ஹைலைட். இதற்கு ரூ.500 மட்டுமே செலவாகும்.
செய்யும் முறை:
ஏ4 சீட் புதிய அலுமினிய தகடு ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு 1 லிட்டர் அல்லது 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட காலியான பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக் கொள்ள வேண்டும். தகட்டில் பாட்டில் அளவு துளையிட்டு, அதில் பாட்டிலை பொருத்த வேண்டும். கீழ்பகுதி முக்கால் பரப்பும், மேல் பகுதி கால் பங்கும் கொண்டிருக்க வேண்டும். காலியான பாட்டிலுக்குள் 90 விழுக்காடு சுத்தமான தண்ணீரை நிரப்பி, அதனுள் 20 எம்.எல், பிளீச்சிங் கலவையை சேர்க்க வேண்டும். அதன் பின்னர் 5 வால்ட் எல்இடி பல்புகள் 6 வாங்கி அதை ஒயர் மூலம் சால்டிரிங் கொண்டு இணைக்க வேண்டும். பிறகு இதை வெள்ளை நிற டியூப்புக்குள் வைத்து பாட்டிலுக்குள் பொருத்த வேண்டும்.
அந்த வெள்ளை டியூப்பை 2 அடி பிளாஸ்டிக் குழாயோடு இணைத்து, அந்த குழாயை பாட்டில் மேற்பரப்பில் இருக்கும்படி செய்ய வேண்டும். குழாயின் மேற்பரப்பில் பசையுடன் கூடிய செல்போன் ரீ ஜார்ஜபிள்
பேட்டரியை இணைக்க வேண்டும். சோலார் பேனலை (சூரிய ஒளியை உள் வாங்கும் தகடு) பொருத்த வேண்டும். பாட்டிலின் பக்கவாட்டில் ஆன், ஆஃப் சுவிட்ச் ஒன்றை இணைத்துவிட்டு பாட்டிலின் கீழ்பகுதி வீட்டிற்குள்ளும், மேல் பகுதி சூரிய வெளிச்சம் படும்படியும், கூரையின் மேற்பரப்பில் பொருத்த வேண்டும்.
‘‘சூரிய ஒளியை சோலார் பேனல் உள்வாங்கி பேட்டரில சேமிக்கும். நைட் சுவிட்ச் போட்டதும் வெளிச்சம் வரும். இதுக்கான செலவு வெறும் ரூ.500தான். ஆனா, ஐந்து வருடங்கள் தாக்குப் பிடித்து வெளிச்சம் தரும்…’’ என்கிறார் தாஜூதீன். ‘‘இதை இந்தியா முழுக்க கொண்டு போகப் போறோம். இளைஞர்களுக்கு செய்முறை பயிற்சி கொடுத்து அவங்கவங்க பகுதில இதை மக்களுக்கு செய்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப் போறோம்…’’ சிரித்தபடி சொல்கிறார் தாஜூதீன். 

சிறுபான்மை சமூகமான தமிழக முஸ்லிம்களிடையே 258 இயக்கங்கள் இருப்பது பெருமை தேடித் தராது; நமது தனித்தன்மைகளை இழந்து விட்டு நாம் ஒருபோதும் முஸ்லிம்களாக வாழ முடியாது என பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

சென்னை, பிப் 25- 

சிறுபான்மை சமூகமான தமிழக முஸ்லிம்களிடையே 258 இயக்கங்கள் இருப்பது பெருமை தேடித் தராது; நமது தனித்தன்மைகளை இழந்து விட்டு நாம் ஒருபோதும் முஸ்லிம்களாக வாழ முடியாது என பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.
மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு விளக்க தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டம் சென்னை மண்ணடி மூர் தெரு சந்திப் பில் மாநிலச் செயலாளர் கே.எம். நிஜாமுதீன் தலைமையில் நடைபெற்றது.
மாநில தலைமை நிலையப் பாடகர் ஏ ஷேக் மதார் ஆமிரி கிராஅத் ஓதினார்.மவ்லவி ஏ.எம்.எம். சாலிஹ் சேட் பாகவி துவக்கவுரையாற்றினார். 
வடசென்னை மாவட்டத் தலைவர் எம். ஜெய்னுல் ஆபிதீன் வரவேற்புரையாற் றினார். எம். கமருதீன் இஸ்லாமிய கீதம் பாடினார்.
மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், ஏ.எம்.எஸ் பொறியியல் கல்லூரி தாளாளர் எஸ். ஷேகு ஜமாலுதீன், மவ்லவி கே.எம். இல்யாஸ் ரியாஜி, மாநில தலைமை நிலைய பேச்சாளர் மவ்லவி கே.எஸ் சாகுல் ஹமீது ரஹ்மானி ஆகியோர் உரையாற்றினர்.
இந் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசியதாவது-வருகின்ற மார்ச் 10 வியாழன் அன்று விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு நடைபெறுகிறது. அம்மாநாட்டிற்கு தமிழக முஸ்லிம் சமுதாயம் பெரும் திரளாக வருகை தர வேண்டு மென வேண்டுகோள் விடுப்ப தற்காக இந்நிகழ்ச்சி நடை பெறுகிறது.மார்ச் 10 இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 69வது நிறுவன நாள். 1948 மார்ச் 10 புதன்கிழமை சென்னை ராஜாஜி மண்ட பத்தில் முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சில் கூட்டம் காயிதே மில்லத் தலைமையில் நடைபெற்றது.அகில இந்திய முஸ்லிம் லீகிற்கு 300க்கும் மேற்பட்டோர் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் இருந்தனர். 
ஆனால் அக்கூட் டத்தில் 27 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அதிலும் கேரளாவில் இருந்து 5 பேர், தமிழ்நாட்டில் இருந்து 5 பேர் மட்டுமே உறுப்பினர்கள். மற்றவர்கள் சிறப்பு அழைப் பாளர்கள்.அந்தக் கூட்டத்தோடு அகில இந்திய முஸ்லிம் லீகின் நடவடிக்கைகள் முடித்து வைக்கப்பட்டு முஸ்லிம் லீகின் சரித்திரத்தை தொடர்வதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில் இயக்கம் உருவாக்கப்பட்டு புதிய சட்ட திட்டங்களும், நடைமுறை களும் வகுக்கப்பட்டன.
மூன்று லட்சியங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இலட்சியங்களாக மூன்று விஷயங்களை கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் பிரகடனப் படுத்தினார்கள்.ஒன்று தேசிய ஒருமைப்பாடு இந்திய தாயகத்தை நேசித்து அதன் இறையாண்மையை காத்து அதன் வளர்ச்சிக்கு துணை புரிவது. இரண்டாவது சமய நல்லிணக்கம் பரந்து விரிந்த பாரத பூமியில் 4636 வகுப்புகள் இருக்கின்றன.
எண்ணற்ற மொழிகள் பேசப்படுகின்றன. பல்வேறு மதங்கள் பின்பற்றப் படுகின்றன. பல கலாச்சாரங்கள் நடைமுறையில் உள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தின் அடிப்படையில் மக்கள் அனைவரும் சகோதர சகோதரிகள் என்ற உணர்வுடன் நல்லிணக்கத்திற்கு துணை புரிவது.மூன்றாவது சிறுபான்மை யினரின் தனித்தன்மைகளை காத்தல் இந்த மாபெரும் நாட்டில் இந்துக்கள் பெரும் பான்மையாக வாழ்கிறார்கள். 
முஸ்லிம்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் சிறுபான்மையாக வாழ்கிறார் கள்.சிறுபான்மை மதங்களை பின்பற்றக்கூடியவர்கள் அவரவர் மத நெறிகளின்படி வாழ்வதற்கு உரிமை இருக் கிறது. அதற்கு இந்திய அரசியல் சாசனம் உத்தரவாதம் வழங்கி இருக்கிறது.சிறுபான்மையினருக் கென்று தனித்த அடை யாளங்கள் இருக்கின்றன. அந்த அடையாளங்களை, மத நம்பிக்கைகளை, கலாச்சார தனித் தன்மைகளை காத்து நிற்பது.இந்த மூன்று லட்சியங் களும் காயிதே மில்லத் அவர்களால் பிரகடனப் படுத்தப்பட்டு அவர்களின் வழிகாட்டுதலில் இயக்கம் நடத்தும் நாங்கள் அதை பின்பற்றி வருகிறோம்.
சிறுபான்மையினரின் தனித்தன்மைகள்
மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் சிறுபான்மையினரின் தனித்தன்மைகளை காப்பது என்பதை யாரும் கேள்வி எழுப்ப முடியாது. முஸ்லிம்களை பொறுத்தவரையில் பள்ளிவாசல் அடையாளம்; இறந்தவர்களை அடக்கம் செய்யும் கபரஸ்தான் அடை யாளம்; பெண்கள் அணியும் பர்தா அடையாளம்; ஷரீஅத் சட்டம் அடையாளம்; இந்த அடையாளங்கள் 1500 ஆண்டுகளாக நாங்கள் பாதுகாத்து வரக்கூடியவை.எங்களுக்கென்று தனி சிவில் சட்டங்கள் இருக் கின்றன. இஸ்லாமிய திருமண சட்டங்கள் தனி யாக இருக்கின்றன. 
இந்த சட்டங் களையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு ஒரே சட்டத்தின் கீழ் வாழுங்கள் என்றால் நாங்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்.சிறுபான்மையினர் என்பது இந்தியாவை பொறுத்தவரையில் மத வழி, மொழி வழி அடிப்படையில் அமைந்திருக்கின்றன.
ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநில மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பான்மை-சிறுபான்மை நிர்ணயிக்கப்படு கிறது.காஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மை; அங்கு இந்துக்கள் சிறுபான்மை; தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் சிறுபான்மை, இந்துக்கள் பெரும்பான்மை. இதுவரை யிலும் ஏற்கப்பட்ட நடைமுறை.
உச்சநீதிமன்றமும் இதைத்தான் தெளிவுப்படுத்திருக்கிறது. இந்த அடிப்படையில்தான் கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படுகிறது.ஆனால் தமிழகத்தை ஆளும் அஇஅதிமுக ஆட்சி யில் கல்வித்துறை ஒரு விசித்திர மான உத்தரவை வெளியிட்டது. சிறுபான்மை என்பது மாநில அளவில் அல்ல அதை வட்டார அளவில்தான் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதே அதன் உத்தரவு.சென்னையில் உள்ள பெரியமேடு வட்டாரத்தில் கிருத்துவ கல்வி நிறுவனம் ஒன்றுக்கு அளிக்கப்பட்டிருந்த சிறுபான்மை அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அவர்கள் மீண்டும் விண் ணப்பிக்க வேண்டுமென வலி யுறுத்தப்பட்டது.
நாங்கள் சிறுபான்மை அந்தஸ்து பெற்றவர்கள். ஏன் எங்களை அந்த அந்தஸ்து கோரி மீண்டும் விண்ணப்பிக்க சொல்கிறீர்கள் என்று அந்த கல்வி நிறுவனம் கேட்ட போது உங்கள் வட்டாரத்தில் கிருத்துவர்கள் பெரும் பான்மையாக இருக்கிறார்கள். எனவே நீங்கள் சிறுபான்மை அந்தஸ்து பெற முடியாது என தமிழக கல்வித்துறையால் காரணம் சொல்லப்பட்டது.இதனை எதிர்த்து அந்த கல்வி நிறுவனம் நீதிமன்றம் சென்றது. 
வட்டார அளவில் சிறுபான்மை பெரும்பான்மை யை நிர்ணயிக்க எந்த சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது என நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத் தியது. சில அதிகாரிகளின் முட்டாள்தனமான செயல் பாடுகளால் இப்படிப்பட்ட நிலை ஏற்படுகிறது. சட்டத்தை அவர்கள் இஷ்டத்திற்கு மாற்றுகிறார்கள். இன்று மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம், டெல்லியில் உள்ள ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் முஸ்லிம்களால் உருவாக்கப் பட்டு சிறுபான்மை அந்தஸ்து டன் செயல்பட்டு வருகிறது.ஆனால் இவைகளின் சிறுபான்மை அந்தஸ்தை பறிப்பதற்கு பா.ஜ.க. அரசு முயல்கிறது. நீங்கள் சிறுபான்மை என்று சொல்லிக் கொள்ளக் கூடாது. நீங்கள் இந்துவாகவே வாழ வேண்டும் என்று சொன்னால் நாம் இஸ்லாமியர்களாக இருக்க முடியாது. நம்முடைய தனித்தன்மையை இழந்து விடுவோம். இந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் விழுப்புரத்தில் மார்ச் 10 மஹல்லா ஜமாஅத் ஒருங் கிணைப்பு மாநில மாநாட்டை நடத்துகிறோம்.
மஹல்லா ஜமாஅத்
தமிழ்நாட்டில் பள்ளி வாசலை மையமாகக் கொண்ட 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மஹல்லா ஜமாஅத்துகள் உள்ளன. இம் மாநிலத்தில் பள்ளிவாசல்கள் மூன்று வகையாக உள்ளன. முதலாவது வகை அந்தந்த ஊர் முஸ்லிம்கள் பள்ளிவாசலை எழுப்பி மஹல்லா ஜமாஅத் துகளை உருவாக்கியிருக்கிறார்கள். 2-வது வகை நவாப்களின் நிர்வாகத்தில் உரு வாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. இவை மிகச் சில பள்ளிகள் மட்டுமே. மூன்றாவது, தனி நபர்கள் கட்டி கொடுத்த பள்ளிவாசல்கள். இவற்றில் பெரும்பான்மையானவை மஹல்லா ஜமாஅத்து களால் நிர்வகிக்கப்படும் பள்ளிவாசல் களே. மஸ்ஜிதுகளை மையமாகக் கொண்ட மஹல்லா ஜமாஅத் துகள்தான் இயற்கையான கட்டமைப்பு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா சென்றார்கள். இஸ்லாத்தை பிரச்சாரம் செய்தார்கள். பள்ளியை எழுப்பினார்கள்.
சமூகத்தை ஒருங்கிணைத்தார்கள். அங்கேயே மரணித்தார்கள். அவர்களுக்கு அங்கு ஒரு அடையாளம் உருவாக்கப் பட்டது. இதுதான் முன்மாதிரி. நபிகளாரின் காலத்திற்கு பிறகு சத்திய சஹாபாக்கள், தாபியீன்கள், தபஅ தாபியீன்கள், இமாம்கள், இறைநேச செல்வர்களான வலிமார்கள், இஸ்லாத்தை பரப்பும் பணியில் ஈடுபட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் எங்கெல்லாம் தங்கியிருந்து மார்க்க சேவை செய்து மரணமடைந்தார்களோ அங்கெல்லாம் அடக்கத் தலங்கள் உருவாக்கப்பட்டன. தர்காக்கள் இப்படித்தான் வந்தன.
ஒரு ஊர் எப்படி உருவானது என்பதை அறிய அந்த ஊரின் தர்காவில் அடங்கியுள்ள வலிமாரின் சரித்திரத்தை புரட்டி பார்த்தால் தெரிந்து விடும். ஒவ்வொரு தர்காவிலும் பள்ளிவாசல் இருக்கிறது. அங்கு ஐவேளை தொழுகை நடைபெறுகிறது. இதில் என்ன புதிதாக குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள்.பள்ளிவாசலை கட்டுவது, நிர்வகிப்பது மஹல்லா ஜமாஅத்துகளுடைய வேலை. 
நான் ஒரு ஊர் பள்ளிவாசல் விழாவுக்கு சென்றிருந்தேன். ரூ. 4 கோடி ரூபாய் செலவில் குளத்தின் நடுவில் அழகாக அமைக்கப்பட்டிருந்தது அந்த பள்ளிவாசல். வெள்ளிக்கிழமை ஜும்ஆ நேரம். பள்ளிவாசலில் பாங்கு சொல்லி பிரசங்கமும் நடந்து கொண்டிருந்த போது அருகிலுள்ள ஒரு வீட்டிலிருந்து ஒலிபெருக்கி யில் பாங்கு சத்தம் ஒலித்தது. சிறிது நேரத்தில் பயான் சத்தமும் வெளி வந்தது. அது இடையூறாக இருந்தது. நான் என்ன ஏது என்று விசாரித்த போது விரல் விட்டு எண்ணும் சில இளைஞர்கள் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து போட்டி பள்ளியை தொடங்கி ஜமாஅத் நடத்துகிறார்கள் என்று குறிப்பிட்டார்கள். இது என்ன அநியாயம்.
தமிழ்நாட்டில் 45 லட்சம் முஸ்லிம்கள்தான் உள்ளனர். ஆனால் நாலரை கோடி முஸ்லிம்கள் இருப்பதை போல் கற்பனையில் வாழ்கிறார்கள். 45 லட்சம் முஸ்லிம்களுக்கு 258 இயக்கங்கள் என்று சொல்வது பெருமைப்படக்கூடிய செய்தி அல்ல. இப்படி இயக்கங்கள் தோன்றிக் கொண்டே இருப்பது எல்லோரையும் சொர்க்கத்திற்கு அழைத்து செல்வதற்கா? நரகத்திற்கு அழைத்து செல்வதற்கா? கம்பெனி திறப்பதை போல் இயக்கங்கள் தொடங்கி கொண்டே இருப்பது சமுதாயத்திற்கு கேவல மில்லையா?இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்கி றார்கள். 
பல தெய்வங்களை வழிபடுகிறார்கள். ஆனால் ஒரே நாளில்தான் தீபாவளி கொண்டாடுகிறார்கள். கிருத்துவர்கள் உலகம் முழுவதும் வாழ்கிறார்கள். 
ஒரே நாளில்தான் கிருஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள். ஆனால் ஏக தெய்வ கொள்கை பேசும் முஸ்லிம்கள் மட்டும் மூன்று நாள் பெருநாள் கொண்டாடுவது கேவலமில்லையா? பிற சமுதாய மக்கள் நம்மளை பார்த்து கேலி பேச மாட்டார்களா? இந்த செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என்ற விழிப் புணர்வை ஏற்படுவதற் காகத்தான் மஹல்லா ஜமாஅத் மாநாடு நடக்கிறது.
முஸ்லிம் லீக் முன்வைக்கும் மூன்று விஷயங்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்தவரையில் சமுதாயத்திடம் மூன்று விஷயங்களை நாங்கள் தொடர்ந்து முன் வைத்திருக் கிறோம். முதலாவது பள்ளிவாசலை மையமாகக் கொண்ட மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாடு காப்பாற்றப்பட வேண்டும். ஜமாஅத் என்றால் மஹல்லா ஜமாஅத் மட்டும்தான். அரபி நாடுகளில் கபீலா என்று அழைப்பதை போல், ஆப்கானிஸ்தானில் ஜிர்கா என்று அழைப்பதை போல், ஐரோப்பிய நாடுகளில் சூறா ஜமாஅத் என்று அழைப்பதை போல், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் மஹல்லா ஜமாஅத் என்று அழைக்கப்படுகிறது. அந்த மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாட்டை காப்பாற்று வது நம்முடைய கடமை.இரண்டாவது மார்க்க விஷயங்களில் சங்கைக்குரிய உலமா பெருமக்களின் வழிகாட்டுதலை மட்டுமே ஏற்க வேண்டும். மார்க்கத்தை கற்று கொடுத்தவர்கள் அவர்கள் தான்.ஆலிம்கள் இல்லை யென்றால் இஸ்லாம் இல்லை. அல்லாஹ், ரசூல் என்ற சொல் எங்கிருந்து வந்தது.? ஈமான், இஸ்லாம், குர்ஆன், தொழுகை என்பதையெல்லாம் யார் சொல்லித்தந்தது.? இவைகளெல்லாம் மதரஸாக்களிலிருந்து கற்று தரப்பட்டவைதான். அதை கற்றுத் தந்தவர்கள் ஆலிம்கள். 
அதனால்தான் ஆலிம்களை நபிகள் நாயகத் தின் வாரிசு என்கிறோம். அந்த உலமாகளை கண்ணியப்படுத்துவதும், மார்க்க விஷயங்களில் அவர்களை பின்பற்றுவதும் நம்முடைய கடமை.மூன்றாவது இந்திய ஜனநாயக நாட்டில் அரசியல் இயக்கம் நடத்துவது, அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்த நாட்டில் பாரம்பரியமாக செயல் பட்டு கொண்டிருக்கும் இயக்கம். நாடாளுமன்றம் உருவாக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் உறுப்பினர்களை அனுப்பிய பெருமை இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உண்டு. முஸ்லிம்களின் தனித் தன்மைகளை காப்பதற்கும், ஷரீஅத் சட்டத்திற்கு பதிலாக பொது சிவில் சட்டம் திணிக்கப்படாமல் தடுப்ப தற்கும் அது ஆற்றியிருக்கும் பங்கு அளப்பரியது.தூர நோக்கான சிந்தனையும், சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் கொண்டவர்க ளால் வழி நடத்தப்படக்கூடிய அரசியல் பேரியக்கம். 
அரசிய லில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வழிகாட்டுதலை சமுதாயம் ஏற்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அதை உங்கள் இடத்தில் வேண்டுகோளாக வைக்கி றோம். ஏற்பதும், ஏற்காததும் உங்கள் விருப்பம். ஆனால் இதை நாங்கள் சொல்லிக்கொண்டே இருப்போம்.இந்த பேரியக்கம்தான் விழுப்புரத்தில் மார்ச் 10 மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு நடத்துகிறது. ஒட்டுமொத்த சமதாயமும் ஆதரவு தர வேண்டும்.இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.சீதக்காதி பிரைமரி தலைவர் கே.எம். இஸ்மா யில் நன்றி கூறினார். மவ்லவி எஸ்.எம். முஹம்மது தாஹா மிஸ்பாஹி துஆ ஓதினார்.
கலந்துகொண்டோர்
கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர்கள் ஆப்பனூர் ஆர். ஜபருல் லாஹ், எஸ்.ஏ. இப்றாஹீம் மக்கீ, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் யூசுப் குலாம், மாவட்டச் செயலா ளர் பிலால் ஹுசைன்,மாவட்ட துணைத் தலைவர்கள் ஐஸ்ஹவுஸ் அப்துல் ரஹ்மான், நத்தம் வி.ஏ. ஜஹாங்கீர், மண்ணடி ஏ.எச். இஸ்மாயில், வடசென்னை மாவட்ட செயலாளர் கமுதி சம்சுதீன், ஆரிஸ் பாபு, அல்தாப், ஏ.கே. ரபீ, ராயபுரம் ஹுசேன், ஷாஜித், ஷேக் மீரான், தென்சென்னை மாவட்டத் தலைவர் பூவை எம்.எஸ் முஸ்தபா, மாவட்டச் செய லாளர் மேத்தப்பிள்ளை மரைக்காயர், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத் தலைவர் எண்ணூர் செய்யது இப்றாஹீம், மாவட்டச் செயலாளர் மீஞ்சூர் சிக்கந்தர், ஷேக் முஹம்மது, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத் தலைவர் கே.எஸ்.தாவூது, மாவட்டச் செயலா ளர் அல்லா பக்ஷ், மாவட்ட பொருளாளர் நூர் முஹம்மது, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட பொருளா ளர் முஸ்தபா, செம்பாக்கம் காஜா மொய்தீன் உள்ளிட் டோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.