காரில் சென்றாலும் ஹெல்மெட் அணிய வேண்டுமா?: பெங்களூரு போலீசின் அக்கறையால் அதிர்ச்சி!!!
பெங்களூரு மல்லேசுவரத்தில் வசித்து வருபவர் பிரகாஷ். பாரதீய ஜனதா பிரமுகரான இவருக்கு, நேற்று முன்தினம், பெங்களூரு மாநகர போக்குவரத்து போலீசாரிடம் இருந்து அபராதம் கட்டும்படி ரசீது ஒன்று வந்தது. அந்த ரசீதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
காரணம், அந்த ரசீதில் ‘அவருடைய காரின் பதிவு எண் குறிப்பிடப்பட்டு இருந்ததோடு, பசவேசுவரா சர்க்கிளில் கடந்த 4-ந் தேதி சென்றபோது, பின் இருக்கையில் பயணம் செய்தவர் ஹெல்மெட் அணியாமல் இருந்துள்ளார். இதனால் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும்‘ என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அவர் உடனடியாக மாநகர போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment