புதுடெல்லி, பிப்.29
பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:–300 கிராமங்கள் மேம்படுத்தப்படும். நகர்ப்புறங்களில் உள்ள வசதிகள் அனைத்தும் இந்த 300 கிராமங்களில் செய்து கொடுக்கப்படும். 2018–ம் ஆண்டு மே மாதத்துக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும்.நடப்பு மாதம் வரை 5,542 கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் இந்தியா திட்டப்படி நில ஆவணங்கள் மின்னணுமயமாக்கப்படும். கிராமங்களில் கணினி வழி கல்வி கொண்டு வரப்படும்.தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.9000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.87,765 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.2016–17ல் விவசாயத்துக்கு ரூ.9 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எழுந்திடு இந்தியா திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.கல்வி சான்றிதழ்களை மின்னணு முறையில் பாதுகாக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும். 62 புதிய நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும்.சிறு தொழில்முனைவோர் துறைக்கு ரூ.5 ஆயிரம் கோடி வழங்கப்படும். நாடு முழுவதும் 3 ஆயிரம் பொதுமருந்து கடைகள் தொடங்கப்படும். நாடு முழுவதும் 1,500 பன்முக திறன் மேம்பாடு மையம் அமைக்கப்படும்.அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.பி.எப். புதிய உறுப்பினர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு 8.33 ஓய்வு பங்களிப்பு வழங்கப்படும்.அனைத்து மாவட்டங்களிலும் சிறுநீரக பிரச்சினை குறித்து சிகிச்சை அளிக்க மையங்கள் ஏற்படுத்தப்படும். நின்று போன 85 சாலை திட்டங்கள் மீண்டும் தொடங்கப்படும்.பெண் தொழில்முனைவோருக்கு நிதியுதவி செய்யப்படும்.சிறு கடைகள் வைத்து இருப்பவர்கள் வாரம் முழுவதும் விருப்பத்தின் அடிப்படையில் 7 நாட்களும் கடையை திறந்து வைத்து செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோருக்கு உதவ தேசிய மையம் உருவாக்கப்படும்.தேசிய வேலைவாய்ப்பு பதிவேட்டில் 3.5 கோடி பேர் வேலை கேட்டு பதிவு செய்துள்ளனர். 50 ஆயிரம் கி.மீ. மாநில சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.உள் கட்டமைப்புக்கு ரூ.2 லட்சத்து 2,246 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்பகுதிகளில் கல்வியறிவு ஊக்குவிக்கப்படும்.உயர் கல்விக்கு நிதி வழங்க ரூ.1000 கோடியில் புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும்.நாடெங்கும் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் 160 விமான நிலையங்கள் உருவாக்கப்படும். அணுமின் சக்தி உற்பத்திக்கு ரூ.3000 கோடி ஒதுக்கப்படும்.நடப்பு நிதியாண்டில் 10 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களை சந்தைப்படுத்த 100 சதவீத அன்னிய நேரடி முதலீடுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. 6 கோடி குடும்பங்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவு வழங்கப்படும்.50 ஆயிரம் கி.மீ. தூர மாநில சாலைகளும் மேம்படுத்தப்படும். பங்கு விலக்கல் துறையின் பெயர் முதலீடு மற்றும் பொது சொத்து துறை என்று மாற்றப்படும். உள் கட்டமைப்புக்கு ரூ.2.21 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
No comments:
Post a Comment