Posted Date : 12:40 (26/02/2016)
விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், 93 வயது தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம் என்று கடுமையாக விமர்சித்துள்ள அதிமுக தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி, "விஜயகாந்தின் மூத்த மகனுக்கு துணை முதல்வர் பதவி வேணும்னு பேச்சுவார்த்தை நடத்துறாங்களாம். இந்த கூட்டணி மட்டும் நடந்தது என்றால் தமிழகம் அவர்களை புறக்கணிக்கணும்" என்றும் காட்டமாக கூறினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழாவை அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் அமர்க்களப்படுத்தி வருகின்றனர். கூடவே பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி எடத்தெரு கீழப்புதூரில் திருச்சி ஏர்போர்ட் பகுதி கழகம் சார்பாக பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது.
ஏர்போர்ட் பகுதி கழக செயலாளர் வெல்லமண்டி சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசு தலைமை கொறடா மனோகரன், அதிமுக தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி, திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயா, துணைமேயர் ஜெ.சீனிவாசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இந்த கூட்டத்தில் பேசிய நிர்மலா பெரியசாமி, " சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த தேமுதிக மாநாட்டில் எம்.ஜி.ஆர் நுழைவாயில் வைக்கப்பட்டிருந்தது. கருப்பு எம்.ஜி.ஆர் என விஜயகாந்தை வர்ணிக்கிறார்கள். தங்களுடைய கட்சிக்கு செல்வாக்கு உயரக்கூட எங்கள் தலைவரைத்தான் நீங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. எம்.ஜி.ஆர் எங்களுக்கு மட்டும்தான் சொந்தம். இனி அவரை அதிமுகவை தவிர வேறு எவரும் பயன்படுத்தக்கூடாது. அந்த மாநாட்டில் விஜயகாந்தின் மனைவி, அம்மாவை ஒருமையில் திட்டிருயிருக்கிறார். தேமுதிகவுக்கு 11 சதவீதமாக இருந்த வாக்கு வங்கி இப்போது 4 சதவீதமாக குறைந்துள்ளது. தேய்ந்துபோன தேமுதிக, அடுத்த தேர்தலில் அடியோடு அழிந்துபோகும்.
ஓட்டுக்காக திட்டங்கள் கொண்டுவராமல், தமிழகத்திற்காக தொலை நோக்கு பார்வையில் அம்மா உணவகம், அன்னதானத் திட்டம், குடும்பத்துக்கு 20 கிலோ அரிசி என மக்களுக்காக கொண்டுவந்த திட்டங்கள் ஏராளம்.
இப்படிப்பட்ட அம்மாவை இந்த பிரேமலதா கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். இவர் என்னத்துக்காக காய் நகர்த்திக்கிட்டு இருக்கிறார் என்றால், விஜயகாந்த் அல்சேமர் டிமென்சியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என நம்பதகுந்த நண்பர்கள் மூலம் எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் பேச வந்ததை 5 நிமிடங்களுக்கு மேல் மறந்துபோவார், அவர் என்ன பேசுகிறார் என அவருக்கே தெரியாது. சரக்கு அடிப்பதை தாண்டி, தொடர்ச்சியாக ட்ரக்ஸ் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டார்னு சொல்லுறாங்க. அதனால்தான் இப்படி விஜயகாந்த் உளறி கொட்டுகிறார். அப்படிப்பட்டவரை மேடையில் ஏற்றி, கணவர் ஒண்ணும் இல்லை. நான்தான் இனி எல்லாம் என விளம்பரம் தேடி வருகிறார் பிரேமலதா. கட்டுன புருசனை அசிங்கப்படுத்தும் மனைவி பிரேமலதாவாகதான் இருக்க முடியும். இதுக்கு நடுவுல விஜயகாந்தின் மூத்த மகனுக்கு துணை முதல்வர் பதவி வேணும்னு பேச்சுவார்த்தை நடத்துறாங்களாம். அதனால் நமக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லை. இந்த கூட்டணி மட்டும் நடந்தது என்றால் தமிழகம் அவர்களை புறக்கணிக்கணும். விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், 93 வயது தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம்.

இவர்களோடு பாமக, மதிமுக, தேமுதிக நமக்கு எதிராக களம் இறங்குறாங்களாம், இந்த பம்பரம், மாம்பலம், முரசு சின்னம் எல்லாம் கிடைக்க, அவர்களுக்கு அரசியலில் அங்கீகாரம் கிடைக்க யார் காரணம், எங்க முதல்வரம்மாதான் காரணம். ஒரு குடிகாரர் எதிர்க்கட்சி தலைவராக எங்க கட்சி தொண்டர்கள் உழைப்புதான் காரணம். சென்னை கொளத்தூர் தொகுதியில், 2004 தபால் ஓட்டில் ஜெயித்த ஸ்டாலின் எல்லாம் இங்கு அம்மாவை விமர்சனம் செய்கிறார். அவங்க டாடி கருணாநிதி அடுத்து ஆட்சியை பிடிக்கும் கனவில் இருக்கிறார். உங்கள் கனவுகளுக்கு தமிழக மக்கள் சமாதி கட்டுவார்கள்.
தமிழகத்தை காக்க சபதம் ஏற்போம். பண்ருட்டியார் சொன்னாரே, தமிழகத்தில் முதல்வர் பதவி வேக்கன்சி இல்லைன்னு, அப்படித்தான் எங்கம்மா இருக்க, எப்படி உங்களால் முதல்வராக முடியும். எங்கம்மாதான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர்" என முடித்தார்.
-நன்றி விகடன்.
No comments:
Post a Comment