Friday, 26 February 2016

புதுப்பட்டினத்தை அடுத்து அதிராம்பட்டிணம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொலைவெறி தாக்குதல் :: 3 பேர் படுகாயம் - வலைகள், மீன்களை பறித்துச்சென்று இலங்கை கடற்படை அட்டூழியம்.


புதுப்பட்டினத்தை அடுத்த அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேர் 3 விசைப்படகுகளில் அதிராம்பட்டினம் அருகிலுள்ள கீழத்தோட்டம் துறைமுகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
கார்த்தி, மாதவன், சிலம்பரசன், சுப்பிரமணியன், சுரேஷ், பன்னீர், மற்றொரு சுரேஷ், விக்னேஷ், அருள்
பாண்டி,மகாலிங்கம், நாகூரான், சிவானந்தம், மற்றொரு கார்த்தி உள்ளிட்ட 13 மீனவர்கள் மறுநாள் புதன்கிழமை (பிப்.24) காலையில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அதிராம்பட்டினம் மீனவர்களை கயிற்றால் சரமாரியாகத் தாக்கினராம். இதில், நாகூரான், சுரேஷ், சிவானந்தம் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். மேலும், படகிலிருந்த வலைகள், மீன்களை இலங்கை கடற்படையினர் பறித்துச் சென்று விட்டனராம்.
இதையடுத்து, புதன்கிழமை மாலை மீனவர்கள் கரை திரும்பினர். இதில் காயமடைந்த 3 மீனவர்களும் அதிராம்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
தகவலறிந்த கீழத்தோட்டம் மீனவர்கள் சங்கத்தலைவர் பால்ராஜ் இந்திய கடலோர பாதுகாப்புப் படையினருக்கும், அதிராம்பட்டினம் கடலோர காவல் குழுமத்துக்கும் புகார் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment