Updated on February 29, 2016
வரவேற்பதா..? விமர்சிப்பதா...? பட்ஜெட் குறித்து விஜயகாந்த் ரியாக்ஷன்
மக்களின் எதிர்பார்ப்புகளை ஜெட் வேகத்தில் செயல்படுத்தி, மக்களின் டார்கெட்டை பூர்த்தி செய்யவேண்டும் பட்ஜெட் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு முன்னுரிமை அளித்திருப்பதும், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை பெருக்கிடும் வகையில் திறன் மேம்பாட்டு மையங்கள் அதிகரிக்கவும், சிறு, குறு தொழில் முனைவோருக்கு வருமான வரிவிலக்கு ஒரு கோடியிலிருந்து இரண்டு கோடியாக அதிகரித்திருப்பதும், 2018க்குள் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி ஏற்படுத்தப்படும் என கூறியிருப்பதும், புகையிலை பொருட்களுக்கு வரியை உயர்த்தியிருப்பதும் இந்த பட்ஜெட்டின் வரவேற்கத்தக்க அம்சங்களாக விஜயகாந்த் பட்டியலிட்டுள்ளார்.
ஆனால், புதிய திட்டங்களோ, விவசாய பயிர் விளைச்சல் பாதிப்புகளுக்கான இழப்பீடு வழங்குவது குறித்தோ, விவசாயிகளும், சாமான்ய மக்களும் பயன்பெறும் வகையில் விவசாய விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்வதற்குரிய திட்டமோ, விவசாய விளைபொருட்களுக்கு ஏற்ற விலை நிர்ணயம் செய்வது குறித்தோ, எந்தவித அறிவிப்பும் இல்லாதது மிகுந்த வேதனையை தருவதாக விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பட்ஜெட்டை பொறுத்தவரையில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போல வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒருங்கே உள்ளடக்கிய பட்ஜெட்டாகவே இதை பார்க்கமுடிவதாகவும், மத்திய அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை ஜெட் வேகத்தில் செயல்படுத்தி, மக்களின் டார்கெட்டை பூர்த்தி செய்யவேண்டும் என்று விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்
No comments:
Post a Comment