Saturday, 26 December 2015

மோடியின் திடீர் பாக். பயணத்துக்கு ஏற்பாடு செய்ததே தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால்? வெடித்த புது சர்ச்சை!!

Posted by: Sat, Dec 26, 2015, 11:15 [IST]


டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணத்துக்கு ஏற்பாடு செய்ததே தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால்தான் என தகவல்கள் வெளியாகியிருப்பது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரஷ்யா, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார் பிரதமர் மோடி. ஆப்கானிஸ்தான் பயணத்தை முடிக்கும் நிலையில் திடீரென ட்விட்டர் பக்கத்தில் தாம் பாகிஸ்தானுக்குப் போய்விட்டு நாடு திரும்புவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் மோடி. பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மிகச் சிறந்த ராஜதந்திரியாக மோடி திகழ்கிறார் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் புகழாரம் சூட்டினார். ஆனால் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிவசேனா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த திடீர் பயணத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தன. இந்த நிலையில்தான் மும்பையைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால் தாம் நவாஸ் ஷெரீப்புக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற லாகூரில் முகாமிட்டிருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டதுடன் மனைவியுடன் செல்பி எடுத்தும் போட்டிருந்தார்... அவ்வளவுதான் வெடித்தது பஞ்சாயத்து... அண்மையில்தான் வட இந்திய ஊடகவியலாளர் பர்கா தத், நேபாளத்தில் நடைபெற்ற சார்க் மாநாட்டின் போது பிரதமர் மோடி- நவாஸ் ஷெரீப் இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றது; இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதே காத்மண்டுவில் உள்ள சஜ்ஜன் ஜிண்டாலுக்கு சொந்தமான நட்சத்திர விடுதியில்தான்... இப்பேச்சுவார்த்தைக்கும் சஜ்ஜன் ஜிண்டால்தான் ஏற்பாடு செய்திருந்தார் என தம்முடைய புத்தகம் ஒன்றில் பதிவிட்டிருந்தார். இதற்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்திருந்தது. தற்போது திடீரென பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளும் நிலையில் சஜ்ஜன் ஜிண்டால் தாமும் லாகூரில் இருப்பதாக ட்வீட் போட பர்கா தத் சும்மா விடுவாரா? காத்மண்டுவில் பிரதமர் மோடியும் நவாஸ் ஷெரீப்பும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த சஜ்ஜன் ஜிண்டால் காரணம் என நான் கூறியிருந்தேன்..அன்று வெளியுறவுத் துறை மறுத்தது.. இப்போது சஜ்ஜன் ஜிண்டால் லாகூரில் இருக்கிறார் என ட்விட்டரில் கொளுத்திப் போட்டார். அவ்வளவுதான், பாகிஸ்தானுக்கு அதிரடியாக போய் சிறந்த ராஜதந்திரியாக திகழ்கிறார் என்ற மோடிக்கு சூட்டப்பட்ட புகழ்மாலைகள் விமர்சனத்துக்குரியதாக மாறின... ஏற்கனவே அதானி குழுமத்தின் ஆதாயத்துக்காகத்தான் ஆஸ்திரேலியா பயணத்தையே மேற்கொண்டார் மோடி என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் தற்போது சஜ்ஜன் ஜிண்டால் என்ற தொழிலதிபருக்காக அபாயகரமான பாகிஸ்தான் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் என எதிர்க்கட்சிகள் சாடத் தொடங்கின. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் ஷர்மா கூறுகையில், நவாஸ் ஷெரீப்புடன் டெல்லி, உஃபா, பாரீஸ் நகரங்களில் பேச்சுவார்த்தைகளை ரத்து செய்த மோடி இப்போது யூ டர்ன் அடித்திருக்கிறார். இந்த பாகிஸ்தான் பயணத்தில் சஜ்ஜன் ஜிண்டாலின் பங்கு என்ன? மிகத் தெளிவாகவே தெரிகிறது ஒரு தொழிபதிருக்காக பயணம்தான் இது.. நாட்டின் நலன் கருதி மேற்கொண்ட பயணம் இதுவல்ல என்பது.. வாஜ்பாய் லாகூர் பேச்சுவார்த்தையை நடத்திய பின்னரே கார்கில் போர் நிகழ்ந்தது.. மீண்டும் அப்படியான ஒன்றை கொண்டுவரப்போகிறாரா மோடி? கடந்த 67 ஆண்டு கால இந்திய வரலாற்றில் எந்த ஒரு பிரதமராவது இப்படி எந்த ஒரு அன்னிய நாட்டுக்கும் திடீரென போயுள்ளனரா? இப்படியான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனரா? என கேள்வி எழுப்பியுள்ளார். யார் ஜிண்டால்? இப்படி மோடி- ஷெரீப் சந்திப்புக்கு காரணமாக இருந்த சஜ்ஜன் ஜிண்டால் யார்? இரும்புத் தொழிற்சாலைகளை நடத்திவரும் இந்திய தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நவீன் ஜிண்டாலின் சகோதரர்தான். சஜ்ஜன் ஜிண்டால், நவாஸ் ஷெரீப் குடும்பங்கள் தலைமுறைகளாக தொழில்சார்ந்த நட்பு குடும்பங்கள். சஜ்ஜன் ஜிண்டால் தந்தையும் நவாஸ் ஷெரீப்பின் தந்தையும் நாடு விடுதலை அடைவதற்கு முன்பிருந்தே நல்ல நண்பர்களாக இருந்தவர்கள். ஷெரீப்பின் தந்தை தொடக்கத்தில் இரும்பு தொழிற்சாலை தொழிலில்தான் இறங்கினார்.. ஆகையால் தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது ஜிண்டால்- ஷெரீப் குடும்ப உறவு. பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி வந்திருந்த நவாஸ் ஷெரீப்புக்கு தம்முடைய வீட்டில் தேநீர் விருந்தளித்தவர் ஜிண்டால். இதனை அப்போது இம்ரான்கான் கடுமையாக விசாரித்திருந்தார். ஒருதொழிலதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு குரியத் மாநாட்டு கட்சியினருக்கு நேரத்தை ஒதுக்கியிருக்கலாம் என கூறியிருந்தார். என்ன ஆதாயம்? இந்திய அரசு இரும்பு தொழிற்சாலையான செயில் (SAIL), தனியார் இரும்பு நிறுவனங்களாக ஜேஎஸ்டபிள்யூ, ஜேஎஸ்பிஎல், மொன்னெட் இஸ்பாட் அண்ட் எனர்ஜி ஆகிய தனியார் நிறுவனங்களுடன் இணைந்து Afisco என்ற கூட்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றன. இந்த நிறுவனம், ஆப்கானிஸ்தானின் பாமியான் மாகாணத்தில் இருந்து உயர் ரக இரும்புதாதுகளை வெட்டி எடுத்து ரஷ்யாவின் துறைமுகங்கள் வழியாக மேற்கு மற்றும் தென்னிந்திய துறைமுகங்களுக்கு கொண்டு வரப்படுகின்றன. இதில் ஜேஎஸ்பிஎல் நிறுவனமானது 16% பங்குகளைக் கொண்டது. இதை நடத்தி வருவது சஜ்ஜன் ஜிண்டாலின் தம்பி நவீன் ஜிண்டால்தான். மற்றொரு நிறுவனமான மொன்னெட் இஸ்பாட் அண்ட் எனர்ஜி 4% பங்குகளைக் கொண்டது. இதை ஜிண்டாலின் உறவினர் சந்தீப் ஜஜோடியா நடத்தி வருகிறார். இப்படி ரஷ்யா துறைமுகங்களுக்கு கொண்டு போய் அங்கிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வருவதால் ஆகும் செலவைவிட ஆப்கானில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு தரைவழியாக இரும்புத்தாதுவை கொண்டு வந்து பின் கராச்சி துறைமுகத்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவருவது என்பதன் மூலம் பெருமளவு செலவு குறையும் என்பது ஜிண்டால் குழுமங்களின் கணக்கு. ஆனால் இதை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா- பாகிஸ்தான் இடையே ஒரு அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் தேவை. இந்த ஒப்பந்தத்தை உருவாக்கும் முயற்சியாகத்தான் நவாஸ் ஷெரீப்- மோடி பேச்சுவார்த்தைக்கு மெனக்கெடுகிறார் ஜிண்டால் என்பது குற்றச்சாட்டு. இதற்காக குடும்ப நண்பரான நவாஸ் ஷெரீப் மூலம் ஆகக் கூடுமானவரையிலான ஜிண்டால் மேற்கொள்ளும் முயற்சிக்கு பிரதமர் மோடியும் தற்போது கை கொடுத்திருப்பதுதான் பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது!! இன்னும் எத்தனை பிரளயம் வெடிக்குமோ(!)

Read more at: http://tamil.oneindia.com/news/india/sajjan-jindal-play-secret-santa-modi-sharif-243137.html

சுனாமி அடிச்சுப் போய் 11 வருஷம் ஆச்சு;எங்களுக்கு வீடு இன்னும் கிடைக்கலை - கதறும் கடலூர் மீனவ மக்கள்!


Posted by:  | Sat, Dec 26, 2015, 12:50 [IST] 


கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 2004 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்டு 11 ஆண்டுகளாகியும் வீடுகளை இழந்த மீனவ மக்கள் பலர் அரசின் சுனாமி குடியிருப்பு வீடுகள் கிடைக்காமல் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு, டிசம்பர் 26 ஆம் தேதியன்று கடலூரையே புரட்டிப் போட்ட சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு அரசும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் முன்வந்தனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கவும், புதிய படகுகள் வழங்கி அவர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும் உதவிக்கரங்கள் நீட்டப்பட்டன. அதன்படி, கடலூர் அருகே ஏணிக்காரத் தோட்டத்தில் கிட்டதட்ட 1000 வீடுகள் தொண்டு நிறுவனங்களால் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்த வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு தற்போது வசித்து வருகின்றனர். இதேபோல, மீனவர்களுக்கு அரசு சார்பில் ராஜீவ் காந்தி தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ், கடலூர் முதுநகர் செல்லக்குப்பம் குட்டியாண்டவர் கோயில் அருகே 538 வீடுகள் கட்டும் பணி 2009 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. இதில், பெரும்பாலான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டபோதிலும், போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. சாலை, மின்சாரம், குடிநீர் வசதிகள் போதுமான அளவுக்கு இல்லை. மேலும், கிட்டதட்ட 300 பேருக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படாததால் அந்த வீடுகள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு புகலிடமாக உள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் செல்லங்குப்பம் காலனி அருகே சுமார் 60 வீடுகள் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டும், உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் அங்கு வீடுகள் கட்ட முடியாத நிலை உள்ளது. 11 ஆண்டுகள் கடந்த பின்னரும் வீடுகள் கட்டுவதற்கான பணிகள் கூட தொடங்கப்படவில்லை. எனவே, அரசு வீடுகளை இழந்தவர்களின் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று மீனவ மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/fishery-people-cuddalore-request-houses-243146.html

Friday, 25 December 2015

திமுக, மக்கள் நல கூட்டணி அழைப்பை தொடர்ந்து விஜயகாந்திற்கு அழைப்பு விடுத்த ஈ.வி.கே.எஸ். !





Fri, Dec 25, 2015, 22:22 [IST]


     சென்னை: திமுக, மக்கள் நல கூட்டணி கூட்டணியைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எங்களுடன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக தவிற பிற கட்சிகள் வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதற்காக தயார் ஆகி வருகின்றது. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் பிரதான திராவிட கட்சிகள். இதுவரை நடந்த சட்டசபை தேர்தல்களில் இந்த இருகட்சிகளுடன் மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்தும் சில கட்சிகள் தனித்து நின்றும் தேர்தலை சந்தித்தன.
Evks calling to vijayakanth for alliance
இந்த நிலையில் திமுக,அதிமுக அல்லாத மாற்று ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறி மதிமுக,விடுதலை சிறுத்தைகள்,கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் தேர்தலை சந்திக்க தாயார் ஆகி கொண்டுள்ளன. மேலும் இந்த கூட்டணியை வலுப்படுத்த வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டணியினர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து தங்கள் கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக, திமுகவுடன் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விஜயகாந்தை கடந்த வாரம் சந்தித்தனர். பின்னர், எங்கள் கூட்டணியில் தான் விஜயகாந்த் தற்போது இருக்கிறார். இந்த கூட்டணி தொடரும் நல்லாட்சி அமைய ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த கூட்டணியில் அவர் நிச்சயம் நீடிப்பார் பாஜகவினர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 131 ஆவது ஆண்டு துவக்க விழா, கிறிஸ்துமஸ், மிலாது நபி பண்டிகை ஆகிய மூன்றையும் இணைத்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் மற்ற கட்சிகளை சந்தித்து ஆதரவு கோருவது வாடிக்கையான விஷயம் தான் என்றார்.
அப்போது மக்கள் நல கூட்டணியினர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தது குறித்த கேள்விக்கு, எங்களை பொறுத்த வரையில் தேமுதிக எங்களுடன் வந்தால் சந்தோஷம்தான் என்றார். மேலும், சட்ட சபை தேர்தல் கூட்டணி குறித்து பிப்ரவரிக்கு பின்னர் அறிவிக்கப்படும். கூட்டணிக்கு திமுக அழைக்கவில்லை என்பது பற்றி காங்கிரசுக்கு கவலை இல்லை என்று இளங்கோவன் தெரிவித்தார்.

தனித்து நின்று ஒரு எம்.எல்.ஏ. சீட் வெற்றி பெற முடியுமா? விஜயகாந்த், வைகோவுக்கு அன்புமணி கேள்வி

 Fri, Dec 25, 2015, 2:10 [IST]

 

சென்னை: தமிழத்தில் தகுதியான மாற்று கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் வைகோ, விஜயகாந்த் தனித்து நின்று ஒரு எம்.எல்.ஏ. சீட் வெற்றி பெற முடியுமா? என அன்புமணி தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சி தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது அன்புமணி பேசுகையில், தமிழக அரசியலில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத சூழல் இப்போது நிலவுகிறது. அதிமுக, திமுகவுக்கு எதிரான அலை வீசுகிறது. பாமக ஆட்சிக்கு வந்தால், ஆக்கிரமிப்புகளை அகற்றி மன்னர் காலத்தில் இருந்தது போல குளம், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை மீட்போம். விஜயகாந்த், வைகோ, ஜி.கே.வாசன், கம்யூனிஸ்டு கட்சிகள், பாஜக, காங்கிரஸ் ஆகிய எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து நின்று ஒரு எம்.எல்.ஏ. சீட் வெற்றி பெற முடியுமா' என்று கூறினார். மேலும் தமிழகத்தில் தகுதியான மாற்றுக் கட்சி பாமக தான். தைரியமாக களத்தில் இருக்கும் ஒரே கட்சி பாமகதான். வருகிற சட்டமன்ற தேர்தலில் 50 சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்றார். பாமகவின் தலைமையையும், அன்புமணியை முதல்வர் வேட்பாளராகவும் ஏற்றுக் கொள்ளும் அதிமுக, திமுக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருக்கிறோம் என்று ராமதாஸ் பலமுறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் யார் யாருடன் கூட்டணி அமைக்க இருக்கின்றனர் என்று முடிவாகதா சூழலில் தமிழகத்தில் நாங்கள் தான் தகுதியான மாற்றுக் கட்சி என்றும் திமுக, அதிமுக அல்லாத தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட், பாஜக, காங்கிரஸ், தமாகா உள்ளிட்ட கட்சிகள் தனித்து நின்று ஒரு எம்.எல்.ஏ. சீட் வெற்றி பெற முடியுமா? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/pmk-is-suitable-alternative-party-the-state-243053.html

Thursday, 24 December 2015

இந்திய ஊடகங்களால் மறைக்கப்படும் இஸ்லாமியர்களின் போராட்டம்.!

கடந்த இரண்டு வாரங்களாக உ.பி.யில் நடைபெற்று வரும் இப்போராட்டம்,நம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் அன்னை ஆயிஷா அவர்களை பற்றியும் கேவலமாக,தரக்குறைவாக பேசி,எழுதி வரும் கமலேஷ் திவாரி எனும் இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாதிக்கு எதிராக சுமார் 10லட்சம் இஸ்லாமியர்களின் கண்டன கூட்டம்.

அவனது உயிருக்கு விலை வைக்கப்பட்டுள்ளது.

இத்தனைக்கும் அவன் சிறையில்...

இதை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் துவங்க வேண்டாமா ???
இதை கண்டித்து ஏன் இன்னும் தமிழகத்தில் கண்டன குரல்கள் எழும்பவில்லை ???
இதற்காக போராட திராணி அற்ற சமுதாயமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா ????

ஐநா சபையின் முதல் பரிசை வென்ற இந்திய மாணவி ‪ ஆமினா‬!




ஐநா நடத்திய முன்மாதிரி சட்டமன்ற நிகழ்வில் முதல் பரிசை வென்று சாதனைபடைத்த இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த ஆமீனா
===================================
ஐநா சபை அண்மையில் சிறுவர் சிறுமியரை ஊக்குவிக்கும் விதத்தில் முன்மாதிரி சட்டமன்றம் என்றொரு நிகழ்வை நடத்தியது


அந்த நிகழ்வில் உலகின் பல்வேறு நாடுகளை சார்ந்த சிறுவர் சிறுமிய கலந்து கொண்டு தங்கள் வாத திறனை முன் வைத்தனர்

அந்த நிகழ்வில் சிறப்பாக வாதிட்டு அனைவரையும் கவர்ந்து

உலக அளவில் முதல் பரிசை தட்டி சென்ற கேரளத்து சிறுமி ஆமினாவை தான் படத்தில் பார்க்கின்றீாகள்

குவைத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடந்த வண்ணம் உள்ளது.



குவைத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடந்த வண்ணம் உள்ளது. 3500-க்கு அதிகமானவர்கள் இது வரை கைது. எனவே இன்று, நாளை மற்றும் மறுநாள் விடுமுறையாக இருப்பதால் நமது உறவுகள் Civil ID மற்றும் ஓட்டுநர்
உரிமம் மறவாமல் எடுத்து செல்லவும்.
தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கவும்.

கூடங்குளத்தில் மூன்றாவது அணு உலையை ரஷ்யா அமைக்கும் - ரஷ்ய அதிபர் புதின் உறுதி

Thu, Dec 24, 2015, 22:26 [IST] 


மாஸ்கோ: கூடங்குளத்தில் ரஷ்யா மூன்றாவது அணு உலையை அமைக்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உறுதியாக கூறியுள்ளார். இந்தியா - ரஷ்யா இடையிலான 16வது வருடாந்திர சந்திப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா சென்றுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். பின்னர் இந்திய-ரஷ்யா தொழிலதிபர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது: சர்வதேச உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற விரும்புகிறோம். பல துறைகளில் ரஷ்யாவுடன் இந்தியா இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்தார். மேலும் மோடி பேசுகையில், மேக் இன் இந்தியா' திட்டத்தில் ரஷ்யா இணைவதால் இந்தியாவில் பல வாய்ப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் கட்டமைப்பு துறையில் முதலீடு செய்ய ரஷ்ய தொழிலதிபர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருநாட்டு உறவுகளும் மேலும் வலுப்பெற இந்தியா விரும்புவதாகவும், ரஷ்யா இந்தியாவின் நீண்ட கால தோழர் எனவும் மோடி தெரிவித்தார் இதையடுத்து பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் செய்தியாளர்களை சந்தித்து கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து கூட்டாக ஹெலிகாப்டர்களை தயாரிப்பில் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர். அணுசக்தி துறையில் இருநாடுகள் இடையே ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. ரஷ்யாவின் உதவியுடன் இந்தியாவில் இரண்டு இடங்களில் 12 அணு உலைகளை நிறுவ முடிவு செய்துள்ளதாக மோடி தெரிவித்தார். ரஷ்ய அதிபர் புதின் கூறுகையில், கூடங்குளத்தில் மூன்றாவது அணு உலையை ரஷ்யா அமைக்கும். மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் எனவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார். மேலும் இந்தியா - ரஷ்யா இடையே ஹெலிகாப்டர், தகவல் ஒளிபரப்பு, ரயில்வே உள்ளிட்ட16 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

Read more at: http://tamil.oneindia.com/news/india/pm-modi-president-putin-at-ceo-summit-moscow-243048.html

எங்களைப் பார்த்து கருணாநிதிக்கு கலக்கம்... சொல்கிறார் வைகோ




சென்னை: நாங்கள் விஜயகாந்தை அழைத்தது கருணாநிதிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் . விஜயகாந்தை நாங்கள் சந்தித்த பிறகுதான் அவர் அழைக்க வேண்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மக்கள் நலக்கூட்டணி தொகுதி உடன்பாடுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல. 6 மாதத்துக்கு முன்பே உருவாக்கப்பட்ட கொள்கை திட்ட கூட்டணி. மக்கள் நலக்கூட்டணி ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லாத பலமிக்க கவசதன்மை மிக்க நம்பிக்கைதன்மை கொண்டது. 65 சதவீத இளைய தலைமுறையின் கருத்து தாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டணி என்றார். வெள்ளச்சேதத்தின் போது அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டது. மக்களின் துயர் துடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்பட்டு வருகிறது. தமிழக வெள்ளச் சேதத்துக்கு நாங்கள் கேட்ட ரூ.50 ஆயிரம் கோடியை இதுவரை மத்திய அரசு ஒதுக்கவில்லை. எனவே செயலற்ற மாநில அரசையும், நிவாரணம் ஒதுக்காத மத்திய அரசையும் கண்டித்து வருகிற 31ம்தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறிய வைகோ, இதில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் வெள்ளம் பாதித்த பகுதி மக்கள் கலந்து கொள்வார்கள் என்றார். விஜயகாந்தை மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான நீங்கள் சந்தித்து பேசியுள்ளீர்கள். அதே நேரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்து உள்ளாரே? என்று வைகோவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், நாங்கள் மதியம் விஜயகாந்தை சந்தித்து பேசினோம். அதன் பிறகு 3 மணி நேரத்துக்கு பிறகு தி.மு.க. தலைவரும் அழைத்துள்ளார். நாங்கள் விஜயகாந்தை அழைத்தது அவருக்கு கலக்கத்தை உருவாக்கி உள்ளது. நாங்கள் சந்தித்த பிறகுதான் அவர் விஜயகாந்தை அழைக்க வேண்டுமா? அதற்கு முன்பே அழைத்திருக்கலாமே? விஜயகாந்தை கலைஞர் அழைத்ததற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. இதுகுறித்து விஜயகாந்த் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-is-afraid-us-says-vaiko-243026.html

பேராவூரணி அருகே ஐஸ்கிரீம் வெடிகுண்டு வைத்தது யார்?: போலீசார் தீவிர விசாரணை



பேராவூரணி, டிச.24–பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டையை சேர்ந்தவர் வேலுச்சாமி. ஊர் பஞ்சாயத்து தலைவராகவும், தஞ்சை மாவட்ட தி.மு.க. விவசாய அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார். இவரது வீட்டின் ஒரு பகுதியில் பூச்செடிகள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் புல்தரை உள்ளது.இந்த பகுதியில் பந்து ஐஸ்கிரீம் எனப்படும் பிளாஸ்டிக் டப்பா ஒன்று கிடப்பதை பார்த்து வேலுச்சாமி மகன் அஸ்வந்த் தனது தந்தையிடம் காண்பித்தார். அது வெடிகுண்டு போன்றும், அடிப்பகுதியில் காற்று போகும் அளவில் திரி ஒன்று இருப்பதும் தெரிய வந்தது. இதனால் பதட்டம் அடைந்த வேலுச்சாமி இதுபற்றி பேராவூரணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.தகவல் அறிந்து பட்டுக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த்மேனன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தஞ்சையிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வந்து அதனை சோதனையிட்டனர். மோப்பநாய் சச்சினும் வரவழைக்கப்பட்டு அங்கு ஆய்வு செய்யப்பட்டது. அத்துடன் வெடிகுண்டு போன்ற அந்த பொருளை கைப்பற்றினர்.அதில் கந்தகத்தில் தயாரிக்கப்பட்ட கருப்புநிற மருந்து அடைக்கப்பட்டு இருந்ததாகவும், வெயிலில் காய்ந்ததும் வெடிக்கக்கூடிய நிலையில் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் எனவும், அதற்கு ஏற்றார்போல் அதன் மேல் பகுதியில் பாஸ்பரஸ் எனப்படும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.வேலுச்சாமி வீட்டை தகர்க்க இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டதா? இதனை வைத்து விட்டு தப்பிச் சென்றவர்கள் யார்? என்ன காரணம்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.ஊராட்சிமன்ற தலைவர் வீட்டில் வெடிகுண்டு கிடந்த செய்தி அறிந்து ஏராளமானோர் அவரது வீட்டின் முன்பாக குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம்


நீரினை மாசுபடுத்தும் மீன் குத்தகைதாரர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்: கலெக்டர் சுப்பையன் தகவல்

தஞ்சாவூர் 
2:31 PM | டிசம்பர் 24, 2015
தஞ்சாவூர், டிச.24–தஞ்சாவூர் பனகல் கட்டிடத்தில் மாவட்ட திட்டக்குழு திட்டம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அமுதா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சுப்பையன் முன்னிலை வகித்தார்.இது வரை நடைபெற்ற 10 கூட்டங்களில் பெறப்பட்ட விவாத பொருள்களின் மொத்தம் 192 பணிகளில் 157 பணிகள் குறித்து முடிவு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், 35 பணிகள் அனைத்துத் துறை அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு விரைவில் நிதி ஒதுக்கீட்டுக்கேற்ப விரைவில் நிறைவேற்றப்படும்.மண் சாலைக்கு பதிலாக தார் சாலை பணிகள், ஏரிகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளுதல், ஆரம்ப சுகாதார வளாகம் அமைத்தல், புதிய குடிநீர் தொட்டி அமைத்தல், தெரு விளக்கு வசதி, அங்கன்வாடி அமைத்தல், கால்நடை மருத்துவமனை அமைத்தல், பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளுதல், பூங்காக்களை புதுப்பித்தல், உயர்மட்ட பாலங்கள் அமைத்தல், தடுப்பு சுவர்கள் அமைத்தல், சமுதாய கூடம் மற்றும் ஈமக்கிரி மண்டபம் கட்டுதல் மற்றும் தார் சாலை அமைத்தல், மழை நீர் வடிகால் அமைத்தல், கழிவறைகள் அமைத்தல், புதிய பேருந்து நிழற்குடை கட்டுதல், கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஏரி, குளங்களை குத்தகைக்கு எடுக்கும் நபர்கள் அக்குளங்கள் நீரினை மாசுப்படுத்தும் வகையில் கழிவு பொருட்களை மீனுக்கு இரையாக கொடுப்பதால், நீர் மாசுப்படுவதாக உறுப்பினர்கள் கலெக்டரிடம் தெரிவித்தனர். ஏற்கனவே எடுத்துக்கொள்ளப்பட்ட பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைவாக முடிக்கவும், தரமாக இருக்க வேண்டும். நிதி ஒதுக்கீட்டுக்கு தகுந்தாற்போல் அனைத்து பணிகளும் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும். சிறப்பு நிதி ஒதுக்கீடு பெற்று ஏனைய பணிகளும் நிறைவேற்றப்படும். குளங்கள் மற்றும் ஏரிகளை மாசுப்படுத்தும் குத்தகைதாரரின் குத்தகை உரிமைகளை ரத்து செய்யவும், நீர் நிலைகளை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் சுப்பையன் தெரிவித்தார்.திட்டக்குழு கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி செயலர் செல்லக்கண்ணு, ஒன்றியக்குழு தலைவர்கள் மலர்கொடிதமிழரசன், சாந்தி அசோக்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் குருசேவ், துரை.தியாகு, எஸ். குலோத்துங்கன், மலர்கொடி சீனிவாசன், செல்வம் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

சவுதி அரேபியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் உயிரிழப்பு


10:57 AM | டிசம்பர் 24, 2015
ரியாத், சவுதி அரேபியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். ஜஸான் பகுதியில் அமைந்து உள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. மருத்துமனையில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மகப்பேறு பிரிவு அமைந்துஉள்ள முதல் மாடியில் விபத்து ஏற்பட்டு உள்ளது. தீ விபத்தில் 25 பேர் பலியாகினர் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனையில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். மருத்துவமனையில் தீ விபத்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக விரைந்து சென்று தீயை அணைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து தொடர்பான முழு தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை...

Wednesday, 23 December 2015

சமுக வலைதளம்


தாத்ரி சம்பவம்: மைனர் உட்பட 15 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

தினத்தந்தி 


8:02 PM | டிசம்பர் 23, 2015


புதுடெல்லி,உத்தர பிரதேசத்தில் உள்ள தாத்ரியில் மாட்டிறைச்சி உட்கொண்டதாக கூறி முஸ்லீம் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்று 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், 15 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி முகம்மது அக்லாத் என்ற 52 வயது நபர் மாட்டிறைச்சி உட்கொண்டதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அங்குள்ள ஒரு கும்பல் அவரை அடித்துக்கொன்றது. இந்த தாக்குதலின் போது, முகம்மது அக்லாத்தின் மகனும் படுகாயம் அடைந்தார். நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சம்பவம் நடைபெற்று 3 மாதங்கள் ஆன நிலையில், 15 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  உள்ளூர் பாஜக பிரமுகர் சஞ்செய் ரானாவுடன் தொடர்புடைய ஒரு இளைஞரின் தூண்டுதலின் பேரில் உள்ளூர் கும்பல் தாக்குதல் நடத்தியாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேரில் பாஜக பிரமுகர் சஞ்செய் ராணாவின் மகன் விஷாலும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் மாட்டிறைச்சி என்ற வாசகம் இடம் பெறவில்லை போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமரின் வெளிநாட்டு பயணத்தால் எந்த பலனும் ஏற்பட போவது இல்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு


8:46 PM | டிசம்பர் 23, 2015


      அமேதி, பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தால் இந்தியாவுக்கு எந்த பலனும் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி 2 நாள் பயணமாக அமேதிக்கு சென்றார். அங்கு நியாய பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- “ பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடு செல்கிறார். அங்குள்ளவர்கள் மிகுந்த புத்திசாலிகள். அவரது பயணத்தால் இந்தியாவுக்கு எந்த பலனும் இல்லை. சராசரி மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதற்கு பா.ஜ. கூட்டணி அரசின் தவறான நிர்வாகம்தான் காரணம். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்.பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. தேர்தல் பிரசாரத்தின்போது இந்துமுஸ்லிம்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக மோடி பேசினார். பீகார் தேர்தல் முடிவுக்குப்பின், அந்த மாநிலம் இருப்பதையே அவர் மறந்து விட்டார். நல்ல நாட்கள் பிரதமர் மோடிக்கு தான் வந்துள்ளதே தவிர நாட்டு மக்களுக்கு வரவில்லை.  இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும்: விஜயகாந்த்துக்கு கருணாநிதி அழைப்பு


Wed, Dec 23, 2015, 18:48 [IST]





சென்னை: தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும் என்று விரும்புவதாக தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று அழைப்பு விடுத்துள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அண்மையில் பா.ஜ.க. தலைவர்கள் சந்தித்து பேசியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் முத்தரசன் ஆகியோர் விஜயகாந்த்தை சந்தித்தனர். அப்போது மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க. இணைய வேண்டும் என்று அவர்கள் விஜயகாந்த்திடம் வலியுறுத்தினர். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் இந்த சந்திப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. விஜயகாந்த்தை மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் சந்தித்தது பற்றி நான் கருத்து எதுவும் கூற முடியாது என்றார். மேலும் தி.மு.க. தரப்பில் இருந்தும் விஜயகாந்த்தை சந்திப்பது ஆலோசனைகள் நடத்தப்பட்டதா? என்ற கேள்விக்கு, தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார் கருணாநிதி. இந்த பதிலை தே.மு.தி.க.வுக்கான தி.மு.க.வின் அழைப்பாக எடுத்து கொள்ளலாமா என்ற மற்றொரு கேள்வி, நான் தெரிவித்த கருத்தே அழைப்புதானே என்றார். அத்துடன் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி 75% முடிவடைந்துவிட்டதாகவும் கருணாநிதி கூறினார். பொதுக்கூட்டங்களில் தி.மு.க. இறங்கி வந்து கூட்டணி குறித்து பேச வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசிவரும் நிலையில் கருணாநிதியின் இந்த அழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-invites-vijayakanth-join-dmk-alliance-242961.html

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மோடி சிக்னல் கொடுத்தாரா? ராஜ்யசபாவில் கடும் அமளி

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மோடி சிக்னல் கொடுத்தாரா? ராஜ்யசபாவில் கடும் அமளி

Wed, Dec 23, 2015, 16:34 [IST] 




டெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பிரதமர் மோடி 'சிக்னல்' கொடுத்துவிட்டதாக கூறப்படும் விவகாரத்தால் ராஜ்யசபாவில் இன்று கடும் அமளி ஏற்பட்டது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கற்களைக் கொட்டும் பணியை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடியிடம் இருந்து சிக்னல் கிடைத்துவிட்டதாலே கட்டுமானப் பணிகள் தொடங்கப் போவதாக ராமஜன்ம பூமி நியாஸ் தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாஸ் தெரிவித்திருந்தார். மேலும் கட்டுமான பணிக்கு கொண்டுவரப்பட்ட கற்களுக்கு அவர் பூஜையையும் நடத்தினார். இந்த விவகாரத்தை ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர். ராஜ்யசபாவில் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. தியாகி, உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்காக மத வன்முறையைத் தூண்டுவதை நிறுத்த வேண்டும். மோடி அரசிடம் இருந்து சிக்னல் கிடைத்துவிட்டதாக மகந்த் நிருத்ய கோபால் தாஸ் கூறியும் உள்ளார் என்பதை சுட்டிக் காட்டினார். இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் கோவில் கட்டுமானத்துக்கான கற்கள் கொட்டப்பட்டுள்ளன. ராமர் கோவில் விவகாரத்தில் பா.ஜ.க.வும் மத்திய அரசும் நீதிமன்றம் நீதிமன்றத்தின் முடிவை ஏற்றுக் கொள்ளும். அந்த இடத்தில் கற்களை குவிக்கக் கூடாது என நீதிமன்றம் எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை. கற்களை உடைத்து செதுக்கும் பணி நடப்பதாலேயே கோவில் கட்டப் போகிறார்கள் என்பது அர்த்தம் அல்ல. நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பொறுத்திருப்போம். நாம் அனைவரும் அதற்கு மதிப்பளிப்போம் என்றார். ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று உத்தரப்பிரதேசத்தில் மத வன்முறையை தூண்டுவதை நிறுத்துக என முழக்கமிட்டனர். அப்போது துணைத் தலைவர் பி.ஜே.குரியன், அமைச்சர் நக்வியின் அறிக்கையில் எந்த ஒரு குழப்பமுமே இல்லையே; அரசும், அவரது கட்சியும் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பதாக கூறுகிறார்களே.. எதற்காக இப்போது போராட்டம் நடத்துகிறீர்கள்? தேவையில்லாமல் முழக்கங்களை எழுப்பாதீர்... இருக்கைக்கு செல்லுங்கள் என கூறிப் பார்த்தார். எவருமே பி.ஜே. குரியனின் விளக்கத்தை கேட்கவில்லை. இதனால் சபை நடவடிக்கைகள் 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் சபை கூடிய போதும் காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி எழுந்து அயோத்தி பிரச்சனையை கிளப்பினார். ஆனால் பி.ஜே. குரியன் இதை அனுமதிக்கவில்லை. அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுந்து நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ராஜினாமா செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பத் தொடங்கினர். இதனால் மீண்டும் சபையை ஒத்திவைக்க நேரிட்டது. இரு சபைகளும் காலவரையின்றி ஒத்தி வைப்பு நாடாளுமன்ற லோக்சபாவிலும் அயோத்தி மற்றும் அருண் ஜேட்லி விவகாரங்களால் அமளி நீடித்தது. இதனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சபை நடவடிக்கைகளை மறு தேதி குறிப்பிடாமல் காலவரையின்றி ஒத்திவைத்தார். ராஜ்யசபாவும் காலவரையின்றி மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 13 மசோதாக்கள் நிறைவேற்றம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கியது. மொத்தம் 20 நாட்கள் கூட்டத் தொடர் நடைபெற்றன. இதில் சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பை 16 ஆக குறைப்பது உட்பட மொத்தம் 13 மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. ராஜ்யசபாவில் 9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Read more at: http://tamil.oneindia.com/news/india/rajya-sabha-stalled-over-ayodhya-issue-242948.html

Tuesday, 22 December 2015

வங்கிகளுக்கு டிச.24 முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை

தி இந்து

வங்கிகளுக்கு டிச.24 முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை


கோப்புப் படம்
மிலாடி நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் 2-வது சனிக்கிழமை ஆகியவற்றை முன்னிட்டு வங்கிகளுக்கு டிசம்பர் 24 முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மிலாடி நபி பண்டிகை டிசம்பர் 24-ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 25-ம் தேதி வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதாலும், அதற்கடுத்த நாள் 2-வது சனிக்கிழை என்பதாலும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், ஏடிஎம் மையங்களில் போதிய பணத்தை இருப்பு வைக்க வங்கி நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இதனால், ஏடிஎம் மையங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்படாது என தெரிகிறது.

TNTJ திருச்சி செயற்குழு தீர்மானங்கள்

திருச்சி செயற்குழு தீர்மானங்கள்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, December 22, 2015, 13:24

தலைமைகழக செய்தி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு இன்று (22-12-2015) திருச்சியில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:



தீர்மானங்கள்

1. தர்கா வழிபாடு , தகடு , தாயத்து, பில்லி, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகள் இஸ்லாத்திற்கு எதிரானவை, இறைவன் மன்னிக்காத பாவமான இணைவைப்பைச் சார்ந்தவை. எனவே, இப்பெரும் பாவத்திலிருந்து அனைத்து மக்களும் மீள வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

2. இணைவப்பு எனும் ஷிர்க்கை ஒழிப்பதற்காக வரக்கூடிய 201`6 ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற உள்ள மாநாட்டில் இன்ஷா அல்லாஹ் இலட்சக்கணக்கான மக்கள் திரள உள்ளனர். இதில் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரையும் கலந்துகொள்ளச் செய்ய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்வீரர்கள் அனைவரும் தீவிர களப்பணியாற்ற இச்செயற்குழு கேட்டுக்கொள்
கின்றது

3. சென்னை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்கான கணக்கீடு தமிழக அரசு சார்பில் வீடுவீடாகச் சென்று கணக்கிடப்பட்டு வருகிறது. வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட வீடுகளையும் அத்தியாவசியப் பொருட்களையும் இழந்து வாடுவோரில் குடிசை இழந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும், நடுத்தர வர்க்கத்தினருக்கு அவர்கள் அடைந்த அதிக அளவிலான பாதிப்பை கவனத்தில் கொண்டு ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணத்தொகையாக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், வீடுகளில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டது போல் வெள்ள நீர் கடைகளுக்குள் புகுந்ததால் வியாபார பொருட்கள் நாசமடைந்து வியாபாரம் செய்ய முடியாமல் சிறு வணிகர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். வீடுகளில் உள்ள பொருட்களை இழந்ததைவிட இந்த வணிகர்கள் கூடுதலாக பல பொருட்களை இழந்து பெரும் நஷ்டமடைந்துள்ளனர். அவர்கள் அடைந்த நஷ்டத்தை கவனத்தில் கொண்டு வாழ்வாதாரத்தை இழந்து வாடும் அந்த ஏழைச் சிறு வணிகர்களின் துயர் துடைக்க மாநில அரசு ஒரு கடைக்கு குறைந்தபட்சம் தலா ஒரு இலட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும் இச்செயற்குழு கோரிக்கை விடுக்கின்றது.

4.பூரணமதுவிலக்கு
மதுபானங்களும், இதர போதைப் பொருட்களும் மனிதனின் அறிவை மழுங்கச் செய்கிறது என்பதும், குடும்பத்தில் பிளவை ஏற்படுத்துகிறது என்பதும், கஷ்டப்பட்டு உழைத்த பொருளாதாரத்தைப் பாழாக்கி வறுமையை அதிகரிக்கிறது என்பதும், கொலை அடிதடி போன்ற சட்ட ஒழுங்குப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதும், இல்லற வாழ்வில் ஈடுப்பாட்டை குறைப்பதால் கள்ள உறவுகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என்பதும் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். மானம் மரியாதையை ஒருவன் இழப்பதற்கும் போதைப் பழக்கமே முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது.
இளம் வயதினர் போதைப் பொருளுக்கு அடிமையாவதால் கல்வி கற்பதில் அவர்களின் ஆர்வமும் ஈடுபாடும் குறைந்து எதிர்காலம் நாசமாகி வருகிறது. இன்னும் சொல்ல முடியாத கேடுகள் மதுப்பழக்கத்தால் ஏற்படுவது தெரிந்திருந்தும் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என்பதற்காக தமிழக அரசாங்கமே மதுக்கடைகளைத் திறந்து குடிப்பழக்கம் இல்லாத மக்களையும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்குவதை இந்த செயற்குழு கண்டிக்கிறது. வருவாயை விட நாட்டு மக்களின் நலனும்,நிம்மதியும், ஒழுக்கமும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்ந்து உடனடியாக தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக அக்கறையுடன் தமிழக அரசை இந்தச்செயற்குழு வற்புறுத்துகிறது.

மது, பீடி சிகரெட், பான்பராக், புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றின் தீமைகளை மக்களுக்கு விலக்கி இப்பழக்கத்தில் இருந்து விடுபடத்தக்க வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகங்களும் கிளைகளும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

5. கல்வி , வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் பின் தங்கியுள்ள இஸ்லாமிய சமுதாயத்திற்கு இடஒதுக்கீட்டை அதிக படுத்தி தருவேன் என கடந்த பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் கூறியிருந்தார்., அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாமல் உள்ளது அடுத்த தேர்தலை சந்திக்க விருக்கும் இந்நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. சர்ச்சார் மற்றும் ரங்கநாத்மிஸ்ரா கமிசனின் பரிந்துரையின் படி மத்தியில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

6.. புதுவையில் இடஒதுக்கீடு
முஸ்லிம்களுக்கு 6.1 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிப்பதாக புதுவை சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட்து. தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு போராட்டங்கள் நடத்திய பின் புதுவை மாநிலத்தில் ஒரு பகுதியில் மட்டும் இரண்டரை சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பதாகவும் இன்னொரு பகுதியில் அறவே இட ஒதுக்கீடு இல்லை எனவும் அறிவித்தது. இது ஒட்டு மொத்த புதுவையில் ஒரு சதவிகிதம் ஆகிறது. புதுவை அரசின் இந்த துரோகத்தை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

7. வக்ஃபு வாரியத்தை முற்றாகக் கலைக்கக்கோரி
கிறித்தவ சமுதாயத்தின் அறப்பணிகளுக்கான சொத்துக்களை அரசு தலையீடு இல்லாமல் கிறித்தவ சமுதாயமே நிர்வகித்து வருகிறது. அதனால் அவர்களின் சொத்துக்கள் ஆக்ரமிக்கப்படாமல் பாதுகாப்பாக இருந்து வருகிறது. ஆனால் முஸ்லிம் சமுதாய சொத்துகளை அரசின் வக்ஃபு வாரியம் நிர்வகிக்கிறது. இது அரசியல்வாதிகளுக்கும், சுரண்டல் பேர்வழிகளுக்கும் கொள்ளை அடிக்க வாய்ப்பாக இருந்து வருகிறது. எனவே முஸ்லிம் சமுதாய சொத்துக்களை அரசு தலையீடு இல்லாமல் முஸ்லிம் சமுதாயமே நிர்வகிக்கும் வகையில் வக்ஃப் வாரியத்தை முற்றாகக் கலைத்து விட வேண்டும் என மாநில மத்திய அரசுகளை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
உள்ளூர் ஜமாஅத்துகள் வக்பு சொத்துக்களை நிர்வாகம் செய்தால் மட்டுமே வக்பு சொத்துக்களைப் பாதுகாக்க முடியும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

8.டெல்லியில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட மாணவி நிர்பயாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலைக்குற்றவாளி ஒருவனுக்கு 18 வயது பூர்த்தியாகததால் அவன் பச்சிளம் சிறுவன் என்றும், எனவே 3ஆண்டுகளில் அவனை சிறார் என்ற அடிப்படையில் விடுதலை செய்ததோடு அவனுக்கு 10ஆயிரம் ஊக்கத்தொகையுடன், தையல் மிஷின் வழங்க வேண்டும் என்ற மோசமான பரிந்துரையும் செய்யப்பட்டிருப்பது நமது நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநியாயமாகும். பருவமெய்திவிட்டாலே அவர்கள் சிறார்கள் அல்ல என்ற அடிப்படையில் சட்டமியற்றி சிறார் என்ற போர்வையில் தவறு செய்துவிட்டு தப்பிக்கும் கொடூரங்கள் குறைய இந்த சட்டதிருத்தம் உடனடித்தேவை என்றும் இச்செயற்குழு மத்திய அரசிற்கு கோரிக்கை விடுக்கின்றது. மேலும் கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் ரீதியான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் விதத்தில் சட்ட திருத்தம் உடனடித்தேவை எனவும் இச்செயற்குழு வலியுறுத்துகின்றது