8:46 PM | டிசம்பர் 23, 2015
அமேதி, பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தால் இந்தியாவுக்கு எந்த பலனும் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி 2 நாள் பயணமாக அமேதிக்கு சென்றார். அங்கு நியாய பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- “ பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடு செல்கிறார். அங்குள்ளவர்கள் மிகுந்த புத்திசாலிகள். அவரது பயணத்தால் இந்தியாவுக்கு எந்த பலனும் இல்லை. சராசரி மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதற்கு பா.ஜ. கூட்டணி அரசின் தவறான நிர்வாகம்தான் காரணம். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்.பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. தேர்தல் பிரசாரத்தின்போது இந்துமுஸ்லிம்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக மோடி பேசினார். பீகார் தேர்தல் முடிவுக்குப்பின், அந்த மாநிலம் இருப்பதையே அவர் மறந்து விட்டார். நல்ல நாட்கள் பிரதமர் மோடிக்கு தான் வந்துள்ளதே தவிர நாட்டு மக்களுக்கு வரவில்லை. இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.
No comments:
Post a Comment