Thursday, 24 December 2015

நீரினை மாசுபடுத்தும் மீன் குத்தகைதாரர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்: கலெக்டர் சுப்பையன் தகவல்

தஞ்சாவூர் 
2:31 PM | டிசம்பர் 24, 2015
தஞ்சாவூர், டிச.24–தஞ்சாவூர் பனகல் கட்டிடத்தில் மாவட்ட திட்டக்குழு திட்டம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அமுதா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சுப்பையன் முன்னிலை வகித்தார்.இது வரை நடைபெற்ற 10 கூட்டங்களில் பெறப்பட்ட விவாத பொருள்களின் மொத்தம் 192 பணிகளில் 157 பணிகள் குறித்து முடிவு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், 35 பணிகள் அனைத்துத் துறை அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு விரைவில் நிதி ஒதுக்கீட்டுக்கேற்ப விரைவில் நிறைவேற்றப்படும்.மண் சாலைக்கு பதிலாக தார் சாலை பணிகள், ஏரிகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளுதல், ஆரம்ப சுகாதார வளாகம் அமைத்தல், புதிய குடிநீர் தொட்டி அமைத்தல், தெரு விளக்கு வசதி, அங்கன்வாடி அமைத்தல், கால்நடை மருத்துவமனை அமைத்தல், பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளுதல், பூங்காக்களை புதுப்பித்தல், உயர்மட்ட பாலங்கள் அமைத்தல், தடுப்பு சுவர்கள் அமைத்தல், சமுதாய கூடம் மற்றும் ஈமக்கிரி மண்டபம் கட்டுதல் மற்றும் தார் சாலை அமைத்தல், மழை நீர் வடிகால் அமைத்தல், கழிவறைகள் அமைத்தல், புதிய பேருந்து நிழற்குடை கட்டுதல், கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஏரி, குளங்களை குத்தகைக்கு எடுக்கும் நபர்கள் அக்குளங்கள் நீரினை மாசுப்படுத்தும் வகையில் கழிவு பொருட்களை மீனுக்கு இரையாக கொடுப்பதால், நீர் மாசுப்படுவதாக உறுப்பினர்கள் கலெக்டரிடம் தெரிவித்தனர். ஏற்கனவே எடுத்துக்கொள்ளப்பட்ட பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைவாக முடிக்கவும், தரமாக இருக்க வேண்டும். நிதி ஒதுக்கீட்டுக்கு தகுந்தாற்போல் அனைத்து பணிகளும் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும். சிறப்பு நிதி ஒதுக்கீடு பெற்று ஏனைய பணிகளும் நிறைவேற்றப்படும். குளங்கள் மற்றும் ஏரிகளை மாசுப்படுத்தும் குத்தகைதாரரின் குத்தகை உரிமைகளை ரத்து செய்யவும், நீர் நிலைகளை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் சுப்பையன் தெரிவித்தார்.திட்டக்குழு கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி செயலர் செல்லக்கண்ணு, ஒன்றியக்குழு தலைவர்கள் மலர்கொடிதமிழரசன், சாந்தி அசோக்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் குருசேவ், துரை.தியாகு, எஸ். குலோத்துங்கன், மலர்கொடி சீனிவாசன், செல்வம் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment