தினத்தந்தி
8:02 PM | டிசம்பர் 23, 2015
புதுடெல்லி,உத்தர பிரதேசத்தில் உள்ள தாத்ரியில் மாட்டிறைச்சி உட்கொண்டதாக கூறி முஸ்லீம் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்று 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், 15 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி முகம்மது அக்லாத் என்ற 52 வயது நபர் மாட்டிறைச்சி உட்கொண்டதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அங்குள்ள ஒரு கும்பல் அவரை அடித்துக்கொன்றது. இந்த தாக்குதலின் போது, முகம்மது அக்லாத்தின் மகனும் படுகாயம் அடைந்தார். நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்று 3 மாதங்கள் ஆன நிலையில், 15 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் பாஜக பிரமுகர் சஞ்செய் ரானாவுடன் தொடர்புடைய ஒரு இளைஞரின் தூண்டுதலின் பேரில் உள்ளூர் கும்பல் தாக்குதல் நடத்தியாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேரில் பாஜக பிரமுகர் சஞ்செய் ராணாவின் மகன் விஷாலும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் மாட்டிறைச்சி என்ற வாசகம் இடம் பெறவில்லை போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment