Monday, 8 August 2016

சவூதி அரேபியாவில் விசா விலை உயர்வு.


விடுப்பில் செல்பவர்களுக்கு 200 ரியால் இரண்டு மாதம், கூடுதல் ஒவ்வொரு மாதத்திற்கும் தலா 100 ரியால் விதம் வசூலிக்கப்படும்.
உதாரணமாக 6 மாதத்திற்கு 600 ரியால் செலுத்த வேண்டும், முன்பு 6 மாதம் வரை 200 ரியால் வசூலிக்கப்பட்டது.
முதல் முறையாக ஹஜ் அல்லது உம்ரா வருபவர்களுக்கு இலவச விசா, இரண்டாவது முறையாக வருபர்வகளுக்கு 2000 ரியால் வசூலிக்கப்படும்.
எண்ணெய் விலை இறங்கினால் விசா விலை ஏறும் - இது சவூதியில் !
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை இறங்கினால் கண்டவாறு பெட்ரோல் டீசல் விலையை ஏற்றும் நாடு நம்ம இந்தியா, இதுவே சவூதியில் விசா விலையை ஏற்ற காரணமாகியுள்ளது.
சர்வதேச அளவில் கடந்த வருடம் முதல் நிலவும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சவூதி அரேபியவின் வருடாந்திர பட்ஜெட்டில் சுமார் 100 மில்லியன் டாலர் அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை சமாளிக்கும் விதமாக விசா கட்டணங்களிலும் சில போக்குவரத்து விதிமீறல் அபராதங்களையும் ஏற்ற அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.
இதன்படி 2 வருட பல்நுழைவு (Multiple Entry) விசாவிற்கு சுமார் 8,000 ரியால்களும், 3 மாத பல்நுழைவு விசாவிற்கு 500 ரியால்களும் நிர்ணயிக்கப்பட உள்ளன. இந்த 500 ரியால் கட்டணம் என்பது முன்பு 6 மாத பல்நுழைவு விசாவிற்கு வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், சிவில் விமான போக்குவரத்து கட்டணத்தை கூட்டவும், சாகச பிரியர்களான சவூதியர்கள் கார் சறுக்கல் (Drifting) விளையாட்டில் ஈடுபட்டு பிடிபட்டால் அபராதம் வசூலிக்கவும் அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.
இந்த விசா விலையேற்றங்கள் வியாபார நிமித்தமாக சவூதி செல்பவர்களையும், சவூதியில் குடும்பத்துடன் வாழும் சுமார் 10 மில்லியன் வெளிநாட்டினரையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
JEDDAH: The Cabinet on Monday took a number of decisions based on a recommendation of the Ministry of Finance and the Ministry of Economy and Planning on increasing non-oil revenue. 
The weekly Cabinet session was chaired by Vice Custodian of the Two Holy Mosques Prince Mohammed bin Naif at Al-Salam Palace in Jeddah. 
As per the new decisions, a one-time entry visa fee will be SR2,000, but the state will bear this fee if a visitor is coming to the Kingdom for the first time to perform Haj or Umrah.
The multiple exit/re-entry visa fee will be SR3,000 for six months, SR5,000 for one year and SR8,000 for two years. 
The transit visa fee will be SR300.
The departure visa fee will be SR50 for those leaving the Kingdom through seaports.
The exit/re-entry visa fees will be as follows: 
• SR200 for a single trip for two months as maximum and SR100 for each additional month, within the limits of the duration of the residence permit’s validity.
• SR500 for multiple trips for three months and SR200 for each additional month within the limits of the duration of the residence permit’s validity.
A royal decree has been prepared for this purpose and the attached decision’s draft stipulates that the application of the provisions of this decision shall be as of Muharram 1, 1438, corresponding to Oct. 2, 2016.
The Cabinet also decided to make the following amendments to the Traffic Regulation issued by Royal Decree No. (M/85) on 26/10/1428 AH:
Adding three new paragraphs to Article 68 as follows:
• A fine of not less than SR1,000 and not more than SR2,000, according to the schedule of offenses No. (5) attached to this regulation.
• A fine of not less than SR3,000 and not more than SR6,000, with the vehicle’s seizure until the violation is removed, according to the schedule of offenses No. (6) attached to this regulation.
• A fine not less than SR5,000 and not exceeding SR10,000 with the vehicle’s seizure until the violation is removed, according to the schedule of offenses No. (7) attached to this regulation.”
The amendment of Article 63 of the Regulation reads as follows:
“Subject to the provisions in Articles 61 and 62 of this regulation, any driver involved in a crash shall stop the vehicle at the scene and take the initiative to inform the competent department and provide possible assistance to the victims of the incident. 
If he fails do so, he shall be fined with not more than SR10,000 or imprisonment for a term not exceeding three months, or both.”
Amendment of the end of Article 64 of the regulation will be as follows: “Anyone violating this shall be punished with a fine of not less than SR10,000 and not more than SR50,000 for the first time, and if the offense is for the second time, the fine for the first time shall be doubled and if the offense is for the third time, the fine for the second time shall be doubled with the closing of the workshop permanently.”
At the outset of the session, the Vice Custodian of the Two Holy Mosques briefed the Cabinet on the outcome of the audiences held by Custodian of the Two Holy Mosques King Salman for King Abdullah II of Jordan, and Qatari Emir Sheikh Tamim bin Hamad Al Thani. The audiences addressed bilateral relations between Saudi Arabia and each of Jordan and Qatar in addition to regional and international developments.
In a statement to SPA following the session, Culture and Information Minister Adel Al-Toraifi said the Cabinet was briefed on a number of reports on the developments in the region and the world. 
The Cabinet renewed the Kingdom’s welcome of the decision of the United Nations Secretary General to remove the name of “Coalition for Restoration of Legitimacy in Yemen” from the list of those responsible for violence against civilians.
The Cabinet commended the efforts exerted by the Joint Incidents Assessment Team (JIAT) on Yemen and its findings in response to claims on coalition forces’ violations while conducting the Decisive Storm and the Restoration Hope military operations that aim at restoring legitimacy to Yemen. 
The Cabinet renewed the Kingdom’s calls on the international community to provide protection and facilitate the entry of humanitarian aid to the Syrian people. 
It also renewed the Kingdom’s calls on the international community to stop what the Syrian people are exposed to, that is blockade, massacres and air raids like what is being witnessed in Halab (Aleppo) and other Syrian cities.
Al-Toraifi said the Cabinet was briefed on the issues on its agenda, some of which were reviewed by the Shoura Council, and decided the following:
The Cabinet approved the final accounts of the General Authority for Tourism and National Heritage for the fiscal year 1435 — 1436 AH.
The Cabinet approved an amendment of the Saudi Development Fund system so that the authority would be linked to the Council of Economic Affairs and Development. 
The fund’s chairman of the board of directors, vice chairman, manager and members of the board will be appointed by the Prime Minister. The term of office of each will be three years, renewable for one time only.
The Cabinet also decided to amend Article 5 of the Tariff Civil Aviation Law issued by Royal Decree number (M/55) dated 10/20/1426 AH, (Nov. 21, 2005), which reads: “The board of directors shall have the right to determine what shall be collected as fees from everyone leaving the Kingdom through its airports and shall have the right to not collect such fees in cases appreciated by it.
A royal decree has been prepared for this purpose with its draft attached to this decision.
arabnews.com

சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழைய இன்று முதல் தடை.

  
    சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழைய இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி சென்னை விமான நிலையத்தில் பார்வையார்கள் நுழைய இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் தனியார் நிறுவனம் மூடப்பட்டதால் உணவின்றி தவிக்கும் 13 தமிழர்கள்:இந்தியா திரும்ப உதவுமாறு கோரிக்கை:


    சவுதி அரேபியாவில் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்ற தமிழர்கள் தங்களை மீட்க இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 13 தமிழர்கள் வேலைக்கு சென்ற நிறுவனம் நஷ்டத்தில் உள்ளதால் அதன் உரிமையாளர் ஓடிவிட்டார் என்றும், இதனால் ஊதியம் வழங்கவில்லை என்றும் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர்களின் குடும்பத்தார் ராமநாதபுரம் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.
Source (thanks): புதிய தலைமுறை செய்தி 08:08:2016

அமீரகத்தில் வேலையிலிருந்து விலக_விரும்பினால் ராஜினாமா கடிதம் கட்டாயம் ஏற்கப்பட வேண்டும்:

துபாய்:

    அமீரகத்தில் பணிபுரிகின்ற யாரும் தங்களுடைய பணியிலிருந்து சுயமாக விடுவித்து கொள்ள விரும்பினால் ராஜினாமா கடிதத்தை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கும் பட்சத்தில் எந்த நிறுவனமும் அதை ஏற்றே ஆக வேண்டும் மறுக்கக்கூடாது என அமீரக மனிதவள அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
    அதேவேளை ஒருவர் தன்னுடைய நிறுவனத்தின் வேண்டுகோளை ஏற்று அறிவிப்பு காலத்தை (Notice Period) பரஸ்பரம் நீட்டித்துக் கொள்ள சம்மதித்தால் அதை அதிகாரபூர்வமாக நிறுவனத்திடமிருந்து ஊழியர்கள் எழுதி வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்றாலும் தொடர்ந்து 6 மாதங்கள் ராஜினாமா செய்த பின்பும் பணியாற்றினால் ஊழியர்கள் விண்ணப்பித்த ராஜினாமா கடிதம் தானாகவே காலாவதி ஆகிவிடும் என்றும் ஊழியர்கள் தங்களின் ராஜினாமா கடிதத்தை தொலைநகல் (Fax) வழியாகவோ, அஞ்சல் (Mail) வழியாகவோ, மின்னஞ்சல் (e-mail) வழியாகவோ அனுப்பிய விபரங்களை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Source: #Emirates247

சவுதி மன்னர் சல்மான் அதிரடி ஆணை 100 மில்லியன் ரியால்களை சிறப்பு நிதியாக ஒதுக்கினார்:

சவுதி

ஊதியமின்றி சிரமப்படும்  ஊழியர்கள் விசயத்தில் தனி கவனம் செலுத்த தொழில் துறைக்கு உத்தரவு
     சவுதி அரேபியாவில் ஊதியமின்றி சிறமபடும் ஊழியர்கள் விசயத்தில் தனி கவனம் செலுத்த தொழில் துறைக்கு சவுதி மன்னர் சல்மான் அதிரடி ஆணை.இதற்காக 100 மில்லியன் ரியால்களை சிறப்பு நிதியாக ஒதுக்கி உத்தரவு.
    எண்ணெய் விலை சரிவு மற்றும் பல காரணங்களால் சவுதி அரேபியாவின் தொழில் துறை தற்போது ஒரு தேக்க நிலையை சந்தித்திருக்கிறது.இதன் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனகங்கள் நலிவடைந்து வருகின்றன
    இதன் காரணமாக பல நிறுவகங்கள் ஊழியர்களுக்கு ஊதிய பாக்கி வைத்திருக்கிறது.சில நிறுவனங்கள் இரண்டு மாத சம்பளங்கள் முதல் ஆறு மாத சம்பளங்கள் வரை பாக்கி வைத்துள்ளது.
     இதனால் ஊழியர்கள் பெரும் சிறமத்திற்கு உள்ளாகியுள்ளது உண்மை நிலை.இது தொடர்ப்பாக நேற்று சவுதி மன்னர் சல்மான் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்
     சவுதி அரேபியாவில் ஊதியமின்றி அல்லலுறும் ஊழியர்களின் பிரச்சசனையில் தனி கவனம் செலுத்துமாறு தனது தொழில் துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.
    தேவைபட்டால் பாதிக்க பட்டுள்ள ஊழியர்களின் ஊதியத்தை அரசு சார்பில் செலுத்திவிட்டு அந்த நிறுவனங்களிடம் இருந்து அரசே அந்த தொகையை வசூலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
    இதர்காக 100 மில்லியன் ரியால்களை விஷேச நிதியாக ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.மேலும் நாடு திரும்ப விரும்பும் ஊழியர்களின் பயண வழிகளை இலகு படுத்துமாறும் உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களை கேட்டு கொண்டுள்ளார்.
   ஊதிய பாக்கி விமான செலவு உள்ளிட்ட அனைத்தையும் அரசு செலவில் செய்து விட்டு குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்
நன்றி (தமிழாக்கம்) சகோ: சையது அலி பைஜி

Sunday, 7 August 2016

சவூதியில் வசிக்கும் 49,000 பேருக்கு ஹஜ் யாத்ரீகர்களுக்கு குறைந்த செலவில் ஹஜ் ஏற்பாடு !


சவூதி அரேபியா, ஆகஸ்ட் 06
இந்த வருட ஹஜ் கடமையை சவூதி நாட்டவர்களும், சவூதியில் வாழும் வெளிநாட்டினருமாக சுமார் 49,000 பேர் மிகக்குறைந்த செலவில் சவூதி அரசின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் ஏற்பாட்டின் கீழ் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதி பெற்றுள்ள 76 நிறுவனங்கள் மூலம் அனுமதிக்கப்படுவர்.
மின்னணு (Online) வழியாக விண்ணப்பங்களை 24 மணிநேரமும் இயங்கும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம், மேலும் இதுகுறித்த புகார் பதிவு செய்வதாக இருந்தால் ஹஜ் அமைச்சகத்தின் தொடர்பு மையங்களில் (Haj Ministry's Communication Centers) பதிவு செய்யலாம்.
மேலும், மினா கூடாரங்களில் புதிதாக 8500 ஏர் கூலர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது கடந்த வருடம் செயல்பாட்டிலிருந்த ஏர் கூலர்களை விட ஆற்றல் நிறைந்தது. சென்ற வருடம் கூடாரங்களில் நிலவிய 33 டிகிரி சூட்டை விட 21 டிகிரி சூட்டையே கூடாரங்களில் நிலவச் செய்யும்.
Source: Arab News
தமிழில்: அதிரை நியூஸ்!

கால்சியம் சத்து அதிகம் கிடைக்க அத்திப்பழம் சாப்பிடுங்க.


உணவு உண்டபின் அத்திப்பழம் சாப்பிட்டால், விரைவில் செரிமானத்தை ஏற்படுத்தி, உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது.
100 கிராம் அத்திப்பழத்தில் 107 கலோரிகள் உள்ளன. குறிப்பாக கொழுப்புச் சத்து 0.1 கிராம் உள்ளது. இதில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் பி 12 ஆகியவை அதிக அளவில் கிடைக்கின்றன.
உடம்பில் ஏற்படும் பித்தம், ஈரல், நுரையீரல் பிரச்சினை மற்றும் வாய் துர்நாற்றத்தை அத்திப்பழம் நீக்குகிறது.
தினசரி இரண்டு அத்திப்பழங்கள் சாப்பிட்டு வந்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
உணவு உண்ட பின் சிறிதளவு அத்திப்பழங்களைச் சாப்பிட்டால் விரைவில் மலச்சிக்கல் தீரும்.
கல்லீரல் வீக்கத்தைப் போக்க, அத்திப்பழத்தை ஒரு வாரம் வினிகரில் ஊறவைத்து, அதன் பின் தினமும் இரண்டு சாப்பிட்டு வரலாம்.
தொடர்ந்து அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவு பெறும், முழு அளவு ஊட்டச்சத்தையும் பெற முடியும்.
தினசரி இரண்டு அத்திப்பழங்களைச் சாப்பிடுவதால் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கும். இதனால் எலும்புகள் பலம் பெறும்.
பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் சீமை அத்திப்பழம் எனப்படுகின்றன. தினமும் ஒருவேளை சிறிதளவு சீமை அத்திப்பழம் சாப்பிட்டால், வெண்புள்ளிகள் குணமாகும். தோலில் ஏற்படும் நிறமாற்றங்கள் விரைவில் சரியாகும்.
ஒருவர் தொடந்து 40 நாட்கள் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் அவரது உடல் பலம் பெறும்.
மற்ற பழங்களில் கிடைக்கும் சத்துகள் அத்திப்பழங்களில் நான்கு மடங்கு கிடைக்கின்றன என்று கூறப்படுகிறது. எனவே, அத்திப்பழங்களை நமது உணவில் அன்றாடம் சேர்த்துக்கொள்வோம். 

தமிழ் நாட்டில் நல்ல பயனுள்ள செய்திகளின் தொகுப்பு..


1. தமிழ் நாட்டில் எங்கேயாவது குழந்தைகள் பிச்சை எடுத்தால் கிழே உள்ள தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவலாம்.
"RED SOCIETY" @ 9940217816.

2. உங்களுக்கு தேவையான இரத்தத்தை இங்கே இருந்து பெறலாம்.இங்கே இரத்தம் கொடுப்பவரின் தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்.
BLOOD GROUP @ www.friendstosupport.org

3. பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் இங்கே உங்கள் விவரங்களை பதித்து வைத்தால் உங்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ 40 கம்பெனிகளிடமிருந்து வாய்ப்பு கிடைக்க பெறலாம்.
இணையதள முகவரி :
www.campuscouncil.com

4. உடல் ஊனமுள்ளவர்கள் இலவசமாக படிக்கவும் தங்குமிடத்திருக்கும் இங்கே தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி எண்கள் :- 9842062501 & 9894067506.

5. இலவசமாக பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொள்ள
முகவரி :
Kodaikanal PASAM Hospital > From 23rd March to 4th April by German Doctors.
தொலைபேசி எண்கள் : 045420-240668, 245732
"Helping Hands are better than Praying Lips"

6. நீங்கள் கீழே இருந்து ஓட்டுநர் லைசென்ஸ்,ரேஷன் கார்டு,பாங்க் பாஸ் புக் போன்ற முக்கியமான ஆவணங்கள் எதையாவது கண்டெடுத்தால் அருகிலுள்ள தபால் பெட்டியில் சமர்பித்தால்,அந்த ஆவணங்கள் உரியவரிடம் பத்திரமாக சேர்ந்து விடும்.

7. கண் தானத்திற்கான தொலைபேசி எண்கள் : 04428281919 and 04428271616
(Sankara Nethralaya Eye Bank). மேலும் விபரங்களுக்கு இந்த இணையதளத்தை பாருங்கள்.
இணையதள முகவரி : http://ruraleye.org/

8. 10 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள இங்கே அணுகவும்.
Sri Valli Baba Institute Bangalore. 10.
தொலைபேசி எண்கள் : 9916737471

9. இரத்த புற்றுநோய் உள்ளவர்கள் இலவசமாக சிகிச்சை பெற.
முகவரி :-
"Adyar Cancer Institute in Chennai".
Cancer Institute in Adyar, Chennai
Category: Cancer
Address:
East Canal Bank Road, Gandhi Nagar
Adyar
Chennai -600020
Landmark: NearMichael School
Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 ,
044-22350241 044-22350241.

10.ஏதாவது விழாக்காலமா? வீட்டில் ஏதாவது விருந்து பார்ட்டியா? அதில் உணவு மீந்து விட்டதா? அதை குப்பையில் கொட்டாதீர்கள்.நீங்கள் இந்த எண்ணினை 1098 (இந்தியாவில் மட்டும் ) தொடர்பு கொண்டால் அதை வாங்கி பட்டினியால் வாடும் ஏழைகளுக்கு கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள்.

Saturday, 6 August 2016

டெல்டா விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட முஸ்லிம் தம்பதிகள்.. 'தப்பு' என்ன தெரியுமா?


பாரீஸ்: அமெரிக்காவை சேர்ந்த முஸ்லிம் தம்பதிகள் சந்தேகத்திற்கிடமான வகையில் செயல்படுவதாக விமான பணிப் பெண் கூறிய புகாரையடுத்து, அவர்கள் இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரீசிலிருந்து அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்திலுள்ள சின்சின்னாடி விமான நிலையத்திற்கு டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பவிருந்தது.
அப்போது பைசல் அலி மற்றும் அவரது மனைவி நசியா ஆகியோர் தங்களது இருக்கையில் அமர்ந்து செல்போனை பார்த்துக்கொண்டிருந்தனர். நசியா தனது பெற்றோருக்கு, தாங்கள் புறப்பட்ட தகவலை எஸ்எம்எஸ் மூலம் தெரிவித்தார்.
 இறக்கிவிட்டனர்
திடீரென விமான பணிப்பெண், பைலட்டிடம் ஓடிச்சென்று அந்த முஸ்லிம் தம்பதிகள் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து பாரீஸ் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தம்பதிகளை கீழே இறங்க சொல்லியுள்ளனர். ஏன் என்று கேட்டதற்கு, விசாரிக்க வேண்டும் என்று பதில் வந்துள்ளது.
விசாரணை
இதையடுத்து தம்பதிகள் இறங்கியதும் விமானம் கிளம்பிச் சென்றுள்ளது. இதனால் பைசல் அலியும், நசியாவும் அதிர்ச்சியடைந்தனர். அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அவர்கள் தங்களது 10வது திருமண ஆண்டை கொண்டாட பாரீஸ் வந்ததாகவும், தாங்கள் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டு அமெரிக்காவில் வசிப்பவர்கள் என்றும் கூறியுள்ளனர்.
புகார்
அவர்கள் ஆவணங்களை சரிபார்த்த பிறகு, சந்தேகப்படும்படியான நபர்கள் இல்லை என்ற முடிவுக்கு அதிகாரிகள் வந்தனர். இதுகுறித்து அறிந்த முஸ்லிம் அட்வோகசி குரூப், அமெரிக்க போக்குவரத்து துறையிடம் புகார் தெரிவித்துள்ளது.
வருத்தம் தெரிவித்த ஏர்லைன்ஸ்
டெல்டா விமான சேவை நிறுவனம் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளதோடு, தினமும் பல ஆயிரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் தங்கள் விமான சேவை நிறுவனம், ஒருபோதும், மதம், இனம், ஜாதி பார்த்து பயணிகளிடம் பாரபட்சம் காட்டுவதில்லை என்றும், நடந்த தவறு பற்றி விசாரிப்பதாகவும், டிக்கெட் பணத்தை முழுமையாக திருப்பி கொடுத்துவிடுவதாகவும் கூறியுள்ளது.

வியர்த்து கொட்டியதாம்
தம்பதிகள் குறித்து புகார் தெரிவித்த பணிப்பெண் கூறுகையில், நசியா தனது முகத்தை திரையிட்டு மறைத்துக்கொண்டிருந்தார். எஸ்எம்எஸ் அனுப்பினார். ஏசி போடப்பட்டிருந்த நிலையிலும், பைசல் அலியின் உடல் வியர்த்தபடி இருந்தது. அவர்கள் 'அல்லா' என்ற வார்த்தையை உச்சரித்தனர். இதையெல்லாம் இணைத்து பார்த்ததும் பயந்து போய் புகார் கூறிவிட்டேன் என்றார். பாரீசில் சமீபகாலமாக தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், யாரைப் பார்த்தாலும் சந்தேகிக்கும் ஒருவகை 'போஃபியா'வில் மக்கள் சிக்கியுள்ளதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால்.


ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவர் இரத்த ஓட்டம், இருதயம் செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும்?
பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா?
அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா?
சித்த வைத்தியத்தால் முடியும்..!
பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை இல்லை.
பாம்பு கடித்து விட்டால்
இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம் துடிப்பு நின்று விடும் ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும்.
கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள...
"அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும்... எண்ணெய் மறு காதில்
எண்ணெய் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம் மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடம்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம்".
அதன் பிறகு கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3 லிருந்து 5 சொட்டு விடவும்.
மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகிவிடும்.

தேங்காய் பாலைக் கொண்டு எப்படி முடி வளர்ச்சியை அதிகப்படுத்தலாம.்


அழகான கூந்தலை இயற்கையாகவே சிலர் பெற்றிருப்பார்கள். ஆனால் அதனை ஒழுங்காக பராமரிப்பது ஒருகலை. அழகியலில் கூந்தல் அழகும் இடம்பெற்றுள்ளதுதானே. கூந்தல் வளர்ச்சி என்பது எல்லா சமயங்களிலும் ஒரே மாதிரி இருக்காது. குளிர்காலத்தில் வறட்சியினால் கூந்தல் இயற்கையாகவே உதிரும்.
வெயில் காலத்தில் பிசுபிசுப்பு பொடுகு அதிகம் உண்டாகும். மழைகாலத்தில் பூஞ்சை தொற்று அரிப்பு உண்டாகும். ஆனால் இவற்றையெல்லாம் சமாளித்து உங்கள் கூந்தலுக்கு அழகு தர உங்கள் கையில்தான் அல்லது உங்கள் சமையலறையில்தான் உள்ளது. அது தேங்காய் பால்.தேங்காப்பாலில் அதிக புரோட்டின் உள்ளது. கூடவே இரும்பு சத்தும் மெங்கனீசும் உண்டு. கூந்தல் வளர்ச்சிக்கு இது போதாதா? இவை கூந்தலை வளரச் செய்யும் என்பதை விட, கூந்தல் வளர்ச்சியை தூண்டும். பளபளக்க வைக்கும். அதைவிட மிக மென்மையான கூந்தலை தரும்.
தேவையானவை :
தேங்காய் பால் - முடிக்கேற்பமுட்டை - 1ஆலிவ் எண்ணெய் - கால் கப்தேங்காய் எண்ணெய் - கால் கப்(அ) விளக்கெண்ணெய்
முதலில் எடுக்கும் திக்கான தேங்காய்பாலில் முட்டை ஊற்றி அடித்துக் கொள்ளுங்கள். இந்த கலவையில் ஆலிவ் மற்றும் தேங்காய் எண்ணெயை கலந்து தலையில் குறிப்பாக ஸ்கால்ப்பில் தேய்க்கவும்.
வேர்க்கால்களிலிருந்து, நுனி வரை தேய்த்து, 45 நிமிடங்கள் ஊற விடவும். பின்னர் தலையை வெதுவெதுப்பான நீரில் அடர்த்தி குறைவான ஷாம்புவை உபயோகித்து அலசவும்.வாரம் ஒருமுறை செய்து பாருங்கள். முடிஉதிர்தல் நின்று, அடர்த்தியாகவும், மிருதுவாகவும் கூந்தல் வளர்வதை பார்ப்பீர்கள்.

கல்லீரல் கோளாறுகளை போக்கும் பப்பாளி.

     
    உணவில் அதிகமான காரம், எண்ணெய் பொருட்கள், காலம் தவறி சாப்பிடுவது, இரவு நேரத்தில் அதிக நேரம் விழித்திருப்பது போன்றவற்றால் உடல் உஷ்ணமாகி கல்லீரல் கெட்டுப் போகிறது. மது குடிப்பது, நீரில் கலந்து வரும் நச்சுக்கள், கிருமிகள் போன்றவற்றால் ஈரல் கோளாறு ஏற்படுகிறது. எளிதில் கிடைக்க கூடிய சுக்கு, மிளகு, சீரகம், பப்பாளி, வெங்காயம் போன்றவை கல்லீரலை பலப்படுத்தும், நோயை தடுக்கும் மருந்தாக அமைகிறது.
பப்பாளியை பயன்படுத்தி கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பப்பாளி, சீரகம். பப்பாளி பழத்தை பசையாக அரைத்து, 2 ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகப்பொடி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வாரம் ஒருமுறை எடுத்து கொண்டால் கல்லீரல் பாதிப்பது தடுக்கப்படும். மஞ்சள் காமாலையின் அளவு குறையும்.
தொற்றினால் வரும் மஞ்சள் காமாலைக்கு இது மருந்தாகிறது. ஈரல் வீக்கத்தை வற்றிப்போக செய்கிறது. கல்லீரல் ஈரல் பலப்படுவதுடன் நன்றாக செயல்படும். பப்பாளியில் உள்ள வேதிப்பொருள், உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. வெங்காயத்தை கொண்டு கல்லீரலில் ஏற்படும் கொழுப்பை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். சின்ன வெங்காயத்தை தோல்நீக்கி பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும்.
இதனுடன் கால் ஸ்பூன் மிளகுப் பொடி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்தால் கல்லீரலில் உள்ள கொழுப்பு குறையும். இந்த மருந்தில் உப்பு, சர்க்கரை சேர்க்க கூடாது. ரசாயன மருந்துகளால் கல்லீரல் கெட்டு மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. ஈரலை பாதுகாக்கும் மருந்தாக வெங்காயம், மிளகு விளங்குகிறது.
நாவல் பழத்தை பயன்படுத்தி கல்லீரல் வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நாவல்பழம், சுக்குப்பொடி. நாவல் பழத்தின் சதை பகுதியை எடுக்கவும். இதனுடன், கால் ஸ்பூன் சுக்குப்பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி ஒரு மாதம் குடித்து வந்தால், கல்லீரல் வீக்கம் குறைய ஆரம்பிக்கும்.
ஈரலில் வீக்கம் ஏற்பட்டால், வயிறு கனத்து போகும். உடல் சிறுத்து கை கால்கள் மெலிந்து காணப்படும். முகம் ஒட்டிப்போகும். வயிறு, காலில் வீக்கம் ஏற்பட்டு பசியின்மை இருக்கும். இந்நிலையில், கல்லீரல் வீக்கத்துக்கு நாவல் பழம் அற்புத மருந்தாகிது. கல்லீரல் பிரச்னைகளை தவிர்க்க அசைவ உணவுகள், காரம் ஆகியவற்றை அளவுடன் எடுத்துக்கொள்வது அவசியம்.

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்...!


பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:-Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828
மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599
வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம்ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424
ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்:  044-25353999 / 90031 61710 / 99625 00500
ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்—044-24749002 / 26744445
சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற     95000 99100 ( SMS )
மனிதஉரிமைகள் ஆணையம் —   044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்—    09383337639
போலீஸ் SMS :-   9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—     9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : —   98400 00103
வங்கித் திருட்டு உதவிக்கு — 9840814100
வன்கொடுமை, பாலியல் ரீதியாக —044-28551155
பெண்களுக்கான உதவி : ——    044-23452365
தமிழ்நாடு மகளிர் ஆணையம் —044-25264568
விலங்குகள் பாதுகாப்பு — 044 – 22354959 / 22300666
போலீஸ் : — 100
தீயணைப்புத்துறை:—–101
ஆம்புலன்ஸ் : ——   102, 108
போக்குவரத்து விதிமீறல—       103
விபத்து :—       100, 103
பெண்களுக்கான அவசர உதவி : —  1091
குழந்தைகளுக்கானஅவசர உதவி :     1098
அவசர காலம் மற்றும் விபத்து : —  1099
முதியோர்களுக்கான அவசர உதவி:—     1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி:         1033
கடலோர பகுதி அவசர உதவி : —      1093
ரத்த வங்கி அவசர உதவி : —     1910
கண் வங்கி அவசர உதவி : —    1919
நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.
நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.  –

Friday, 5 August 2016

கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய வைட்டமின் உணவுகள்.


          கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள்.  வைட்டமின் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் மிகவும் இன்றியமையாதது. என்ன தான் மருத்துவர்கள் வைட்டமின் மாத்திரைகளைக் கொடுத்தாலும், கர்ப்பிணிகள் அளவுக்கு அதிகமான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. அதற்கு பதிலாக வைட்டமின்கள் அதிகம் நிறைந்த உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் கர்ப்பிணிகள் 5 வகையான வைட்டமின்களை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் குழந்தைகளில் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் ஏ, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் உடலில் உறிஞ்சுவதற்கு தேவையான வைட்டமின் டி, குழந்தையின் உடலில் இரத்த சிவப்பணுக்கள் மற்றும் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு வைட்டமின் ஈ மற்றும் கர்ப்பிணிகளுக்கு இரத்த சோகை, குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தை, குறைபிரசவம் போன்றவற்றை தவிர்க்க வைட்டமின் கே போன்றவை குறிப்பிடத்தக்கவை. சரி, இப்போது இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவுப்பொருட்களை தெளிவாக கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை தினந்தோறும் சாப்பிட்டு வந்து, நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுங்கள்.
பூசணிக்காயை அளவான காரத்தில் சமைத்து, சாப்பிட்டு வந்தால், குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
வாரத்திற்கு ஒரு முறை முட்டையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால், கருவிற்கு நல்ல அளவில் வைட்டமின் ஏ கிடைக்கும்.
கர்ப்பிணிகள் ஸ்நாக்ஸாக கேரட்டை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு குடித்தோ வருவது நல்லது.
ஆட்டு ஈரலை நன்கு வேக வைத்து, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிட்டு வருவது நல்லது. ஏனெனில் இதிலும் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது.
கர்ப்பிணிகள் அவ்வப்போது ஸ்ட்ராபெர்ரியை மில்க்ஷேக் போன்றோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தாலோ, அதில் உள்ள வைட்டமின் சி சத்தை நன்கு பெறலாம்.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்திருப்பது அனைவருக்கு நன்கு அறிந்த விஷயமே. எனவே தவறாமல் இந்த பழத்தை சாப்பிடுவது குழந்தைக்கு மட்டுமின்றி, தாய்க்கும் நல்லது.
கொய்யாப்பழத்திலும் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு கொய்யாப்பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடும் பழக்கத்தை கொள்ள வேண்டும்.
பெரும்பாலான உணவுகளில் சேர்க்கப்படும் தக்காளியை, கர்ப்பிணிகள் தூக்கி எறியக்கூடாது. ஏனெனில் அதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.
சிலருக்கு குடைமிளகாய் மிகவும் பிடிக்கும். அவ்வாறு குடைமிளகாய் சாப்பிடுவதாக இருந்தால், சிவப்பு நிற குடைமிளகாயை வாங்கி சாப்பிடுங்கள்.
முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே கர்ப்பிணிகள் முட்டையை நன்கு வேக வைத்து, மஞ்சள் கருவை சாப்பிடுவது, குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கர்ப்பிணிகள் அதிகப்படியான இறைச்சியை சாப்பிடக்கூடாது. எனவே மாதத்திற்கு ஒரு முறை இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிடுவது, உடலில் வைட்டமின் டி சத்தை அதிகரிக்கும்.
மத்தி மீன்களில் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. இருப்பினும் அதில் பாதரசம் அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் அளவாக சாப்பிட வேண்டும்.
கானாங்கெழுத்தி மீன், உடலுக்கு மிகவும் நல்லது. எனவே கர்ப்பிணிகள் அந்த மீனை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவது, வைட்டமின் டி சத்தை அதிகரிக்கும்.
கர்ப்பிணிகள் ஸ்நாக்ஸ் நேரத்தில் நட்ஸ்களை சாப்பிடுவது, உடலில் வைட்டமின் ஈ சத்தை அதிகரித்து, குழந்தையையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
சாதாரண எண்ணெயைக் கொண்டு சமைத்திருந்தால், இனிமேல் ஆலிவ் ஆயிலுக்கு மாறுங்கள். ஏனெனில் ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஈ சத்து வளமான அளவில் உள்ளது.
வெஜிடேபிள் ஆயிலும் கர்ப்பிணிகளுக்கு மிகச்சிறந்த எண்ணெயாகும். இருப்பினும் இதனை அளவாக உட்கொள்வது சிறந்தது.
கீரைகள் எப்போதுமே உடலுக்கு நல்லது. அதிலும் பசலைக்கீரை என்றால் சொல்லவா வேண்டும். இருப்பினும் இந்த கீரையை மாதத்திற்கு ஒருமுறை சாப்பிடுவது நல்லது. இதனால் நல்ல அளவில் வைட்டமின் கே சத்து கிடைக்கும்.
கர்ப்பிணிகள் உணவில் உலர்ந்த பருப்புக்களையும் அவ்வப்போது சேர்த்துக் கொண்டால், வைட்டமின் கே சத்து கிடைக்கும். முக்கியமாக இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.
கர்ப்பமாக இருக்கும் போது காலையில் ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வேண்டிய வைட்டமின் கே சத்து கிடைக்கும்.
உலர்ந்த அத்திப்பழம், திராட்சை, ப்ளம்ஸ் போன்றவற்றை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், வைட்டமின் கே சத்து கிடைத்து, தாய், சேய் இருவரும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

முஸ்லிம்கள் பலர் மதரஸாக்களை நிறுவி கல்விப் பணி ஆற்றி வந்ததால் , மதராஸே என்று அக்காலத்தில் சென்னை அழைக்கப்பட்டது..!! சென்னை என்று எப்படி மாறியது..?




சென்னை
சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.
மதராஸ்
முஸ்லிம்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை மதரஸாக்களை நிறுவி கல்விப் பணி ஆற்றி வந்ததால் , மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.
உலகறிய மதராஸ் என்றும் தமிழர்களை மதராஸிகள் என்றும் இன்றும் அழைத்து வருகின்றனர். இவ்வளவு பிரபலமான பெயரை மாற்றி விட்டு இந்த நாட்டை அந்நியனுக்கு பணத்துக்கு விற்ற ஒருவரின் பெயரை கலைஞர் வலிந்து வைத்தது ஏனோ? ஒரு கால் இவரும் தெலுங்கர்: அவரும் தெலுங்கர். இனப் பற்று காரணமாக இருக்குமோ?

ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்க அணியில் வாள் சண்டை வீராங்கனை இப்திஹாஜ் முஹம்மது ஹிஜாபுடன் பங்கேற்றுள்ளார்.


ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்க அணியில் வாள் சண்டை வீராங்கனை இப்திஹாஜ் முஹம்மது ஹிஜாபுடன் பங்கேற்றுள்ளார்.
இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் ஹிஜாப் அணிந்த முதல் அமெரிக்கர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

2016 ஹஜ் புனித பயணம்: டெல்லியிருந்து 340 பேர் கொண்ட முதல் குழு மெக்கா புறப்பட்டு சென்றது!


டெல்லியில் இருந்து சவுதிக்கு வந்த முதல் ஹஜ் யாத்திரைகள் குழுவைச் சேர்ந்த இந்தியர்களை மத்திய அமைச்சர்  விகே சிங் 
பூ கொத்து கொடுத்து வரவேற்ற காட்சி:




ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் 340 பேர் கொண்ட முதல் குழு தலைநகர் புதுடெல்லியில் இருந்து சவுதி அரேபியாவின் மெக்கா நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளது.
புதுடெல்லி:
இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 
வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயல்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டு நாடு முழுவதும் இருந்து 1,00,020 பேருக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள, ஹஜ் கமிட்டி மூலம் ஏற்பாடு செய்யப்படுவார்கள். இதுமட்டுமில்லாமல், 36 ஆயிரம் பேர் தனியார் மூலம் செல்கிறார்கள். தமிழகத்தில் இருந்து 2,520-க்கும் மேற்பட்டோர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். டெல்லியில் இருந்து 12 ஆயிரத்து 500 பக்தர்கள் செல்கிறார்கள்.
இந்நிலையில், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் 340 பேர் கொண்ட முதல் குழு தலைநகர் புதுடெல்லியில் இருந்து சவுதி அரேபியாவின் மெக்கா நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளது.
இதற்கான வழி அனுப்பும் நிகழ்ச்சி புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி கலந்து கொண்டு, ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா, இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் சவுத்திரி மெஹ்பூப் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Thursday, 4 August 2016

வாய் துர் நாற்றம் நீங்க வழிமுறைகள்.


சிலர் பேச வாயைத் திறந்தாலே குப்பென்று துர் நாற்றம் நம் முகத்தில் அடிக்கும், மூக்கைத் துளைக்கும். அவரவர் வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும். நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது.
சாதாரணமாக வாயிலுள்ள நுண்கிருமிகளால் வெளியேறும் கழிவுகளில் ஆவியாகக் கூடிய கந்தக (Sulfur) கூட்டுப் பொருட்கள் உள்ளன. அழுகிய முட்டையிலிருந்து வெளியேறும் Hydrogen sulfide, குப்பைக் கிடன்கிலிருந்து வரும் Methyl mercaptan, கடல் புறங்களிலிருந்து வெளியாகும் Dimethyl sulfide ஆகிய கழிவுகள் வாயிலுள்ள நுண் கிருமிகளிலிருந்து வெளியேறுகின்றன.
இவைகள் Volatile Sulfur Compound (VSC) என்றழைக்கபடுகின்றன.
வாயிலிருக்கும் நுண்கிருமிகளால் வெளியேறும் இன்னும் வேறு பல கழிவுகளும் துர் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
Cadaverine – இறந்த உடலிலிருந்து வெளியேறும் நாற்றம்,
Putrescine – அழுகும் இறைச்சியிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Skatole – மனிதக் கழிவிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Isovaleric acid – வியர்க்கும் பாதத்திலிருந்து ஏற்படும் நாற்றம்.
கிருமிகள் பெருகுவதற்கு தேவையான உணவு நாம் உண்ணும் மீன், இறைச்சி, முட்டை, பால் போன்ற புரத உணவிலிருந்தும், உமிழ் நீர், வாயின் உட்புறத்தில் கழியும் திசுக்களிலிருந்தும் கிடைக்கிறது.
வாயை, சாப்பிட்ட ஒவ்வொரு முறையும் நன்றாக கொப்பளிக்காததால் உணவுப் பொருட்கள் வெண்மையான காரையாக பற்களின் இடுக்குகளில், பற்களின் மேல், ஈறுகளுக்கு உட்புறம் மற்றும் நாக்கின் பிற்பகுதியில் மாவு போன்ற வெண் படலமாக படிந்து விடுகிறது. வெண்படிமம் 0.1 – 0.2 மி.மீ அளவில் இருந்தாலும் கிருமிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் பெருகி கழிவுகளை வெளியேற்றுகின்றன.
பற்கள் கட்டியிருந்தால், அதற்கும், வாய்க்கு இடையிலும் உணவுப் பொருட்கள் தங்கி கிருமிகள் வளர ஏதுவாகிறது. வாயிலும், நாக்கிலும், பற்களின் இடுக்குகளிலும் உள்ள இடத்தில் குடியேறி கழிவுகளை வெளியேற்றும் கிருமிகளுக்கும், பிற கிருமிகளுக்கும் நிரந்தர போட்டி நடந்து கொண்டேயிருக்கிறது. இக்கிருமிகளும், அதன் கழிவுகளும் எல்லோரின் வாயிலும் இருக்கின்றன.
வாயையும், பற்களையும் சுத்தமாக வைத்திருப்பவர்கள் பலருக்கு நாற்றம் இல்லாமல் இருக்கிறது. வாயையும், பற்களையும் சரியாக பராமரிக்காதவர்களுக்கு நாற்றம் மிகுந்து இருக்கிறது.
அடுத்து,  வாயின் உட்பகுதியில் ஈறு நோய் (Gum disease – Chronic Periodontitis) பாதிப்புள்ளவர்களுக்கும் வாயில் துர் நாற்றம் ஏற்படலாம். குறிப்பாக நாக்கின் பின் புறத்திற்கு அருகிலுள்ள பற்கள் மற்றும் ஈற்றின் இடைவெளிகளில் உணவுப் பொருட்களின் படிமம் தேங்குகிறது.
இந்த இடங்களிலும் நுண் கிருமிகள் தங்கி பற்களைச் சுற்றியுள்ள எலும்புப் பகுதியை அரித்து, பற்களில் குழியை (Periodontal pockets) ஏற்படுத்துகிறது. இந்த குழிகளிலும் மேலும் உணவுப் பொருட்களும், கிருமிகளும் தங்கி, கழிவுப் பொருட்களை உற்பத்தி செய்து வாய் துர் நாற்றத்தை அதிகரிக்கிறது.
வாய் துர் நாற்றத்திற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது?
1. நாக்கை சுத்தம் செய்வது மிகவும் முதன்மையானதும் அவசியமானதுமாகும். நாக்கின் முன் பாதி சாப்பிடும் போதும், பேசும் போதும் அடிக்கடி வாயின் மேல்புறத்தில் (Hard palate) உராய்வதால் இயற்கையாகவே சுத்தமாகிறது.
ஆனால் நாக்கின் பின் பகுதி மிருதுவான Soft palate ல் உராய்வதால் போதுமான அளவில் சுத்தமாவதில்லை.  வாயில் உற்பத்தியாகும் கிருமிகளையும், கந்தக காம்பௌன்ட் கழிவுகளையும் நீக்கக் கூடிய குளோரின் டை ஆக்ஸைடு அல்லது Cetylpyridinium குளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்த வேண்டும்.
Tooth brush மற்றும் பிளாஸ்டிக் ஸ்பூன் அல்லது Tooth scaraper உபயோகித்து நாக்கின் பின்பகுதியையும், பற்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
2. முறையான இடைவெளியில் பல் மருத்துவரிடம் ஈறு பரிசோதனையும், பற்களை சுத்தம் செய்வதும் மிக அவசியம். பற்களின் நிலைமையும், ஈறு நன்றாக வீக்கமின்றி இருக்கிறதா என்பதையும் பல் மருத்துவரிடம் முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
பற்களில் காரை படிந்தும், எலும்பு தேய்ந்து பற்குழிகள் ஏற்பட்டிருந்தாலும் தகுந்த சிகிட்சை அளித்து பற்களைக் காப்பாற்றி, துர் நாற்றத்தையும் தவிர்க்க உதவுவார்.
3. புரதச்சத்துள்ள ஆகாரத்தை குறைத்தும், அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துள்ள உணவைச் சாப்பிட்டு வந்தால், வாயில் நுண் கிருமிகள் வளர வாய்ப்பிருக்காது. இத்துடன் புரதச் சத்துள்ள உணவைச் சாப்பிட்ட போது முறையாக நாக்கின் பின் பகுதியை சுரண்டி வழித்தும், பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள புரத உணவுத் துகள்களை Floss உபயோகித்து நீக்கியும், வாய் கொப்பளிக்கும் கிருமி நாசினி மருந்து (Chlorhexidine, Povidone 2% Gargle) திரவத்தால் வாய் கொப்பளித்தும் வாய் துர் நாற்றத்தைப் போக்கலாம்
4. வாயில் எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரவில் தூங்கும் போது உமிழ் நீர் சுரப்பது குறைந்து, தூங்கி எழும் போது காலையிலும், நீண்ட நேரம் பேசினாலும், பேசிய பின்னும் ஈரப்பதமின்றி வாய் உலர்ந்து விடும்.
வாயில் ஈரப்பதம் இல்லையென்றால் துர் நாற்றம் வீசும். இதை தவிர்க்க தினமும் நிறைய நீர் குடிக்க வேண்டும். இது உமிழ் நீர் சுரக்க உதவி, வாய் ஈரப்பதத்துடன் இருக்கும். அடிக்கடி நல்ல நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் ஈரப்பதத்துடன், வாயிலுள்ள கிருமிகளையும் அதன் கழிவுகளையும் அகற்றலாம்.
சர்க்கரையில்லாத மிட்டாய்கள் சுவைப்பதாலும் வாயிலுள்ள ஈரப்பதத்தை அதிகமாக்கி துர் நாற்றத்தை போக்கலாம்.
5. கிருமி நாசினியாக வாய் கொப்பளிக்கும் மருந்தையும் (Mouth wash) பயன்படுத்த வேண்டும்.
வாய் கொப்பளிக்கும் மருந்து
1. நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையது,
2. வாய் நாற்றம் தரும் கந்தக கூட்டுப் பொருட்களை சமன் செய்வது என இரண்டு வகைப்படும்.  Listerine, Cetylpyridinium Chloride mouth wash ஆகிய இரண்டும் நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது. Zinc ions உள்ள Mouth wash வாயில் நுண் கிருமிகளால் உற்பத்தியாகும் கந்தகம் கலந்த கழிவுப் பொருட்களை சமன் படுத்தும் தன்மையுடையது. இரண்டு தன்மையும் உடைய Chlorine dioxide அல்லது Sodium chlorite கலந்த Mouth wash ம் உபயோகிக்கலாம்.
சில பற்கள் அல்லது முழுவதும் (Full denture) பல் கட்டியிருந்தால், சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் அவைகளையும் கழற்றி நன்றாக கழுவிய பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
இரவில் தூங்கும் போது பல் செட்டை கழற்றி, பற்பசை கொண்டு பிரஷ்சால் செட்டின் உட்புறமும் வெளியிலும் தேய்த்து தனியாக ஒரு கப்பில் வைத்து விட வேண்டும்.
பல் செட்டில் இயற்கையாகவே நுண் துளைகள் இருக்கும். எனவே துளைகளுக்குள் சென்று சுத்தம் செய்யக் கூடிய கிருமி நாசினி யை உபயோகித்து இரண்டு வேளையும் பல் செட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
மேற் கூறிய எல்லா முறைகளையும் பின் பற்றினால்தான் வாய் துர் நாற்றத்தை முழுமையாக நீக்கலாம்.

சவூதி மன்னர் சல்மான் உத்தரவு.....!!

சவூதி மன்னர் சல்மான் உத்தரவு.....!!

சவூதி அரேபியாவிலுள்ள சில நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் இந்தியர்கள் ஆவர்.
இதுதொடர்பாக சவூதி அரேபிய மன்னர் சல்மான் வெளியிட்டுள்ள உத்தரவில்....
1. வேலையை இழந்த ஆயிரக்கணக்கானோரின் சம்பள பாக்கியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனே ஒப்படைக்க வேண்டும்.
2. வேலையை இழந்துள்ள தொழிலாளர்கள் வேறு நிறுவனங்களில் பணிப்புரிய விரும்பினால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
3. வேலையை இழந்தவர்கள் சொந்த நாட்டிற்கு செல்லும் வரை அவர்களின் இருப்பிடம், உணவு மற்றும் மருத்துவ செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும்.
4. வேலையை இழந்தவர்கள் தாயகம் திரும்ப Exit விசா அடித்து தரப்படும்.
5. வேலையை இழந்தவர்கள் தாயகம் திரும்புவதற்கு உரிய செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும்.
6. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சம்பள பாக்கி வைத்திருந்தால் தொழிலாளர் அமைச்சகத்தில் பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு.
மேற்கண்டவாறு மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Wednesday, 3 August 2016

துபாயில் புதிதாக 23 வகையான அபராதங்கள் அறிமுகம்:

துபாய்:

    சிங்கப்பூரை ஆங்கிலத்தில் FINE CITY என இரட்டை அர்த்தத்தில் (HOMOPHONE) அழைப்பார்கள், அதாவது அழகிய மாநகர் என்றும் அபராதங்கள் அதிகம் விதிக்கப்படும் நகரம் என்றும் பொருள்படும். இந்த சொல்லாடலை தமிழ் இலக்கணம் இரட்டை கிளவி என்று நமக்கு சொல்லித் தருகிறது. நிற்க
    அழகிய, நவீன கட்டிடங்களுக்கும் இதர பிரமாண்ட கட்டுமானங்களுக்கும் பெயர் பெற்ற துபை மாநகரின், துபை நிலத்துறையின் (DUBAI LAND DEPARTMENT) மனைகள் ஒழுங்குமுறை அமைப்பின் (REAL ESTATE REGULATORY AGENCY - RERA) வழிகாட்டலின் கீழ் இயங்கும் கட்டிட உரிமையாளர்கள் சங்கம் (OWNERS ASSOCIATION or MASTER DEVELOPERS) 'குடியிருப்பு கட்டிடங்கள்' தொடர்பில் குடியிருப்பாளர்களுக்கு 4 பிரிவுகளின் கீழ் 23 வகையான புதிய தண்டங்களையும் மீறல்கள் சரிசெய்யப்பட வேண்டிய கால அளவையும் அறிவித்துள்ளனர்.

பிரிவு 1:
பொது மீறல்கள் என்ற பிரிவின் கீழ் அதிக சத்தம், தொல்லை, ஊழியரை அவமதித்தல், முறையில்லா வளர்ப்பு பிராணி கையாளுதல், அபாயகரமான நடவடிக்கைகள், தவறான குப்பை மேலாண்மை, வன்முறை நடவடிக்கைகள், உள்வாடகைக்கு விடுதல், சட்டவிரோதமாக பணியாளர்கள் வைத்திருத்தல், குடியிருப்பு நுழைவு கட்டுப்பாட்டை மீறுதல் ஆகிய குற்றங்களுக்கு திர்ஹம் 500 முதல் 1000 வரை தண்டம் செலுத்த நேரிடும்.
பிரிவு 2:
குடியிருப்பு மற்றும் பொது உபயோகப் பகுதிகளை சேதப்படுத்துதல் மற்றும் தவறாக உபகோகித்தல் என்ற பிரிவின் கீழ் பொழுதுபோக்கு இடங்களான விளையாட்டு மைதானங்கள், நீர்நிலைகள், பூங்காக்கள், பிரத்தியேக விளையாட்டுக் களங்கள், நீச்சல் குளங்கள், செடி கொடிகள், வடிகால் அமைப்புகள், டெலிபோன் அறைகள் மற்றும் கட்டிட அமைப்புகளுக்கு சேதம் விளைவித்தால் ஒவ்வொன்றிற்கும் 500 திர்ஹம் தண்டம் செலுத்த வேண்டும்.
பிரிவு 3:
வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து சட்டங்களை மீறுதல் என்ற பகுதியின் கீழ் வாகன நிறுத்த விதிகளை மீறுதல், சாலை பாதுகாப்பு மீறல் மற்றும் சாலையை தவறாக பயன்படுத்துதல், வணிகரீதியான வாகனங்களை தவறாக உபயோகப்படத்தினால் அரசின் சாலை போக்குவரத்து நிர்வாக அதிகாரிகள் (LOCAL AUTHORITIES) அழைக்கப்பட்டு அவர்களால் அபராதம் விதிக்கப்படும்.
பிரிவு 4:
   வீட்டை கேவலமாக பராமரித்தல் மற்றும் தோற்றமுறச்செய்தல் என்ற பிரிவின் கீழ் தோட்டங்கள் மற்றும் நிலங்களை மோசமாக பராமரித்தல், வீட்டை கேவலமான முறையில் பராமரித்தல், அனுமதியில்லாமல் வெளிப்புறங்களை ஆக்கிரமித்தல் மற்றும் வீட்டமைப்பில் மாறுதல் செய்தல், அனுமதியில்லா விளம்பர நடவடிக்கைகள், போர்டிகோ மற்றும் பால்கனிகளை தவறாக உபயோகப்படுத்தல், முறையான பூச்சி கட்டுப்பாடு (PERIODIC PEST CONTROL) செய்யாதிருத்தல் (PEST CONTROLக்கு மட்டும் அரசின் உள்ளாட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்படும்) ஆகிய மீறல்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: Emirates24×7

சவுதியில் வேலை இழந்து தவிக்கும் இந்தியர்களுடன் முதல் விமானம் இன்று இந்தியாவுக்கு செல்கிறது

சவுதி:

        இந்த தகவலை சவுதியில் உள்ள மத்திய அமைச்சர்  விகே சிங் சவுதி அமைச்சருடன் நடத்தி சந்திப்புக்கு பின் தெரிவித்தார்.
   நாளை மத்தியானம்  ஏர் இந்தியா ஹஜ்ஜில் இருந்து புறப்படும் என்று தெரிகிறது.
    ஆனால் ஹஜ் பயணிகள் பயன்படுத்தும்
விமானம் மற்ற பயணிகள் அனுமதிக்க கூடாது என்று சட்டம் உள்ளதால். இந்தய விமான சேவை பிரவின் சிறப்பு அனுமதி பெற்று இவர்கள் அழைத்து வரப்படுவார்கள்.
    தொழிலாளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் அனைத்து சவுதி இந்திய தூதரகம் மூலம் பெற்று தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
      இந்தய மீடியாக்கள் இந்த  சிறிய பிரச்சினை பெருதுபடுத்தி காட்டியதாக
சவுதி அமைச்சர் விகே சிங்கிடம் வருத்தம் தெரிவித்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

துபாய் விமான விபத்தில் மக்களை காப்பாற்றி தன் உயிரை தியாகம் செய்த தீயணைப்பு வீரர் ஜாசிம்!


கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் நேரப்படி இன்று மதியம் 12:15 மணியளவில் துபாய் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் EK251 என்று விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தரையிறக்கப்பட்டது. இதில் முன்புற சக்கரத்தில் பழுது ஏற்பட்டதால் விமானம் விபத்துக்குள்ளானதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதில் பயணித்த 275 பயணிகள் பத்திரமாக மீட்கப்ட்டனர்.
இருப்பினும் இந்த மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு மக்களை காப்பாற்றிய ராஸ் அல் கைமா வை சேர்ந்த தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முஹம்மது ஹசன் தனது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

எமிரேட்ஸ் விமான விபத்தில் பாஸ்போர்டை இழந்தவர்களுக்கு உடனடியாக புதிய பாஸ்போர்ட்! இந்திய தூதரகம் ஏற்பாடு!


துபாய் : விபத்துக்குள்ளான எமிரேட்ஸ் ஏகே521 விமானத்தில் 282 விமானிகளும் 18 ஊழியர்கள் இருந்ததாகவும், இவர்களில் 226 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இது குறித்து உடனடியாக உதவும் நடவடிக்கையில் இறங்கிய துபாய் இந்திய துணை தூதரகம் அதன் சார்பில் துணை தூதர் அனுராக் பூசன் தலைமையில் தூதரக அதிகாரிகள் விமான விபத்திலிருந்து காப்பற்றப்பட்ட இந்தியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களை மற்றும் உரிய அதிகாரிகளையும் சந்தித்தனர்.
அதோடு அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்ய தயாராக இருப்பாக தெரிவித்ததோடு விபத்தில் பாஸ்போர்ட்டை இழந்த இந்தியர்களுக்கு உடனடியாக புதிய பாஸ்போர்ட் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு மிக சிறப்பாக செயல்பட்டு விமான குழுவினர் பயணிகளை பத்திரமாக காப்பற்றியதோடு அவர்களுக்கு உறுதுணையாக இருந்த எமிரேட்ஸ் விமான நிறுவனம் மற்றும் விமான நிலையத்தாருக்கும் இந்திய துணை தூதரகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த பயணிகள் குறித்த தகவல்களை பெற அவசர கால எண்கள் எமிரேட்ஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.

சட்டக்கல்லூரியில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 24 முஸ்லிம் மாணவர்கள் தேர்வு......!!


      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தீவிர போராட்டத்தின் வாயிலாக கிடைக்கப்பெற்ற 3.5 சதவீத இட ஒதுக்கீட்டினால் இந்த கல்வியாண்டில் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான முதல் கலந்தாய்வில் 24 முஸ்லிம் மாணவர்களுக்கு  சட்டக்கல்லூரியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அவர்களில் 14 ஆண்கள், 10 பெண்கள்.
நஜ்முதீன், நசீர் ஹூசைன், ஜபருல்லாஹ், ஃபசீலா பாத்திமா, ஜீனத் பாத்திமா, ஷரிபா பானு, சதாம் ஹூசைன், நிஹால் அஹமத், ரியாஸ் கான், சிக்கந்தர்,
யாஸ்மீன், ஷப்னா, கான் சாஹிப், ரஜப் நிஷா, ஷேக் அப்துல்லாஹ், ஷாஜிதா, முஹம்மது பாரூக், அம்மார் பிஸ்மி, அசிதா, ஷகாவுதீன், ஜீனத் சோபியா, அப்துர் ரஹ்மான் தாஹி, ஷேக் அப்துல் வகீல், முஹம்மது அசார்
ஆகியோர் முதல் கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
லட்சக்கணக்கான இஸ்லாமிய குடும்பங்களை திரட்டி  மாநிலம் தழுவிய கும்பகோணம் பேரணி & மாநாடு,  மாநிலம் முழுவதும் தர்ணா போராட்டம், மாநிலம் தழுவிய சிறைநிரப்பும் போராட்டம், சட்டசபை முற்றுகை போராட்ட அறிவிப்பு என்று ஆளும் வர்க்கத்திற்கு தொடர் நெருக்கடியை ஏற்படுத்தி எண்ணற்ற தியாகங்களினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெற்று தந்த இட ஒதுக்கீட்டினால் இஸ்லாமிய சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார ரீதியாக முன்னேறி வருகிறது.

பாக்கெட்டில் வைத்திருந்த 'iphone' வெடித்து வாலிபரின் தொடை பொசுங்கியது!


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் Gareth Clear வயது 36, இவர் தனது இருசக்கர வாகனத்தில் பயணம் சென்றுகொண்டிருந்த போது, தனது பின் பாக்கெட்டில் வைத்திருந்த IPhone 6 மாடல் மொபைல் போன் பொசுங்கியதன் காரணமாக இவரின் பின் தொடையின் தோல் கருகியது.
தனது இருசக்கர வாகணத்தில் பயணம் மேற்கொண்டபோது, எதோ கருகும் வாசனை வந்ததாகவும், அச்சமயம் பின்னால் திரும்பி பார்த்த போது புகை வருவதைக் கண்டதாகவும், உடனே தடுமாறி வாகனத்தை நிறுத்தியுள்ளார் Gareth.
பின்னர், இவர் அணிந்திருந்த அரைக்கால் டிரசவுசர் பாக்கெட்டில் வைத்திருந்த தனது ஐபோன் எரிந்து உருகியுள்ளதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். நொடிப்பொழுதில் இச்சம்பவம் அறங்கேறியதாகவும், அழுத்தம் காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் Gareth தெரிவித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் Gareth, இச்சம்பவம் குறித்து விசாரிப்பதாக ஆப்பிள் நிறுவனம் தனக்கு உறுதி அளித்திருப்பதாகவும்  தெரிவித்தார்

மத்திய அமைச்சர் வி.கே. சிங், சவுதி அரேபியாவில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவ ஜித்தா வந்தடைந்தார்:

ஜித்தா: சவுதி
                    

ஜித்தா வந்தடைந்தார் மத்திய அமைச்சர் வி.கே. சிங்
மத்திய அமைச்சர் வி.கே. சிங், சவுதி அரேபியாவில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவ ஜித்தா வந்தடைந்தார்:
     சவுதியில் பிரச்சினையில் சிக்கியுள்ள 10000-க்கு அதிகமான இந்தியர்கள் தாயகம் திரும்ப சலுகை அடிப்படையில் FINAL EXIT VISA வழங்கவும். மற்றும் விருப்பம் உள்ள நபர்களுக்கு  இலவசமாக புதிய VISA அடித்து
வழங்கவும் இந்திய அரசுக்கு சவுதி அரசு உறுதி அளித்துள்ளது.

சவுதி அரேபியாவில் வேலை இழந்து தவிக்கும் இந்தியர்கள்: தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கை தீவிரம்.

சவுதி:

    சவுதி அரேபியாவில் வேலை இழந்து தவித்து வரும் 10,000 இந்தியர்களை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் சவுதி ஜித்தா வந்தடைந்தார்:
    முன்னதாக இரவு டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சவுதியில் நிலவி வரும் சூழ்நிலையை முழுமையாக ஆராய்ந்து, அதன் பின்னர் இந்தியர்களை மீட்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், இது போன்ற பிரச்சனைகளை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.
     இதிலிருந்து விடுபடுவதற்கு அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள், வெளிநாடுகளில் வேலை செய்பவர்களை முழுமையாக கண்காணித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சர்வதேச அளிவில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததால் சவுதியில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
   இதனால் எண்ணெய் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் பணிபுரிந்த சுமார் 10,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஒரு வேலை உணவு கூட இல்லாத நிலையில் இருக்கும் அவர்களுக்கு சாப்பாடு வழங்கி பாதுகாப்பு வழங்கி வருகிறது அங்குள்ள இந்திய தூதரகம். இந்த நிலையில் தொழிலாளர்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

கத்தார் நாட்டில் பலியான தொழிலாளி; உடலை தாயகம் கொண்டு உதவுமாறு கோரிக்கை:

கத்தார்:

    கத்தார் நாட்டில் விபத்தில் பலியான, கடலூரை சேர்ந்த தொழிலாளியின் உடலை உடனடியாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.
   கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், கடந்த 2015ஆம் ஆண்டு கத்தார் நாட்டிற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். இவர் கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி பணி முடிந்து திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் பலியானார்.
    இந்நிலையில் ராஜாவின் மரணம் குறித்து, அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவித்த தனியார் நிறுவனம் உடலை அனுப்ப 40 நாட்கள் ஆகும் என கூறியது. இந்நிலையில் ராஜாவின் உடலை உடனடியாக கொண்டு வர கோரி, கடலூர் மாவட்ட ஆட்சியரிடம்  மனு கொடுத்துள்ளனர்:

சவுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார் தமிழக முதல்வர்:

சவுதி:தமிழகம்

    சவுதி அரேபியாவில் பணிபுரிந்த போது, முதுகு தண்டுவடத்தில் பலத்த காயமடைந்த தாட்சாயிணிக்கு, முதலமைச்சர் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
       சென்னை தண்டையார்பேட்டையைச் தாட்சாயிணி என்பவர் ஏழ்மை காரணமாக சவுதி அரேபியாவுக்கு பணிக்கு சென்றார். அங்கு பணிபுரிந்த இடத்தில் ஏற்பட்ட கொடுமையிலிருந்து தப்பிப்பதற்காக,  வீட்டு பால்கனியில் இருந்து குதித்ததில், அவரது முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சவுதி அரேபிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, தன்னார்வத் தொண்டு நிறுவனம் மீட்டு இந்தியா அனுப்பி வைத்தது.
    இந்நிலையில் தாட்சாயிணியின் குடும்ப சூழ்நிலை, உடல்நிலையை கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கிடவும், உயர்தர சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டார். இன்று தலைமைச் செயலகத்தில் நடந்த சந்திப்பில்,10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தாட்சாயிணி மற்றும் அவரது தாயாரிடம் முதலமைச்சர் வழங்கினார்.

Tuesday, 2 August 2016

வெளிநாட்டிலிருந்து LCD / LED டிவி எடுத்து வந்தால் வரி எவ்வளவு :

வளைகுடா:
     வெளிநாட்டிலிருந்து LCD / LED டிவி எடுத்து வந்தால் வரி எவ்வளவு :

   LCD  / LED TV - க்கான கஸ்டம்ஸின் வரிவிதிப்பு லிஸ்ட்2016/Indian Airport Customs Duty on LCD/LED Televisions 2016:
    வெளிநாடுகளில் பணிபுரிந்து விட்டு தாயகம் திரும்புவோர் கையோடு LCD / LED தொலைக்காட்சிப் பெட்டிகள் எடுத்து வந்தால் இந்தியாவில் சுங்க வரி எவ்வளவு விதிக்கப்படும் என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். முன்பெல்லாம் 32 இன்ச்சிற்குக் குறைவாக உள்ள டிவிக்கள் எடுத்து வந்தால் வரி இன்றி அனுமதித்து வந்தார்கள்.
      ஆனால் கடந்த 26, ஆகஸ்ட் 2013 முதல் இந்தியாவில் அனைத்து வகையான LCD / LED டிவிக்களுக்கும் கட்டாய வரி விதிப்பு அமல் படுத்தப்பட்டிருக்கிறது.
    அதன்படி வழிகாட்டுதல் மதிப்பிலிருந்து 36.05% வரியாக விதிக்கப்படும். வழிகாட்டுதல் மதிப்பு என்பது அரசாங்கம் எந்தெந்த பிராண்டுகளுக்கு எவ்வளவு என்று ஒரு மதிப்பினை தயாரித்து வைத்துள்ளது. அதன்படியே இந்த வரி விதிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் வசித்து விட்டுத் திரும்புகிறவர்களுக்கு வரி விதிப்பில் குறிப்பிட்ட தொகை தள்ளுபடி என்று ஒரு விதி இருக்கிறது. ஆனால் இதில் LCD/LED டிவிக்கள் சேராது என்பது புதிய விதிமுறை.
அதன்படி எவ்வளவு சிறிய அளவிலான LCD/LED டிவிக்களை எடுத்து வந்தாலும் அதற்கு வரி உண்டு:
    நீங்கள் எந்தத் தொகைக்கு அந்த டிவியை வெளிநாட்டில் வாங்கியிருந்தாலும் சரி.. வரி விதிப்பு இந்திய அரசாங்க வழிகாட்டுதல் மதிப்பின்படி தான் விதிக்கப்படும். இதில் இல்லாத பிராண்டுகளை எடுத்து வந்தால் இதில் உள்ள குறைந்தபட்ச வரி கட்டாயம் உண்டு. அதைத் தவிர சம்பந்தப்பட்ட சுங்க அதிகாரியின் மதிப்பீட்டின் படி கூடுதலாகவும் வசூல் செய்யும் அதிகாரம் அவருக்குண்டு.
     எடுத்து வரும் டிவியின் அளவு, மாடல் ஆகியவற்றை கஸ்டம்ஸ் படிவத்தில் (Customs Declaration Form) முழுமையாகப் பூர்த்தி செய்து, “வரி செலுத்த வேண்டியிருகிறது” என்று கூறி கஸ்டம்ஸ் வரி விதிப்பு சிவப்புக் கதவு வழியாகச் சென்று அதிகாரிகளிடம் காட்டி வரியைக் கட்டிச் செல்ல வேண்டும். அப்படி இல்லாமல் பச்சைக் கதவு வழியே சென்று சுங்க அதிகாரிகளிடம் பிடிபட்டால் வரி விதிப்பிற்கு மேல் தண்டனைக் கட்டணமும் உண்டு.

ஜித்தாவில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சவுதி வேலையின்றி பரிதவிக்கும் இந்தியர்களின் பற்றிய செய்தி அறிந்ததும்உதவி வரும் தமிழ் சகோதர்கள்:

சவுதி:

சவுதி வேலையின்றி பரிதவிக்கும் இந்தியர்களின் பற்றிய செய்தி அறிந்ததும்
உதவி வரும் தமிழ் சகோதர்கள்:
     சவுதி வேலையின்றி பரிதவிக்கும் இந்தியர்களின் பற்றிய செய்தி அறிந்ததும்
உணவின்றி  கஷ்டப்படும் சகோதரர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலத்தின் சார்பாக ஒரு நாளைக்கு  850 பாக்கெட் குப்பூஸ் வீதம்  கடந்த இரண்டு நாட்களாக இந்தியன் எம்பஸி உதவியுடன் கொடுத்து வருகிறார்கள்.
   இன்று  சவூதி ஓஜர் கம்பெனியில் உணவு பொருள்கள் கொடுத்த போது எடுத்த படம்.இதே போல் ஐந்து கேம்புகளில் கிட்டத்தட்ட  3100 க்கும் அதிகமான  இந்தியர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, 1 August 2016

மரண அறிவிப்பு :

மரண அறிவிப்பு :

நமது ஊரை சேர்ந்த நூருதீன் அவர்களின் பேரனும் மரக்காவலைசை ராஜா முகம்மது அவர்களின் மகனும் ஆகிய சேக் என்பவர் 31/07/2016 இன்று மரணமடைந்துவிட்டார் .
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்).

மரண அறிவிப்பு:

மரண அறிவிப்பு:

அஸ்ஸலாமு அலைக்கும்.
நம் ஊரைச் சேர்ந்த அல்லாப் பிச்சையின் தாயார் தெசினா அம்மாள் (போத்தி வீடு) 01/08/2016 இன்று  மரணமடைந்து விட்டார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்).

போன் அதிகமாகச் சூடாகுதே, ஏன்'னு தெரியுமா?


பொதுவாகவே மொபைல் போன்களை அதிகமாகப் பயன்படுத்தும் போது கைகள் லேசான சூடாவதை உணரலாம். உண்மையிலேயே மொபைல் போன் சூடாவதைத் தடுக்கவே முடியாது. ஆனால் உங்கள் போன் அதிக சூடானால் நிச்சயம் இது கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனை எனலாம்.
மொபைல் போன் அதிகளவு சூடாகும் போது, கருவியினுள் இருக்கும் பாகங்கள் சீக்கிரம் பழுதாகக்கூடும். கருவி எதனால் சூடாகின்றது என்பதை அறிந்தால், மொபைல் போன் சூடாவதைக் குறைக்க முடியும். கீழ் வரும் ஸ்லைடர்களில் மொபைல் போன் ஏன் சூடாகின்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள்..
இயக்கம் நடைபெறும் போது வெப்பம் உண்டாகும் என்பதை நாம் பள்ளிகளில் இயற்பியல் பாடத்தில் படித்திருப்போம். இதே தான் மொபைல் போன்களிலும் நடைபெறுகின்றது. கருவியினுள் உண்டாகும் வெப்பமும் அதில் பாயும் மின்சாரமும் சீராக இருக்கும். இதனால் அதிகளவு கேமிங் விளையாடும் போது கருவி அதிகளவு சூடாகக்கூடும்.
ஸ்மார்ட்போன்கள் ஏன் சூடாகின்றன
ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் எஸ்ஓசி'கள் கருவிகளில் ஏற்படும் வெப்பத்தைத் தாங்குமளவு வடிவமைக்கப்படும், ஆனால் இவை ஓரளவு வெப்பத்தை மட்டுமே கட்டுப்படுத்தும். ஒரு வேலைக் கருவி அதிகளவு வெப்பமாகும் நிலையில் கருவியின் பிராசஸர் வேகம் குறையும், இதனால் கருவியின் செயல் வேகமும் குறையும். பிரச்சனை ஏற்படுமளவு சூடாகும் போது கருவியின் திரையில் எச்சரிக்கை தகவல் கிடைக்கும்.
அதிக சூடாவது பிரச்சனையே
ஹார்டுவேர் அளவுக்கு மீறிப் பயன்படுத்தும் போது கருவியின் வெப்பம் அதிகரிக்கும். மேலும் கருவியின் சிபியு'வினை அதிகம் பயன்படுத்தும் செயலிகளும் கருவியினை அதிகளவு சூடாக்கும். மல்டி டாஸ்கிங், விட்ஜெட், கனெக்டிவிட்டி போன்றவையும் கருவியை சூடேற்றும்.
காரணம் என்ன
கருவி சூடாவது அதிகளவு பயன்படுத்துவதோடு இதர அம்சங்களும் இருக்கின்றன. நீண்ட நேரம் நேரடியாகச் சூரிய வெப்பத்தின் கீழ் இருக்கும் போதும் கருவியின் வேகம் அதிகரிக்கக்கூடும். இவ்வாறு ஏற்படும் போது கருவியினுள் இருக்கும் வன்பொருள் கோளாறு உண்டாகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
மற்ற காரணங்கள்
தற்சமயம் சந்தையில் கிடைப்பதில் சிறந்த பேட்டரிகளாக லி-அயன் 'Li-Ion' வகை இருக்கின்றது. எனினும் இவற்றை பயன்படுத்த சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. லி-அயன் பேட்டரிகள் நீண்ட நாள் பயன்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அவற்றில் பிரச்சனை ஏற்படத் துவங்கும். இந்தப் பிரச்சனை தீவிரமாக அதிக நாட்கள் ஆகும். மேலும் இவ்வகை பேட்டரிகள் சீக்கிரமே வெப்பமடையும், இதனால் அதிகளவு அபாயம் கொண்டவை எனலாம்.
பேட்டரி
கருவிகள் 100 சதவீதம் சார்ஜ் ஆனதும் சார்ஜரை நீக்காமல் இருக்கும் போது கருவி அதிகளவு சூடாகும். மேலும் அதிக முறை பேட்டரிகளை 100 சதவீதம் சார்ஜ் செய்ய கூடாது. கருவியின் பேட்டரி அளவு 30 முதல் 80 சதவீதம் மிகாமல் சார்ஜ் இருப்பதை உறுதி செய்து அதற்கேற்ப அவற்றை சார்ஜ் செய்தல் நல்லது.
அதிகளவு சாக்ஜ் செய்வது
மொபைல் போன் அதிகளவு சூடாகும் போது, ஒரு கட்டத்தில் போனின் இயக்கை நிறுத்திவிடும். மொபைல் அதிகளவு சூடாகும் போது சில சமயம் சிப்செட் கோளாறுகளை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கின்றது.
எஸ்ஒசி
எஸ்ஒசி அதிகளவு சூடாவதை தடுக்கச் சக்தி வாய்ந்த அதிக மெமரி கொண்ட கேம்களை விளையாடுவதை நிறுத்த வேண்டும். பொதுவாக இது போன்ற கேம்கள் அதிகளவு பிரசாஸர் சக்தியைப் பயன்படுத்தும்.
வழிமுறை

தமிழகத்தின் முதல் முஸ்லிம் பெண் கலெக்டர்ஆசியா மர்யம் IAS,


நாமக்கல் மாவட்ட கலெக்டராக பதவியேற்றுக்கொண்டார் ஆசியா மர்யம் IAS,
மாஷா அல்லாஹ்.....
தமிழகத்தின் முதல் முஸ்லிம்
பெண் கலெக்டர்.!
 இவரின் பணி சிறக்க அவைவரும் பிராத்தனை செய்வோம்.
எல்லா புகழும் இறைவனுக்கே!..

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பொருட்கள் வாங்கி வருபர்கள்.

வளைகுடா:

படிக்க வேண்டிய மிக முக்கியமான பதிவு:
அறியாமையில் இந்தியா வரும் வெளிநாட்டு இந்தியர்கள்:
    நேற்றுமுன்தினம் வளைகுடா நாட்டிலிருந்து வாங்கிவரப்பட்ட டிவிக்கு மதுரை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் விதித்த வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து உடைக்கப்பட்ட டிவி புகைப்படத்துடன் பேஸ்புக் பதிவுகள் பார்த்திருப்பீர்கள்.
அறியாதவர்களுக்கு குறிப்பிடப்பட்ட அச்சம்பவம் பற்றி முகநூலில் வந்தவை சுருக்கமாக இதுதான்…..
அதாவது, ஒரு வளைகுடா சகோதரர் Elekta Smart TV 32″ வாங்கி வந்துள்ளார். அதற்கு கஸ்டம்ஸ் அதிகாரிகள் Rs 7000/- வரி கட்ட வேண்டும் என்றார்கள். அந்த சகோதரர் அதிகபட்சம் Rs 3000/- வரை மட்டுமே வரி கட்ட இயலும் என கெஞ்சியுள்ளார். அதிகாரிகள் மறுக்கவே அவர் டிவி பேக்கிங்கை பிரித்து, டிவியைஅங்கேயே தரையில் வீசி உடைத்துப் போட்டுவிட்டு போயுள்ளார். நல்லவேளை… அதிகாரிகளின் தலையில் போட்டு உடைக்கவில்லை.
முதல் விஷயம் :-
பொதுவாக இந்திய அரசாங்கம் இறக்குமதியாகும் வெளிநாட்டு பொருட்களுக்கு ஏகப்பட்ட வரி போடுகிறது. அதனால்தான்… அவை வெளிநாட்டில் விலை குறைவாகவும் இந்தியாவில் விலை அதிகமாகவும் உள்ளது.
இந்நிலையில்…
வரி இல்லாமல் குறைந்த விலைக்கு வளைகுடா நாடுகளில் இருந்து வாங்கி இந்தியா கொண்டுவரப்படும் பொருட்களுக்கு இந்திய விமான நிலையங்களில் கஸ்டம்ஸ் டூட்டி (சுங்க வரி) வசூலிப்பது வழக்கம். சொல்லப்போனால் அது கட்டாயம். அப்போதுதான்… உள்நாட்டு சந்தை பிழைக்கும்.
இந்த வரி விகிதம் பொருளுக்கு ஏற்ப அதன் விலைமதிப்பிற்கேற்ப மாறுபடும். பொதுவாக தங்கம், வெள்ளி போன்றவற்றிற்கு அடிப்படை விலையிலிருந்து 36.05% சுங்க வரியும் மற்ற மின்னணு பொருட்களுக்கு அதைவிட சிறிது குறைவான வரி விகிதமும் முன்னாடி வசூலிக்கப்பட்டு வந்தது.
வளைகுடா நாடுகளில் தங்க நகைகளுக்கு சேதாரம் 0%. இந்தியாவில் 10% முதல் 25% வரை சேதாரம் என்பதாலும் பின்னர் செய்கூலி மற்றும் வாட்(VAT)வரி எல்லாவற்றையும் மிச்சம் புடிப்போம்… என்று பெரிய அறிவாளிகளாக குறைந்த விலைக்கு வளைகுடாவில் தங்கம் வாங்கி வந்து கஸ்டம்ஸில் 36% சுங்கவரி கட்டும் முட்டாள்கள் தான் இந்திய அரசுக்கு இன்றைய அவசியத் தேவை..!
கஸ்டம்ஸை ஏய்த்து மாட்டினால்… ‘தங்கம் கடத்தியபோது கையும் களவுமாக கைது’ என்று செய்தியில் வருவீர்கள்..! (இது நீங்கள் ‘யார்’ என்பதை பொறுத்தது)
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசாங்கம் தட்டை திரை கொண்ட டிவி (Flat Screen TV) களுக்கு தங்கம் வெள்ளியைப் போன்றே 36.05% வரி வசூலிக்க ஆரம்பித்தது. காரணம்… அந்தளவுக்கு அந்த டிவிகளுக்கு உள்நாட்டில் அரசு வரி அதிகமாக போட்டுள்ளது. நீங்கள் வெளிநாட்டிலிருந்து சரியான விலைக்கு டிவி வாங்கி வந்தால் அப்புறம் உள்நாட்டில் டிவி சந்தை படுத்துவிடுமே.
முதலில் 32” க்கு மேல் உள்ள அளவிற்கு மட்டும் 36% சுங்க வரி வசூலிக்க ஆரம்பித்து, பிறகு, நான் Sony LCD 32″ Flat டிவி டூட்டிஃப்ரீயாக 2013 Julyயில் கொண்டு போன அடுத்த மாசத்திலிருந்துதான்… அனைத்து சைஸ் டிவிக்கும் வரியை நீட்டித்தார்கள். காரணம் எல்லா சைஸ் டிவிக்கும் உள்நாட்டில் அதிக வரி விதிக்கப்பட்டது.
இரண்டாம் விஷயம்:–
வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படும் பொருட்களின் அடிப்படை விலை என்பது நாம் வாங்கி வரும் Bill / Invoice மதிப்பு அல்ல. இந்தியாவில் விற்கப்படும் விலையை கவனித்து இந்திய அரசாங்கமே ஒரு அடிப்படை விலையை உங்களின் வளைகுடா பொருட்களுக்கு நிர்ணயித்து, அதிலிருந்து மேற்குறிப்பிட்ட அளவு வரி விகிதத்தை வசூலிக்கும். அந்த விலை தற்போதைய நிலவரத்தின்படி மாற்றி அமைக்கப்பட்டு கொண்டே இருக்கும். நாம் தள்ளுபடியில் வாங்கியதாக இருந்தாலும் வழக்கமான விலையில் வாங்கியதாக இருந்தாலும், ஒரிஜினல் பில்லை காட்டினாலும்… அந்த மதிப்புலாம் கஸ்டம்ஸ் வரி கணக்கில் கண்டு கொள்ளப்படமாட்டாது.
இந்திய அரசாங்கம் நிர்ணயித்த அந்த விலைப்பட்டியலை கலால் மற்றும் சுங்க வரித்துறை இணையதளத்தில் தேடமுற்பட்ட போது அந்த இணையதளம் திறக்கவில்லை. வேறு சில இணையதளங்களில் தேடியபோதுwww.nricafe.com என்ற தனியார் இணையதளம் அதிகாரப்பூர்வ சில இணையதளத்தில் இருந்தும், சில சுங்க அதிகாரிகளிடம் பேட்டி எடுத்தும் சேகரித்தாக கூறி ஒரு விலைப்பட்டியலை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டுள்ளார்கள். அந்த லிங்க்http://nricafe.com/2016/02/indian-customs-duty-lcd-led-tv/. மேலும் அந்த விலைப்பட்டியலில் குறிப்பிடப்படாத TV-களுக்கு, அதே சைஸ்சில் அதற்கு இணையான TV-ன் வரியை வசூலித்தக் கொள்ள சுங்க அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தற்போதைய சம்பவம்:–
மேலே கூறிய இரண்டு விஷயங்களை கருத்தில் கொண்டு நேற்று நடந்த சம்பவத்தை அணுகுவோம்.
அவர் Elekta Smart TV 32″ டிவியை 250 திர்ஹத்திற்கு (50%?) தள்ளுபடி விலையில் (இந்திய மதிப்பு சுமார் Rs 5000க்கும் சற்று குறைவு) வாங்கியதாக முகப்புத்தக பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சவூதியில் souq.comல் ஆன்லைன் ப்ரைஸ்… 499 ரியால்.( http://saudi.souq.com/…/elekta-tv-32-inch-led-hd-eled-32…/i/) சுமார் 8700 ரூபாய்.
ஆனால், இந்திய சட்டத்தின் படி அந்த விலை கணக்கில் கொள்ளப்பட மாட்டாது. அதன் மதிப்பு இந்தியாவில் சுமார் Rs 20000 மாகத்தான் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் 36.05% வரியாக Rs 7000 கேட்டுள்ளார்கள். அதற்கு அந்த சகோதரர் Rs 3000 வரை தருவதாக கெஞ்சியுள்ளார்.
சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட வரியை விட குறைவாக வரி வாங்கினால் அதற்கான ரசீதை கஸ்டம்ஸ் அதிகாரிகளால் தர இயலாது. ரசீது தராமல் பணம் வாங்கினால் அது லஞ்சமாக ஆகிவிடும். அதற்கு அந்த அதிகாரிகள் மறுத்துள்ளனர் என்பதும் ஏற்புடையதே. இதனால், நொந்துபோன அந்த பயணி கோவமாக TV-ஐ உடைத்துப்போட்டு விட்டு வந்துள்ளார்.
     இதில் தவறு எங்கு உள்ளது என்றால்…
இந்திய அரசின் சுங்கவரி சட்டத்தில்தான்.
    ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்லும் போது அந்த நாட்டிற்கு எவற்றை கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது, எவற்றிற்கு எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது, எதை எங்கு வாங்கினால் இலாபம் என்பதை எல்லாம் நாம்தான் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறாக தெரிந்து கொள்ளாமல்… ‘நான் வேர்வை சிந்தி உழைத்தேன், கஷ்டப்பட்டு வாங்கிவந்தேன்’ எனக்கூறி இந்திய சட்டப்படி வரி போடும் அதிகாரிகளை வசைபாடுவதால் எவ்வித பயனுமில்லை .

துபாயில் இனி DEWA சேவைகளைப்பெறுவதற்க்கு வீட்டு வாடகை ஒப்பந்த சான்றிதழ் அவசியம்:

துபாய்:

         அமீரகத்தில் வாழும் 80 சதவிகிதத்தினர் சம்பாத்தியம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ள வெளிநாட்டினரே. இவர்களில் குறைந்த ஊதியத் தொழிலாளர்கள் நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் உறைவிடங்களில் வாழ்கின்றனர். இன்னும் பலருக்கு குடும்பத்துடன் வாழ்வதற்கான வசதிகளை நிறுவனங்களே செய்து தரும். இன்னும் பலர் நிறுவனங்கள் தரும் வீட்டு வாடகையை பணமாக பெற்றுக் கொண்டு தங்களின் வசதிகளுக்கேற்ப பழைய / புதிய வில்லாக்களிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் வாழ்வர். இன்னும் பலர் ஒரே பிளாட்டை பகிர்ந்து கொண்டும் சமாளித்து வருகின்றனர்.
     பெருவாரியான தனிக்கட்டை ஊழியர்கள் சிரமத்தை தினமும் சகித்துக் கொள்ளும் பலர் வாழும் அடுக்குக்கட்டில் அறை வாழ்க்கைக்கும் இன்னும் சிலர் எக்ஸிகியூட்டிவ் அறை வாழ்க்கை என தங்களுக்குத் தாங்களே மனதை தேற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.
    சுயதொழில் நிறுவனங்களை நடத்தும் சிறு, குறு, பெரு தொழிலதிபர்களும் அவரவர் வசதிக்கேற்ப வாழ்விடங்களை தேர்வு செய்து கொள்வர்.
     மேற்சுட்டியபடி வாழ்வோர்கள் DEWA நிறுவனத்திடமிருந்து மின்சாரம், தண்ணீர் போன்ற இணைப்புக்களை பெற துபாய் நிலத்துறையிடம் (Dubai Land Department - DLD) நமது வீட்டு வாடகை ஒப்பந்தத்தை சமர்ப்பித்து, சான்றிதழ் வாங்கினால் மட்டுமே இனி DEWA இணைப்புக்களை பெற முடியும்.
     இதன் தொடர்பில், கடந்த 2015 நவம்பர் மாதம் முதல் DEWA இணைப்புகளையும், வீட்டு வாடகை ஒப்பந்த சான்றிதழ்களையும் ஒரே இடத்தில் வழங்கும் பூர்வாங்க, சோதனை அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் "மனைகள் ஒழுங்குமுறை அலுவலகங்களில்" (Real Estate Regulatory Agency - RERA) செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    அனைத்து அரசு அலுவல்களையும் ஒன்றிணைக்கும் "ஸ்மார்ட் துபாய் 2021" (Vision Smart Dubai 2021) எனும் தூர நோக்கத் திட்டத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News

டிராபிக் ஃபைன் கட்டாமல் இனி அமீரகத்தை விட்டு விடுமுறைக்காக கூட வெளியேற முடியாது:

துபாய்:

     அமீரகத்தின் மத்திய போக்குவரத்து சபையின் (Federal Traffic Council) அறிவித்தலின்படி, போக்குவரத்து துறை சம்பந்தப்பட்ட அபராதங்கள் குறித்த விபரங்கள் அனைத்தும் அமீரக குடியேற்றத்துறையுடன் (இமிக்கிரேசன்) இணைக்கப்படும் இதன்வழி போக்குவரத்து சம்பந்தப்பட்ட அபராதங்கள் செலுத்தப்படாமல் இருக்கும் நிலையில் நாட்டை விட்டு விடுமுறையிலோ அல்லது நிரந்தரமாகவோ வெளியேற அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள், நில வழி (All Kinds of Air, Sea & Land Ports) இமிக்கிரேசன் அலுவலகங்கள் என அனைத்திலும் அனுமதி மறுக்கப்படும்.
     போக்குவரத்து அபராதம் செலுத்தாமல் நாட்டை விட்டு செல்லும் பயணிகளின் வசதிக்காக அனைத்து விமான நிலையங்களிலும் தானியங்கி இயந்திரங்கள் (Smart Devices & ATM) நிறுவப்பட்டு அதன்வழி அபராதங்களை செலுத்த வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
    மோட்டார் பைக் ஒட்டுனர் லைசென்ஸ் இனி 2 வகையில் பிரித்து வழங்கப்படும். 200 CC வரை எஞ்சின் திறனுள்ள பைக்குகளை ஓட்ட 18 வயது பூர்த்தியானவர்களுக்கும், 200 CC க்கு மேல் அதிக எஞ்சின் திறனுள்ள மோட்டார் பைக்குகளை ஒட்ட 21 வயது பூர்த்தியானவர்களுக்கும் லைசென்ஸ் வழங்கப்படும்.
    தற்போது வழங்கப்படும் 10 ஆண்டு லைசென்ஸ் அனுமதி இனி 5 ஆண்டுகளாக குறைக்கப்படுவதற்கும், கனரக வாகனங்களான பஸ், டிரக் மற்றும் டேக்ஸிக்கள் அனுமதிக்கப்பட்ட வேக அளவை விட 20 km/h அதிகமாக செல்லலாம் என்பதும் ரத்து செய்யப்பட்டு 10 km/h வரை மட்டுமே அனுமதிக்கப்படவும் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் இறுதி உத்தரவுக்காக காத்துள்ளன.
     மேலும், அமீரகம் முழுவதும் டிரக்குகளை இயக்குவதற்கான தடை செய்யப்பட்ட நேரங்கள் சீரான, ஒரேவிதமான நேரத்திற்கு மாற்றப்படவுள்ளன.அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் கூடுதலாக 50 சதவிகித வேகத்தில் செல்பவருடைய வாகனங்கள் பறிமுதல் செய்யவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
Source: Khaleej Times