Monday, 8 August 2016

சவுதி அரேபியாவில் தனியார் நிறுவனம் மூடப்பட்டதால் உணவின்றி தவிக்கும் 13 தமிழர்கள்:இந்தியா திரும்ப உதவுமாறு கோரிக்கை:


    சவுதி அரேபியாவில் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்ற தமிழர்கள் தங்களை மீட்க இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 13 தமிழர்கள் வேலைக்கு சென்ற நிறுவனம் நஷ்டத்தில் உள்ளதால் அதன் உரிமையாளர் ஓடிவிட்டார் என்றும், இதனால் ஊதியம் வழங்கவில்லை என்றும் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர்களின் குடும்பத்தார் ராமநாதபுரம் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.
Source (thanks): புதிய தலைமுறை செய்தி 08:08:2016

No comments:

Post a Comment