Thursday, 9 June 2016

சுற்றுப்புற தூய்மை விழிப்புணர்வுக்கு பயணசீட்டுகளை சேகரித்து தமிழக பெண் தஹ்மிதா பானு சாதனை புத்தகத்தில் இடம் !


ராமநாதபுரம் : பேருந்து நிலையங்களை தூய்மையாக வைத்திருக்கவும் பயணச்சீட்டுகளை பேருந்தினுள்ளேயே எறிந்ந்து குப்பையாக்க கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயண சீட்டுகளை சேகரித்து தமிழக பெண் தஹ்மிதா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
இராமநாதாபுரம் மாவட்டம் பனைக்குளத்தை சேர்ந்த தஹ்மிதா பானு இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.இவரது பெற்றோர் சீனி மீரான்-ஜுனைதா பேகம்.இவர் ஒரே வழித்தடத்தில் மட்டும் வழங்கப்பட்ட 1000 பேருந்து பயணச்சீட்டுகளை சேகரித்ததற்க்காக இவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டியும் பயணச்சீட்டுகளை பேருந்தினுள்ளேயே கசக்கி எரிந்து பேருந்தை குப்பையாக மாற்றுவதை தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவர் இந்த சாதனையை செய்துள்ளார்.
தஹ்மிதா பானு கூறியதாவது: சுற்றுப்புற தூய்மையை காப்பதற்காக இந்த முயற்சியை செய்துள்ளேன்.எனக்கு உறுதுணையாக எப்பொழுதும் என்னுடன் இருக்கும் என் உயிர்த்தோழி மண்டபத்தை சேர்ந்த ஆ.கலைவாணி யை இவ்விடத்தில் குறிப்பிட கடைமை பட்டிருக்கிறேன். தஹ்மிதா பானு தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் B.A ஆங்கில இலக்கியமும், உச்சிப்புளியிள் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வியியல் கல்லூரியில் B.Ed பட்டமும், அண்ணாமலை பல்கலைக கழக தொலைநிலை கல்வியில் M.A ஆங்கிலம் பட்டம் பெற்றுள்ளார்.-  
  

பள்ளி விடுமுறையில் துபாய் குவைத் பள்ளியில் இப்தார் நிகழ்ச்சியில் சேவையாற்றிய இந்து மாணவிகள்!



                   
 சென்ற வருடம் 2015ல் துபாயில் கல்வி பயின்று வரும் தமிழக பள்ளிகுழந்தைகள்  பிரசிதா ப்ரசன்னா, ரஹிதா பிரசன்னா, நித்யஷிரி சங்கரன், திவ்யஷிரி சங்கரன், அஸ்வின் அஜீத், கின்சுக் ஆகியோர் விடுமுறை தினத்தன்று ஈமான் நடத்திய‌ இப்தாரில் நிகழ்ச்சியில் தன்னார்வத்துடன் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான பணிகளில் தங்களை ஈடுபத்தி கொண்டனர்.
இப்தார் நடைபெறும் நிகழ்விடத்திற்கு வந்துதன்னார்வலர்களோடு சேர்ந்து அங்கு இப்தாருக்கு வருபவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளில் தங்களையும் ஈடுபடுத்தி கொண்டனர். சின்னசிறு மாணவ மாணவியரின் மனித நேய‌ சேவையையும் இவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோரையும் துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் அமைப்பின் பாராட்டினர்.

துபாயில் ரமலானையொட்டி பிச்சை எடுத்த 35 பேர் கைது !



                  
துபாய் ஜூன் 9
ரமலான் மாதம் நோன்பிருந்து இறைவனை வழிபடும் மாதம் மட்டுமல்ல, முஸ்லிம்கள் ‘ஜக்காத்’ எனப்படும் தான தர்மங்களையும் அதிகம் செய்யும் மாதம் என்பதால், ரமலான் மாதங்களில் அரபு நாடுகளில் பிச்சை எடுப்பதை ஒரு பிழைப்பாகவே சிலர் நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே துபாய் நகரின் மசூதிகள், மார்க்கெட் பகுதிகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் பரபரப்பு மிக்க சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறாக பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 35 பேரை துபாய் போலீசார் பிடித்துள்ளனர். தற்போது பிடிபட்டவர்களில் 26 ஆண்கள், 7 பெண்கள் 2 குழந்தைகள் ஆவார்.
மேலும் பிச்சை எடுப்பது தெரியவந்தால் 0502106969 or the toll-free number 800 – CID (800 243), or via the department official email: cid@dubaipolice.gov.ae ஆகியவற்றில் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பணி பெண்ணை 19 ஆண்டுகளாக கவனிக்கும் சவூதி குடும்பம்:

சவுதி:

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பணி பெண்ணை 19 ஆண்டுகளாக கவனிக்கும் சவூதி குடும்பம்:
     பல ஆண்டுகள் தங்களிடம் விசுவாசமாக பணியாற்றியவர்களை சிறிது உடல் நல குறைவு ஏற்பட்டாலும் கிள்ளுகீரையாக நினைத்து தூக்கி எறிபவர்கள் இருக்கு இவ்வுலகில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பணி பெண்ணை சவூதி அரேபியா குடும்பம் ஒன்று 19 ஆண்டுகளாக கவனிக்கும் பராமரித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 19 ஆண்டுகளுக்கு முன் எத்தியோப்பாவை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டு பணிப்பெண்ணாக சவூதியில் பணியாற்ற வந்துள்ளார்.
    சில மாதங்களில் அவருக்கு பக்க வாதம் நோயால பாதிக்கப்பட்டு செயல்பட முடியாமல் போய் விட்டது. மருத்துவமனையில் சேர்த்து சில மாதங்களுக்கு சிகிச்சையளித்த பணிபெண்னை வேலைக்கு சேர்த்த வீட்டின் உரிமையாளர் மருத்துவ செலவுகளை செய்தததோடு மேலும் அப்பெண்னின் வேலைக்கான‌ விசாவை புதுபிக்க விரும்பவில்லை பணிபெண்ணின் பரிதாப நிலையை அறிந்த உரிமையாளரின் மற்றொரு நண்பர் சவூதியை சேர்ந்த சலா அல் சுயோபி தனது குடும்பத்துடன் அப்பெண்னை மருத்துவமனைக்கு சென்று பார்த்தார்.
    மருத்துவமனையில் அப்பணிபெண், சலா அல் சுயோபி குடும்பத்தினரிடம் விசாவை நீடித்து தரும் படி கேட்டு கொண்டார். சலா அல் சுயோபி தனது குடும்பத்தினரோடு ஆலோசனை செய்து அப்பெண்னை தங்களுடைய ஆதரவு விசாவில் மாற்றி விசாவை நீடிப்பதற்கும் அப்பெண்ணின் மருத்துவ செலவையும் ஏற்று கொள்ள முடிவு செய்தனர் . அதன் படி அப்பெண்ணுக்கு தங்களுடைய ஆதரவில் விசாவை மாற்றியதோடு செயல்பட‌ முடியாத அப்பெண்ணை கடந்த‌ 19 வருடங்களாக தங்கள் குடும்பத்தில் ஒருவராக சேர்ந்து அப்பெண்ணின் மருத்துவ செலவுகள் முழுவதையும் ஏற்று இன்று வரை பராமரித்து வருகின்றனர்
    இது குறித்து சலா அல் சுயோபி கூறியதாவது
அப்பெண்ணை எனது மனைவி சொந்த சகோதரி போன்றி கவனித்து வருகிறார். பலர் இதனை சுமையாக நினைப்பார்கள் நாங்கள் அப்படி நினைக்கவில்லை இதனை எங்களுக்கு கிடைத்த வாய்ப்பாகவும் கருதி மகிழ்ச்சியாக செய்து வருகிறோம் அவர் கடைசி காலம் வரை எங்களோடு இருக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்றார்.
Gulf News

கும்பகோணம் அரசு இஞ்னியரிங் கல்லூரியில் (தனியார் கல்லூரி) முஸ்லிம் மாணவிகள் Scarf அணிய தடை, தாடி வைக்க தடை, மற்றும் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த தடை!!!


கும்பகோணம் அரசு இஞ்னியரிங் கல்லூரியில் (தனியார் கல்லூரி) முஸ்லிம் மாணவிகள் Scarf அணிய தடை, முஸ்லிம் மாணவர்கள் தாடி வைக்க தடை, முஸ்லிம் மாணவர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த தடை என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக வந்தவண்ணம் இருக்கும்.
இதுதொடர்பாக நம் சகோதரர்கள் முதல்வரின் தனி பிரிவுக்கு புகார் அளித்து அவர்கள் இதுதொடர்பாக விளக்கம் கேட்டு அந்த கல்லூரிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அந்த கல்லூரியும் அவர்களுக்கு பதில் அளித்துள்ளது. ,
அந்த பதிலில் இந்த கல்லூரியில் Scarf அணிவதற்கோ, தாடி வைப்பதற்கோ, வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நடத்துவதற்கோ எந்த தடையும் கல்லூரியில் விதிக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
எனவே கல்லூரி நிர்வாகம் முதல்வரின் தனிப்பிரிவுவுக்கு அனுப்பியுள்ள கடித்தத்தை இப்பதிவில் இணைக்கிறோம்.
கும்பகோணம் அரசு கல்லூரியில் இனிவரும் காலங்களில் தடை எதுவும் தெரிவித்தால் இந்த கடிதத்தை அவர்களிடம் பெற்றோர்களும், மாணவர்களும் காட்டுங்கள்.

- முகநூல் முஸ்லிம் மீடியா

வேலைக்கு அழைத்து வந்த பணிப்பெண்ணை தன்னுடைய தோழியின் பிறந்தநாளுக்கு பரிசாக கொடுத்த சவுதி பெண்:

சவுதி:

வேலைக்கு அழைத்து வந்த பணிப்பெண்ணை தன்னுடைய தோழியின் பிறந்தநாளுக்கு பரிசாக கொடுத்த சவுதி பெண்:
   இதற்கு உலகத்தின் பல பகுதிகளில் இருந்து இருதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது .இதை சவுதி Saudi daily ‘Okaz’ news வெளியிட்டுள்ளது. அந்த பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
   Gulf woman gifts 'housemaid' to her Khaleeji friend:
   A Saudi woman was gifted a housemaid by a woman from another Gulf country, triggering sharp online criticism from the public.
    A man said on his Twitter page: “This is a rejected act.”
    The Saudi daily ‘Okaz’ said a woman from another Gulf country gave her Saudi friend a housemaid as a “friendship gift” but it did not provide other details.
   “Many people in the Gulf slammed such an act,” the paper said.

Wednesday, 8 June 2016

சவுதி அரேபியா அரசின் புதிய பொருளாதார புனரமைப்பு திட்டத்துக்கு மந்திரிசபை ஒப்புதல் !


பொருளாதார நெருக்கடியால் தள்ளாட்டு போட்டுவரும் சவுதி அரேபியாவை சரிவில் இருந்து மீட்கும் அரசின் புதிய பொருளாதார புனரமைப்பு திட்டத்துக்கு அந்நாட்டின் மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

ரியாத்: 
சர்வதேச சந்தையில் பெட்ரோலின் விலை தொடர்ந்து கடும்சரிவைச் சந்தித்து வருவதால் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சமீபகாலமாக பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகிறது. 
இதற்கிடையில், சவுதி அரேபியாவில் வாழும் மக்களின் மின்சாரத்தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த தேவையை நிறைவு செய்ய கச்சா எண்ணெய்யை எரித்து மின்சாரம் தயாரிக்கப்படுவதால் அவ்வகையிலும் அந்நாடு பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. 
இந்த நிலையை மாற்ற, பல்வேறு பொருளாதார சிக்கனம் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக சவுதி மன்னர் முஹம்மது பின் சல்மான் தலைமையிலான நிபுணர்கள் குழு விரிவாக ஆலோசனை நடத்தியது. இதன் விளைவாக, மந்திரிசபையின் செலவினங்களில் ஒருபகுதியை குறைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. 
கடந்த டிசம்பர் மாதம் வெளியான தேசிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளுக்கு பின்னர் மின்சார கட்டணம் மற்றும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது நினைவிருக்கலாம். 
மேலும், வெளிநாட்டில் கடன் வாங்கும் நிலைக்கு சவுதி அரேபியா தள்ளப்பட்டுள்ளது. பல்வேறு சர்வதேச வங்கிகளில் இருந்து ரூ.60 ஆயிரம் கோடி கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். கடனை வாங்கினால் தான் நாட்டை நடத்திச்செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சவுதி அரசுக்கு சொந்தமான ‘அரம்கோ’ எண்ணைய் நிறுவனத்தின் பங்குகளை விற்க சவுதி பட்டத்து இளவரசரும், பாதுகாப்புத்துறை மந்திரியுமான முஹம்மது பின் சல்மான் தற்போது முடிவு செய்துள்ளார். 
இதுதொடர்பாக, கடந்த மாதம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எண்ணெய் வளத்தின் மூலமாக மட்டுமே நாட்டுக்கு வருமானம் என்ற பழக்கத்துக்கு பலகாலமாக நாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம். இதனால், பலதுறைகளில் அடைந்திருக்க வேண்டிய முன்னேற்றத்தை நாம் எய்த முடியவில்லை. 
இந்த மனநிலை மாற வேண்டும். எண்ணெய் வளத்தின் மூலமாக கிடைக்கும் வருமானத்தை மட்டுமே சார்ந்திராமல் பிறவகைகளிலும் வருமானத்தை ஈட்டக்கூடிய நாடாக வரும் 2020-ம் ஆண்டுக்குள் சவுதி அரேபியாவை முன்னேற்ற வேண்டியுள்ளது என்றார். 
கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் நாடு தன்னிறைவையும் முதல் இடத்தையும் அடைந்தாக வேண்டும். அதற்கேற்ப, அரசுக்கு ‘அரம்கோ’ எண்ணெய் நிறுவனத்தில் உள்ள ஐந்து சதவீத பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இந்த பங்கு விற்பனையின் மூலம் கிடைக்கும் பணத்தில் இருந்து சுமார் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் மைய நிதி தொகுப்பு ஏற்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்ட சல்மான், ‘அரம்கோ’ எண்ணெய் நிறுவனத்தின் ஒரு சதவீத பங்குகளை விற்பனை செய்தாலே உலக பங்குச் சந்தையில் வெளியாகும் பெரிய தொகைக்கான விற்பனையாக ‘அரம்கோ’ பங்குகள் இருக்கும் என்று கூறினார். 
தற்போது உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் 19-வது இடத்தில் உள்ள சவுதி அரேபியாவை விரைவில் 15-வது இடத்துக்கு கொண்டு வருவதற்கான பல்வேறு பொருளாதார சீர்திருத்த திட்டங்கள் கொண்ட கையேட்டை வெளியிட்ட அவர் உள்நாட்டு ராணுவ செலவினங்களும் வெகுவாக குறைக்கப்படும் என தெரிவித்திருந்தார். 
இளவரசர் சல்மானின் பரிந்துரைகளின்படி, புதிய பொருளாதார மாற்றுவழி திட்டம்-2020 தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய புனரமைப்பு என்ற இந்த திட்டத்தின்படி (The National Transformation Programme (NTP) 2020) வரும் 2020-ம் ஆண்டுக்குள் நான்கரை லட்சம் தனியார் நிறுவன பணிகளை உருவாக்க சவுதி அரசு திட்டமிட்டுள்ளது. 
இதுதொடர்பாக, கடந்த ஐந்தாண்டுகளுக்குள் அமல்படுத்தப்பட்டவுள்ள பொருளாதார மாற்றுவழி திட்டம்-2020 என்ற 112 பக்கங்களை கொண்ட கையேடு வெளியிடப்பட்டுள்ளது. அரசுசார்ந்த ஒவ்வொரு துறையும் வரும் ஐந்தாண்டுகளில் செய்து முடிக்க வேண்டிய இலக்குகள் அந்த கையேட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 
மேலும், அரசுசார்ந்த 24 துறைகளின் வாயிலாக 270 பில்லியன் ரியால் மதிப்பீட்டில் 543 புதிய முன்முயற்சிகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 
மீன்வளம் சார்ந்த தொழில்களை மேம்படுத்தும் வகையில் சர்வதேச மையம் அமைக்கப்பட்டு சுமார் 80 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், பல தொழில்நகரங்களும் ஏற்படுத்தப்படும். இதன்மூலம் ஒன்றரை லட்சம்பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள். 
அரசுசார்ந்த பொது செலவினங்கள் 40 சதவீதம் வரை குறைக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து செய்யப்படும் இறக்குமதிக்கான அனுமதி தொகை ஆண்டுக்கு 12 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் குறைக்கப்படும் என தேசிய புனரமைப்பு திட்டம்-2020 வடிவமைக்கப்பட்டுள்ளது. 
நேற்று இந்த திட்டத்துக்கு சவுதி அரசின் மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மேற்கண்ட திட்டங்கள் எல்லாம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சவுதியின் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தியானது நாளொன்றுக்கு 12.5 மில்லியன் பேரல்கள் என்ற வழக்கமான நடைமுறை தொடரும் எனவும் சவுதி அரசு அறிவித்துள்ளது.

சார்ஜா தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உடல் கருகி பலி!



ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் சார்ஜாவில் நடந்த தீ விபத்தில் மூவர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.
                 


சார்ஜா கார்பியா பிரதேசத்தில் உள்ள வில்லா ஒன்றில் நடந்த இந்த தீவிபத்தில் 45 வயது பெண் ஒருவரும் அவரது இளம் வயது பெண் பிள்ளைகளும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை
நன்றி!Madawala News

கத்தார் எயர்வேய்ஸ்வுடன் கைகோர்க்கும் ஸ்ரீ லங்கான் எயர்லைன்ஸ்...!


கத்தார் எயார்வேஸ் விமான சேவை நிறுவன
த்துடன் கோட் ஷேயர் அடிப்படையில் வர்த்
தக உடன்படிக்கையில்  கை   கோர்க்கிறது
ஸ்ரீலங்கன் விமான சேவை.
இதனடிப்படையில் இரு விமான   சேவைக
ளின்   வாடிக்கையாளர்களுக்கும்  பல்வேறு
 நாடுகளுக்கிடையிலான பயண வாய்ப்புகள்
உருவாகும் என்பகு குறிப்பிடத்தக்கது.
கத்தார் எயார்வேஸ்  பயணிகள் ஸ்ரீலங்கன்
விமான சேவையின்   சேவை இடங்களான
மாலைதீவு போன்ற நாடுகளுக்கு இவ்வுடன்
படிக்கை மூலம்   பயணிப்பதற்கான வாய்ப்பு
உருவாகும் அதேவேளை கத்தார் எயார்வே
ஸ் பயணிக்கும் பல ஐரோப்பிய மற்றும் அமெ
ரிக்க விமான நிலையங்களுக்கான பயணம்
ஸ்ரீலங்கன் விமான சேவை வாடிக்கையாளர்
களுக்கு இலகுவாக்கப்படும்.

20 லட்சம் அமெரிக்கர்களை இஸ்லாத்தில் இனைத்த 'முஹம்மத் அலி'!!


20 லட்சம் அமெரிக்கர்களை, இஸ்லாத்தில் இனைத்த 'முஹம்மத் அலி'
June 7, 2016
World Boxing Legend Mohammad Ali Clay told a number of times that the happiest moments of his life was when he embraced Islam. Although several phases came in the life of Philanthropist Mohammed Ali but the turning point in his life came in 1964 when he was on the peak of the fame. That year he received the world champion honour for the first time and also announced his reversion to Islam.
Thus “Cassius Marcellus Clay” said goodbye to his past and launched a new phase of life with his new name “Mohammad Ali Clay”. A Muslim who was ready to give all his best and willing to spend his wealth in the way of his religion.
Mohammed Tamashi in his book “Acceptance of Islam by great personalities and thinkers’ writes regarding Mohammad Ali Clay’s reversion to Islam “In 1964 in Florida for the first time I heard that God is one. I was shocked to hear this. And that Mohammad (peace be upon him) is the last prophet and Jesus is one of God’s prophets. This was new to me and this cast a great effect on me. I found peace and truth after accepting Islam. I learned to pray, fast, and strengthened relationship with Allah. And then I determined to invite people to the true religion of Islam. By the Grace of Allah I converted more than 20 lakh Americans to Islam. I allocated my annual income (which is about $ 20 crore) for Islam. My wife and children won’t inherit from that. I converted my palace into a large masjid and centre for Quranic education. Besides that I started construction of the largest masjid in Chicago and this masjid will be an Islamic centre. These days I am distributing Islamic books freely among Muslims in the United States”.
In an interview Mohammad Ali had said “soon I will become older and I may face death any time. Allah (swt) has made me the best player in the world and the most famous person; hence I will utilise the extraordinary popularity Allah has blessed me, to spread the teachings of Islam and fight against the crimes, like alcoholism, drugs and prostitution “.
One occasion speaking about the rising trend of terrorism, extremism and Islamophobia, he said “I am a Muslim and there is no place for killing of innocent people in Islam either in Paris or any place of the world. True Muslims know that violence is against the fundamental principles of our religion. ”
World renowned boxer Mohammad Ali Clay died late on Friday at Phoenix-area hospital in the US city of Phoenix, Arizona. He had been suffering from a respiratory illness, a condition that was complicated by Parkinson’s disease he was suffering since 1984. Mohammed Ali, who won World Heavyweight Championship thrice, was buried in his home town of Louisville, Kentucky where he was born 74 years ago.

ரமலானை முன்னிட்டு கத்தாரில் 23 இந்திய சிறைவாசிகள் விடுதலை....!!


புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு கத்தாரில் பல நாடுகளை சேர்ந்த சிறைவாசிகள் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தோஹா:
கத்தார் நாட்டு சிறைகளில் இருந்து 23 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் 60 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வேலைசெய்து வருகின்றனர். நேற்று முன்தினம் அரசுமுறை பயணமாக கத்தார் நாட்டுக்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள இந்திய தொழிலாளர்களின் நலன்களை நல்லமுறையில் பாதுகாக்குமாறு அந்நாட்டு மன்னரான ஷேக் தமிம் பின் ஹமாத் அல்-தானியிடம் வலியுறுத்தியிருந்தார். அதை மன்னரும் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், கத்தார் நாட்டு சிறைகளில் இருந்து 23 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, ‘சிறப்புக்குரிய ரமலான் மாதத்தின் துவக்கத்தையொட்டி, கத்தார் அரசு 23 இந்திய கைதிளை விடுதலை செய்துள்ளது. அவர்கள் அனைவரும் விரைவில் தாய்நாடு திரும்புவார்கள். 
அவர்களை விடுதலை செய்த கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்-தானிக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, 7 June 2016

சவுதி அரேபியா ரியாத் அருகே விபத்தில் 12 பேர் பலி 35 பேர் படுகாயம்... ?


வீதி விபத்துக்களில் உலகில் முன்னணியில் இருக்கும் சவுதி அரேபியாவில் முதல் நாள் நோன்பு துறக்கும் நேரத்தை நெருங்கிய வேளையில் இடைம்பெற்ற வீதி விபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
சவுதி அரேபிய ரியாத் நகரில் பஸ் வண்டி ஒன்றுடன் டிரக் ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தை தொடர்ந்து ரியாத் அரச வைத்தியசாலைகளில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
நன்றி: மடவள நியூஸ்.

ஏழைகளின் பசியாற்ற கேரள பெண்ணின் புதுமையான யோசனை!


கொச்சியில்  ஹோட்டல் நடத்தி வருகிறார் மினு பவுலின்.. தனது ஹோட்டல் வாசலில்  பிரிட்ஜ்  ஒன்று  வைத்துள்ளார். இதில் சாப்பிட வழியில்லாத 50 பேருக்கு தினமும்  உணவுகளை வைத்து விடுகிறார்.  தினமும் 24 மணி நேரமும் இந்த பிரிட்ஜில் உணவு இருக்கும்.  எந்த நேரமும், மற்ற யாரும் உணவு வைக்கலாம். பசியில் வாடும் யாரும் எடுத்து  சாப்பிடலாம்.

லண்டனில் தமிழர்களால் கட்டப்பட்ட பள்ளிவாசலில் முதன்முதலாக நடைபெற்ற தராவீஹ் தொழுகை! (படங்கள் இணைப்பு)


லண்டனில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்கு பணி நிமித்தமாக வசித்து வரும் தமிழர்களால் சுமார் ஆறு கோடி ரூபாய் செலவீட்டில் மஸ்ஜித் அல்-ஹிதாயா என்னும் பள்ளிவாசல் குரைடனில் துவங்கப்பட்டது. இதன் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் லண்டனில் பிறை தெண்பட்டது. இதனை தொடர்ந்து நேற்றைய தினம் அப்பள்ளியில் தராவீஹ் தொழுகை சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் தமிழர்கள் பலர் கலந்துக்கொண்டு தங்கள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றினார்.
                  

நீங்கள் ஒரு N.R.I.யா..? இந்தியாவில் உங்களது வங்கி கணக்குகளை பராமரிப்பது எப்படின்னு தெரியுமா..?

அயல்நாட்டில் வேலை கிடைத்திவிட்டதா? விசா கிடைத்த உடன், வெளிநாட்டு பயனத்திற்கு தயராகும் உங்களுக்கு இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
விமானம் ஏறும் முன், உங்கள் வங்கி கணக்குகளை கண்டிப்பாக சரி பார்க்க வேண்டும், இல்லையெனில் இந்திய வங்கி கிளைகளில் இருக்கும் கணக்குகளுக்கும் அயல்நாட்டு வங்கியின் கணக்கிற்கும் உள்ள தொடர்பில் பல பிரச்சனைகள் கொண்டு வரும்.இதனால் நம் தலை தான் உருளும்.
இதனை தவிர்க்கவும், சிக்கல்களை எளிதாக தீர்க்கவும், கட்டுரையை தொடர்ந்து படிக்கவும்.

1
181 நாட்கள்
முதன் முறையாக அயல்நாட்டில் வேலைக்கு செல்பவர்களுக்கு "நியமனம் ஆணையில் 181 நாட்களுக்கு அதிகமாக வேலை செய்பவர் என்று உறுதி அளிக்கப்பட்டு இருக்கும்". இதனால் 181 நாட்களுக்கு பிறகு அவர் என்ஆர்ஐ என்னும் அங்கீகாரத்தை அடைவர், எனவே பயனத்திற்கு முன்பே என்ஆர்ஐ கணக்கை தொடங்கலாம்.

2
என்ஆர்ஐ கணக்கு
என்ஆர்ஐ கணக்குகளை துவங்க, பயணம் செய்யும் நாடுகளையும், நாட்களை பொருத்து வங்கிகளே உங்களை என்ஆர்ஐ கணக்குகளை துவங்குவதற்காக உங்களை அனுகலாம், இல்லையென்றால் உங்கள் சம்பள கணக்கு இருக்கும் வங்கியில் நீங்கள் இணைய மூலமாகவோ அல்லது நேரடியாக தொடர்புகொள்ளுங்கள்.
சரி, புது கணக்கு துவங்கியாச்சு.. ஏற்கனவே இந்தியாவில் உங்கள் பெயரில் உள்ள வங்கி கணக்குகள், வைப்பு நிதி மற்றும் முதலீடுகளின் நிலை என்ன என்பதை பற்றி இங்கு காண்போம்.

3
உங்கள் பெயரில் உள்ள கணக்குகள்
உங்கள் பெயரில் இருக்கும் அனைத்து கணக்குகளும் என்ஆர்ஒ கணக்குகளாக மற்றப்படும். இதனால் கணக்கின் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டு, ஆனால் வருமான வரி 30.9 சதவிதத்தில் கணக்கிடப்படும்.

4
கூட்டுக் கணக்கு
கூட்டுக் கணக்கில் இருக்கும் இரண்டாம் நபரின் கணக்குகளும் என்ஆர்ஒ கணக்குகளாக மற்றப்படும். இதனால் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படாவிட்டாலும், வருமான வரி 30.9 சதவிதத்தில் கணக்கிடப்படும்.

5
கூட்டுக் கணக்கில் நிங்கள் இரண்டாம் நபராக இருந்தால்?
இத்தகைய நிலையில் நிங்கள் என்ஆர்ஐ தகுதியை அடைந்த பிறகு, இந்த கணக்கை வித்தியாசமான முறையில் கையாளப்படும். அதாவது இந்த கணக்கை முதல் நபர் உயிருடன் இருக்கும் வரை இரண்டாம் நபரால் உபயோகப்படுத்த முடியாது.

6/9
வங்கி வைப்பு நிதிகள்
என்ஆர்ஐ தகுதியை அடைந்த பிறகு அனைத்து வைப்பு நிதிகளும் என்ஆர்ஒ வைப்பு நிதிகளாக மாற்றப்படும். இதனால் நிதியின் வட்டி விகிதம், முதிர்வு அடையும் காலம் என எதிலும் மாற்றம் இருக்காது. ஆனால் வருமான வரி மட்டும் 30.9 சதவிதமாக கணக்கிடப்படும்.

7/9
பிபிஎஃப் கணக்குகள்
2003ஆம் ஆண்டுக்கு முன் இந்த கணக்குகளில் முதலீடு செய்ய அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் 25.7.2003 அன்று வந்த சட்ட திருத்தத்தின் படி, பிபிஎஃப் கணக்கு முதிர்வு அடையும் வரை முதலீடு செய்யலாம். மேலும் இந்த கணக்குகள் என்ஆர்ஐ தகுதி அடையும் முன் தொடங்கப்பட்டு இருக்க வேண்டும்.
ஒரு என்ஆர்ஐ பிபிஎஃப் கணக்குகளில் முதலீடு செய்ய என்ஆர்இ அல்லது என்ஆர்ஒ கணக்குகளை பயன்படுத்த வேண்டும்.

8/9
டீமாட் மற்றும் பங்குகள் உரிமைகள்
என்ஆர்ஐ பங்கு சந்தையில் முதலீடு செய்ய பிஐஎஸ் (Portfolio Investment Services) கணக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். என்ஆர்ஐ தகுதி அடையும் முன் வாங்கிய பங்குகளை பிஐஎஸ் கணக்கிற்கு மாற்றி கொண்ட பின் தொடர்ந்து முதலீடு செய்யலாம்.

9/9
கூட்டு என்ஆர்இ கணக்குகளை தொடங்கவும்
பயனத்திற்கு முன்பு, இந்தியாவில் என்ஆர்இ கணக்குகளை தொடங்கி அதில் கூட்டு நபரை சேர்க்கவும். இதனால் உங்கள் வருமானத்தைக் கொண்டு இந்தியாவில் உள்ள முதலீட்டை அவர் பராமரித்துக் கொள்வர். 

சீன முஸ்லிம்களுக்காக துஆ செய்வோம்..!


உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்தும் ஐம்பெரும் கடைகளில் ஒன்றான ரமலான் மாதத்தில் நோன்பு நோற்க மகிழ்ச்சியுடன் துவங்கியுள்ள வேளையில் சீனாவின் கம்யூனிச அரசு சில கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டுள்ளது.
அரசாங்கத்தில் பணிபுரியும் சீனா முஸ்லிம்கள, பள்ளிகளில் பயிலும் சீனா முஸ்லிம் மாணவர்கள் நோன்பு விரதம் அனுஷ்டிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் கண்காணிக்க காவல்துறையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சீனாவில் உணவு விடுதிகள் நடத்தும் முஸ்லீம்களும் ரமலானை காரணம் காட்டி பகலில் விடுமுறை வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது...
உலகம் முழுவதும் இஸ்லாமிய மறுமலர்ச்சி ஏற்பட்டு வரும் நிலையில் சீனா அரசின் அடக்குமுறைகளை மீறி முஸ்லிம்கள மார்க்க கடமையை நிறைவேற்ற உதவிட வல்ல இறைவனை வேண்டுவோம்...
- Colachel Azheem

Sunday, 5 June 2016

கேரளா_மக்களின்_பலநாள்_கனவு மிக விரைவில் நிறைவேறப் போக்கிறது.


வளைகுடா:கேரளா 
#கேரளா_மக்களின்_பலநாள்_கனவு மிக விரைவில் நிறைவேறப் போக்கிறது; மாறி மாறி வந்த தமிழக அரசு வெளிநாடு வாழ் தமிழர்களை ஏமாற்றியது மட்டுமே மிச்சம்:
    கேரளா மக்களின் பலநாள் கனவாக "" Air Kerala"" விமான சேவை விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.
ஐந்து வருட உள்நாட்டு சேவை எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தால் மட்டுமே சர்வதேச சேவை என்ற வரையறையினை இந்திய விமான சேவை அமைச்சகம் தளர்த்தி உள்ளது.ஒரு மணிநேர பயணத்திற்கு  2500-க்கு மிகாமல் இருக்க வேண்டும், குறைந்து 20 விமானங்கள் இருந்தால் சர்வதேச சேவை துவங்கலாம் என்ற புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
       ஆனால் தமிழகத்தில் தனியாக விமான
வேண்டாம். அனைவருக்கும் பயன்படும் விதத்தில் திருச்சி சென்னை மற்றும்  கோவைக்கு வளைகுடா நாடுகளில் இருந்து  நேரடியாக விமான சேவையாவது செய்து தர  முயற்சி செய்திருக்கலாமே...

இந்தியா- கத்தார் இடையே சுற்றுலா, மருத்துவம் உட்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின..விவரம்:


கத்தாரிலிருந்து முதலீட்டை ஈர்க்கிறது இந்தியா:
கத்தார் தலைநகர் தோகாவில் பிரதமர் நரேந்திர மோடி, மன்னர் Sheikh Tamim Bin Hamad Al Thani ஆகியோர் முன்னிலையில் முதலீடு, சுற்றுலா, மருத்துவம், உட்பட 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த ஒப்பந்தம் மூலம், இந்தியாவின் முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தில் கத்தார் முதலீடு செய்ய இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு இந்த நிதியத்தை துவக்கியது.
இருதரப்பு பேச்சுவார்த்தை:
இதனையடுத்து, கத்தார் அரசருடன், பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தினார். அதோடு, அந்நாட்டின் தொழிலதிபர்களைச் சந்தித்த அவர், இந்தியாவில் தொழில்தொடங்க முன்வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். 
இந்தியாவில் வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதாகவும், 80 கோடி இளைஞர்கள் உள்ளதால் மனித வளத்தில் முன்னணியில் இருப்பதாகவும் தெரிவித்த பிரதமர், உள்கட்டமைப்பை விரிவாக்கம் செய்வது, மேம்படுத்துவது, உற்பத்தியை அதிகரிப்பது ஆகியற்றிற்கு தமது அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும் குறிப்பிட்டார். 
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், நகர்ப்புற கழிவு மேலாண்மை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார். தமது 2 நாள் கத்தார் பயணத்தை இன்று முடித்துக்கொள்ளும் பிரதமர் மோடி, அங்கிருந்து Switzerland செல்கிறார்.
கடந்த 2008ம் ஆண்டு கத்தார் சென்ற மன்மோகன் சிங்-ற்கு பிறகு அங்கு செல்லும் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவில் இரமலானை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு ஐந்து மணி நேரம் மட்டுமே பணி நேரமாக அறிவித்து சவூதி அரசு:

சவுதி:

சவூதி அரேபியாவில் இரமலானை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு ஐந்து மணி நேரம் மட்டுமே பணி நேரமாக அறிவித்து சவூதி அரசு:
    சவூதி அரேபியாவில் இரமலானை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு ஐந்து மணி நேரம் மட்டுமே பணி நேரமாக அறிவித்து சவூதி அரசு சலுகை வழங்கியுள்ளது.
RIYADH:
5-hour work for govt staff in Ramadan:
     All government offices will work for five hours during Ramadan, the Ministry of Civil Service has announced.
In a circular issued on Thursday, the ministry said government offices will function from 10 a.m. to 3 p.m.
Eid Al-Fitr holidays for this year will start on Thursday June 30, corresponding to Ramadan 25. Work will resume after the Eid holidays on Monday, July 11 (Shawwal 6), Saudi Press Agency quoted the ministry’s circular as saying.

சவூதி அரபியாவில் பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு 150 ரியால் அபராதம் விதிக்க சவூதி அரசு புதிய சட்டம்!


தூய்மைக்கு முதலிடம்.                                    சவூதியில் பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு 150 ரியால் அபராதம் விதிக்க சவூதி அரசு சட்டம் இயற்றி உள்ளது. 
SR150 fine for spitting on street
RIYADH — Anyone who is found spitting on the street or throwing garbage from moving vehicles will be fined SR150, reported Makkah Arabic daily on Saturday quoting a Traffic Department announcement.
The Traffic Department appealed to citizens and expatriates to maintain public decorum.
It said that the fine will be a deterrent for reckless motorists who throw garbage from moving vehicles.
The Traffic Department said littering or spitting is a traffic violation that comes under the Fourth Category on the list of traffic violations and penalties. It comes under the title “Throwing objects from vehicles while driving”.
The minimum fine for this is SR100 and the maximum is SR150.
Studies done by health organizations have confirmed that spitting on the street and littering (throwing industrial and food leftovers) are pollutants of the environment.
The studies indicate that 70 percent of airborne diseases like bronchitis and tuberculosis have been transmitted due to spitting in public places.
Tuberculosis bacteria can survive for months especially in places that are not exposed to sunlight, according to the studies. These bacteria multiply rapidly in the air and dust.
Studies have shown that the cost of treating pollution in Arabian Gulf countries including Saudi Arabia is 10 percent of the Gross National Product (GNP) annually

புனித ரமலான் மாதத்தில் தெலுங்கானா முதல்வரின் மனித நேயம்! முஸ்லிம் ஊழியர்கள், மாணவர்கள்,ஆசிரியர்கள் ஆகியோர் ரமலான் மாதத்தில் 4 மணிக்கே வீட்டுக்கு செல்லலாம்..!


தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு!
ஜாதி மதம் பாராது குரல் கொடுக்கும் உவைசியின் நற்குணமும், செயலாற்றலும் தெலுங்கானா முதல்வரை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருக்கும் மாநிலங்கள் தமிழ்நாடு உட்பட தெலுங்கானா அரசிடம் பாடம் கற்க வேண்டிய தருணம்...
சிந்திக்குமா மாநில அரசுகள்???

Saturday, 4 June 2016

குவைத்தில்_சூடு_அதிகமானதை_அடுத்து திறந்த இடத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு கோடை வெயில் காலத்தில் வரும் வருடமாக வழங்கப்படும் தடை நடைமுறைக்கு வந்துள்ளது.

குவைத்:

#குவைத்தில்_சூடு_அதிகமானதை_அடுத்து
திறந்த இடத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு கோடை வெயில் காலத்தில் வரும் வருடமாக வழங்கப்படும் தடை நடைமுறைக்கு வந்துள்ளது:
   வளைகுடா நாடுகளில் வெயில் காலத்தில் சூடு அதிகமாகும் நேரங்களில் பகல் நேரத்தில் தொழிலாளர்கள் வேலை செய்ய சில மாதங்களுக்கு தடை விதிக்கப்படுவது வழக்கம்.
   இந்த நிலையில் குவைத்தில் தற்போதே வெப்பம் அதிகமான நிலையில் திறந்த இடத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு கோடை வெயில் காலத்தில் வரும் வருடமாக வழங்கப்படும் தடை நேற்று முதல்  நடைமுறைக்கு வந்துள்ளது.
   இதன் படி இந்த தடை உத்தரவு நேற்று முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு(ஆகஸ்டு -31 வரை) நடைமுறையில் இருக்கும். இந்த மாதங்களுக்கு காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில் இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
   இப்படி தடையினை மீறி தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கும் கம்பெனிகளின் ஆவணங்கள் ரத்து செய்யபடும் என்று
Kuwait Manpower Authority-யின் தலைமை
அதிகாரி அகமது- அல்- மூஸா தெரிவித்துள்ளார்.
     இது கடுமையான நடைமுறையில் இருக்கும் என்றும். இதை கண்காணிக்க தனிகுழு அமைக்கப்பட்டுள்து. குவைத்தின் அனைத்து பகுதியையும் தீவிரமாக கண்காணிக்கும்.
   இப்படி வேலை வாங்கி பிடிபட்டால். தொழிலாளிக்கு ஒன்றுக்கு 100 குவைத் தினார் வீதம் கம்பெனிக்கு பிழையும் மற்றும் கம்பெனிகளின் ஆவணங்கள் அனைத்தும் ரத்தும் செய்யபடும் என்று செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதிதியில் பணிபுரியும் சகோதரர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி! நீங்களும் சம்பாதிக்கும் பணத்தில் 6% சவூதி அரசுக்கு!


சவூதி அரேபியாவில் பணி நிமித்தமாக தங்கி இருக்கும் நபர்கள் இனி வரும் காலங்களில் தங்கள் ஊர்களுக்கு பணம் அனுப்பினால் அதில் சவூதி அரசுக்கு 6% பணம் செலுத்தவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வலைகுடாவில் பல இன்னல்களை சந்தித்து வருபவர்களுக்கு இது மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியாக உள்ளது.
இது குறித்து அரப் நீயூஸில் நேற்று வெளியான செய்திக்குறிப்பு
JEDDAH: The Shoura Council’s finance committee is backing a proposed tax on the remittances of expats, starting from 6 percent in the first year and gradually reducing to 2 percent permanently from the fifth year onward.
The tax proposal was drafted by Hossam Al-Anqari, head of the General Auditing Bureau and former member of the Shoura, who said this would be a way to force expats to invest or spend their money in the Kingdom.
The tax would be on all money transfers by expats, with the collection being done through financial institutions in the country, and deposited in a special government account, according to a media report on Thursday.
There would also be limits on the amount that an expat can send abroad at any given time. There would also be limit on what expats can transfer abroad if they leave the country. The amounts that would be allowed abroad would be calculated in terms of the income of expats.
There would also be several measures introduced to prevent tax evasion and penalize those who fail to comply, and resolve disputes. The fines would be equal to the tax levied for the first offense and doubled for every repeat violation. Citizens found submitting fake statements of salaries, or transferring money on behalf of workers would also be fined.
The finance committee stated that measures must be taken to tax expats so that the country can gain more income. The committee’s statement comes as annual remittances reportedly rose from SR56 billion in 2005 to over SR135 billion in 2014.

மதமாறி இஸ்லாமிய பெண்னை திருமனம் முடித்தமைக்கு ஹாஸிம் அம்லாவே காரணம்- வெய்ன் பார்னெல்?

           


               
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
தென்னாபிக்க அணியில் 2010ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய வெய்ன் தில்லான் பார்னெல் றுயலநெ னுடைடழn Pயசநெடட 1989ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் திகதி தென்னாபிரிக்க நாட்டின் போர்ட் எலிசபத் நகரில் பிறந்துள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான பார்னெல் 2013ம் ஆண்டு தனது அறிமுக ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்தியாவிற்கு எதிராக விளையாடியுள்ளதோடு 20க்கு இருபது சர்வதேச போட்டியில் 2009ம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராகா முதன்முதலில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடதக்க விடயமாக இருக்கின்ற அதே நேரம் தில்லி டேர்டெவில்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் உள்ள இந்தியன் பிரீமியர் லீக் அணிகளையும் பிரதி நிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளமையும் முக்கிய விடயமாகும்.
பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள்இடம் கடுமையான கோப சுபாவம் காணப்பட்டாலும் பார்னெல் ஒரு வித்தியாசமான வீரராக தென்னாபிரிக்க அணியில் இடம் பெற்றிருந்தார். அதனாலேயேதன் விளையாட்டில் பொறுமைக்கு உதாரணமாக விளங்கு தனதணியில் உள்ள சக வீரரான ஹாஸிம் அம்லாவுடன் அதிகமான நேரத்தை செலவிடும் அணியில் உள்ள ஒரு வேகப்பந்து வீச்சாளராக பார்னெல் அணியில் காணப்பட்டார். அதனால் ஹாஸிம் அம்லாவின் வாழ்க்கையில் காணப்பட்ட அர்த்தத்தின்பால் கவரப்பட்ட பார்னெல் 2011ம் ஆண்டு ஜூலை 30ம் திகதி தனது அணி வீரர்களான ஹாஸிம் அம்லாஇ இம்ரான் தாஹிர் மற்றும் அணியின் முகாமையாளர் முகம்மட் முஸாஜீ ஆகியோர் அடங்களாக உத்தியோக பூர்வமாக தான் இஸ்லாமிய மார்கத்தினை தழுவியதாக அறிவித்திருந்தார். (அல்லாஹு அக்பர்).
2004ம் ஆண்டு ஆயிஷா பாக்கர் எனும் பெண்மணியினை திருமண நிகாஹ் செய்து கொண்ட பார்னெல் இஉத்தியோக பூர்வமாக கடந்த மே மாதம் 22ம் திகதி தனது பெயரினை வலீத் றுயடநநவா என மாற்றிக்கொண்டு இல்லர வாழ்கையில் இணைந்து கொண்டார். தனது மதமாற்றம் பற்றி பார்னெல் கூறுகையில் தனது சக அணி வீரரான ஹாசிம் அம்லாவின் இஸ்லாமிய வாழ்க்கையும் அவருடைய பொறுமைஇ நட்புஇ உணவு உட்கொள்ளும் முறைஇ இறை பக்திஇ இபழகவழக்கம்இ பிரயாணத்தின் பொழுது நடந்து கொள்ளும் முறைஇ போன்ற விடயங்களோடு இன்னும் அன்றாடம் மனிதன் தனது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளும் விடயங்களே தனை இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்து கொண்டு இஸ்லாமிய பெண்மணியினை திருமணம் முடிக்க என்னை தூண்டியது என தெரிவித்தார்.

ஜித்தாவில் வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு நாடுகளின் மன்னர்கள் சந்திப்பு!


gcc எனப்படும் வளைகுடா நாடுகளான சவூதி. கத்தார். குவைத். பஹ்ரைன். ஓமன். துபாய். ஆகிய நாடுகளின் மன்னர்களின் 17 வது சந்திப்பு நேற்று முன் தினம் (1-6-16)  சவூதி ஜித்தாவில் ஆரம்பமாகியுள்ளது. எண்ணெய் வளம். சுற்றுலா. ஏற்றுமதி. இறக்குமதி. சம்பந்தப்பட்ட பல்வேறு அம்சங்களை இந்த சந்திப்பில் பேசப்பட உள்ளது. முன்னதாக ஜித்தா வந்தடைந்த வளைகுடா நாடுகளின் மன்னர்களை சவூதி மன்னர் அஷ்ஷெய்கு சல்மான் அவர்கள் வரவேற்றார். 

Thursday, 2 June 2016

5 வருடங்களாக ஒரே ஒரு மாணவிக்காக இயங்கி வந்த பள்ளி மூடப்படும் அபாயம்


சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 5 வருடங்களாக ஒரே ஒரு மாணவிக்காக இயங்கி வந்த பள்ளி தற்போது மூடப்படும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. செய்யாலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்த ஒரு மாணவிக்காக தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்களும், ஒரு துப்புறவு பணியாளரும் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது அந்த மாணவியும் படிப்பை முடித்து வேறு பள்ளிக்கு சென்றுவிட்டதால் அந்த பள்ளியை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. இதே போல் மானாமதுரையில் மானம்பாக்கி உள்ளிட்ட பல இடங்களில் ஓரிரு மாணவர்களுக்காக பள்ளிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அரசு பள்ளிகளில் சரியான வசதிகள் இல்லாததாலேயே மக்கள் தனியார் பள்ளிகளை நாடி செல்வதா அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அரசு இதனை கவனத்தில் கொண்டு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வழிவகுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை ஆகும்.

ரமலான்: நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு 4,600 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க ஜெ. உத்தரவு.


சென்னை: ரமலான் நோன்புக்காக 3 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கு 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
உலக முஸ்லீம்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது வழக்கம். இந்த ஆண்டு வரும் 6 அல்லது 7ம் தேதி ரமலான் நோன்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிறையை பார்த்து தான் நோன்பு துவங்கும் என்பதால் தேதியை குறிப்பிட்டுக் கூற முடியாது.
ரமலான் மாதத்தை வரவேற்க உலக முஸ்லீம்கள் தயாராகிவிட்டனர். நோன்பு நேரத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு திறக்க கஞ்சி காய்ச்சுவது வழக்கம். தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிக்க பச்சரிசி வழங்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
ரமலான் நோன்புக்காக மாநிலத்தில் உள்ள 3 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கு 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்கப்படும். ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க பச்சரிசி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

2017-ம் ஆண்டு சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டி: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள்


ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் 2017-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறு கிறது. இன்னும் ஒருவருட காலம் உள்ள நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ளன.
2015-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் இந்த தொடரில் கலந்து கொள்கின்றன. இதன்படி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு முதல் நிலை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனான இந்தியாவுக்கு 2-வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது.


சாம்பியன் டிராபி தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவது இது 3-வது முறையாகும். 2004 மற்றும் 2013-ம் ஆண்டுகளிலும் போட்டியை இங்கிலாந்தே நடத்தியது. இரு முறையும் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடரில் கலந்து கொள்ளும் 8 அணி களும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட் டுள்ளது. போட்டியை நடத்தும் இங்கி லாந்து ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் ஆஸ்திரேலியா, நியூஸி லாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளும் உள்ளன. பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.
18 நாட்கள் நடத்தப்படும் இந்த தொடரில் மொத்தம் 15 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. கார்டிப், ஓவல், எட்ஜ்பஸ்டன் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இறுதிப்போட்டி ஜூன் 18-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரின் முதல் ஆட்டத்தில் ஜூன் 1-ம் தேதி இங்கிலாந்து-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் ஆட் டத்தில் 4-ம் தேதி பாகிஸ்தானுடன் மோது கிறது. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணி களுடன் தலா ஒரு முறை மோதும்.
புள்ளிகள் அடிப்படையில் இரு பிரிவிலும் இருந்து தலா இரு அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். அரையிறுதி ஆட்டங்கள் 14 மற்றும் 15-ம் தேதிகளில் நடைபெறுகிறது. 19-ம் தேதி ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18-ம் தேதி நடத்தப்படும் இறுதிப்போட்டி ஒருவேளை மழை காரணமாக பாதிக்கப்பட்டால் 19-ம் தேதி நடைபெறும்.
இதுவரை
1998 முதல் ஐசிசி சாம்பியன் டிராபி நடத்தப்பட்டு வருகிறது. இதன் முதல் தொடரை தென் ஆப்ரிக்கா வென்றது. 2000-ம் ஆண்டு நியூஸிலாந்து பட்டம் வென்றது. 2002-ல், இந்தியா, இலங்கை அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன. 2004-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணி மகுடம் சூடியது. 2006, 2009-ல் ஆஸ்திரேலிய அணி கோப்பையை தட்டிச்சென்றது. 2013-ல் இந்தியா கோப்பை வென்றது

சவுதி அரேபியாவில் நேற்று 14 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது:

சவுதி:

சவுதி அரேபியாவில் நேற்று 14 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது:
     உலகமெங்கும் நடந்து வருகிற வன்செயல்கள், சவுதி அரேபியாவையும் விட்டு வைக்கவில்லை. அங்கு 2011-2014 காலகட்டத்தில் போராட்டங்கள் நடத்தி, அதில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, துப்பாக்கியால் சுட்டும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி, பல போலீசாரின் உயிரைப்பறித்த ஷியா பிரிவினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர், ஷியா பிரிவு தலைவர் நிமர் அல் நிமர் ஆவார். இந்த நிமர் அல் நிமர் உள்பட 47 தீவிரவாதிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் ஒரே நாளில் மரண தண்டனையை நிறைவேற்றி, சவுதி அரேபியா அதிரடி நடவடிக்கை எடுத்தது.
      இந்த நிலையில் சவுதி அரேபியாவில் ஷியா பிரிவினர் சிறுபான்மையினராக உள்ள காதிப் பகுதியில் ஆண்டு நடந்த பல்வேறு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய 14 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டின் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. மேலும் 9 பேருக்கு பல்வேறு கால அளவிலான தண்டனையும் விதிக்கப்பட்டது.

Wednesday, 1 June 2016

மரண அறிவிப்பு


மரண அறிவிப்பு
         நமது ஊரை சேர்ந்த ஜஹபர் ஆலிம் அவர்களின் மகனும் ,சாதிக் மற்றும் நைனா முஹம்மது அவர்களின் தம்பியும் ஆகிய கமருதீன் அவர்கள் இன்று காலை 02/06/2016 இறந்து விட்டார் .

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ

வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல..!' - ஜெ. வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து 


ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவின் வாதத்திற்குப் பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது குற்றமல்ல என்றும், பணம் வரும் வழி தவறாக இருந்தால் மட்டுமே அது குற்றம் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று இறுதி வாதம் தொடங்கியது.
முதலில் கர்நாடக அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தனது வாதத்தை முன்வைத்தார். அப்போது, வழக்கின் முக்கிய அம்சங்களை சுருக்கமாக விவரித்து ஆச்சார்யா வாதிட்டார். அவரது வாதத்திற்குப் பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், "வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது எப்படி குற்றமாகும். அது குற்றமல்ல. வருகிற வருமானம் சட்டத்திற்குப் புறம்பான வகையில் இருந்தால்தான் அது குற்றம். மேலும் இந்த சொத்துக்களை வாங்க பயன்படுத்தப்பட்ட பணம் ஜெயலலிதாவுடையது என்று நிரூபிக்க முடியுமா... அதற்கு என்ன ஆதாரம் உள்ளது?" என்று  கேட்டனர்.
ஆச்சார்யா வாதிடுகையில், வருமான வரியைக் கட்டி விட்டதாக கூறி ஜெயலலிதா தப்ப முயற்சிப்பதாகவும், வருமான வரியைக் கட்டுவதால் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததை நியாயப்படுத்த முடியாது என்றும், இதுகுறித்து வருமான வரித்துறை தனது தரப்பு வாதத்தை எடுத்து வைக்கும் என்றும் கூறினார்.
இதன்பிறகு வாதத்தில் சில சந்தேகங்களை நீதிபதிகள் எழுப்பினர். குறிப்பாக, "ஜெயலலிதாவுக்கு லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் சசிகலா பினாமி நிறுவனங்களை நடத்தியதாக கூறியுள்ளீர்கள். ஆனால் அந்த பணம் ஜெயலலிதாவுக்கு உரியது என்பதற்கு ஆதாரம் என்ன? ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கணித தவறு காரணமாக அதை தவறவிட்டுவிட்டதாகவும் வாதிட்டீர்கள். வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறும் நீங்கள், அது சட்ட விரோதமான வகைகளில் சேர்க்கப்பட்ட பணமா என்பதற்கு ஆதாரத்தை சமர்ப்பிக்க முடியுமா? " என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கடைசியாக வாதிட்ட ஆச்சார்யா, " எனது வழக்கறிஞர் தொழிலில் இது மறக்க முடியாத தருணம். நான் இந்த வழக்கின் அனைத்து அம்சங்களையும் விளக்கிக் கூறி விட்டேன். இந்த வழக்கைப் பொறுத்தவரை விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு (ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தலா 4 ஆண்டு சிறை, ரூ.100 கோடி அபராதம்) செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்பதே எனது கடைசி கோரிக்கை. இந்த வாதத்திற்கு அனுமதி அளித்த பெஞ்சுக்கு நன்றி" என்று கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார்.
அதைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இந்த வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி தனது தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தார். 
இதையடுத்து, நிறுவனங்களின் வழக்கு விசாரணையை ஜூன் 7 ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். அன்றைய தினம் நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், கர்நாடக அரசு தரப்பு தனது வாதத்தை முன்வைக்க உள்ளது.

சவுதியில் ரம்ஜான் காலத்தில் வெயிலில் வேலை செய்யத் தடை:

சவுதி:

சவுதியில் ரம்ஜான்  காலத்தில் வெயிலில் வேலை செய்யத் தடை:
    சவுதி தனியார் துறையில் தொழில் புரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி அந்நாட்டு தொழிலாளர் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு ரமழான் காலங்களில் வெயிலில் வேலை செய்வதற்கு தடை விதித்துள்ளது.
  இதற்கமைய எதிர்வரும் ரம்ஜான்  மாதம் 10 ம் பிறை முதல் அமுலுக்கு வரும் வகையில் அதாவது( ஜூன் 15 முதல்) நண்பகல் 12 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை தொழிலார்களை வெயிலில் பணிக்கமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
    இந்த தடை எதிர்வரும் துல் ஹஜ் மாதம் 14 ம் பிறை (செப்டம்பர் 15) வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த தீர்மானம் ஒவ்வொரு வருடம் அமுல் படுத்தப்படும் அதேவேளை, இந்த தீர்மானத்தை அமுல்படுத்துவதில் முறைகேடுகள் நிகழ்ந்தால், அது தொடர்பில் பின்வரும் இணையதளம், அல்லது இலக்கத்துடன் தொடர்ப்பு கொண்டு புகார் செய்யலாம் என அமைச்சு தெரிவித்துள்ளது.
    (19911) அல்லது https://rasd.ma3an.gov.sa.
info@ma3an.gov.sa

சாதனை மாணவன் : 16 வயதில் 22 கண்டுபிடிப்புகள்....!!


சென்னை ஆவடியிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ (எலக்டிரிக்கல்) படித்து வரும் முஹம்மது நதீம் 16 வயதில் 22 கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
இரும்பு கம்பியில் ஒயரை இணைத்து தண்ணீரை சூடாக்கும் வாட்டர் ஹீட்டர் முதலில் உறுவாக்கி இருக்கிறார்.
ஹெல்மட்டில் சிறிய பேன், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டால் ரெயிலுக்கு சிக்னல் காட்டும் கருவி , ஷூ மூலம் இயங்கும் செல்போன் சார்ஜர் , பிரிட்ஜ் இன்வெட்டர், வீட்டு பூட்டை திறந்தால் செல்போன் மூலம் சிக்னல் கொடுக்கும் அலாரம், சோலார் பேனல் வழியே இயங்கும் செல்போன் சார்ஜர் என நீள்கிறது முஹம்மது நதீமின் கண்டுபிடிப்பு பட்டியல்.
மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த முஹம்மது நதீமின் தந்தை பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
அரசாங்கம் முஹம்மது நதீமை அரவணைத்தால் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமையை சேர்ப்பார்.
தகவல் வெளியீடு : தினத்தந்தி

Tuesday, 31 May 2016

ரியாத்தில் ஏர் இந்தியா அதிகாரிகளுடன் இந்திய பிரதிநிதிகள் சந்திப்பு;ரியாத்- திருச்சிராப்பள்ளி இடையே நேரடி விமான சேவை கோரிக்கை:

சவுதி:

ரியாத்தில் ஏர் இந்தியா அதிகாரிகளுடன் இந்திய பிரதிநிதிகள் சந்திப்பு;ரியாத்- திருச்சிராப்பள்ளி இடையே நேரடி விமான சேவை கோரிக்கை:
     ரியாத்தில் உள்ள ஏர்-இந்தியா உயரதிகாரிகளை ரியாத்வாழ் இந்தியர்களின் பிரதிநிதிகளாக சிலர் சென்று ஏர்-இந்தியா நிறுவனத்திடம் பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர்
    தமிழ்நாட்டின் சார்பாக சென்றிருந்த அகமது இம்தியாஸ் பல்வேறு பொதுவான கோரிக்கைகள் வைத்ததுடன் குறிப்பாக திருச்சிராப்பள்ளிக்கு நேரடி விமானசேவை ஏற்படுத்த ஏற்பாடுகள் செய்யும்படி வற்புறுத்தினார்.
     திருச்சிக்கு பன்னாட்டு விமானசேவை நேரடியாக செய்வதில் விமானநிலைய சட்டதிட்டங்களில் சில சட்டசிக்கல்கள் உள்ளதனை எடுத்துக்கூறி விரைவில் அதனை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்வதாக கூறினர்.
     அதுவரை மும்பை, சென்னை போன்ற இடங்களில் வந்திறங்கும் பன்னாட்டு விமானங்களில் திருச்சிக்கு செல்வதற்கு ரியாத் / திருச்சி போன்ற புறப்படுமிடத்திலிருந்தே போர்டிங்பாஸ் விநியோகிக்குமாறு கேட்டுக்கொண்டதில் அதனை விரைவில் செய்துதருவதற்கு ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளனர்.
  இந்த செய்தி ஒரு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.