கும்பகோணம் அரசு இஞ்னியரிங் கல்லூரியில் (தனியார் கல்லூரி) முஸ்லிம் மாணவிகள் Scarf அணிய தடை, முஸ்லிம் மாணவர்கள் தாடி வைக்க தடை, முஸ்லிம் மாணவர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த தடை என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக வந்தவண்ணம் இருக்கும்.
இதுதொடர்பாக நம் சகோதரர்கள் முதல்வரின் தனி பிரிவுக்கு புகார் அளித்து அவர்கள் இதுதொடர்பாக விளக்கம் கேட்டு அந்த கல்லூரிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அந்த கல்லூரியும் அவர்களுக்கு பதில் அளித்துள்ளது. ,
அந்த பதிலில் இந்த கல்லூரியில் Scarf அணிவதற்கோ, தாடி வைப்பதற்கோ, வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நடத்துவதற்கோ எந்த தடையும் கல்லூரியில் விதிக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
எனவே கல்லூரி நிர்வாகம் முதல்வரின் தனிப்பிரிவுவுக்கு அனுப்பியுள்ள கடித்தத்தை இப்பதிவில் இணைக்கிறோம்.
கும்பகோணம் அரசு கல்லூரியில் இனிவரும் காலங்களில் தடை எதுவும் தெரிவித்தால் இந்த கடிதத்தை அவர்களிடம் பெற்றோர்களும், மாணவர்களும் காட்டுங்கள்.
- முகநூல் முஸ்லிம் மீடியா

No comments:
Post a Comment