Tuesday, 12 January 2016

மீடியா உலகில் TNTJ சாதித்தது என்ன ?



முகநூல் முஸ்லிம் மீடியாவில் TNTJ சம்பந்தமாக ஏதேனும் ஒரு பதிவை வெளியிட்டால் உடனே முகநூல் முஸ்லிம் மீடியா TNTJ யின் கை கூலி மீடியா என்றும் மீடியாவின் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள் என்றும் சிலர் கருத்திடுவதை காண முடிகிறது.

இவ்வாறு கருத்திடுபவர்களின் மனதில் TNTJ வுக்கு மீடியா பலமே இல்லாதது போன்றும் நாம் தான் விளம்பரம் கொடுப்பது போன்றும் தவறான எண்ணத்தை மனதில் விதைத்துள்ளார்கள்.

மீடியா உலகில் TNTJ சாதித்தது என்ன என்பது பற்றி இவர்களுக்கு நாம் புரிய வைத்தால் இவர்களின் தவறான புரிதலை நாம் சரி செய்ய முடியும் என்பதற்கே இப்பதிவு...

1. தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து முஸ்லிம் இயக்கங்களில் தினந்தோறும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்தும் ஒரே அமைப்பு TNTJ மட்டுமே, மற்ற இயக்கங்களால் வாரம் ஒரு முறையோ அல்லது வாரம் இரு முறையோ மட்டும் நடத்த முடிகிறது. பெரும்பாலான முஸ்லிம் இயக்கங்களுக்கு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்தவே முடியவில்லை.

2. தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து முஸ்லிம் இயக்கங்களில் உள்ள பத்திரிக்கைகளில் TNTJ யின் உணர்வு பத்திரிக்கை தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.

3. மார்க்கம் சம்பந்தமாக வெளியாகும் பத்திரிக்கைகளில் TNTJ யின் ஏகத்துவம் பத்திரிக்கையே முதலிடம் இருக்கிறது.

4. பெண்களுக்காக வெளியாகும் பத்திரிக்கைகளில் TNTJ யின் தீன்குலப்பெண்மணியே முதலிடம் இருக்கிறது.

5. ஐந்து கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை தாண்டிய ஆன்லைன்பீஜே இணையதளம்.

6. நான்கு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை தாண்டிய TNTJ இணையதளம்.

7. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின் தொடர்பாளர்களை கொண்ட தமிழ் முகநூல் பக்கம், பல்லாயிரக்கணக்கான பின் தொடர்பாளர்களை கொண்ட ஆங்கில முகநூல் பக்கம்.

மேலே சொன்ன மீடியாக்கள் அனைத்தும் ஜுஜுபி மேட்டர், தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ திடீரென்று தடை படலாம், ஆனால் தடையே போட முடியாத அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஓர் மீடியா TNTJ விடம் இருக்கிறது. அதைப்பற்றி தான் அடுத்ததாக சொல்லப்போகிறோம்.

8. இந்த உலகத்திற்கே சக்தி வாய்ந்த ஒரே மீடியா என்றால் அது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கொடுத்த ஜும்ஆ என்ற சக்தி வாய்ந்த மீடியா மட்டும் தான்...

TNTJ நிர்வாகத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிவாசல்கள் இயங்கி கொண்டிருக்கிறது. அவற்றில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கு கொள்ளும் இடம் ஜும்ஆ, ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஒரே செய்தியை லட்சக்கணக்கான மக்களுக்கு கொண்டு செல்லும் சக்தி வாய்ந்த ஜும்ஆ என்ற மீடியா TNTJ விடம் இருக்கிறது.

லட்சக்கணக்கில், கோடி கணக்கில் செலவு செய்து மாநாட்டை நடத்தினாலும் அதில் சிலர் வருவார்கள், சிலர் வர மாட்டார்கள், ஆனால் ஜும்ஆவில் அனைத்து முஸ்லிம்களும் ஆஜர் ஆகி விடுவார்கள்.

மீடியா உலகில் இவ்வளவு சக்தி வாய்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு முகநூல் முஸ்லிம் மீடியா விளம்பரம் கொடுக்கிறது என்று சம்பந்தமே இல்லாமல் எழுதி TNTJ மீதான காழ்புணர்ச்சியை மட்டுமே கொட்டுகிறார்கள்.

ஊடகங்களால் முஸ்லிம் சமுதாயம் கடுமையாக புறக்கணிக்கப்பட்டும் TNTJ மீடியா உலகில் சாதித்தது அதிகம் என்ற உண்மையை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment