திருவாரூர் மாவட்டம் பேரளம் கோவிந்த சேரி பகுதியை சேர்ந்த மாரியப்பன் வயது 42 , இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சவூதிக்கு வேலைக்கு சென்றார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 29 ம் தேதியன்று இவருக்கு திடீரென மாரடைப்பு உயிரிழந்தார். இதையறிந்த அவரது குடும்பத்தினர் பல வழிகளில் முயற்சி செய்தும் உடலை தாயகம் கொண்டு வர இயலவில்லை.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் SDPI கட்சியினரை தொடர்புகொண்டு மாரியப்பனின் உடலை தாயகம் கொண்டுவர உதவி செய்யும் படி கோரிக்கை விடுத்தனர். SDPI கட்சியினர் சவுதியிலுள்ள இந்தியன் சோஷியல் ஃபோரம் (ISF) அமைப்பினரை தொடர்புகொண்டனர். அதன்படி மாரியப்பனின் உடலை தாயகம் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை ISF மேற்கொண்டது.
இந்நிலையில் ஐ.எஸ்.எஃப் முயற்சியால் இன்று (ஜனவரி.11) காலை 9.40 மணியளவில் திருச்சி விமான நிலையத்திற்கு Srilankan Air lines விமானம் மூலமாக மாரியப்பனின் உடல் கொண்டுவரப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
SDPI கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் SS ரகுமத்துல்லா, மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட நிர்வாகி முஸ்தபா, ஊடக செய்தி தொடர்பாளர் M.காதர் மற்றும் ஏர்போர்ட் கிளை நிர்வாகிகள், எ.புதூர் கிளை நிர்வாகிகள் மீரான் மைதீன் ஆகியோர் உடலை விமானநிலையத்திலிருந்து பெற்று ஆம்புலன்ஸ் மூலம் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இறந்த தமிழர் மாரியப்பன் அவர்களுக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். SDPI கட்சியின் இந்த மனித நேய பணியை கண்டு அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சி அடைந்து நன்றி தெரிவித்தனர்.


No comments:
Post a Comment