Tuesday, 12 January 2016

‪#‎சென்னை‬ ‪#‎கனமழை‬-வெள்ளத்தின் போது காணாமல் போன ‪#‎அறந்தாங்கி‬ ‪#‎இளைஞர்‬ உடல் ஒரு மாதம் கழிந்து மீட்பு!



**************
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த மாதம் டிசம்பர் 1,2 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை மற்றும் மழை வெள்ளம் பெரும் சேதத்தை விளைவித்தது. அந்த கனமழை வெள்ளத்தின் போது (2.12.2015 அன்று), தாம்பரம் அருகே உள்ள கிஷ்கிந்தா ரோடு அருகே உள்ள வெங்கடேஸ்வரா நகரில் உள்ள வீட்டில் தங்கியிருந்த, தனியார் நிறுவன ஊழியர்களான புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் மேலப்பட்டை சேர்ந்த அப்துல் முத்தலீப் அவர்களுடைய மகன் அசாருதீன் (வயது 20) மற்றும் அவருடன் தங்கியிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்களத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரின் மகன் அருண்குமார் ஆகியோர் காணாமல் போயினர். வெள்ளம் வடிந்து முழுமையாக சகஜநிலை திரும்பியும் அவர்களை காணவில்லை. இதுகுறித்து அவர்களின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் காவல்துறையும் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டது.
இந்நிலையில் கடந்த 10.1.2016 அன்று மாலை 4 மணி அளவில், தாம்பரம் முடுச்சூர் ஏரியில் ஒரு சடலம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த தனியார் கம்பெனி அடையாள அட்டை மூலமாக அது அசாருதீன் என்பதை உறுதி செய்தனர்.
அதன் பேரில் ‪#‎SDPI‬ கட்சி செயல்வீரர் சாகுல் நேரில் சென்று அசாருதீனின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்தார். மேலும் #SDPI கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜூனைது அன்சாரி, துறைமுகம் தொகுதி செயற்குழு உறுப்பினர் கட்டுமாவடி சாதிக் ஆகியோரிடம் #SDPI கட்சி செயல்வீரர் சாகுல் தகவலை தெரிவித்தார்.
இதையடுத்து அசாருதீன் உடலை பெற்று சொந்த ஊரான அறந்தாங்கி அருகில் உள்ள மேலப்பட்டிற்க்கு கொண்டு செல்வதற்கு மத்திய சென்னை மாவட்ட தலைவர் நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி #SDPI கட்சி ஆம்புலன்ஸ் மூலமாக அசாருதீனின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

No comments:

Post a Comment