📌 பாசத்திற்குறிய பாக்கர் காக்காவின் நகமும் சதையுமான பால்ய நண்பர் தேவநாதன். தேவநாதன் முஸ்லிம்களுக்கு அப்படி என்ன துரோகம் செய்து விட்டார் என்று கேட்கிறீர்களா?
📌 அதுதான் கொடுமையிலும் கொடுமை. இத்தனை காலம் தொப்புள் கொடி சகோதரனாக பார்த்து வந்த வின்டிவி தேவநாதனின் சாயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்க ஆரம்பித்து விட்டது. பாஜகாவில் இனைந்தது முதல் கடந்த அக்டோபர் மாதம் நெல்லையில் தேவநாதனின் இந்திய கல்வி முன்னேற்றக் கழகம் சார்பில் வீரன் அழகுமுத்து சிலை திறப்பு விழாவில் பாஜக சார்பில் டவுசர் பொன்னாரும் முரளிதரராவும் கலந்து கொண்டார்கள்.
📌 சரி இது ஏதோ மத்திய அமைச்சர் என்பதால் பொன்.ராதா கலந்து கொண்டார் என்று எடுத்துக் கொள்ளலாம். முரளிதரராவ் ஏன் கலந்து கொண்டார் என்று தெரியவில்லை. ஆனால் அப்போதும் இஸ்லாமிய சமூகம் உங்கள் மீது சந்தேகம் கொள்ளவில்லை. ஆனால் நேற்று நீங்கள் பார்த்த ஒரு கேவலமான வேலை உங்களை எங்களில் ஒருவனாக நினைத்த தமிழக முஸ்லிம்களின் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சி விட்டது என்பதை அந்த வலியை உணர்ந்தவனாக இங்கே எழுதுகிறேன்.
தமிழக மக்கள் மீது வெடிகுண்டு வீசி கலவரம் செய்து கொலை செய்ய வெடிமருந்துகள் திரட்டிய பயங்கரவாதியும், முஸ்லிம்களையும் முஸ்லிம்கள் தங்களின் உயிருக்கு மேலாக மதிக்கும் எங்கள் தலைவர் முகமது நபி (ஸல்) அவர்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி எங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி எங்களைக் கோபமூட்டி வந்த அயோக்கியன் கல்யாணராமனை உங்கள் அமைப்பைச் சேர்ந்த #குணசீலன்_யாதவ் நேற்று உங்கள் சார்பாக புழல் சிறைக்குச் சென்று பார்த்து விட்டு வந்து விட்டு வந்ததாக சொல்லியிருக்கிறார். அதுவும் எங்கே சவுண்டு சரோசா காஞ்சனா அக்கா நேற்று கல்யாணராமனைச் சந்தித்து விட்டு வந்தாரே வந்து அதை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் போட்டாரே அதன் காலடியில் இந்தச் செய்தியை பதித்துள்ளார் குணசீலன்யாதவ்.
குணசீலன் யாதவுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று நீங்கள் மறுக்கவே இயலாது. காரணம் குணசீலன் யாதவ் தான் உங்கள் அமைப்பின் துணைத்தலைவர். ஆக இது உங்களை சகோதரர்களாக நம்பிய இஸ்லாமியர்களுக்கு நீங்கள் செய்த பச்சைதுரோகம்.
உங்கள் முன்னேற்றத்திற்கு முஸ்லிம்கள் குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த முஸ்ளிம்களின் பங்கு என்ன என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா தேவநாதன்? உங்கள் வின் தொலைக்காட்சியை தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் உலகம் முழுக்க விளம்பரம் செய்து எடுத்துச் சென்றது எங்கள் சமுதாயம் என்பதை மறந்து விட்டீர்களா?
💥 சகோ. பீஜே உள்ளிட்ட தவ்ஹீத் ஜமாஅத் தாயீக்களின் நிகழ்ச்சிகளை வைத்து தான் வின் டிவியும் தன்னை வளப்படுத்திக் கொண்டது என்பதை ஏன் நீங்கள் மறந்தீர்கள்?
📌 ஆக்டோபஸ் போல சுமங்கலி கேபிள் விசன்(SCV) குழுமம் வின் டிவியை இருட்டடிப்பு செய்த போது எங்களுக்கு வின் டிவி நிகழ்ச்சிகள் அவசியம் தேவை என ஆர்ப்பாட்டம் மட்டுமே செய்யவில்லை, அந்த அளவிற்கு வின்டிவியை சுமங்கலியிடமிருந்து மீட்டது தவ்ஹீத் ஜமாஅத்தின் முஸ்லிம்கள் என்பதை ஏன் மறந்தீர்கள்?
ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு வின் டிவி என்றால் என்னவென்றே தெரியாதிருந்த நிலையில் ஒவ்வொரு கிராமத்திலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக எழுதப்பட்ட சுவர் விளம்பரங்களிலும் வின் டிவி பாருங்கள் என்று சேர்த்து எழுதி உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களை மிரட்டாத குறையாக தினசரி கேபிள் ஆப்பரேட்டர் ரூமிற்கு படையெடுத்து அந்தந்த ஊரில் வின்டிவி தெரியவைக்க எங்கள் மக்கள் பட்டபாடு உங்களுக்குத் தெரியாதா?
📌 முஸ்லிம்கள் சார்பாக நடத்தப்படும் மூன் டிவி இன்றுவரை பல இஸ்லாமிய ஊர்களில் தெரியாமல் இருக்கிறது. நாங்கள் வின் டிவிக்காக ஒவ்வொரு ஊரிலும் போராடிய போராட்டத்தில் ஒரு துளியைக் கூட வேறு கொள்கை சார்ந்த முஸ்லிம்கள் கூட மூன் டிவிக்காக செய்யவில்லையே! இதை உங்களால் மறுக்கமுடியுமா தேவநாதன்?
⌛ ஒரு கட்டத்தில் வின்டிவி இழுத்து மூடும் நிலை வந்த போது அதை தூக்கி நிறுத்தியது யார்? இப்போது நீங்கள் சேர்ந்து நின்று போட்டோ எடுக்கும் #பொன்னாரும் வெடிகுண்டு பயங்கரவாதி #கல்யாணராமனுமா? இல்லை.
💥 முழுக்க முழுக்க வின்டிவியை தூக்கி நிறுத்தியது தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள். அதற்கு காரணம் சகோ.பீஜே வின் டிவியுடனும் உங்களுடனும் நட்பாய் இருக்கிறார் என்பதால் அன்றி வேறென்ன? எங்கள் ஜமாஅத்தின் மீது கொண்ட கொள்கைப் பிடிப்பு வின் டிவி தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியது.
💯 பீஜே சொன்னால் பல லட்சம் ரூபாயை சும்மாவே கொடுப்போம் என பல வளைகுடா சகோதரர்கள் கைகளை உயர்த்த, இது பங்குப் பண வியாபாரமாக காட்டப்பட்டதால் சகோ.பீஜே எனக்குத் தெரியாது, அவரவர்கள் இதை சரிபார்த்துக்
கொள்ளுங்கள் என்று ஒதுங்கிக் கொண்டார். ஆனாலும்
தேவநாதனுக்கும் பாக்கருக்கும் போடப்பட்ட ஒப்பந்தத்தில் சகோ.பீஜே சாட்சிக் கையெழுத்து போட்டிருக்கிறார் என்ற செய்தி தெரிந்து பல வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்கள் பொருளாதாரங்களை அள்ளித்தந்தனர். அதில் பாக்கர் மோசடி செய்தார் என்பது வேறு விசயம். அதன்மூலம் வின்டிவி தொடர்ந்து இயக்கப்பட்டதை ஏன் மறந்தீர்கள் தேவநாதன்?
உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், யாதவ-முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்கும் பாடுபட்ட முஸ்லிம்கள கருவறுக்க வேண்டும் என்று துடிக்கும் #பாஜகவுடன் கேவலம் அரசியல் சுகத்திற்காக நீங்கள் கூட்டு வைத்ததைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் ஊரே #காரித்துப்பும் #கல்யாணராமன் என்ற சதிகாரனை உங்கள் இயக்கம் சார்பாக சந்திக்க வைக்க வேண்டிய நிலை உங்களுக்கு என்ன வந்தது?
இனிமேல் உங்கள் முகத்தில் விழிக்க எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது தேவநாதன். இனி உங்களைக் குறித்து பேசவேண்டாம் என்றே நினைக்கிறேன். தன் சமுதாயத்தை நோக்கி உன் நலனைப் பார்க்காதே! வன்னியர்கள் நம் உடன்பிறந்தவர்கள் அவர்கள் நலப்பாருங்கள் என்று இறுதிவரை இஸ்லாமியர்களை பாமகவில் சேர்த்த பழனிபாபாவை நம்ம வைத்து கழுத்தறுத்த ராமதாஸின் துரோகத்தை அப்படியே இப்போது எங்கள் முன்னால் கொண்டு வந்து காட்டுகிறீர்கள். நல்லாயிருங்க.
#அண்ணன்_பாக்கர்_அவர்களே!
இப்போது உங்கள் நிலை என்ன? நீங்கள் பார்த்துப் பார்த்து செதுக்கிய அண்ணன் தேவநாதன் உங்களையும் எங்களையும் அழிக்கக் காத்திருக்கும் காவி பயங்கரவாதிகளுக்கு கை கொடுத்திருக்கிறார். வின் டிவியில் பங்குதாரராக பதவி வகிக்கும் நீங்கள் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? அண்ணன் பாக்கரின் அறிக்கையை இஸ்லாமிய சமூகமே இப்போது ஆர்வத்துடன் எதிர்நோக்கத் துவங்கிவிட்டது.
எழுத்து : அஹ்மத் கபீர்




No comments:
Post a Comment