Wednesday, 13 January 2016

ஜெயலலிதா திட்டமிட்டே ஏமாற்றி விட்டார் : TNTJ தலைவர் பேட்டி.....!!


ஜெயலலிதா திட்டமிட்டே ஏமாற்றி விட்டார் : TNTJ தலைவர் பேட்டி.....!!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபியிடம் எழுதுகோல் பத்திரிக்கை நடத்திய பேட்டியில்....
இட ஒதுக்கீடு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்....
தேர்தலின்போது ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டார். ஆனால் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை மட்டும் கிடப்பில் போட்டுள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் 2, 3 மாதங்கள் உள்ள நிலையில் ஜெயலலிதா அரசு இப்போது நினைத்தாலும் இட ஒதுக்கீடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியும், அதற்கான அவகாசம் இருக்கிறது.
ஆனால் அப்படி அவர் செய்ய முன்வராத பட்சத்தில் முஸ்லிம்களை திட்டமிட்டே ஏமாற்றியதாக தான் கருதப்படும்.
எங்களது செயற்குழுவில் கூட இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
எங்களது ஷிர்க் ஒழிப்பு மாநாடு முடிந்த பின் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்காக வலுவான போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். போராட்டங்களின் காரணமாக ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து உரிமைகளை மீட்டெடுப்போம்.
மேற்கண்டவாறு TNTJ தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி பதிலளித்துள்ளார்.

No comments:

Post a Comment