அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், நாட்டில் உள்ள எல்லா கிராமங்களிலும் ராமர் கோயில் கட்ட விஸ்வ இந்து பரிஷத் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) செய்தித் தொடர் பாளர் ஷரத் சர்மா நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரம்தான் வரவுள்ள தேர்தலில் முக்கிய இடம்பெறும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், உத்தரப் பிரதேச மாநில அரசியலில் இப்போதே ராமர் கோயில் முக்கிய இடம்பிடிக்க தொடங்கிவிட்டது.
இப்போதே ராமர் கோயில் விவகாரம் குறித்து எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டனர். இந் நிலையில், நாட்டில் உள்ள எல்லா கிராமங்களிலும் ராமர் கோயில் கட்ட விஎச்பி முடிவு செய்துள்ளது.
ஏப்ரல் 15-ம் தேதி ராம நவமியில் இருந்து 7 நாள் ராம் மகோத்சவத்தை விஎச்பி நடத்த உள்ளது. இந்த நாட்களில் எல்லா கிராமங்களில் ராமர் வழி பாட்டுக்கு ஏற்பாடு செய்யப்படும். அதன்படி நாட்டில் உள்ள 1.25 லட்சம் கிராமங்களில் ராமர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்படும். ஏற் கெனவே நடத்திய ராம் மகோத் சவங்களில் 75 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்களில் ராமர் வழிபாடு நடத்தி இருக்கிறோம்.
இவ்வாறு ஷரத் சர்மா கூறினார்.
விஸ்வ இந்து பரிஷத் மூத்த தலைவர் சாத்வி பிராச்சி, மீரட் நகரில் நேற்று கூறியதாவது: ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக கற்களை குவித்து வருகிறோம். வரும் 2017-ம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து உத்தரப் பிரதேச அரசு கூறுகையில், ‘‘நீதிமன்ற உத்தரவு இல்லாமல், அயோத்தி யில் எந்த கோயிலும் கட்ட அனு மதிக்க மாட்டோம்’’ என்று திட்ட வட்டமாக கூறியுள்ளது

No comments:
Post a Comment