புதுடெல்லி, ஜன. 7-

இந்திய சுற்றுலாத்துறையை பிரபலப்படுத்தும் நோக்கில் வியக்கத்தக்க இந்தியா (incredible india) என்ற பிரச்சார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில், தூதர் பொறுப்பில் இருந்து அமீர்கான் நீக்கப்பட்டதாக நேற்று காலை மும்பை ஊடகங்களில் செய்தி வெளியானது. முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்துவிட்டதால் நாம் இந்தியாவை விட்டு வெளியேறலாமா? என எனது மனைவி என்னிடம் கேட்டார் என்று அமீர்கான் கூறியிருந்தது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அமீர்கான் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது.
இருப்பினும், இத்தகவலை மத்திய சுற்றுலா அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்தது. ஆனால் மத்திய சுற்றுலா மந்திரி மகேஷ் சர்மா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “வியக்கத்தக்க இந்தியா திட்டத்திற்காக விளம்பர நிறுவனமான மெக்கேன் எரிக்சன் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே விளம்பர தூதராக செயல்பட்டுவந்த அமீர்கான் ஒப்பந்தமும் முடிவுக்கு வந்துவிட்டது” என்று விளக்கமளித்தார்.
இந்நிலையில், நான் தூதுவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தியா எப்பொழுதும் வியக்கத்தக்க இந்தியாவாக தான் இருக்கும் என்று அமீர்கான் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அமீர்கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மக்களின் சேவைக்காக இதுவரை நான் நடித்துள்ள விளம்பர படங்கள் அனைத்தும் எனக்கு சம்பளம் இல்லாமல் எடுக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்னுடைய நாட்டிற்கு சேவை செய்வது எனக்கு கிடைத்த மரியாதை தான். அப்படித்தான் நான் இருந்திருக்கிறேன்.
திட்டங்களின் பிரச்சாரத்திற்கு விளம்பரத் தூதர் வேண்டுமா வேண்டாமா என்பதும், அப்படி வேண்டுமென்றாலும் யாரை நியமிப்பது என்பதும் அரசின் முடிவுதான். என்னை சேவைக்கான பொறுப்பில் இருந்து நீக்கிய அரசின் முடிவினை நான் மதிக்கிறேன். நாட்டிற்கு எது சரியோ அந்த நடவடிக்கையை அவர்கள் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
வியக்கத்தக்க இந்தியா பிரச்சாரத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக விளம்பர தூதுவராக இருந்ததற்கு நாம் பெருமைப்படுகிறேன். நாட்டிற்கு சேவை செய்ய எப்போதும் தயாராகவே உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்

No comments:
Post a Comment