Friday, 22 January 2016

பாஜக நிர்வாகிகள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைப்பு....!!



ஏர்வாடி காஜா முகைதீன் படுகொலையில் கைது செய்யப்பட்ட 7 பயங்கரவாதிகளில் 2 முக்கிய பாஜக நிர்வாகிகள் முத்துராமன், கதீர்வேல் சாமி ஆகியோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சட்டம் ஒழுங்கை சீரிய முறையில் நிலைநாட்டிய தமிழக காவல்துறைக்கு பொதுமக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இறைதூதர் முஹம்மது நபி உலகில் மிகச் சிறந்த இராணுவ தளபதி -ஆய்வில் தகவல்




இறைதூதர் முஹம்மது நபி உலகில் மிகச் சிறந்த இராணுவ தளபதி -ஆய்வில் தகவல்
அமெரிக்க அரச பணி மற்றும் உளவு நிறுவனங்களில் கடமையாற்றிய அமெரிக்க முக்கியஸ்தர் ரிச்சர்ஸ் என்பவர் உலகில் சிறந்த இராணுவத்தளபதிகள் தொடர்பான ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தார்.
சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் குறித்த ஆய்வு முடிவுகளின் படி
இறைதூதர் முஹம்மது நபி உலகில் மிகச் சிறந்த இராணுவ தளபதி என்று தெரிவித்துள்ளார்

ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தடுக்க முடியாது – உயர் நீதி மன்றம் அதிரடிஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தடுக்க முடியாது – உயர் நீதி மன்றம் அதிரடி



முஸ்லிம்களின் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எதிர்வரும் ஜனவரி 31ல் திருச்சியில் நடத்தவிருக்கும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை நடத்தவிடாமல் சில வதந்திகள் பரவும் நிலையில் அது குறித்த தெளிவை அறிய தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் இது குறித்த பல கேள்விகளையும் அதற்கு தவ்ஹீத் ஜமாத்தினரின் பதிலையும் இங்கே பதிவிடுகிறோம்.
மாநாடு எதற்காக ?
ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை ஏன் நடத்துகிறீர்கள் ? சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆள் சேர்க்கவா ?
பதில்:தவ்ஹீத் ஜமாஅத் என்ப்து அரசியல் கட்சியோ அல்லது தேர்தலில் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் சார்பு இயக்கமோ கிடையாது.
எங்களுக்கு ஓட்டோ , சீட்டோ , நோட்டோ வேண்டாம் என நாங்கள் இருக்கிறோம். நாங்கள் மார்க்க மற்றும் மனிதநேயப்பணி செய்யும் அமைப்பாக இருந்தோம், தற்போதும் இருக்கிறோம்.அதன்படியே வெள்ள நிவாரணம் , தமிழக அளவில் அதிக இரத்ததான கொடையாளர்களைக்கொண்டு மனிதநேயப்பணியில் முதலிடம் வகிக்கிறோம் ,
ஷிர்க் ஒழிப்பு என்றால் என்ன?
பதில்:ஷிர்க் என்றால் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் என்று பொருள்.முஸ்லிம்கள் அதிகமானோர் அல்லாஹ்வை வணங்குவதாகச் சொல்லி விட்டு சமாதியில் வழிபடும் அவலத்தை மாற்றவே இந்த மாநாடு.
இந்த மாநாடு முஸ்லிம்களுக்கு மட்டும்தானா? பிறமதத்தவருக்கு இல்லையா ?
பதில்:இது முஸ்லிம்களுக்கு நடத்தப்படுவதால்தான் ஷிர்க் என்ற அரபு பதம் இடப்பட்டு மாநாடு நடத்துகிறோம்.முதலில் எங்க சமுதாயத்தை திருத்தனும் இல்லையா?. பிறமத்தவர்கள் வந்தால் வரவேற்போம்.
ஷிர்க் ஒழிப்பு என்றால் சிலை , சிலுவை வழிபடும் மக்கள் கோபித்துக்கொள்ளமாட்டார்களா?
பதில்:100 சதம் கோபிக்கவேமாட்டார்கள். இஸ்லாம் சிலை வழிபாட்டையும் சிலுவை வழிபாட்டையும் ஆதரிக்கவில்லை என்பதை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்து கிறித்தவ நண்பர்களிடம் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிவாயிலாக சொல்லியுள்ளோம்.இதுவரை எந்த இந்து கிறித்தவர்களும் எங்களிடம் வம்பு செய்ததில்லை.
மாநாட்டால் நீங்கள் அடையும் பலன் என்ன?
பதில்:முஸ்லிம்கள் மூடநம்பிக்கையிலிருந்து விடுபட்டு ஓர் இறையை மட்டும் வணங்கத் தொடங்கினால் அதுவே மாநாட்டின் பலன்.
மாநாட்டிற்கு செல்லக்கூடாது என ஜமாத்துல் உலமா கட்சி சார்பில் அனைத்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியதாக செய்தி வருதே!
பதில்:அது அந்த இயக்கத்தின் லெட்டர் பேட் இல்லை.போலிகள் செய்த செட்டிங்.ஒரு வேலை  ஜமாத்துல் உலமாவின் கருத்தும் இதுவாக இருப்பின் அதுபற்றிய கவலை எங்களுக்கு இல்லை.
ஏனெனில் ஜமாத்துல் உலமா எங்களை காபிர் (இறைமறுப்பாளன்) என்று இதற்கு முன்னர் கொடுத்த தீர்ப்பை எந்த முஸ்லிமும் அங்கீகரிக்கவில்லை.மாறாக நாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு அலைகடலென வந்துகொண்டிருக்கினற்ர்.
இந்த மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டுமென சிலர் வழக்கு தொடர்வதாக செய்தி கசிகிறதே?
பதில்:உயர் நீதிமன்றமல்ல உச்ச நீதிமன்றமே வந்தாலும் மாநாட்டைத் தடுத்து நிறுத்து சட்டத்தில் முகாந்திரம் இல்லை.
அதறகான காரணங்கள் பல இருக்கின்றனர்.
1.மாநாடு முஸ்லிம்களுக்காகவே நடத்தப்படுவதால் மத மோதல் நடக்க முகாந்திரம் இல்லை.,
2.மாநாடுப் பணி துவங்கி 6 மாதங்கள் அமைதி காத்துவிட்டு தற்போது தடைசெய்யக்கோருவது முட்டாள்தனம்.
3.மாநாடு நடத்துவோர் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிரைக்கொடுத்து உதவியவர்கள்.இவர்களது மாநாட்டால் எந்த இடையூறும் ஏற்படாது.
4.மாநாடு மூடநம்பிக்கைக்கு எதிராக நடப்பதால்  அதை ஆதரிப்பதே ஜனநாயகம்.
5.மாநாட்டால் மந்திரவாதிகளும் சூனியக்காரர்களும் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றுவொருக்கும் பாடம் புகட்டப்படுவதால் பாமர மக்கள் நிம்மதி பெற வழி வகுக்கும்.
மேற்கண்ட காரணங்களால் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தடுக்க முடியாது என உயர் நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கும்.
அதையும் மீறி தடைபட்டால் மாநாட்டிற்கு அதிகமான ஆட்கள் சேரும்.அதுவும் எங்களுக்கு ஓகே.
மாநாடு தடுக்கப்பட்டால் ஆளும் அரசிற்கு ஆபத்து வருமா ?
பதில்:முஸ்லிம்களின் மாநாடு தடுக்கப்பட்டால் ஆளும் அரசு முஸ்லிம் விரோத அரசு என்ற அவப்பெயரை இழக்க நேரிடும்.
உங்கள் மாநாட்டை நீங்கள் கைவிட கோரிக்கை வைக்கப்பட்டால் உங்கள் பதில் .?
பதில்:மாநாட்டை எதிர்ப்போர் திருந்தி உண்மை மார்க்கத்தை ஏற்றதாக அறிவித்தால் மாநாட்டை கைவிடத்த்யார்.
தவ்ஹீத் ஜமாத் தலைவர் அல்தாபி அவர்கள் அதிரடியாக நீக்கப்பட்டதாக செய்தி வருதே?
பதில்:மாநாடு கலைகட்டுவதற்கு இந்த வதந்தியே ஆதாரம். இருப்பின்ம் நீங்கள் கேட்க கேள்விக்கு பதில் வீடியோவில் இருக்கிறது.


Thursday, 21 January 2016

எழுத்துப்பிழையால் மாணவனுக்கு நேர்ந்த கொடுமையை பாருங்கள்!



‘டெரஸ்’ என்பதற்கு பதிலாக ‘டெரரிஸ்ட்’ என மாணவன் எழுதிய எழுத்து பிழையால், காவல்துறையினர் அந்த மாணவனின் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
இங்கிலாந்தின் லார்ங்சேர் (Lancashire) என்ற இடத்தில் உள்ள பள்ளியில் படித்து வரும் 10 வயது மாணவன், தனது ஆங்கில பாடத்தில், நான் மாடி வீட்டில் வசிக்கிறேன் (Terrace house) என்று எழுவதுதற்கு பதிலாக, நான் தீவிரவாத வீட்டில் வசிக்கிறேன் (Terrorist house) என்று எழுதியுள்ளான்.
Terrace என்ற வார்த்தையை Terrorist என்று மாணவன் மாற்றி எழுதியுள்ளதை பார்த்த ஆசிரியர்கள், மாணவனுக்கு தீவிரவாத பின்னணி இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இதுகுறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளே, அம்மாணவனின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்டவைகளை சோதனை செய்துள்ளனர். காவல்துறையினர் மற்றும் ஆசிரியர்களின் மாறுபட்ட அணுகுமுறையால் அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர், “இது சாதரண விஷயம் ஆகும். இது சிறிய எழுத்துப்பிழை, இதனை எளிதில் ஆசிரியர்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அவர்கள் இவ்வாறு செய்ததால் தற்போது எனது மகன் எழுதுவதற்கே பயப்படுகிறான்” எனக் கூறியுள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், எங்களிடம் வந்த புகாரின் அடிப்படையில் சோதனையிட்டோமே தவிர, இதில் யாரையும் பாதுகாப்பதன் நோக்கம் கிடையாது என்றும், தற்போது அப்பள்ளியிலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்

திருச்சியில் நடைபெறும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு டிக்கெட் கிடைக்கவில்லை : சோகத்தில் வளைகுடா வாழ் மக்கள்.....!!



திருச்சியில் நடைபெறும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு சவூதி அரேபியா, துபாய், குவைத், கத்தார், பஹ்ரைன், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளில் பணிப்புரியும் நமது சகோதரர்கள் மாநாட்டில் பங்கு பெறுவதற்கு சென்னை மற்றும் திருச்சி விமான டிக்கெட் ஃபுல்லாகி டிக்கெட் கிடைக்காமல் சோகத்தில் இருப்பதாகவும்....
இதனால் நம் சகோதரர்கள் கூட்டு விமானம் மூலம் தமிழகம் வருவதற்கு முயற்சி செய்வதாகவும் திடீரென்று விமான டிக்கெட் விலையேற்றம் அடைந்துள்ளதாகவும் வளைகுடாவில் பணியாற்றும் நமது சகோதரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கற்பைகாக்க பர்தாதான் [ஹிஜாப்] சிறந்தது. அவசர அவசரமக முஸ்லிம் பெண்களாக மாரும் மேலை நாட்டு பெண்கள் ஏன்?




கற்பைகாக்க பர்தாதான் [ஹிஜாப்] சிறந்தது. அவசர அவசரமக முஸ்லிம் பெண்களாக மாரும் மேலை நாட்டு பெண்கள் ஏன்?


ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடக்குமா ? உளவுத் தகவல்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எனும் முஸ்லிம் பேரியக்கத்தின் சார்பாக நடைபெற்விருக்கும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக் களப்பணிகள் சூடுபிடித்திருக்கும் இவ்வேளையில் இம்மாநாட்டை எப்படியாவது தடுத்து நிறுத்திட சூழ்ச்சிகள் நடப்பதாகவும் மாநாடு குறித்த நோக்கத்தை தவறாக சித்தரிப்பதாகவும் செய்தி வருகிறாது.
இதையடுத்து மாநாடு குறித்த அனைத்து விபரங்களையும் நமது காலைமலர் குழு உளவு செய்துள்ளது.
நாளை எமது தளத்தில்
ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடக்குமா ? என்று தலைப்பில் முழு விபரங்களையும் அரசிடமிருந்து கசிந்த பல உண்மைகளையும் வெளிக்கொண்டுவருவோம்.
காத்திருங்கள் ! காலை வரை !! விடியட்டும் முடிவு தெரிய ….

தவ்ஹீத் ஜமாஅத் யார் என அறிய இந்த வீடியோவைப்பாருங்க

http://kaalaimalar.net/shirk-maanadu/

ஸ்மிருதி ராணியை கைது செய்ய வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. போராட்டம் ( படங்கள் )



ஐதராபாத் பல்கலைக்கழக தலித் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு நீதி விசாரணை கோரியும், தற்கொலைக்கு காரணமான மத்திய அமைச்சர்களை கைது செய்ய வலியுறுத்தியும்  சென்னையில் இன்று தலைமை பொது அஞ்சலகத்தை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம் நடத்தியது.  இந்த முற்றுகை போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம் தலைமை தாங்கினார்.

சிரியாவில் ரஷ்யா தாக்குதலில் தாக்குதலில் 200 குழந்தைகள் உள்பட 1050 பொதுமக்கள் பலி அதிர்ச்சி தகவல்



பெய்ரூட்
சிரியாவில் உள் நாட்டு பேரில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், அதிபர் பஷார் அல் ஆசாத் படைக்கு எதிராக தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்; அதிபர் ஆசாத்துக்கு உதவும் விதமாக  ரஷ்யா போரில் களமிறங்கியது. 
இதையடுத்து வான் வழியாகவும், போர் கப்பல்கள் மூலமாகவும் தங்களது தாக்குதலை நடத்திவருகிறது. அதே வேளையில் ரஷ்யா; ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்வதை விட அதிபருக்கு எதிரான குழுக்கள் மீதும், அப்பாவி பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுவரை 6000 தாக்குதலை மேற்கொண்டுள்ளது
இந்நிலையில் ரஷ்யா நடத்திய தாக்குதலில்தான் அதிக மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.கடந்த 4 மாதங்களில் அதாவது கடந்த செப்டம்பர் 30 ந்தேதியில் இருந்து நடத்திய தாக்குதலில் 200 குழந்தைகள் உள்பட 1050 பொதுமக்கள் கொல்ல்பட்டு உள்ளனர்.
ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் 893 ஐ.எஸ். தீவிரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் பொதுமக்களோ ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இது ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல் காரணமாக இறந்த மக்களின் எண்ணிக்கையை விட அதிகம் சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு தெரிவித்து உள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு : தமிழக வாக்காளர் எண்ணிக்கை 5 கோடியே 79 லட்சமாக உயர்வு



சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி தற்போது தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 79 லட்சத்து 72 ஆயிரமாக உயர்ந்துள்ளது. புதிதாக சுமார் 17 லட்சம் பேர், வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைந்தவர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், பெயர் நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்ய கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதியில் தேதியில் இருந்து அக்டோபர் 24ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, தமிழகம் முழுவதும் பெயர் சேர்க்க, நீக்க 17 லட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 16 லட்சத்து 18 ஆயிரத்து 526 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 
அதன்படி, தமிழகத்தில் 2016ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 79 லட்சத்து 72 ஆயிரத்து 690 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஆண்கள் 2,88,60,889 பேரும், பெண்கள் 2,91,07,418 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 4,383 பேரும் உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிட்டபோது தமிழகத்தில் 5,62,06, 547 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டுள்ள 16 லட்சத்து 18 ஆயிரத்து 526 பேருக்கும் வருகிற 25ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தில் இருந்து புதிய வாக்காளர் அட்டை வழங்கும் பணி தொடங்கும். வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் அவரவர் வீடுகளுக்கே நேரில் வந்து புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படும். புதிதாக விண்ணப்பிக்கும்போது செல்போன் எண் அளித்த சுமார் 8 லட்சம் பேருக்கு எஸ்எம்எஸ் மூலம், உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில்
சேர்க்கப்பட்டுள்ளது என்று தகவல் அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்ப மனு நிராகரிக்கப்பட்டிருந்தாலும், எதற்காக நிராகரிக்கப்பட்டது என்று எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை நாளை முதல் தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளமான http://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். தற்போது வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை சேர்க்க தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தின் மூலம் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணைய இணையதளத்தில்,  வாக்காளர்கள் தங்களது செல்போன் எண்களை பதிவு செய்யும் வசதி  ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்படி செய்யும்போது, தேர்தல் தொடர்பான தகவல்கள்  எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.  ஒவ்வொருவரும் தனித்தனி செல்போன் எண்களை  பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
வடக்கில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி
தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதியில்தான் அதிக வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இங்கு மொத்தமுள்ள 5,75,773 வாக்காளர்களில் ஆண்கள் 2,91,909, பெண்கள் 2,83,819, மூன்றாம் பாலினத்தவர் 45 பேர் உள்ளனர். டெல்டா பகுதியில் குறைந்த வாக்காளர்கள் நாகப்பட்டினம் தொகுதியில் உள்ளனர். இங்கு மொத்தமுள்ள 1,63,189 வாக்காளர்களில் ஆண்கள் 81,038, பெண்கள் 82,151 பேர் உள்ளனர்.

குடும்ப அட்டைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை… என அனைத்துக்கும் வழிகாட்டும் தகவல்கள்



குடும்ப அட்டைக்கு (ஃபேமிலி கார்டு)
விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம்,
முகவரி மாற்றம், புதிய அட்டை
புதிதாக திருமணமான தம்பதி,
தனிக்குடித்தனமாக சென்றால், தங்களுக்கான
குடும்ப அட்டையைப் பெற, ஏற்கெனவே வசித்த
பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம்
(கார்ப்பரேஷன் என்றால் உதவி ஆணையர்,
தாலுகா என்றால் வட்ட வழங்கல் அலுவலர்), தங்கள்
பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து
தங்களது பெயரை நீக்கம் செய்ததற்கான
சான்றிதழைப் பெறவும். பிறகு, தாங்கள்
குடியேறி இருக்கும் பகுதியின் வட்ட வழங்கல்
அலுவலரிடம், புதிய குடும்ப அட்டை
பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி
செய்து, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை,
வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி (அ)
மின்சாரக் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக்,
பாஸ்போர்ட்… இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை
இணைத்து மனு தாக்கல் செய்யவும்.
வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டவர்க
ள், பெற்றோரின் குடும்ப அட்டையைப் பெற
முடியாத சூழலில், தாங்கள் வசிக்கும்
பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் தங்கள்
பெற்றோரின் குடும்ப அட்டை எண்ணையும்,
திருமணப் பதிவு சான்றிதழ் மற்றும் இடது பக்கம்
சொல்லி உள்ளவற்றில் ஏதேனும் ஓர் அடையாள
அட்டையையும் கொடுத்து மனு தாக்கல்
செய்யலாம்.
குடும்ப அட்டை தொலைந்துவிட்டால
ோ அல்லது மிகவும் பழுதடைந்திருந்தாலோ,
வசிக்கும் ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம்
உரிய ஆவணங்களுடன் (பழைய குடும்ப
அட்டையின் நகல்/எண் அல்லது பாஸ்போர்ட், ஆதார்
அட்டை போன்ற பிற அடையாள அட்டைகளுடன்)
மனு தாக்கல் செய்தால், இரண்டு மாதங்களில்
புதிய குடும்ப அட்டை கிடைக்கப் பெறலாம்.
புதிதாகப் பிறந்துள்ள குழந்தையின் பெயரை
குடும்ப அட்டையில் சேர்க்க, குழந்தை பிறந்து
ஒரு வருடம் கழித்து அதன் பிறப்புச் சான்றிதழை
குடும்ப அட்டையுடன் இணைத்துக் கொடுத்தால்
போதும்.
குடும்ப அட்டையில் இருந்து இறந்தவர் பெயரை
நீக்கம் செய்ய, இறந்தவரின் இறப்புச் சான்றிதழை
வாங்கியதும் மூன்று நாட்களுக்குள் குடும்ப
அட்டையுடன் இணைத்து வட்டாட்சியர்
அலுவலரிடம் கொடுத்து நீக்கம்
செய்துகொள்ளலாம்.
குடும்ப அட்டைக்கான மனு விண்ணப்பிக்கப்ப
ட்டு, 60 நாட்களுக்குள் கோரிக்கை
நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தமிழக
அரசின் உத்தரவு. மேலும் குடும்ப அட்டை பெற
செலுத்த வேண்டிய தொகை, ரூபாய் 5 மட்டுமே.
இதில் ஏதேனும் சிக்கல் எழுந்தால், http://www/
consumer.tn.gov.in/contact.htm என்ற தளத்தில் புகார்
அளிக்கலாம்.
குடும்ப அட்டை இரண்டு வண்ணங்களில்
வழங்கப்படுகிறது. பச்சை வண்ண அட்டையில்
ரேஷனில் வழங்கும் அனைத்துப்
பொருட்களையும் பெற முடியும், வெள்ளை
வண்ண அட்டையில் அரிசி தவிர்த்து பாமாயில்,
பருப்பு, சர்க்கரை போன்றவற்றை பெறலாம்.
அடையாளச் சான்றாக மட்டும் குடும்ப அட்டை
இருந்தால் போதும் என்பவர்களுக்கும் வெள்ளை
நிற அட்டையே வழங்கப்படுகிறது.
ரேஷனில் எந்தப் பொருளும் வேண்டாம்,
அடையாள அட்டையாக மட்டும் பயன்படுத்த
வேண்டும் என நினைப்பவர்கள் உங்கள் பகுதியின்
வட்ட வழங்கல் அலுவலரிடம் ‘ஸ்டேட் பேங்க் ஆஃப்
இந்தியா’வில் எடுக்கப்பட்ட 100 ரூபாய்க்கான
டிடி-யுடன் பழைய குடும்ப அட்டையையும்
ஒப்படைத்துவிட்டால்… ஒரு மாதத்தில் ‘என் கார்டு’
என்று சொல்லக்கூடிய வெள்ளை நிற அட்டை
கிடைத்துவிடும்.
புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான
கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்த பிறகு
சம்பந்தப்பட்ட அலுவலர் நேரடியாக வந்து வீடு,
சமையல் அறை போன்றவற்றை
மேற்பார்வையிடுவார் (தனியாக
சமைக்கிறீர்களா, சமையல் எரிவாயுவை
பயன்படுத்துகிறீர்களா போன்ற பரிசோதனைகள்).
அப்படி வருபவர்களை அடையாள அட்டையைப்
பார்த்து உறுதிசெய்த பிறகே அனுமதிக்கவும்.
முகவரி மாற்றத்துக்கு வீட்டு ரசீதுகளை
(வாடகை வீடு என்றால் வீட்டு உரிமையாளரிடம்
கேட்டுப் பெறலாம்) குடும்ப அட்டையுடன்
இணைத்து புதிதாக குடியேறிய பகுதியின்
வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு தாக்கல்
செய்யலாம்.
குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட எந்தக்
கோரிக்கைக்கும், இடைத்தரகர்கள் தவிர்த்து உரிய
அலுவலர்களை நேரில் அணுகுவதே சிறந்தது.
இதுவரை என் குடும்பத்துக்கு குடும்ப
அட்டையே இல்லை’ அல்லது ‘நான் பெற்றோர்
இன்றி அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தேன்’ என்பது
போன்ற காரணங்களுடன் இருப்பவர்கள்,
வெள்ளைத்தாளில் மனு எழுதி ஏரியாவின் வட்ட
வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பிக்கவும். இரண்டு
மாதங்களில் குடும்ப அட்டை கிடைக்கும்.

ஷிர்க் ஒழிப்பு மாநாடு – எதிர்க்கும் தர்கா கமிட்டியினர்



எதிர்வரும் ஜனவரி 31ல் திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடைபெறவிருக்கிறது.
அல்லாக்வை வணங்கும் முஸ்லிம்கள் தர்கா , தட்டு , தாயத்து போன்ற மூடநம்பிக்ககளில் ஈடுவட்டு வருவதைத் தடுத்து முஸ்லிம்கள் அல்லாஹ்வைமட்டும் வணங்க வேண்டும் என்று முஸ்லிம்களை பன்படுத்துவதற்கான மாநாடாக நடைபெறவிருக்கிறத்.இம்மாநாடு நடத்த்ப்படக்கூடாது என தர்கா கமிட்டியினர் சிலர் காவல்துறையில் முறையிட்டனர்.அது குறித்த விமர்சன செய்தி

Wednesday, 20 January 2016

திருச்சியில்... ஜனவரி மாதம் 31 ல்...TNTJ வின் மாநிலம் தழுவிய ஷிர்க் ஒழிப்பு மாநாடு...


இன்ஷா அல்லாஹ்.. இன்னும் 12 நாட்களே உள்ளது...!
அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும்
நாளில் 'நீங்கள் கற்பனை செய்த உங்கள் தெய்வங்கள்
எங்கே?' என்று இணை கற்பித்தோரிடம் கேட்போம்."
(அல் குர்ஆன் 6:22)
தர்கா ஆதாரவாளர்களை வைத்தே தர்காக்களை
தரைமட்டமாக்கும் வகையில் ஷிர்க்கை ஒழித்து
ஏகத்துவத்தை நிலை நாட்ட ஷிர்க் ஒழிப்பு மாநாடு.. தயாராவீர்..!
இறந்தோரை வணங்கும் இழிநிலையை ஒழித்திட ஏகத்துவ சமுதாயமே.. எழுச்சியோடு வா..!
அன்புடன் அழைப்பது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

இன்ஷா அல்லாஹ் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியின் விபரங்கள்...!!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையின் சார்பாக திருச்சியில் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகள் சரியாக மாலை 4:00 மணிக்கு ஆரம்பம் ஆகும் இன்ஷா அல்லாஹ்..
தலைமை உரை...!!
நிகழ்ச்சியின் முதலில் தலைமை உரை
சகோதரர் M.முஹம்மது யூசுஃப் அவர்கள் (பொதுச்செயலாளர்)
ஷிர்க் விழிப்புணர்வு நாடகம்...!!
சிறுவர் சிறுமியர் பங்கேற்கும் ஷிர்க் விழிப்புணர்வு நாடகம் நடைபெறும்.
விவாத மேடை...!!!
தலைப்பு : இணை வைப்பு பெருக பெரிதும் காரணம் ஆலிம்களின் சுயநலமா? அல்லது மக்களின் அலட்சியமா? என்ற தலைப்பில் விவாதமேடை நடைபெரும் இன்ஷா அல்லாஹ்
நடுவர் - M.I.சுலைமான் (மாநில துணைத்தலைவர்)
பங்கேற்போர் :
R.ரஹ்மத்துல்லாஹ், R.அப்துல் கரீம்
இவர்கள் ஒரு குழுவாகவும்,
K.S.அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி, S.ஜமால் உஸ்மானி
இவர்கள் ஒரு குழுவாகவும்
விவாத மேடை நடைபெரும் இன்ஷா அல்லாஹ்...
மந்திர மேடை...!!!
சூனியம் ஒரு பித்தலாட்டமே என்பதை விளக்கும் மேஜிக் ஷோ நிகழ்ச்சி.
மாநில நிர்வாகிகளின் சிறப்புரை நிகழ்ச்சி...!!!
உரை : சகோ.: M.சம்சுல் லுஹா ரஹ்மானி அவர்கள் (மேலான்மை குழு தலைவர்)
தலைப்பு - தடைகளைத் தகர்த்த தவ்ஹீத் புரட்சி.!
உரை : சகோ : P.M.அல்தாஃபி அவர்கள் (மாநில தலைவர்)
தலைப்பு - இணை வைப்பை வேரறுக்கும் இஸ்லாம்.!
உரை : சகோ : P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள்
தலைப்பு - நல்லறங்கள் ஊற்றெடுக்கும் உன்னதத் தவ்ஹீத்.!
மாநாட்டின் தீர்மாணங்கள்...!!!
தீர்மாணங்கள் வாசிப்பவர் சகோ :
M.தவ்பீஃக் அவர்கள் (மாநில துணைப்பொதுச்செயலாளர்.
நன்றியுரை..!
சகோ: M.S.சுலைமான் அவர்கள் (மாநில செயலாளர்)
இணை வைப்பின் வகைகளை விளக்கும் கண்காட்சி அரங்குகள் காலையில் 10:00 மணி யிலிருந்து தொடங்கும் இன்ஷா அல்லாஹ் அனைத்து ஏகத்துவ கொள்கை சொந்தங்கள் அனைவரும் தங்களின் குடும்பத்தோடு இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு இணைவைப்பு நிரந்தர நரகமே என்றும் இறைவனுக்கு இணையில்லா வாழ்க்கை சொர்க்கமே என்பதை விளங்கி அதன்படி நடந்து மறுமையில் வெற்றியை பெற உங்களை வருக வருக என அன்போடு அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

Tuesday, 19 January 2016

இனி கட்டணமின்றி வாட்ஸ்-அப்பை பயன்படுத்தலாம்



சென்னை, 
ஸ்மார்ட் போன்களில் இண்டர் நெட், முகநூல் ஆகிய தகவல் பரிமாற்ற வசதிகளை விட இது விரைவில் எளிதாக சென்றடைவதால் உலகளாவிய அளவில் வாட்ஸ் - அப்பிற்கு அதிக மவுசு கிடைத்துள்ளது.
புகைப்படங்கள் அரிய காட்சிகளுடன், தகவல்களும் உடனுக்குடன் உலகம் முழுவதும் பரிமாறக்கூடிய வசதி இதில் இருப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர் கள் வரை எளிதாக பயன் படுத்துன்கிறனர். உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பேரை ’வாட்ஸ் - அப்’ கவர்ந்து இழுத்துள்ளது என்றால் மிகையாகாது.
நகர மக்களை மட்டுமின்றி கிராமங்களையும் இந்த தகவல் தொழில் நுட்பம் மிக எளிதாக சென்றடைவதால் எல்லோரும் ’வாட்ஸ் - அப்’ வசதியைப் பெற ஸ்மார்ட் போனுக்கு மாறி வருகின்றனர். இத்தகைய வசதியை பயன்படுத்த குறைந்த பட்ச கட்டணமாக ரூ. 67 வசூலிக்கப்பட்டு வந்தது. ஆண்டு சந்தா என்ற வகையில் இதனை பல்வேறு நாடுகளில் உள்ள வாட்ஸ் - அப் வாடிக்கையாளர்கள் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உலகம் முழுவதும் கட்டணமின்றி ’வாட்ஸ் ’ அப்’ பயன்படுத்த லாம் என்றும் இதில் விளம் பரங்கள் எதுவும் இடம் பெறாது என்றும் அறிவிக் கப்பட்டுள்ளது.
இதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நண்பர்கள், குடும்ப உறுப் பினர்களுடன் தகவல் பரிமாறிக் கொள்ள முக்கிய சாதனமாக திகழும் Ôவாட்ஸ்  அப்பை பயன்படுத்த இனி கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் ஆண்டுக்கு பிறகு குறைந்த அளவு கட்டணம் செலுத்த வேண்டும் என ஏற்கனவே ’வாட்ஸ் - அப்’ பயன்படுத்துவோருக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வாட்ஸ் - அப்’ நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்து விட்டதால் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் இது குறித்து ’வாட்ஸ் & அப்’ இணை நிறுவனர் ஜன்கோப் கூறுகையில், ’வாட்ஸ் - அப்’ கட்டணம் செலுத்த பெரும் பாலானவர்களிடம் ’கிரிடிட் கார்டு’ வசதி இல்லாததால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. அதனால் சந்தாவாக வசூலிக் கப்படட தொகை இனி வசூலிக்கப்படாது என தெரி வித்தார்.இந்த அறிவிப்பையட்டி ’வாட்ஸ் - அப்’ பயன் படுத்துவோரின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

அம்மா அழைப்பு மையத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா



பொதுமக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண வகை செய்யும் அம்மா அழைப்பு மையத்தை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.
கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மூலம் தொடர்பு கொள்ளும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை காணொலிக் காட்சி மூலம் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்த மையத்தின் மூலம், பொது மக்களிடமிருந்து அழைப்பு பெறப்பட்டு, அழைப்பவர் விவரம், குறைகள் ஆகியவை கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும்.
அந்த துறையில் எந்த அதிகாரிக்கு அவரது குறைகள் குறித்த விவரம் அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரமும், அழைத்தவருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். மேலும், அவரது குறை குறித்து சம்பந்தப்பட்ட துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விவரமும் தெரிவிக்கப்படும். 
நாளொன்றுக்கு 15,000 அழைப்புகளை ஏற்கும் வகையில், 138 அழைப்பு ஏற்பாளர்களுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக முஸ்லீம் பெண்கள் முகத்திரையை விலக்கி காட்ட வேண்டும் – இங்கிலாந்து பிரதமர் கேட்டு கொண்டார் !



இங்கிலாந்தில் உள்ள 1,90,000 முஸ்லீம் பெண்கள்  ஆங்கிலம் குறைந்த அளவோ அல்லது தெரியாமலோ உள்ளார்கள் என அரசு புள்ளி விவரங்கள் கூறுகிறது. இவர்களுக்காக ஆங்கில அறிவை வளர்த்து கொள்ளும் 20 மில்லியன்  பவுண்ட் மதிப்பிலான புதிய திட்டம் ஒன்றை  டேவிட் கேமரூன்  இன்று தொடங்கி வைத்தார். அப்போது பிபிசியின் ரேடியோ 4 க்கு அளித்த பேட்டியில் டேவிட் கேமரூன் கூறியதாவது:-
முஸ்லீம் பெண்கள் பாதுகாப்பு கராணங்களுக்காக அதிகாரிகள் முகத்தை பார்க்க அவர்களது புர்காவை நீக்க வேண்டும்.இங்கிலாந்தில் தீவிரவாதத்தை சமாளிக்கும் விதமாக எடுக்கும் புதிய முயற்சிக்கு உதவி செய்ய வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்து உள்ளார். மேலும் முக்கியமான சூழ்நிலைகளில் அதிகாரிகள் முகத்தை அடையாளம் காண  பெண்கள் தங்கள் முகத்திரையை அகற்ற வேண்டும். எடுத்துகாட்டாக  நீதிமன்றம்  மற்றும் குடியேற்ற சோதனைகளின் போது.நமது  நாட்டில் மக்கள் அவர்கள் விரும்பும் ஆடையை சுதந்திரமாக அணியலாம். என கூறினார்

காய்கறியின் மூலம் கிடைக்கும் சத்துக்கள்....



யார் யாருக்கு என்னன்ன சத்து வேண்டுமோ, அந்த காய்கறிகளை கொஞ்சம் அதிகம் பயன்படுத்திக்கொள்ளவும்...
வாரம் இருமுறை வாழைப்பூ
மாதம் இருமுறை வாழைத்தண்டு
உடல்நலத்திற்கு நல்லது...

இஸ்லாமிய அரசியல் கூட்டணி.....!!




மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி தொடங்கியது போல் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இஸ்லாமிய அரசியல் கூட்டணி தொடங்க வேண்டும்.
தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து முஸ்லிம் இயக்கங்களில் TNTJ வை தவிர அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் அரசியல் கட்சிகளாக மாறி விட்டன.
ஆகையால் TNTJ வை மட்டும் தவிர்த்து விட்டு அனைத்து இஸ்லாமிய அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இஸ்லாமிய அரசியல் கூட்டணி உருவாக்கி....
முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு, சிறைவாசிகள் விடுதலை ஆகிய இரட்டை கோரிக்கையை மட்டும் முன் வைத்து அதையும் ஏற்றுக்கொண்டு, இஸ்லாமிய அரசியல் கூட்டணிக்கு 30 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கும் கட்சிக்கே இஸ்லாமிய அரசியல் கூட்டணி ஆதரவளிக்கும் என்ற நிலைபாட்டை எடுத்தால் போயஸ் கார்டனும், கோபாலபுரமும் நம்மை தேடி வரும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, மஜ்லிசே இத்திஹாத்தில் முஸ்லிமின், இந்திய தேசிய உள்ளிட்ட இஸ்லாமிய அரசியல் கட்சியை சேர்ந்த சகோதரர்கள் தங்கள் தலைமையை இஸ்லாமிய அரசியல் கூட்டணி உருவாக்குவதற்கு வலியுறுத்த வேண்டும்.
முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு, சிறைவாசிகள் விடுதலை, 30 சட்டமன்ற தொகுதிகளை பெற்றுக்கொண்டு இஸ்லாமிய அரசியல் கூட்டணி சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியை ஆதரிக்கிறதோ அந்த கட்சிக்கு ஆதரவாக முகநூல் முஸ்லிம் மீடியாவும் முழு மூச்சாக பிரச்சாரம் செய்யும்.
ஆதவன் உதிப்பது கிழக்காக இருக்கலாம், நாளைய வெற்றி நமக்காக இருக்கட்டும்.

Monday, 18 January 2016

முஸ்லிம் பள்ளிவாசல் வளாகத்தில் அத்துமீறி தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் என்னும் வஹாபி மதத்தினர் தங்களது 31ஆம் தேதி மாநாடு சுவரொட்டிகளை ஒட்டினர்..



நேற்று கோவை கரும்புக்கடை சேரன் நகர் பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் வளாகத்தில் அத்துமீறி தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் என்னும் வஹாபி மதத்தினர் தங்களது 31ஆம் தேதி மாநாடு சுவரொட்டிகளை ஒட்டினர்.
.
நியாயமாக அதை தட்டிக் கேட்க வந்த கோவை செய்யது என்னும் சகோதரர் ஒருவரை அடாவடியாக சரமாரியாக தாக்கினர். தனி ஆளாக இருந்த செய்யது அவர்களை 15 பேர் கொண்ட TNTJ என்னும் வஹாபி மத காடையர்கள் தாக்கினர்.
.
தற்போது சகோதரர் செய்யது அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
.
ஆகையால் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஜமாத்துல் உலமா சபை தலைவர் மௌலவி அப்துர் ரஹீம் பாகவி இம்தாதி, கோவை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் மௌலவி அபுல் ஹசன் பாகவி, சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பின் தலைவர் இனாயத்துல்லாஹ், கோவை மாவட்ட சுன்னத் மாத் ஐக்கிய பேரவை தலைவர் மௌலவி அஹ்மது கபீர் உலூமி, SYF தலைவர் சகோதரர் கோவை பைசல் ஆகியோரின் தலைமையில் உலமாக்களும், முஸ்லிம் இளைஞர்களும் இன்று நண்பகல் கோவை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை ஆணையர் அவர்களைச் சந்தித்தார்கள்.
.
சந்தித்து தாக்குதல் நடத்திய காடையர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், இவர்கள் இஸ்லாமியர்ளை புண்படுத்த நடத்த இருக்கும் மாநாட்டை தடை செய்யக்கோரியும், தமிழகத்தில் இருக்கும் பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் புகார் மனு அளிக்கப்பட்டது.
.
ஆணையாளர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்கள்.