Monday, 18 January 2016

முஸ்லிம் பள்ளிவாசல் வளாகத்தில் அத்துமீறி தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் என்னும் வஹாபி மதத்தினர் தங்களது 31ஆம் தேதி மாநாடு சுவரொட்டிகளை ஒட்டினர்..



நேற்று கோவை கரும்புக்கடை சேரன் நகர் பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் வளாகத்தில் அத்துமீறி தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் என்னும் வஹாபி மதத்தினர் தங்களது 31ஆம் தேதி மாநாடு சுவரொட்டிகளை ஒட்டினர்.
.
நியாயமாக அதை தட்டிக் கேட்க வந்த கோவை செய்யது என்னும் சகோதரர் ஒருவரை அடாவடியாக சரமாரியாக தாக்கினர். தனி ஆளாக இருந்த செய்யது அவர்களை 15 பேர் கொண்ட TNTJ என்னும் வஹாபி மத காடையர்கள் தாக்கினர்.
.
தற்போது சகோதரர் செய்யது அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
.
ஆகையால் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஜமாத்துல் உலமா சபை தலைவர் மௌலவி அப்துர் ரஹீம் பாகவி இம்தாதி, கோவை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் மௌலவி அபுல் ஹசன் பாகவி, சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பின் தலைவர் இனாயத்துல்லாஹ், கோவை மாவட்ட சுன்னத் மாத் ஐக்கிய பேரவை தலைவர் மௌலவி அஹ்மது கபீர் உலூமி, SYF தலைவர் சகோதரர் கோவை பைசல் ஆகியோரின் தலைமையில் உலமாக்களும், முஸ்லிம் இளைஞர்களும் இன்று நண்பகல் கோவை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை ஆணையர் அவர்களைச் சந்தித்தார்கள்.
.
சந்தித்து தாக்குதல் நடத்திய காடையர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், இவர்கள் இஸ்லாமியர்ளை புண்படுத்த நடத்த இருக்கும் மாநாட்டை தடை செய்யக்கோரியும், தமிழகத்தில் இருக்கும் பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் புகார் மனு அளிக்கப்பட்டது.
.
ஆணையாளர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்கள்.

No comments:

Post a Comment