Saturday, 19 March 2016

புதுப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களே எச்சரிக்கை!! :: பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து அழைக்கிறோம் என்ற போலி அழைப்பை நம்பவேண்டாம்!!!!!


சில மாதங்களாக நமது பேராவூரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் பெரும்பாலோரின் செல்போன் எண்களுக்கு பேராவூரணி பாரத ஸ்டேட் வங்கி [ State Bank Of India ] கிளைமேலாளர் பேசுவதாக அழைப்பு வருகிறது.
இந்த போலி அழைப்புகளை நம்பி யாரும் ஏமாந்துவிட வேண்டாம்...இது போன்ற அழைப்புகள் உங்களது தொலைபேசி எண்ணிற்கு வந்தால் உடனடியாக அழைப்பை துண்டித்து விடுங்கள். மேலும் உடனே சம்பந்தப்பட்ட வங்கி கிளையிலோ, நகர காவல்நிலையத்திலோ உடனடியாக புகார் செய்யுங்கள். இதற்கு மாறாக வங்கிமேலாளர் என்று பேசும் மர்மகும்பலிடம் தொடர்ந்து நீங்கள் உங்களது வங்கிகணக்குகளின் விபரத்தையோ, ஓ.டி.பி எனப்படும் ரகசிய எண்ணையோ அவர்களுக்கு அளித்தால் அவர்களால் இரண்டு நிமிடங்களில் உங்கள் கணக்கு விபரம், இரகசிய எண்கள் திருடப்பட்டு உங்கள் கணக்கில் இருந்து அந்த மோசடி கும்பலால் பணம் திருடப்பட்டுவிடும்.
எனவே இந்தியாவில் எந்த ஒரு  வங்கிகளில் இருந்தும் உங்களிடம் போன் மூலம் தகவல் விசாரிப்பது வழக்கம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
ஆகவே பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பொதுக்களே உஷார்.....!!!

No comments:

Post a Comment