சென்னையில் கூட்டணி குறித்து ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஜவாஹிருல்லா சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து போட்டியிடும் என்று ஜவாஹிருல்லா அறிவித்தார்.
திமுக பொருளாளர் ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சியளிப்பதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அவர் கூறினார். திமுக கூட்டணியில் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைய வேண்டும் எனவும் ஜவாஹிருல்லா விருப்பம் தெரிவித்தார்.

No comments:
Post a Comment