Saturday, 19 March 2016

குவைத்தில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


குவைத்தில் சிக்கி தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 10 பேர் உள்பட 11 பேரை தாயகம் அழைத்து வர, தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். 
இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம், மீன்பிடி தொழிலுக்காக 11 பேர் குவைத் நாட்டிற்கு  சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மீனவர்களை பணி அமர்த்திய படகின் உரிமையாளர் இதுவரை சம்பளம் வழங்காததுடன், அவர்களது விசாவையும் பறித்து கொண்டிருப்பதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 
மேலும் 11 மீனவர்களையும் பொய் வழக்கில் குவைத் போலீசார் 6 மாதம் சிறையில் அடைத்ததையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போது தாயகம் திரும்ப வழியின்றி மீனவர்கள் தவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
எனவே, குவைத்தில் சிக்கி தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 10 பேர் உள்பட 11 பேரை தாயகம் அழைத்து வர, தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியை ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மேலும், மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும், முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்

No comments:

Post a Comment