Wednesday, 16 March 2016

பாரத் மாதா கீ ஜே’ முழங்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறட்டும்: பா.ஜ.க.


கொல்கத்தா: ‘பாரத் மாதா கீ ஜே’ கோஷத்தை முழங்காதவர்கள், நாட்டை விட்டு வெளியேறலாம் என்று பா.ஜ.க. பொதுச் செயலர் கைலாஷ் விஜய்வர்கீயா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளார்.
‘பாரத் மாதா கீ ஜே’ கோஷத்தை முழங்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியிருந்தார். அதற்குப் பதிலடியாக, ”எனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினாலும், ‘பாரத் மாதா கீ ஜே’ முழங்க மாட்டேன் என்று அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் கட்சித் தலைவர் அஸாதுதீன் ஒவைஸி கடந்த திங்கட்கிழமை கூறியிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக கொல்கத்தாவில் கைலாஷ் விஜய்வர்கீயா செய்தியாளர்களிடம் கூறும்போது, ”பாரத் மாதா கீ ஜே கோஷத்தை எழுப்ப விரும்பாதவர்களுக்கு, இந்த நாட்டில் வசிக்க உரிமையில்லை என்று நான் கருதுகிறேன். அவர்கள் வேறு ஏதாவது ஒரு நாட்டுக்கு செல்லட்டும்” என்றா

No comments:

Post a Comment