Tuesday, 15 March 2016

புதுப்பட்டினம் உட்பட மாவட்டம் முழுவதும் ஏப்.15 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் செய்யலாம் :: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


புதுப்பட்டினம் உட்பட மாவட்டம் முழுவதும் ஏப்.15 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் செய்யலாம் :: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் போன்ற மாற்றங்களை ஏப்ரல் 15-ம் தேதி வரை வாக்காளர்கள் செய்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருமான என்.சுப்பையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த 2014-ம் ஆண்டு நடத்த கணக்கெடுப்பைக் காட்டிலும், தற்போது பெண் வாக்காளர்கள், ஆண் வாக்காளர்களை விட அதிகமாகியுள்ளனர். இதற்கு விழிப்புணர்வே காரணம்.
ஏப். 15-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் ஆகியவற்றை செய்து கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. இதனை வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் இதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment