தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா அல்லது வீடியோ கேமரா மூலம் பதிவு செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகின்றன என்றார் மாவட்டஆட்சியர் என்.சுப்பையன்.
தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சரிபார்க்கும் தாள் தணிக்கைக்கருவிகளை திங்கள்கிழமை பார்வையிட்ட அவர் தெரிவித்தது:
மாவட்டத்தில் 2,175 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இந்த வாக்குச்சாவடிகள் மொத்தம் 1,111 இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. மேலும், 1,111 இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களுக்காகச் சக்கரநாற்காலிகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப்கேமரா அல்லது வீடியோ கேமரா மூலம் பதிவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

No comments:
Post a Comment