பள்ளி, கல்லூரிகளில் குடும்ப மதிப்புகள் பற்றிய பாட திட்டத்தை சேர்க்க வேண்டும் என்று கிரிஸ்ப் அமைப்பின் தலைவர் குமார் ஜாகிர்தார் தெரிவித்தார்.
பெங்களூருவில் வெள்ளிக்கிழமை சர்வதேச மகிழ்ச்சி தினவிழா அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது:
2012-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் மார்ச் 20-ம் தேதியை மகிழ்ச்சி தினமாக கொண்டாட மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆண்டுதோற் மார்ச்
20-ம்தேதி மகிழ்ச்சி தினமாக கொண்டாடி வருகிறோம். வெளிநாடுகளில் தனிநபர், குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இது குறித்து யாரும் கவலைப்படுவது இல்லை. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 158 நாடுகளில் இந்தியா 117 இடத்தில் உள்ளது. பூடான் போன்ற சிறிய நாட்டில் மக்களின் மகிழ்ச்சிக்கென்றே தனியாக துறை அமைத்து, அதற்கான அமைச்சரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தாய்லாந்து, இங்கிலாந்தில் இதற்கென தனியாக திட்டங்கள் தீட்டி செயல்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே அதிக மக்கள் தொகை உள்ள இந்தியாவிலும் மக்களின் மகிழ்ச்சிக்கென்று தனியாக துறையை உருவாக்கி, அதற்கென்று ஒரு அமைச்சரை நியமிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளிலும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ, குடும்ப மதிப்புகள் பற்றிய பாட திட்டத்தை சேர்க்க வேண்டும். மாணவர்கள் பாடங்கள் மூலம் மகிழ்ச்சியாக வாழ, குடும்ப மதிப்புகள் பற்றி அறிந்து கொண்டால், பிற்காலத்தில் அவர்கள் குடும்பங்களை நிர்வகிக்கும் போது, தங்களை கற்றதை செயல்படுத்த முன் வருவார்கள். செல்லிடப்பேசிகள் அதிகரித்துள்ளதால், குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குள் நேரடியாக பேசுவது தடைபட்டுள்ளது. நாட்டில் ஏழை, பணக்காரர் என்ற முறையை மாற்றி அமைப்பதன் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ முடியும். மார்ச் 20–ம் தேதியன்று அனைவரும் மகிழ்ச்சி தினவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றார் அவர்.

No comments:
Post a Comment