மத்திய அரசின் நேஷனல் ஆப்டிக் ஃபைபர் நெட்வொர்க்குடன் இணைந்து ஆந்திர பிரதேச அரசு அதிவேக பிராட்பேண்ட் இண்டர்நெட் சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதற்காக ரூ.333 கோடி செலவில் 'ஏ.பி. ஃபைபர் கிரிட்' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் பிராட்பேண்ட் இண்டர்நெட்டை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த இண்டர்நெட் திட்டத்தின் வாயிலாக ஆந்திரா முழுவதும் உள்ள மாவட்டங்களில் 1.3 கோடி வீடுகளுக்கு மலிவு விலை இண்டர்நெட் சேவையை கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, சிஸ்கோ நிறுவனத்துடன் இணைந்து இந்த இண்டர்நெட் சேவையை வழங்கும் ஆந்திர அரசு பிறகு வேறு நிறுவனங்கள் குறைவான கட்டணத்தில் இந்த சேவையை வழங்க முன்வந்தால் அந்த நிறுவனத்துடன் இணைந்து மலிவு விலை இண்டர்நெட்டை வழங்க ஆந்திர அரசு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று துவங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு மாதம் ரூ.149 கட்டணத்தில் 15 எம்.பி.பி.எஸ் வேகத்திலும், மாதம் ரூ.999-க்கு 100 எம்.பி.பி.எஸ். வேகத்திலும் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு பிராட்பேண்ட் இண்டர்நெட் சேவையை வழங்குகிறது

No comments:
Post a Comment