சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை 7 விழுக்காடாக உயர்த்தும் கட்சிகளுக்கே ஆதரவு
சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை 7 விழுக்காடாக அதிகரித்து தரும் கட்சிகளுக்கே ஆதரவு தர உள்ளதாக இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது
சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை 7 விழுக்காடாக அதிகரித்து தரும் கட்சிகளுக்கே ஆதரவு தர உள்ளதாக இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதன் ஒருங்கிணைப்பாளர் மேலை நாசர், சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை, தமிழக மறுமலர்ச்சி முஸ்லீம் லீக், தமிழ் இஸ்லாமிய ஜமா அத், தர்கா பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் தற்போது ஒருங்கிணைந்துள்ளதாக தெரிவித்தார்.
97 சதவிகித இஸ்லாமியர்கள் இந்த அமைப்புகளில் தான் உள்ளனர் என்று கூறிய அவர் 40 ஆயிரம் மசூதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தார். எனவே தங்கள் கூட்டமைப்பே இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியாக உள்ளது என்று மேலை நாசர் கூறினார்

No comments:
Post a Comment