Monday, 14 March 2016

27 சதவித முஸ்லிம்கள் தீவிரவாதிகளே,” டொனால்டு டிரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு

வாஷிங்டன், 

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் போட்டியில் முன்னிலையில் உள்ள டொனால்டு டிரம்ப் சர்ச்சை பேச்சினால் பரவலாக அறியப்பட்டவராக உள்ளார். 
இப்போது “27 சதவித முஸ்லிம்கள் தீவிரவாதிகளே,” என்று கூறி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். 
அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு நவம்பர் 8–ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. ஆரம்பத்தில் குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் (வயது 69) கை ஓங்கி வந்தது. ஆனால் அவர் தொடர்ந்து சர்ச்சைக்கு இடம் அளிக்கிற வகையில் பேசி வந்தமையால் அவருக்கு எதிரான ஒரு அலையும் அமெரிக்காவில் உருவாகி வருகிறது.
குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர் 2 மாகாணங்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். சிகாகோவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியாளர் டொனால்டு டிரம்ப் பிரசார கூட்டத்தில் அவரது ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என்றும் இந்தியர்களின் வேலை வாய்ப்பை பறிப்பேன் என்றும் ஆவேசமாக பேசியதால் மிகப்பெரிய சர்ச்சையானது வெடித்தது.
இந்த சர்ச்சைகள் வரிசையில் “27 சதவித முஸ்லிம்கள் தீவிரவாதிகளே,” என்று கூறி புதிய சர்ச்சையில் சிக்கிஉள்ளார். செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்து பேசிய டொனால்டு டிரம்ப்பிடம் 1.6 மில்லியன் முஸ்லிம்களில் 100,000-த்திற்கும் அதிகமானோர் ஜிகாத் போராட்டங்களில் ஈடுபடவில்லையா? என்று எழுப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில் “ இது (தீவிரவாதத்தில் ஈடுபடும் முஸ்லிம்கள் எண்ணிக்கை) 27 சதவிதமாக உள்ளது, இது 35 சதவிதமாகலாம், போருக்கு செல்வார்கள், வெறுப்பு பிரமாண்டமான உள்ளது,” என்று கூறியது சர்ச்சையாகி உள்ளது

No comments:

Post a Comment