விஜயகாந்தின் தேமுதிக வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த திமுகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனாலும், திமுக கூட்டணிக்கு 27 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது
நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் ஆளும் அதிமுகவை வீழ்த்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது கழற்றிவிடப்பட்ட காங்கிரஸை மீண்டும் சேர்த்துக் கொண்டது.
மேலும், விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கண்டிப்பாக தங்களது கூட்டணிக்கு வரும் என காத்திருந்தது. இந்நிலையில் என் வழி, தனி வழி என விஜயகாந்த் அறிவித்தையடுத்து திமுக ஏமாற்றம் அடைந்ததது.
இந்நிலையில் திமுக கூட்டணிக்கு 27 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. திமுக சார்பில் வெளியிட்ட அறிக்கை விவரம்:
திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலினை, 27 கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைக் கழக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கவோன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆதவு தெரிவித்தோர் விவரம்: 1.இந்திய குடியரசு கட்சி (ராமதாஸ் அத்வாலே), 2.சிறுபான்மை சமூக புரட்சி இயக்கம், 3.அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு, 4.காமராஜர் பசுமை பாரதம், 5.அனைத்து மக்கள் முன்னேற்றக் கழகம், 6.ஆதி ஆந்திரா நற்பமணி மன்றம், 7.தமிழ்மாநில திராவிட முன்னேற்றக் கழகம், 8.கருநாடக மாநில தெலுங்கு தேசம் பார்டி, 9. உழைப்பாளர் மக்கள் கழகம்.
10.முக்குலத்தோர் மக்கள் கட்சி, 11.திராவிட தேசம் கட்சி, 12.வன்னியர் கிறிஸ்தவர் பேரவை, 13.ஜீவா கம்யூனிஸ்ட் கட்சி, 14.தமிழ்நாடு பாரதீய ரீபப்ளிகன் பார்டி, 15.அம்பேத்கர் தேசிய மக்கள் கட்சி, 16.அம்பேத்கர் மக்கள் இயக்கம், 17.தமிழ்நாடு யாதவர் சங்கம், 18.பழங்குடியினர் வெற்றிச் சங்கம்.
19.சமாஜ்வாதி பார்டி, தமிழ்நாடு, 20.சமூக மக்கள் கட்சி, 21.கிறிஸ்தவ மக்கள் கழகம், 22.தமிழ்நாடு போயர் சேவா சமாஜம், 23.எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி, 24.தமிழ்நாடு கன்னட சமுதாயம், 25.எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழகம், 26.தமிழ்நாடு அனைத்து சமூக கலை ஆர்வலர்களின் கூட்டமைப்பு, 27.நாடாளும் தெலுங்கு மக்கள் கட்சி

No comments:
Post a Comment