Saturday, 16 January 2016

ரயிலில் முஸ்லிம் மீண்டும் முஸ்லிம் தம்பதியினரைத் தாக்கியுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் ரயிலில் பசு மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் சுயநியமன பசு பாதுகாப்பு அமைப்பினர் சிலர் முஸ்லிம் தம்பதியினரைத் தாக்கியுள்ளனர்.
ஹார்தா மாவட்டத்தில், கடந்த புதனன்று குஷிநகர் விரைவு ரயிலில் கவுரக்‌ஷக் சமிதி என்ற வலது சாரி அமைப்பைச் சேர்ந்த 7 பேர் ரயிலில் ஏறி அங்கு பயணிகளின் உடமைகளை சோதனை செய்ய வேண்டும் வலியுறுத்தினர். அதாவது பசு இறைச்சியுடன் ஒருவர் வந்திருப்பதாக தங்களுக்கு துப்பு கிடைத்தது என்று தெரிவித்தனர்.
இதில் ரயிலில் இருந்த முஸ்லிம் தம்பதியினரான நசீமா பானு, மொகமது ஹுசைன் ஆகியோர் பைகளையும் சோதனை செய்ய வற்புறுத்தப்பட்டனர்.
தம்பதியினர் அந்தக் கும்பலைத் தடுத்ததால் தாக்கப்பட்டுள்ளனர்.
காவிகளால் தொடரும் வன்முறை!

No comments:

Post a Comment