Friday, 8 January 2016

🌟ஷிர்க் ஒழிப்பு மாநாடு🌟



🔊தவ்ஹீத் சோஷியல் மீடியா🔊

ஏக இறைவனின் திருப்பெயரால்.......

💥அஸ்ஸலாமு அலைக்கும்💥

💐அன்புடன் அழைக்கிறோம்💐

🌟ஷிர்க் ஒழிப்பு மாநாடு🌟

🏢இடம்: திருச்சி  

📅நாள்: இன்ஷா அல்லாஹ் ஜனவரி 31,2016

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு

💐அன்பிற்குரிய....

👨🏼பெரியோர்களே!
👵🏻தாய்மார்களே!
👫சகோதர,சகோதரிகளே!

🌟நாங்கள் உங்களிடம் மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி பேசப் போகிறோம். அல்லாஹ்விற்காக இதனைத் தொடர்ந்து படியுங்கள்.

💐அன்பிற்குரியவர்களே! நாம் கொதிக்கின்ற தண்ணீரினாலும், எரிகின்ற நெருப்பினாலும் ஏற்படும் பாதிப்புகளையும் கொடுமைகளையும் அறிந்திருக்கின்றோம். பார்த்திருக்கின்றோம்.

🌟கொதிக்கும் வெந்நீர் நம்மீது கொட்டிவிட்டால், அல்லது நமது அன்புக் குழந்தைகள் மீது கொட்டிவிட்டால் அந்த வேதனையை நம்மால் தாங்க முடியுமா❓

💐அன்பிற்குரியவர்களே❗

🌊கொதிக்கின்ற நீராலும்,
🔥எரிகின்ற நெருப்பாலும் பட்ட காயங்களை, கடும் வேதனைகளை இவ்வுலகில் மருந்திட்டு ஆற்றிட முடியும்.

ஆனால் மறுமையில்...!

🔥🔥ஆம்! மறுமையில் இவ்வுலக நெருப்பை விட 70 மடங்கு அதிகமான நரக நெருப்பு காத்திருக்கின்றது. கொதிக்கும் நீரும், சீழும் சலமுமே நரகத்தில் குடிபானமாகும். அங்கே நெருப்பு ஆடைகளும், சம்மட்டி அடிகளுமே நிறைந்திருக்கும். அங்கே வாழவும் முடியாது, சாகவும் முடியாது.

🔥இந்த நரக நெருப்பில் நிரந்தரமாக தங்கப் போகிறவர்கள் யார் தெரியுமா சகோதரர்களே!

🌟அல்லாஹ்விற்கு இணைகற்பித்தல் என்ற பெரும் பாவத்தைச் செய்தவர்கள் தான்!

💥அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை.
(அல்குர்ஆன் 5:72)💥

💥யார் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவராக இறக்கின்றாரோ அவர் நிச்சயமாக நரகத்தில் நுழைவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: புகாரி (1238)💥

🌟இந்த இணை கற்பிக்கும் பாவம் இறைவனுக்குச் செய்யும் மாபெரும் அநியாயமாகும்.

💥அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்.
(அல்குர்ஆன் 31:13)💥

💥ஒருவன் இறைவனுக்கு இணை கற்பித்த நிலையில் மரணித்து விட்டால் அந்தப் பாவத்தை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்கவே மாட்டான்.

💥தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
(அல்குர்ஆன் 4:48)💥

💐அன்பிற்குரிய......

👨🏼பெரியோர்களே!
👵🏻தாய்மார்களே!
👫சகோதர, சகோதரிகளே!

🌟இப்போது சிந்தித்துப் பாருங்கள்......

🌟யாருமே காப்பாற்ற முடியாத அந்த மறுமை நாளில் நம்மையும், நம்முடைய குடும்பத்தையும் நிரந்தர நரகத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பது இந்த இணைகற்பிக்கும் பாவம்தான்.

🌟இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கவழிபாடுகளை இறைவன் அல்லாதவர்களுக்குச் செய்வதும், அல்லாஹ்வின் வல்லமையைப் போன்று, பண்புகளைப் போன்று இறைவன் அல்லாதவர்களுக்கு இருப்பதாக நம்புவதும், இறைவ னல்லாதவர்களின் கருத்துக்களை மார்க்கச் சட்டமாகப் பின்பற்றுவதுமே இணைகற்பிக்கும் பாவமாகும்.

🌟இன்றைக்கு நம்முடைய சமுதாயத்தில்
❌தர்ஹாவழிபாடுகள்,
❌தரீக்கா வழிகேடுகள், ❌கொடிமரத்தை வழிபடுதல்,
❌தாயத்து,
❌தகடுகளைத் தொங்கவிடுதல்,
❌மவ்லிதுகள்,
❌ஸலாத்துன் நாரியா,
❌சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புதல்,
❌ஜோசியம் பார்த்தல்,
❌மைபோட்டு பார்த்தல்,
❌பால் கிதாப் பார்த்தல்,
❌சகுனம் பார்த்தல், ❌திருமணப் பந்தலில் வாழை மரத்தைக் கட்டிவைத்தால் குழந்தை பாக்கியம் உருவாகும் என்ற நம்பிக்கை,
❌ஆரத்தி எடுத்தல்,
❌கழித்து வைத்தல்,
❌தாலிகட்டுதல்,
❌படியரிசி போடுதல்,
❌புதுவீடு கட்டும் போது நாள் செய்வது,
❌சிக்கன் பாக்ஸ் நோய் ஏற்பட்டால் கோயிலில் சென்று மந்திரிப்பது போன்ற எண்ணற்ற இணைவைப்புக் காரியங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

அன்பிற்குரியவர்களே❗

✴இந்த இணைவைப்புக் காரியங்கள் நம் மறுமை வாழ்வைப் பாழாக்கி நம்மை நிரந்தர நரகத்திலே சேர்த்துவிடும்.

மறுமையில் நம்மை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்தில் சேர்ப்பது ஏகத்துவம் என்ற தவ்ஹீத் கொள்கைதான்.

💥எனது இரட்சகனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது எனது சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணை யாக்காமல் இறக்கின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

(நூல்: புகாரி 1237)💥

🔥நம்மை நிரந்தர நரகத்திற்கு அழைத்துச் செல்லும் இந்த

🚫இணை வைப்பை ஒழித்திடவும்,

☝சுவர்க்கத்தைத் தந்திடும் தவ்ஹீத் கொள்கைக்கு வழிகாட்டிடவும்

📅இன்ஷா அல்லாஹ் ஜனவரி 31,2016

அன்று  மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை  தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் நடத்த உள்ளது.

இதில் தாங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ளுமாறு அன்போடு வேண்டிக் கொள்கிறோம்.

(இன்ஷா அல்லாஹ்)ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஜனவரி 31,2016,திருச்சி(இன்னும் 2⃣6⃣ நாட்களே)

✨அனைவரும் கலந்து கொள்வோம்(இன்ஷா அல்லாஹ்)

மார்க்கத்தையும், செய்திகளின் உண்மைதன்மையையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள

வாட்ஸ்அப்பில்(ஏகத்துவ குழுமத்தின் அட்மின்கள் ததஜ உறுப்பினர்கள் மட்டும்)தொடர்பு கொள்ள

0097156671687
8344306373
8870377714

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை லைக் செய்ய

https://m.facebook.com/தவ்ஹீத்-சோஷியல்-மீடியா-1672063909739601/

இதனை அனைவருக்கும்(SHARE)பகிரவும்

தவ்ஹீத் சோஷியல் மீடியா

பதிவு பதிந்த தேதி:05.01.2016

No comments:

Post a Comment