தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச்செயலாளர் முகம்மது யூசுப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
கல்வி மற்றும் அரசின் வேலை வாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் 3.5 சதவிகித தனி இடஒதுக்கீடு, முஸ்லீம்களின் தரத்தை உயர்த்த போதுமானதாக இல்லை என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தமிழக அரசிற்கு தொடர்ச்சியாக அறிவுறுத்திக் கொண்டே வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் 2014 பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் போதும் முதலமைச்சர் ஜெயலலிதா முஸ்லீம்களின் தனி இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் தமிழக அரசு இதுவரை எடுக்கவில்லை. அடுத்த சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கும் இந்நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment