Saturday, 9 January 2016

ஐரோப்பிய நாகரீகத்தின் மறுமலர்ச்சிக்கு ஸ்பெயின் காலத்து இஸ்லாமிய கலீபாக்களின் பங்கு இன்றியமையாதது .***பொரிஸ்ஜோன்ஸன்**


ஸ்பெய்ன் நாட்டின் கிரெனடாவிற்கு(Granada) (முஸ்லிம்களால் கட்டப்பட்ட அல்ஹம்ரா மாளிகை இங்குதான் உள்ளது.) விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரும், இலண்டன் மாநகர மேயருமான பொரிஸ் ஜோன்ஸன் (Boris Johnson) ,டெலிகிராப் பத்திரிகையில், தனது வாராந்த பதிவின்பொழுது, இவ்வாறு  கருத்து  தெரிவித்துள்ளார்.........

"ஐரோப்பியரின் நவீன நகர்ப்புற பன்முகத்திற்கும், சகிப்புத் தன்மைக்கும் ஸ்பெயினை முஸ்லிம்கள் ஆண்டகாலத்தில் ஏற்படுத்திய  முன்மாதிரிகள் ஒரு இலகுவான  வழிகாட்டியாக உள்ளது என்பதை மறுக்க முடியாது."

"இந்த வகையில், ஐரோப்பிய நாகரீகத்தின் மறுமலர்ச்சிக்கும், பண்டைய கிரேக்க நூல்களின் பாதுகாப்பிற்கும்  ஸ்பெயின் காலத்து  முஸ்லிம் கலீபாக்களின் பங்கு இன்றியமையாதது. இதை இன்றும் கிரெனடாவிலுள்ள  இஸ்லாமிய
கட்டிடகலை உணர்த்தி நிற்கிறதென்பது மிகவும் வியப்பான ஒரு உண்மையாகும்."

"இன்று இஸ்லாமிய சமூகத்திற்கு பல வகைகளில் எதிர்ப்புவாதங்கள்ஏற்பட்டு  அவர்கள் மனச்சோர்வுக்கும், அச்சத்திற்கும்  மத்தியில்  வாழ்ந்து கொண்டிருக்கும்பொழுது, முஸ்லிம்கள் ஐரோப்பியர்களின் உயர்விற்கும், நாகரீகத்திற்கும் மிகப்பெரிய  அளப்பரிய  பங்களிப்பை செய்திருக்கிறார்கள் என்பதை  எவருமே  குறைத்து  மதிப்பிட முடியாது."

ஆதாரம்:Independent.Co.UK
...............

No comments:

Post a Comment