Saturday, 9 January 2016

இஸ்லாமிய இயக்கங்களே!



சமுதாய பிரச்சனைக்காக பலமுறை அலைத்தீர்கள்!

அலைகடலென வந்து நின்றோம் எங்களின் குழந்தைகளோடு!

போராட்டக் களங்களங்களில் பங்கேற்றோம் எங்களின் உயிரையும் துட்சமென கருதி!

ஆனால் இன்று!

நடுரோட்டில் நிர்க்கதியாய் நிற்கின்றோம்,

எங்கள் குழந்தைகளோடு!

துள்ளி விளையாடி பள்ளிக்கு போக வேண்டிய எங்கள் பிள்ளைகள்

தந்தையை சிறையில் இருந்து மீட்க இன்று போராட்டக்களத்தில்!

விசாரணைக் கைதியாக கைது செய்தார்கள்!

முஸ்லிம் என்ற காரணத்திற்காக!

ஆண்டுகள் பல கடந்து போயின!

எங்களின் கண்ணீர் துளிகள் இன்னும் குறைந்தபாடில்லை!

மீனவர்களை சிறையில் இருந்து மீட்க அரசாங்கம் இருக்கு!

சஞ்சய் தத் விடுதலை ஆவதற்கு பணமும் செல்வாக்கும் இருக்கு!

எங்கள் குடும்ப தலைவர்களை விடுதலை செய்வதற்கு அல்லாஹ்விற்கு அடுத்தபடியாக
இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கு என

கணத்த இதயத்தோடும், கண்களில் கண்ணீரோடும் உங்களிடம் கோரிக்கை வைக்கிறோம்!

முஸ்லிம் என்பதனாலேயே கைது செய்யப்பட்டார்கள்.

இதுவும் சமுதாய பிரச்சனையே!

இஸ்லாமிய இயக்கங்களே கையில் எடுங்கள் போராட்டத்தை!

மீட்டு தாருங்கள் எங்கள் குடும்ப தலைவர்களை!

பாதிக்கப்பட்ட பெண்களின் கண்ணீர் துளிகள்!

இன்ஷா அல்லாஹ் ஒன்றினைவோம்!

வென்றெடுப்போம்!

தமிழ்நாடு முஸ்லிம் மீடியா

No comments:

Post a Comment