Monday, 11 January 2016

மரணம் வாழ்வின் முடிவல்ல, மறுமையின் ஆரம்பம்....!!




நமது முகநூல் சகோதரர் ஒருவர் வெளிநாட்டில் வசிக்கிறார். அவர் எப்போதும் போல் தன்னுடைய வீட்டிற்கு போன் பேசிய போது....
அவருடைய தந்தை, தாய், அண்ணன், அக்காள், மனைவி ஆகியோர் ஏர்வாடி காஜா முஹைதீன் படுகொலையை சுட்டிக்காட்டி முகநூலில் அநியாயங்களை எதிர்த்து பதிவிடாதே என்று அச்சம் கலந்த தொனியில் பேசியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த நம் சகோதரர்....
உண்மையை எழுதினால் அதற்காக மரணம் என்றால் அந்த மரணத்தை நான் நேசிக்கிறேன், மரணம் வாழ்வின் முடிவல்ல, மறுமையின் ஆரம்பம் என்று கூறியுள்ளார்.
அப்படியென்றால் உன் மனைவி மக்களை யார் பார்ப்பார்கள் என்று வீட்டில் கேட்டுள்ளனர்.
யாரும் பார்க்க தேவையில்லை, அவர்களின் அருகிலிருந்து உணவருந்திய ஒரு நபர் தான் இறந்துவிடுவானே தவிர அவர்களுக்கு உணவளிப்பவன் என்றும் இறக்கமாட்டான், அவன் எப்போதும் உயிரோடு தான் இருப்பான்,
மரத்தை வச்சவன் யாரோ அவனே தண்ணீரும் ஊற்றுவான் என்ற இறை நம்பிக்கை கொண்ட வார்த்தையோடு போனை துண்டித்துள்ளார்.

No comments:

Post a Comment