லயோலா கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நியூஸ் 7 தொலைக்காட்சி இணைந்து 2016 சட்டசபை தேர்தல் பற்றி கருத்து கணிப்பு நடத்தியுள்ளன. சட்டசபை தேர்தலில் எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்று மாவட்ட வாரியாக மக்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று கருதுவதாக, 42.13 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று 38.66 சதவீதம் பேரும், பிரதான கட்சிகள் நீங்கலான இதர கட்சிகள் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக 19.21 சதவீதம் பேர் கூறியுள்ளதாகவும் நியூஸ் 7 கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

No comments:
Post a Comment