தூத்துக்குடி: அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கில் 35 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் அபராதமும் விதித்து தூத்துக்குடி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனை பெற்றவர்களின் எஸ்தோனியா நாட்டைச் சேர்ந்த 17 பேர், பிரிட்டனை சேர்ந்த 6 பேர், உக்ரைனைச் சேர்ந்த 3 அவர். இந்த வழக்கில் கைதான இந்தியர்கள் 12 பேருக்கும் 5 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டீசல் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி கடல்பகுதியில் கடந்த 11-10-2013ல் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்க நிறுவனத்துக்கு சொந்தமான சீமென் கார்டு ஒகியா கப்பலை கடலோர காவல் படையினர் மற்றும் கியூபிரிவு போலீசார் மடக்கி பிடித்தனர். கப்பலில் சோதனையிட்ட போது 35 துப்பாக்கிகள், தோட்டாக்கள் இருந்தன. கப்பலில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் இருந்ததாகவும் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து கப்பல் கேப்டன் உக்ரெய்ன் நாட்டை சேர்ந்த டட்னிக் வாலென்டின் உள்பட 35 ஊழியர்களை போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தூத்துக்குடி நீதிமன்றம் மீண்டும் விசாரித்து 6 மாதத்தில் முடிக்கவும் உத்தரவிட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆயுத கப்பல் வழக்கில் 35 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனையும் 3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராஜசேகர் தீர்ப்பு வழங்கினார்.

No comments:
Post a Comment