மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் நீரேற்று நிலையத்திலிருந்து விநியோகிக்கம் குடிநீர் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகருக்கு கொள்ளிடம்
நீரேற்று நிலையத்திலிருந்து பைப்லைன் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு 36 வார்டுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. பைப்லைன் பழுதாலும் மற்றும் தண்ணீர் குறைவாக வருவதாலும் நாள் ஒன்றுக்கு காலை ஒரு வேளை மட்டுமே நகராட்சியால் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் மயிலாடுதுறை நகரின் மேற்கு பகுதியில் குடிநீரில், பாதாள சாக்கடை நீர் கலந்ததால் குடிநீர் நிறுத்தப்பட்டு லாரிகள் மூலம் வழங்கப்பட்டது. ஒரு மாதம் போராடிய நகராட்சி அதை சரி செய்தது. நேற்று திடீரென்று மயிலாடுதுறை நகராட்சி 7வது வார்டு முழுவதும் மற்றும் 8வது வார்டில் ஒரு சில தெருக்களுக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீர் கலங்கலாக இருந்ததுடன், துர்நாற்றமும் வீசியது.மயிலாடுதுறை மகாதானத்தெரு, தருமபுரம் சாலை, ராஜேஸ்வரி நகர், அண்ணா நகர், திருவள்ளுவர் நகர் போன்ற 30க்கும் மேற்பட்ட தெருக்களில் இதே போன்று குடிநீர் துர்நாற்றத்துடன் வந்துள்ளது. பொதுமக்கள் பிடித்த தண்ணீரை கீழே கொட்டிவிட்டு கேன் குடிநீரை வாங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக மயிலாடுதுறை நகராட்சி நடவடிக்கை எடுத்து நல்ல குடிநீரை வழங்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்

No comments:
Post a Comment