Sunday, 24 July 2016

சீனாவில் வரலாறு காணாத வெள்ளம், 200 பேர் பலி; 111 பேர் மாயம்.

பெய்ஜிங்:

 சீனாவின் வடக்குப் பகுதியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பலியாகி உள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. 2.50 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். சீனாவின் வடபகுதியில் உள்ள ஹூபெய் மாகாணத்தில் கடந்த 18ம் தேதி முதல் இடைவிடாமல் கனமழை கொட்டியது.
இதனால், பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 10 நகரங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதில், 53 ஆயிரம் வீடுகள் முற்றிலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. 6.8 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 2.50 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றனர். இதுவரை கனமழைக்கு 200 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. 3.1 லட்சம் பேர் தாழ்வான பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 7 லட்சம் ஹெக்டேர் பயிர் நாசமாகி உள்ளது. வெள்ளத்தை பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்கிடையே, வெள்ளத்தை சரிவர கையாளவில்லை என்று காரணம் கூறி, ஹூபெய் மாகாண அரசு, 4 உயரதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
கடும் வெள்ளம், உணவுப்பொருட்கள் கிடைக்காத நிலை, குடிநீருக்கே சிக்கல் ஆகியவற்றால், மக்கள் அரசின் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து அளிக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

முஸ்லிம்களை தொட்டால் வெட்டுவோம் : வாளோடு வீதிக்கு வந்து சிவசேனாவை விரட்டியடித்த சீக்கியர்கள்.....!!


சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் பஞ்சாப், பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனா பயங்கரவாதிகள் பள்ளிவாசல் அமைந்துள்ள சாலை வழியாக ஊர்வலம் சென்றனர். அப்போது பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனால் பள்ளிவாசலில் இருந்த முஸ்லிம்களுக்கும், சிவசேனா பயங்கரவாதிகளுக்கும் மோதல் உருவானது. இரு தரப்பிற்கும் இடையில் கற்கள் வீசப்பட்டது.
சிவசேனாவுக்கு ஆதரவாக பாஜக, RSS, VHP பயங்கரவாதிகளும் கத்தி, அரிவாள், இரும்பு ராட் போன்ற ஆயுதங்களுடன் திரண்டனர்.
தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மட்டுமின்றி அப்பகுதி முஸ்லிம்களும் விரைந்து வந்தனர்.
தகவலறிந்த சீக்கியர்கள் வாளோடு வீதிக்கு வந்து முஸ்லிம்களை தொட்டால் வெட்டுவோம் என்று முழக்கமிட்டவாறு முஸ்லிம்களை சூழ்ந்தனர்.
இதனால் செய்வதறியாது சிவசேனா மற்றும் இந்துத்துவ பயங்கரவாதிகள் திக்கு முக்காடினர். வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட முயன்ற சிவசேனா மற்றும் இந்துத்துவ பயங்கரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

வாட்ஸ்ஆப் நிறுவனம் அதன் சேவையில் மேலும் ஒன்பது புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.


வாட்ஸ் ஆப்: 2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் (Brian Acton), ஜேன் கோம் (Jan Koum) ஆகியோரால் நிறுவப்பட்ட வாட்ஸ்ஆப் நிறுவனம் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டது. இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை, வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. எழுத்துகளாலான உரை செய்திகள் மட்டுமின்றி படம், நிகழ்படம், ஒலிக்கோப்புகள் மற்றும் பயனரின் இருப்பிடத்தையும் இச்செயலியின் மூலம் பகிர்ந்துகொள்ளலாம். தற்போது அது கீழ்காணும் வசதிகளை அறிமுகப்படுத்திள்ளது.  
1.கால் பேக்: 
இந்த ஆப்ஷன் வாட்ஸ்ஆப் கால் துண்டிக்கப்பட்டவுடன் திரையில் தோன்றும். இது வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு செயலியில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 
2.வாய்ஸ் மெயில்: 
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் வாய்ஸ் மெயில் அனுப்ப முடியும். இதனை பயன் படுத்த சாட் பாக்ஸ் அருகில் இருக்கும் மைக் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.  
3.கோட்ஸ்: 
மேற்கோள் காட்டும் அம்சம் தான் வாட்ஸ்ஆப் ஆங்கிலத்தில் கோட்ஸ் எனக் குறிப்பிடுகிறது. இதன் மூலம் தகவல்களை பரிமாறும் போது குறிப்பிட்ட தகவல்களை மேற்கோள் செய்ய முடியும். 
4.ஃபான்ட்ஸ்:  
வாட்ஸ்ஆப் தெரியும் எழுத்துக்கள் பல்வேறு விதங்களில் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. 
5.மியூசிக் ஷேரிங்: 
 வாட்ஸ்ஆப் நிறுவனம், தனது செயலியில் பாடல்களை மற்ற கருவிகளுடன் பகிர்ந்து கொள்ள மியூசிக் ஷேரிங் ஆப்ஷனை அறிமுக படுத்தியுள்ளது. இது ஆப்பிள் மியூசிக் சேவைகளிலும் வேலை செய்யும். 
 6.க்ரூப் இன்வைட்:  
க்ரூப் இன்வைட் ஆப்ஷன், ஃபேஸ்புக் மென்ஷன்ஸ் போல வேலை செய்யும். இதைக் கொண்டு க்ரூப் மெசேஜிங் செய்யும் போது ஒருவரின் மெசேஜ்களை மட்டும் தனியே பிரிக்கத் தகவல்கள் வேறு நிறத்தில் தெரியும். 
7.ஜிஃப்:
ஐஓஎஸ் இயங்குதளங்களில் மட்டும் ஜிஃப் வசதி வழங்கப்படுகிறது.  
8.பிக் எமோஜி:
வாட்ஸ்ஆப்-இல் எமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளன, ஆனாலும் அது சிறிய அளவில் இருப்பதால், இன்னும் பெரிய அளவு எமோஜிக்கள் வழங்கப் படுகிறது. 
9.வீடியோ காலிங்: 
பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட வீடியோ காலிங், அப்டேட்களில் நீக்கப்பட்டது எனினும் விரைவில் இந்த வசதிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday, 23 July 2016

சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.


      சிறுபான்மை மாணவர்கள் 
கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்தியில், ''சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10, 12-ம் வகுப்புகள், ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு படிக்கும் கிறிஸ்தவம், இஸ்லாம், புத்தம், சீக்கியம், பார்சி, ஜெயின் மதங்களைச் சேர்ந்த சிறுபான்மை மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
பள்ளி மேற்படிப்பு திட்டத்தின்கீழ் கல்வி உதவித் தொகை பெற மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
11 மற்றும் 12-ம் வகுப்ரபு மாணவ, மாணவிகள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் வரும் 31-ம் தேதிக்குள்ளும், ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு மாணவ, மாணவிகள் வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.
உதவித் தொகைகள் மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். எனவே, வங்கிக் கணக்கு எண், வங்கி குறியீடு எண், ஆதார் எண் ஆகியவற்றை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும். உரிய காலத்தில் விண்ணப்பித்து கல்வி உதவித் தொகை பெற்று பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அதிகபட்ச சுயாட்சி வழங்காவிட்டால் நாம் மிகப் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


         ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 வாரங்களாக ராணுவத்துக்கு எதிராக வன்முறைகள் நீடித்து வருகின்றன. இதுவரையிலான மோதல்களில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்; ஜம்மு காஷ்மீர் மக்கள் பிரிந்து தனிநாடாவது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மத்திய அரசு, பொதுவாக்கெடுப்பு நடத்த முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
   
அதிகபட்ச சுயாட்சி
இதனிடையே ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வாக அதிகபட்ச சுயாட்சி வழங்க வேண்டும் என்று முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் கூறியுள்ளதாவது:
ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை காங்கிரஸ் கட்சியும் கூட தவறாகத்தான் கையாண்டது. ஆனால் 2010-ல் காங்கிரஸ் கட்சியில் தவறுகள் திருத்தி கொள்ளப்பட்டுவிட்டன.

   
தனித்துவ அரசியல் அமைப்பு தேவை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு என தனித்துவமான ஒரு அரசியல் அமைப்பு முறை தேவைப்படுகிறது. தற்போதைய மத்திய அரசும் மாநில அரசும் ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை தவறாக கையாள்கின்றன. ஜம்மு காஷ்மீர் முதல்வரான முப்தி முகமது சயீத் மிகப் பெரிய தவறு செய்து வருகிறார்.
   
ராணுவத்தினரை விலக்கினோம்....
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டோம். நான் உள்துறை அமைச்சராக இருந்த போது 10,000 ராணுவத்தினர் காஷ்மீரில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டனர். இதற்கு அப்போது ராணுவத்தில் கடும் எதிர்ப்பு இருந்தது.
   
திருத்தம் அவசியம்...
ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் அளிக்கும் சட்டத்தில் கண்டிப்பாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான பரிந்துரைகளை நாங்கள் முன்வைத்த போதும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

பசுவை வைத்து அரசியல் செய்யும் பாஜக வுக்கு மம்தா பானர்ஜி கடும் தாக்கு...


பாஜகவின் 'பசு' அரசியலை பொறுக்க முடியவில்லை: மம்தா தெறிப்பு..
பசுமாட்டை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆளும் மோடி தலைமை பாஜக-வை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆட்சியை மீண்டும் பிடித்த போது பேசிய மம்தா, “காவி பாகுபாட்டு அரசியல்” குறித்து கடும் விமர்சனம் வைத்தார், தற்போது, தியாகிகள் தினத்தையொட்டி மத்திய கொல்கத்தாவில் மிகப்பெரிய பேரணியில் மம்தா ‘பசு அரசியலை நிறுத்துங்கள்’ என்று கூறியுள்ளார்.
“ஒரு அரசியல் கட்சியின் சார்பாகவோ அல்லது அதன் சகோதர அமைப்பின் பெயரிலோ சில நபர்கள் வீடு வீடாக சென்று எவ்வளவு பசுமாடு வைத்திருக்கிறீர்கள் என்று கேட்பதாக நான் கேள்விப்படுகிறேன். இம்மாதிரி கேள்வி கேட்க அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
மக்களுக்கு தேர்ந்தெடுப்பு உரிமை உள்ளது என்பதை சிலர் மறந்து விட்டனர். நான் ஆட்டிறைச்சி சாப்பிட்டால் பிரச்சினை இல்லை என்கின்றனர், ஆனால் சிலர் மாட்டிறைச்சி சாப்பிட்டால் பிரச்சினை செய்கின்றனர். நான் புடவை அணிந்தால் பிரச்சினையில்லை, ஆனால் சிலர் சல்வார் கமீஸ் அணிந்தால் பிரச்சினை...வங்காளிகள் வேட்டிகளையே விரும்புவர், ஆனால் சிலர் லுங்கியை விரும்புகின்றனர். இதனால் என்ன? நீங்கள் யார் தீர்மானிக்க? என்ன சாப்பிட வேண்டும், என்ன உடுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்க நீங்கள் யார்? இது எப்படி சாத்தியம், மக்களை பிரித்தாளும் இத்தகைய அரசியலை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
குஜராத்தில் தலித்துகள் தாக்குதலுக்கு இரையாகின்றனர், நாம் அதற்கு கண்டனம் எழுப்புகிறோம். எனவே யாராவது வந்து பசுமாட்டு கணக்கெடுத்தால் - தீயை மூட்ட நினைத்தால் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பதை அவர்களுக்கு உறுதியாகக் கூறிக்கொள்கிறோம்.
அரசியல் ரீதியாக இத்தகைய செயல்களை எதிர்கொள்வோம். வீடுகளுக்கு தீவைக்க நாங்கள் ஒருக்காலும் அனுமதியோம்.
தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சிலர் நீண்டகாலமாக பசுமாட்டு தோல் வர்த்தகம் செய்து வருவதாக நான் செய்தித்தாள்களில் படித்து வருகிறேன். பசுமாட்டுத் தோலை காலணி தைப்பவர்களும் பயன்படுத்தி வருகின்றனர், இவையெல்லாம் நீண்ட காலமாக நடந்து வருகின்றன. ஆனால் இங்கு இவர்கள் கட்டிவைத்து அடித்து உதைக்கப்படுகிறார்கள்” என்று ஆவேசமாகப் பேசினார் மம்தா பானர்ஜி...

Friday, 22 July 2016

காஷ்மிர் படுகொலைகளை கண்டித்து சென்னையில் ரயில் மறியல்.


காஷ்மிரில் ராணுவத்தினரின் அடக்குமுறைகளை கண்டித்து சென்னையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சாரபில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின முன்பாக திரண்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் காஷ்மிர் மக்களை காப்பாற்றக்கோரி முழக்கமிட்டனர்.இந்த போராட்டதில் கட்சியின் பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி சிறப்புரையாற்றினார். இதில் கொங்கு மக்கள் பேரவை கட்சி தலைவர் தனியரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தலைவர்கள் சிறப்புரை ஆற்றிய பின்னர் தொண்டர்கள் ரெயில் நிலையத்தை நோக்கி விரைந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த போராட்டத்தால் எழும்பூரில் பரபரப்பு நிலவியது.

மருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி !!


கிராமத்து வீடுகளிலும் வயல்வெளிகளிலும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் சிறுதானியங்களைக் கொறித்துத் தின்றுவிட்டு, உற்சாகமாக அங்குமிங்கும் திரிந்துகொண்டிருந்தன நாட்டுக் கோழிகள். ஆனால், பிறந்து சில நாட்களிலேயே பல்வேறு செயற்கை மருந்துகளால் செறிவூட்டப்பட்டு, அளவுக்கு அதிகமாகத் தீவனத்தைச் சாப்பிட்டுவிட்டு, எங்கும் நகர வழியின்றி, பல்வேறு நோய்களைத் தனக்குள் வைத்துக்கொண்டு வாழ்கிறது பிராய்லர் கோழி.
மரபைத் தொலைத்த பிராய்லர்
ஹார்மோன் மருந்துகளால் எலும்பு சார்ந்த நோய்கள், வாழ்விடத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளால் கண் நோய்கள், அதிக உணவால் உடல் பருமன் என நோய்களின் கூடாரமாக உள்ளன பிராய்லர் கோழிகள். மரபணு மாற்றப்பட்ட பி.டி. கத்திரிக்காய் எப்படி நம் உடலுக்கு எதிரானதோ, அதேபோலத்தான் மரபைத் தொலைத்த பிராய்லர் கோழிகளும்.
நோய்கள் தயார்
பதினொரு வயதுச் சிறுமி, இப்போது வளர்ந்த பெண்ணைப்போலத் தோற்றம் தருவதற்குப் பிராய்லர் கோழியும் ஒரு காரணம்தான். குறைந்த வயதிலேயே பெண்கள் பருவமடைவதற்கு வெள்ளைக் கோழியில் உள்ள ஹார்மோன் கலப்படங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன.
பிராய்லர் கோழிகள் விரைவாக வளர்வதற்காகக் கொடுக்கப்படும் வேதிப்பொருட்கள், மறதி, நரம்பு சார்ந்த நோய்கள் முதல் புற்றுநோய்வரை உண்டாக்கக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனித உடலின் இயக்கங்களைப் புரட்டிப்போடும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவருகின்றன பிராய்லர் கோழி ரகங்கள்.
அளவை மிஞ்சும் ஆன்டிபயாடிக் எல்லாச் சூழ்நிலைகளிலும், நோய்களை எதிர்த்து உயிர் வாழ்வதற்காகவும், உடல் எடையை அதிகரிக்கவும் கோழிகளுக்குக் கொடுக்கப்படும் `ஆன்டிபயாடிக்’ மருந்துகளின் விளைவால், ரெசிஸ்டண்ட் பாக்டீரியாக்கள் (அந்த மருந்துகளை எளிதில் சமாளிக்கும் பாக்டீரியாக்கள்) அதிகரித்து, கோழிகளிடையே அந்த நோய்களின் வீரியம் பல மடங்கு பெருகுகிறது. இந்த நோய்களின் தாக்கம், அதைச் சாப்பிடும் மனிதர்களிடம் சங்கிலித் தொடர்போல நீள்கிறது.
மருந்தாகும் நாட்டுக் கோழி
உறவினர்களை விருந்தோம்பும் நோக்கத்துடன், வீட்டின் முன் அலைந்து கொண்டிருக்கும் கொண்டைச் சேவல்களைப் பிடித்து, விருந்தளித்து, கூடவே ஆரோக்கியத்தையும் கொடுத்து அனுப்பிய மரபு நம்முடையது. சளி, இருமல் எனச் சற்றுத் தளர்ந்தாலே, மிளகு சேர்த்த நாட்டுக் கோழி ரசம் வைத்துக் கொடுத்து, நோய் நீக்கிய குடும்ப மருத்துவச்சிகள் அக்காலத்தில் ஏராளம். நாட்டுக்கோழிக் குழம்பு குழைத்த சாதத்தைச் சாப்பிட்டு, வீரத்துடன் வாழ்ந்த மனிதர்கள் அப்போது அதிகம்.
தசைகளுக்குத் தெம்பைக் கொடுக்கவும், நரம்புகளுக்கு உரத்தை அளிக்கவும் நாட்டுக் கோழியினங்கள் உதவுகின்றன. காமத்தைத் தூண்டும் உணவுப் பட்டியலில் நாட்டுக் கோழிக்கு நிச்சயம் இடமுண்டு. சுவாச நோய்களுக்கும் நாட்டுக் கோழி சிறந்த மருந்து. நாட்டுக் கோழியின் முழுப் பயன்களைப் பெற, கடைகளில் கிடைக்கும் உடனடி மசாலாப் பொடிகளைத் தவிர்த்து, அம்மியில் கைப்பக்குவத்தில் அரைக்கப்பட்ட மசாலா கலவையைப் பயன்படுத்துவது நல்லது.
வெப்பம் தரும்
கோழிக்கறி சாப்பிட்டால், சித்த ஆயுர்வேத முறைகள் குறிப்பிடும் வாத, பித்த, கப நாடி வகைகளில், பித்த நாடி மேலோங்கி இருக்கும் என்று நாடி விஞ்ஞானம் சொல்கிறது. உடலுக்கு வெப்பத்தைக் கொடுக்கும் குணம் கோழிக்கறிக்கு உண்டு. பருவகாலச் சூழ்நிலைகளுக்கு ஏற்பக் கோழி இறைச்சியைச் சாப்பிட வேண்டும். வெப்பம் மிகுந்த கோடைக் காலத்தில், வெப்பத்தின் பிரதிநிதியான கோழிக் கறியை அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, அஜீரணத் தொந்தரவுகள் வரக்கூடும்.
தெரியாத கருங்கோழி
வெள்ளை வெளேரென பிராய்லர் கோழி ரகங்களை மட்டுமே பார்த்துப் பழகிய இன்றைய இளம் தலைமுறைக்குக் கருங்கோழி என்ற ஒன்று நம்மிடையே வாழ்வது ஆச்சரியத்தைக் கொடுக்கலாம். குட்டம், காணாக்கடி, சிரங்கு, விரணங்கள், வாத நோய் முதலியவை கருங்கோழிக் கறியால் குணமாகும் என்கிறது சித்த மருத்துவம்.
முற்காலத்தில் ஆண்களுக்கு வீரியத்தை அதிகரிக்க, சில மூலிகைகளுடன் சேர்த்துச் சமைத்த கருங்கோழிக் குழம்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சுவையிலும் மருத்துவக் குணத்திலும் மேலோங்கி நிற்பது கருங்கோழியின் தனிச்சிறப்பு. கருங்கோழி, ‘கடக்நாத்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஓமம், பெருங்காயம், மிளகு, பிரப்பங் கிழங்கு எனப் பல மருத்துவ மூலிகைகளைச் சேர்த்துச் செய்யப்படும் கருங்கோழி சூரணத்தால் விக்கல், குட்ட நோய்கள், மூலம், வாயு நீங்கும் என்பதற்கான பாடல் குறிப்பு உண்டு.
எங்கும் எதிலும் பிராய்லர்
ஐந்து நட்சத்திர உணவகங்கள் முதல் சந்துகள் தோறும் நட்சத்திரங்கள்போலச் சிதறிக் கிடக்கும் தள்ளுவண்டிக் கடைகள்வரை, நோயை உண்டாக்கச் சாத்தியமுள்ள பிராய்லர் கோழிகள் செயற்கை மணம் மூலமாகவும் விளம்பரங்கள் மூலமாகவும் அழைப்புவிடுப்பது சாதாரணமாகிவிட்டது. சிக்கன் 65, சிக்கன் டிக்கா, லாலி-பாப் சிக்கன், கிரில் சிக்கன், சபர்மா என நோய் உண்டாக்கும் பிராய்லர் கோழிகளைக் கொண்டு செய்யப்படும் உணவு வகைகளுக்கு மயங்காமல், நாட்டுக் கோழி ரகங்களுக்கு முன்னுரிமை அளிப்பது சிறந்தது.
சில இடங்களில், பல நாட்களாகக் குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சி (Frozen chicken) மூலம் தயாரிக்கப்படும் உணவு, பல உடல் உபாதைகளை உண்டாக்கும் சாத்தியம் உள்ளது. சுவைக்காகவும் அலங்காரத்துக்காகவும் இறைச்சி உணவுகளில் சேர்க்கப்படும் சுவையூட்டிகளும் வேதிப்பொருட்களும் நம் உடலுக்குள் களேபரத்தை உண்டாக்கி, நிச்சயம் ஆரோக்கியத்தைச் சீரழிக்கும். அதிலும் இன்றைய உணவு வணிகம், இளைஞர்களைத் தினமும் அசைவ உணவைச் சாப்பிட வைத்து வருவாயைப் பெருக்க மறைமுக அரசியல் செய்துவருவதால் கவனம் அத்தியாவசியம்.
மரபின் சின்னம் கோழிகள்
“கறுப்புறு மனமும் கண்ணிற் சிவப்புறு சூட்டும் காட்டி” – எனச் சேவல் சண்டைகளின் நயத்தை விளக்குகிறார் கம்பர். சோழ நாட்டின் தலைநகரமே கோழியின் பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது. வீரம் மற்றும் ஆரோக்கியத்தின் சின்னமாக விளங்கிய கோழியினங்கள், இப்போது உடல் குறையோடு முழுக்க முழுக்க வியாபாரத்துக்காக வளர்க்கப்படுகின்றன. கோழி உணவுப் பிரியர்கள் பிராய்லர் கோழிகளைத் தவிர்த்து, காலம் மற்றும் உடல்நிலை சார்ந்து நாட்டுக் கோழி இனங்களை உட்கொள்வது நல்வாழ்வுக்குப் பெரிதும் உதவும்.
ஐந்து நட்சத்திர உணவகங்கள் முதல் சந்துகள் தோறும் நட்சத்திரங்கள்போலச் சிதறிக் கிடக்கும் தள்ளுவண்டிக் கடைகள்வரை, நோயை உண்டாக்கச் சாத்தியமுள்ள பிராய்லர் கோழிகள் செயற்கை மணம் மூலமாகவும் விளம்பரங்கள் மூலமாகவும் அழைப்புவிடுப்பது சாதாரணமாகிவிட்டது.
டாக்டர்.வி.விக்ரம்குமார், கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
நன்றி: தி இந்து தமிழ்

துபாய் பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி ரூ.80 லட்சம் மோசடி மும்பை வாலிபர் கைது:

துபாய்/மும்பை

    விவாகரத்தான துபாய் பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி, ரூ.80 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மும்பை வாலிபர் கைது செய்யப்பட்டார்.துபாய் பெண்
    மும்பை அந்தேரி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சமீர்(வயது35). இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக் வாயிலாக துபாயில் வசித்து வரும் விவாகரத்தான பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இந்தநிலையில் சமீர் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார். இதை நம்பிய அந்த பெண், சமீரை சந்திக்க 2 முறை மும்பை வந்தார். அப்போது சமீர் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்தார்.
    பின்னர் தனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும், உடல்நிலை சரியில்லை என பல்வேறு காரணங்களை கூறி ரூ.80 லட்சத்தை கறந்து உள்ளார்.வாலிபர் கைது இந்தநிலையில் சமீர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த துபாய் பெண், கடந்த மார்ச் மாதம் சமீர் மீது எம்.ஐ.டி.சி. போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு மற்றும் மோசடி புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சமீரை தேடிவந்தனர்.
    இந்தநிலையில் தலைமறைவாக இருந்த சமீர் சம்பவத்தன்று மலாடு பகுதிக்கு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சமீரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துபாய் மற்றும் அமீரகத்தில் மாதச்சம்பளம் 2000 திர்ஹம்ஸ்க்கு கீழ் குறைவாக பெரும் தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதி - நிறுவனங்களுக்கு அமீரகம் உத்தரவு:

  
   அமீரகத்தின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 10 விகிதத்தினரே அமீரக குடிமக்கள் மற்ற அனைவரும் பணி நிமித்தமாக உலக முழுவதிலிருந்தும் குடியேறியவர்களே. அதிலும் தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற தெற்காசிய நாட்டவர்களில் பெரும்பாலோர் மிகக் குறைந்து ஊதியத்திற்கு பணிபுரிகின்ற தொழிலாளர்களே.
    எதிர்வரும் டிசம்பர் மாதம் 2016 முதல் குறைந்தபட்சம் 50 தொழிலாளர்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரியும் அனைத்து கம்பெனிகளும் மிகக்குறைந்த சம்பளமாக $540 (540 டாலர் = 2000 திர்ஹம்) மற்றும் அதற்கு கீழ் சம்பளம் பெறும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கம்பெனியின் செலவிலேயே சுகாதாரமான தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் இதைனை மீறும் கம்பெனிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இதன் தொடர்பான தொடர் சோதனைகளும் நடத்தப்பெறும் அமீரக மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
   இந்த உத்தரவின் மூலம் பல லட்சக்கணக்கான தெற்கு ஆசிய நாட்டவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் இதேபோல் கடந்த வருடம் ஊழியர்கள் தங்களுடைய ஒப்பந்தத்தை இடைமுறித்து கொண்டு புதிய நிறுவனங்களில் சேர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதையும் நினைவுகூர்ந்தார் அமீரக மனிதவளத்துறை அமைச்சர் சகர் கோபாஷ் அவர்கள்.
   கட்டுமானம், பராமரிப்பு போன்ற பல துறைகளில் கம்பெனி தங்குமிடம் என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும் குறைவான குறைந்தபட்ச சம்பளத்தை குறிப்பிட்டு சலுகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

Wednesday, 20 July 2016

வேலை வாய்ப்பு தகவல்கள் ...சென்னை உயர் நீதிமன்றத்தில் முஸ்லிம்களுக்கு 11 இடங்கள் ஒதுக்கீடு!

வேலை வாய்ப்பு தகவல்கள் ...

சென்னை உயர் நீதிமன்றத்தில் 317 பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
முஸ்லிம்களுக்கு 11 இடங்கள் ஒதுக்கீடு!
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.பணி: Personal Assistant to the Hon’ble Judges - 76
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400 + சிறப்பு சம்பளம்
2.பணி: Personal Assistant (to the Registrars) - 07
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600 + சிறப்பு சம்பளம்
3.பணி: Personal Clerk (to the deputy Registrars) - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 + சிறப்பு சம்பளம்
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: பொது கல்விக்கான தேர்வு 27.08.2016 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
4.பணி: Computer Operator - 61
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
5.பணி: Typist - 84
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 + சிறப்பு சம்பளம்
6.பணி: Reader / Examiner - 80
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
7.பணி: Cashier - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
8.பணி: Xerox Operator - 06
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,200 + தர ஊதியம் ரூ.1,650
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: தாள் -I : பொது கல்வி, பொதுத் தமிழ், ஆங்கிலத்துக்கான தேர்வு 28.08.2016 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
தாள் -II :  கணினி தேர்வு 28.08.2016 அன்று மதியம் 2.30 மணி முதல் 4 மணி வரை நடைபெறும். (Computer Operator பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும்)
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ஒரு முறை பதிவுக் கட்டணம் ரூ.50 (ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை) தேர்வுக் கட்டணம்: ரூ.100
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.08.2016
வங்கிகள் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 05.08.2016
மேலும், கல்வித் தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_10_not_eng_high_court_services.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

காஷ்மீரில் மத்திய அரசின் அடக்குமுறை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடைபெற்றது. ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.குழந்தைகளுடன் பெண்கள் வந்திருந்தனர்.தென் சென்னை மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அல்தாபி கண்டன உரை நிகழ்த்தினார். அப்போது


ஜம்மு-காஷ்மீரில், ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் முக்கிய தலைவரான புர்ஹான் வானி, போலீசாரால் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தின் பல பகுதிகளிலும் கலவரம் மூண்டுள்ளது. ராணுவம் அதிகளவில் குவிக்கப்பட்டு, இதுவரை, ராணுவ-பொதுமக்கள் மோதலில், சுமார் 37 இளைஞர்கள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.போராட்டக்காரர்களை ஒடுக்குகிறோம் என்கிற பெயரில் பொது மக்கள் மீது கொடூர தாக்குதலை ராணுவம் நிகழ்த்தி கொண்டிருக்கிறது.
அவர்களை ஒடுக்க சர்வசாதாரணமாக துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.உயிரிழப்புகள் அதிகாமானதால், தற்போது பெல்லட் துப்பாக்கிகளை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகை துப்பாக்கிகளால், உயிரிழப்புகள் ஏற்படாது. ஆனால், பார்வை பறிபோகும். இதுவரை, நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.பெல்லட் துப்பாக்கி குண்டுகள் கண்ணை தாக்கிய போது, தலையில் தீப்பற்றி எரிந்தது போல் உணர்வு ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கூறுகின்றனர். இந்த குண்டுகள் உடலை சல்லடையாக ஆக்கும் ஆற்றல் உள்ளது.பாலஸ்தீனர்களை கொடூர ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி வரும் இஸ்ரேல்தான், முதன்முதலாக இத்தகைய பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்த துவங்கியது. இந்த பெல்லட் துப்பாக்கி என்பது 500 உலோக துண்டுகள் மற்றும் துப்பாக்கி துகள்களை உள்ளடக்கியது. துப்பாக்கி வெடிக்கும்போது உலோக துண்டுகள் சிதறிப் பாய்ந்து, 10 மீட்டர் தூரத்தில் இருப்பவர்களுக்கும் ஆழமான காயத்தை ஏற்படுத்தும்.இஸ்ரேலின் பாணியில், தற்போது மத்திய அரசும் போராட்டக்காரர்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கியை பயன்படுத்தி வருகிறது.உள்நாட்டு மக்களின் உயிரை எடுப்பதும், அவர்களை குருடாக்குவதும், ஊனமாக்குவதுமா அரசின் வேலை? ஆனால் இதனை பாஜக ராணுவத்தின் துணை கொண்டு செய்து கொண்டிருக்கிறது.
அநியாய மனப்போக்குடன் நடந்துகொள்ளும் மத்திய பா.ஜ.க அரசின் செயல்பாடுகள் மிகவும் கண்டனத்துக்குரியது. என குறிப்பிட்டார்.
மாநில செயலாளர்கள் அப்துல்லா. சிராஜுதீன்.அப்துல் ரஹ்மான். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நன்றி :http://vtv24x7.com/காஷ்மீரில்-மத்திய-அரசின்/

Tuesday, 19 July 2016

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய உலகளாவிய மக்கள் போராட்டம்!


காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய உலகளாவிய மக்கள் போராட்டம்!
உலக அளவில் கண்டணத்திற்கு ஆளாகும் பயங்கரவாத மோடி அரசு...!
மோடி அரசே! இந்திய ராணுவமே நிறுத்து உன் கொலைவெறி தாக்குதலை...!
#World_support_kashmir

ஈறுகளில் இருந்து ஏன் இரத்தம் கசிகிறது என்று தெரியுமா?


வாய் ஆரோக்கியம் என்பது ஒருவருக்கு மிகவும் இன்றியமையாதது. என்ன தான் பற்களுக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தாலும், சிலருக்கு ஈறுகளில் இருந்து மட்டும் இரத்தம் கசியும். அதற்கு காரணம் என்னவென்று கேட்டால், சரியாக பற்களைத் துலக்குவதில்லை என்று கூறுவார்கள்.
ஆனால் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. பற்களைத் துலக்கும் போது ஈறுகளில் இருந்து இரத்தம் கசிந்தால், பல்லைச்சுற்றி நோய்கள் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. சில ஈறு நோய்கள் முழு பல்லையும் அழிந்து, பற்களை விழச் செய்யும்.
எனவே பற்களில் பற்காறைகள் படியும் போதே, அதனை போக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அது மெதுவாக நாளடைவில் வாய் ஆரோக்கியத்தை முழுமையாக போக்கிவிடும். இப்போது ஈறுகளில் இருந்து ஏன் இரத்தம் கசிகிறது என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

ஈறுகளில் இரத்தம் கசிவதற்கு மோசமான வாய் ஆரோக்கியம் முதன்மையான காரணமாக இருக்கும். பற்களில் காறைகள் அதிகமா சேரும் போது, ஈறுகளில் எரிச்சல் ஏற்பட்டு, அதனால் வீக்கமடைந்து, பின் இரத்தக் கசிவை உண்டாக்கும்.
சிலருக்கு பற்களில் இடைவெளிகள் இருக்கும். இப்படி இடைவெளியுடனான பற்களைக் கொண்டிருந்தால், உணவுத் துகள்கள் எளிதில் மாட்டிக் கொள்ளும். இம்மாதிரியான பற்களைக் கொண்டவர்கள் தினமும் ப்ளாஷ் செய்ய வேண்டம். இதனால் உணவுத் துகள் வெளியேற்றப்பட்டு, பாக்டீரியாக்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, ஈறுகள் பாதிக்கப்படுவது குறையும்.
வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறேன் என்று சிலர் ஒரு நாளைக்கு பலமுறை அல்லது ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்னரும் பற்களைத் துலக்குவார்கள். இப்படி அளவுக்கு அதிகமாக ஒருவர் பற்களைத் துலக்கினால், அது ஈறுகளில் பாதிப்பை உண்டாக்கி இரத்தக் கசிவை ஏற்படுத்தும்.
நீங்கள் உண்ணும் உணவில் போதிய அளவு வைட்டமின் சி இல்லாவிட்டாலும், ஈறுகளில் வலி மற்றும் வீக்கத்துடன், இரத்தக் கசிவையும் சந்திக்க நேரிடும். எனவே வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றை அன்றாட உணவில் சிறிது சேர்த்து வர வேண்டியது அவசியம்.
வைட்டமின் கே குறைபாடும் ஈறுகளில் இரத்தக் கசிவை ஏற்படுத்தும். பொதுவாக வைட்டமின் கே என்பது ஓர் உறைய வைக்கும் ஓர் சத்து. இது உடலில் குறைவாக இருக்கும் போது, ஈறுகளில் இரத்தக் கசிவை சந்திக்க நேரிடும்.

பெண்களின் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் பூப்படையும் போது, கர்ப்ப காலம், மாதவிடாய் இறுதி கால அல்லது கருத்தடை பொருட்களை பயன்படுத்தும் போது ஏற்படும். இப்படி ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக இருக்கும் காலங்களில், ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படும்.
குறிப்பிட்ட மருந்துகளும் ஈறுகளில் இரத்தக் கசிவை உண்டாக்கும். குறிப்பாக ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளான ஹீமோதெரபி மேற்கொண்டாலும், ஈறுகளில் இருந்து இரத்தம் கசியும்.
கல்லீரல் பிரச்சனைகளும் ஈறுகளில் இரத்தக்கசிவை உண்டாக்கும். அதிலும் மது அதிகமாக அருந்தினால், கல்லீரலின் மெட்டபாலிசம் நிலைக்குலைந்து ஈறுகளில் இரத்தக்கசிவை ஏற்படுத்தும்.

ஜாகிர் நாயக்கின் அரசு சாரா நிறுவனம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை.



ஜாகிர் நாயக்கின் அரசு சாரா நிறுவனம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை
சமீபத்தில் டாக்காவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவன் மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தான். ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு வங்காளதேச முஸ்லிம்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை அடுத்து தற்போது சவுதியில் இருக்கும் ஜாகிர் நாயக்கின் பேச்சுகள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் ஜாகிர் நாயக் நடத்திவரும் அரசு சாரா நிறுவனமான ‘இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை’யின் பின்னணி மற்றும் நிதி பரிமாற்றம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு இருப்பதாக அத்துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு, பிரிட்டன், சவுதி மற்றும் சில கிழக்காசிய நாடுகளிலிருந்து தொடர்ந்து நிதி அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து 15 கோடி ரூபாய் நன்கொடையாக வந்துள்ளது குறித்தும் மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நன்றி: தமிழ் செய்திகள்.

Monday, 18 July 2016

IS பயங்கரவாதிகள் இஸ்லாமியர்களே இல்லை, பிரிட்டன் பிரதமர், குர்ஆன் பற்றியும் விளக்கம் (வீடியோ)



அப்பாவி முஸ்லிம்களை கொல்லும் IS தீவிரவாதிகள் முஸ்லிம்களே இல்லை - பிரிட்டன் பிரதமர் பேச்சு.....!!

பிரிட்டனில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் தெரசா மே அவர்கள் பதவியேற்ற பிறகு குர்ஆன் வசனங்களை படித்து இஸ்லாத்திற்கும் IS தீவிரவாத இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பேசினார். 

மேலும் பல அப்பாவி முஸ்லிம்களை கொல்லும் IS தீவிரவாதிகள் முஸ்லிம்களே இல்லை என்று தெரிவித்துள்ளார்.


Saturday, 16 July 2016

கங்கை நீர் புற்று நோயை உண்டாக்கும்: ஆய்வு.


புதுடெல்லி:
   புனித நதியாக கருதப்படும் கங்கை நதி மாசடைந்து பல ஆண்டு களாகிவிட்ட  நிலையில், தற்போது கங்கை நீரில் புற்று நோயை உண்டாக்கும்  கார்சினோஜென்ஸ் (carcinogens)எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய  காரணிகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பல லட்சம் இந்தியர்களின் ஜீவநதியாக விளங்கும் கங்கை,இந்துக்களின் புனித  நதியாகவும் கருதப்படுகிறது.
இந்த நதியில் மூழ்கி எழுந்தால் தீராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்ற  நம்பிக்கையில்,தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த புனித நதியில் மூழ்கி எழுகின்றன்ர்.
அதே சமயம் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கையில் இறந்தவர்களின்  உடலை கங்கை நதியில் விட்டுவிடுவதாலும், தினமும் இறந்தவர்களின் அஸ்தியை  அங்கு கரைப்பதாலும் கங்கை நீர் பல ஆண்டுகளாக அழுக்கடைந்து,மாசுபட்டு வருகிறது.
தற்போது கங்கை நதிக்கு செல்பவ்ர்கள் புனித நீராடலாம் என்று மூழ்கி  எழுந்தால்,அவர்களை உரசிக்கொண்டு ஒரு பிணம் மிதந்து செல்வதை சர்வ சாதாரணமாக காணலாம்.
இந்நிலையில், இந்த அளவுக்கு மாசடைந்துபோயிருக்கும் கங்கை நீரில், புற்றுநோயை  உண்டாக்கும் கார்சினோஜென்ஸ்(carcinogens)எனப்படும் புற்று நோயை  உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
தேசிய புற்றுநோய் பதிவு மையம் மேற்கொண்ட ஆராய்ச்சியிலேயே இத்தகவல்  தெரியவந்துள்ளது.
குறிப்பாக கங்கை நதியையொட்டிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு,நாட்டின்  பிறப்பகுதிகளில் வசிப்பவர்களை காட்டிலும் மிக எளிதில் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு  அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்கை நீரில் மிக அதிக உலோகத்தன்மையும்,நச்சு ரசாயனமும்,குறிப்பாக  உத்தரப்பிரதேசம்,பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் உள்ள கங்கை நதி படுகை  பகுதிகளில் இது அதிகமாக காணப்படுவதாகவும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/india/10838.art

மாவீரன் மருதநாயகம் & மறைக்கபட்ட ஒரு வீரத்தமிழனின் வரலாறு .


        1724இல் இராமநாதபுரம் பனையூரில் மருதநாயகம் பிள்ளையாகப் பிறந்து முகமது யூசுப் கானாக வளர்ந்து கமாண்டோ கானாக உயர்ந்தவன். மதுரை மக்களால், “கமாந்தோ கான்’’ என அன்பாக அழைக்கப்பட்டவன். இந்துவாகப் பிறந்து, கிறிஸ்துவர்களிடம் கல்விப் பயின்று இஸ்லாமியனாக இறந்தவன். 40 வயதே வாழ்ந்தாலும் நாடறிந்தவனாக மட்டுமல்ல இந்திய வரலாற்றில் சிறந்தப் போர் வீரனாக, இராணுவ நிபுணனாக, தன்னை நிலைநிறுத்திக் கொண்டவன் "கமாந்தோ கான்". இந்திய இராணுவ வரலாற்றில் ஹைதர் அலியும், முகமது யூசுப் கானும் குறிப்பிடத்தக்கவர்கள். ஹைதர் அலி வேகத்திற்கு புகழ் பெற்றவர் என்றால், முகமது யூசுப் கான் விவேகத்துடன் தாக்குதலில் சிறந்தவன். ஆற்காட்டு நவாபும், கிழக்கிந்திய கம்பெனியும் பாளையக்காரர்களை அடக்கிட யூசுப் கானை முழமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
பனையூரில் இருந்த இல்லத்துப் பிள்ளைமார்களின் பல குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவின, மருதநாயகத்தின் குடும்பமும் அதில் ஒன்று. கட்டுக் கடங்காமல் சுற்றித்திறிந்த யூசுப்கான் பாண்டிச்சேரிக்கு வந்து அன்றைய பிரெஞ்சு கவர்னர் மான்சர் காக்லா வீட்டில் வேலைக்காரனாகச் சேர்ந்தான். சில காலம் கழித்து வேலையிலிருந்து விலகி அல்லது நீக்கப்பட்டு தஞ்சைக்கு சென்று படைவீரனாகச் சேர்ந்தான். தஞ்சையில் தளபதி பிரட்டன், யூசுப் கானுக்கு கல்வி கற்றுக் கொடுத்தான். தனது ஆர்வத்தால் தமிழ், பிரெஞ்சு, போர்த்துகீசியம், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளை கற்றுத் தேர்ந்தான். அங்கிருந்து நெல்லூருக்கு மாற்றப்பட்டான் அங்கு தண்டல்காரனாக, ஹவில்தாராக, சுபேதார் என பதவி உயர்வை உழைப்பால் அடைந்தான். ஆற்காட்டில் சந்தா சாஹிப்புடன் வந்து தங்கி இருந்தபோது யூசுப்கானிடம் இருந்த வீரம், விவேகத்துடன் காதலும் சேர்ந்து கொண்டது. இந்தோ ஐரோப்பிய கலப்பின வழித்தோன்றலான மார்சியா என்ற பெண்ணைக் காதலித்து மணம் முடித்தான்.
திறமைக்கு திறவுகோல்
1750 களில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுகாரர்களுக்கும் இந்தியாவில் நாடு பிடியுத்தம் நடந்த காலம். அதேநேரத்தில் 1751இல் ஆற்காட்டு நவாபு பதவிக்கு முகமது அலி வாலாஜாவிற்கும், சந்தா சாஹிப்பிற்கும் போட்டியும் யுத்தமும் மூண்டது. முகமது அலி வாலாஜா திருச்சிக்கு தப்பித்து ஆங்கிலேயர்களிடம் சரண் அடைந்தார். சந்தா சாஹிப்பின் தாக்குதலை இராபர்ட்கிளைவ் தலைமையில் ஆங்கிலேயர்கள் முறியடித்தனர். ஆற்காட்டை மீட்பதற்காக சந்தா சாஹிப் தனது மகன் இராசா சாஹிப் தலைமையில் 10,000 படைகளை அனுப்பினான். இவர்களுக்கு உறுதுணையாக நெல்லூர் சுபேதாராக இருந்த யூசுப்கான் இருந்தான். யுத்தத்தில் பிரெஞ்சு ஆதரவளித்த சந்தா சாஹிப் படை தோல்வி கண்டது. ஆங்கிலேயர்கள் முகமது அலி வாலாஜாவை நவாபாக நியமித்தனர். இதற்கு கைமாறாக மதுரை மற்றும் நெல்லையில் வரி வசூலிக்கும் உரிமையை கிழக்கிந்திய கம்பெனிக்கு கொடுத்தான் நவாபு
யுத்தக்களத்தில் முகமது யூசுப்கானின் திறமை கண்டு வியந்தான் இராபர்ட்கிளைவ் தனது படையுடன் அவனை இணைத்தான். மேஜர் ஸ்டிங்கர்லா, யூசுப்கானுக்கு ஐரோப்பிய இராணுவ முறைகளில் பயிற்சி அளித்தான். 1755ஆம் ஆண்டுகளில் மதுரை, நெல்லை பாளையக்காரர்களை அடக்குவதற்காக தளபதி அலெக்சாண்டர் கெரானுடன் யூசுப்கான் அனுப்பி வைக்கப்பட்டான்.
எட்டயபுரம், பாஞ்சாலங்குறிஞ்சி படைகளின் தளபதியாக இருந்த “வீரன்’’ அழகு முத்துக்கோனை, பெருநாழிகாட்டில் முகமது யூசுப்கான் சாகடித்தான். மறவர் பாளையங்களை தாக்கி வெற்றி கொண்டான். பூலித்தேவனை தோற்கடித்தான். மதுரையில் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதில் வெற்றி பெற்றான். தனது வெற்றிப் பயணத்தை தடைகளைத் தகர்த்து தொடர்ந்தான். இக்காலத்தில் சென்னையை பிரெஞ்சுப்படை, முற்றுகையிட்டதால் யூசுப்கான் சென்னைக்கு அழைக்கப்பட்டான். பிரெஞ்சு தளபதி தாமஸ் ஆர்தர்லாலி தலைமையில் முற்றுகையிட்ட பிரெஞ்சு படையை 1758இல் யூசுப்கான் யாரும் எதிர்பாராத நேரத்தில் கொரில்லாத் தாக்குதல் நடத்தி அதிசயிக்கத் தக்கவகையில் தோற்கடித்தான். இந்த தாக்குதல் பற்றி லாலி கூறுகையில், யூசுப்கான் தலைமையிலான படைகள் ஈக்களைப் போல் பறந்தார்கள் ஒரு பக்கத்தில் தடுத்து தாக்கிட முயலும்போது, அடுத்த நிமிடம் மறுபக்கத்திலிருந்து தாக்கினார்கள் என்று கூறினார். இவ்வெற்றி முகமது யூசுப்கானுக்கு பெரும் புகழ் தேடித்தந்தது. கிழக்கிந்திய கம்பெனி முகமது யூசுப்கானுக்கு “கமாண்டன்ட்’’ பதவி உயர்வை அளித்தது.
மதுரையின் மகுடத்தில்.
கமாண்டோ கான் என்ற பதவி உயர்வுடன் முகமது யூசுப் கானை மதுரைக்கு மீண்டும் அனுப்பி வைத்தது கிழக்கிந்திய கம்பெனி. மதுரை மற்றும் திருநெல்வேலியில் வரிவசூல் செய்து வருடத்திற்கு 5 லட்சம் கொடுக்க வேண்டுமென கூறினர். யூசுப்கான் தெற்குசீமையின் தளநாயகனாக ஆட்சிபுரிய ஆரம்பித்தான். யூசுப்கான் சென்னையில் இருந்த போது மீனாட்சி அம்மன் கோயில் நிலங்களை எல்லாம் சூறையாடி இருந்தனர். யூசுப்கான் சூறையாடிய கயவர்களை தோற்கடித்து நிலங்களை மீட்டு கோயிலிடம் ஒப்படைத்தான். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை நிலைநாட்டுவதற்கு அன்றைய தினம் கள்ளர்கள் சவாலாக இருந்தனர். அவர்களது கலவரங்களை அடக்கி சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தினான். நத்தம் பகுதியில் கலவரங்களை அடக்கியபோது 2000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.
மதுரையின் குளங்களையும், ஏரிகளையும் பழுது பார்த்து பாசன வசதிகளை மேம்படுத்தினான். இடிந்து கிடந்த கோட்டைகளை பழுது பார்த்தான். நிதித்துறை மற்றும் வணிகர்கள் பாதுபாப்பை மேம்படுத்தினான். யூசுப்கான் காலத்தில் நிர்வாக செயல்பாடு மேம்பட்டது. இதனால் மதுரை மக்கள் இவனை “கமாந்தோகான்’’ என்று அன்பாக அழைத்தனர். அவர்களின் உள்ளங்களிலேயே குடியேறினான். இதனால் நவாபுக்கும், கம்பெனிக்கும் வருவாய் பெருகினாலும் யூசுப்கான் வலுவாவதை பெரும் ஆபத்தாகக் கருதினர்.
நவாப்பின் நயவஞ்சகம்
முகமது யூசுப்கானின் செல்வாக்கை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் முயற்சித்தான் திடீரென புதிய உத்தரவைப் பிறப்பித்தான். வணிகர்களும், மற்றவர்களும் என் மூலமாகத்தான் வரிகளை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டான். யூசுப்கான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை கிழக்கிந்திய கம்பெனியும் தந்திரமாகக் காயை நகர்த்தினர். நவாப்பின் பணியாளர் தான் யூசுப்கான் என்று அறிவித்தனர். இதனால் நவாபுக்கும், யூசுப்கானுக்கும் மோதல் அதிகமானது. டெல்லியின் ஷாவும், ஹைதராபாத் நிஜாம் கிமாம் அலியும் யூசுப்கான் தான் மதுரையின் சட்டப்படியான கவர்னர் என்று அறிவித்தாலும், நவாப்பும், கம்பெனியும் இதை ஏற்கவில்லை. 1761ஆம் ஆண்டு 7லட்சம் வரிவசூல் செய்து செலுத்திட முன்வந்தான்.
நவாபும், கம்பெனியும் எற்கவில்லை. காரணம் தங்களை விட வலுவான மக்கள் செல்வாக்கு உள்ளவனை வளர்க்க விரும்பவில்லை. தெற்கு சீமையில் இருந்த பல கம்பெனி வணிகர்கள், யூசுப்கான் மக்களிடம் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வை உருவாக்கியுள்ளான் என்று புகார் தெரிவித்திருந்தனர். எனவே, கம்பெனியும், நவாபும் யூசுப் கானை கைது செய்து வர கேப்டன் மேன்சனிடம் உத்திரவிட்டனர். இதனிடையே யூசுப்கான் “தன்னை சுதந்திர ஆட்சியாளன்’’ என்று முதன்முதலாக அறிவித்துக்கொண்டு, படைதிரட்டினான் மதுரையில் 27,000 படைவீரர்களைக் கொண்டு பலமாக இருந்தான். அவனுக்கு ஆதரவாக பிரெஞ்சுத் தூதர்கள் வந்து சேர்ந்தனர்.
துரோகத்தின் வெற்றி
துரோகம் பல நேரத்தில் வீரம் செறிந்த போரின் முடிவை விரைவுபடுத்திவிடும், வீரர்கள் யுத்தக்களத்திலே வீழ்வதை தடுத்திடும். இங்கே யூசுப்கானுக்கும் அதுதான் நேர்ந்தது. 1763 செப்டம்பர் மாதம் காலோனல் மேன்சன் தலைமையில் மதுரையைத் தாக்கினர் தஞ்சை, திருவிதாங்கூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, பாளையங்கள் கும்பினியருடன் கைகோர்த்தனர். மழையின் காரணமாக தாக்குதல் நிறுத்தப்பட்டது. மீண்டும் கம்பெனி படையும், நவாபுவின் படையும் இணைந்து 22 நாட்கள் தாக்குதலை தொடுத்தனர். 120 ஐரோப்பியர்களும் 9 அதிகாரிகளும் மாண்டனர். கும்பினியர் படை நிலைகுலைந்து பின்வாங்கியது. மீண்டும் சென்னை, பம்பாய் பகுதிகளிலிருந்து அதிக படைகள் நவீன ஆயுதங்கள் தருவித்து மதுரை மேஜர் பிரஸ்டன் தலைமையில் தாக்குதல் தொடங்கினர்.
முதலில் நத்தம் கள்ளநாட்டில் பாதைக் காவல்கள் அனைத்தையும் கைப்பற்றினர். 1764 ஜூன் மாதம் கோட்டையை முற்றுகையிட்டனர். கோட்டையைத் தகர்க்க முடியவில்லை. கும்பினியர் படையில் 160 பேர்கள் பலியாகினர். தாக்குதல் மூலம் தோற்கடிக்கும் பாத்தியங்கள் குறைவு எனக் கருதினர். எனவே, கோட்டைக்குச் செல்லும் உணவை நிறுத்தினர். குதிரையும், குரங்கும் உணவாக வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு குடிநீரை நிறுத்தினர். இதனால் கோட்டைக்குள் இருந்த படைகள் மற்றும் மக்களிடம் சோர்வும், குழப்பமும் ஏற்பட்டது. யூசுப்கான் தப்பிக்கும் முயற்சி வெற்றிபெறவில்லை. சரணடைய பிரெஞ்சு தளபதி மார்சன்ட் முடிவெடுத்தான். இந்த சர்ச்சையால் யூசுப்கான் தளபதியை அறைந்தான். இந்த அவமானத்தை பழி தீர்க்க எண்ணினான் மார்சன்ட், யூசுப்கான் சரண் அடையாமல் சண்டையிட்டு வீரமரணம் எய்திட விரும்பினான். இதனிடையே ஆற்காடு நவாபு, சிவகங்கை தளபதி தாண்டவராய பிள்ளை மூலமாக மதுரை கோட்டையில் இருந்த திவான் சீனிவாசராவ், யூசுப்கான், பாக்டா பாபா சாஹிப், தளபதிமார்சன் பேசி வஞ்சக வலையில் வீழ்த்த திட்டமினர். சரணடைவோருக்கும், சண்டையிட்டு மடிய விரும்பியவர்களுக்கும் இடையே துரோகத்தை அரங்கேற்றினர்.
1764 அக் 13இல் முகமது யூசுப் கான் தொழுகையில் ஈடுபட்டபோது சீனிவாசராவ், பாபாசாஹிப், மார்சன், இன்னும் சிலர் யூசுப்கானை அவனது டர்பன் கொண்டு கட்டிப்போட்டுவிட்டனர். விவரம் அறிந்து யூசுப்கானின் மனைவி சிறுபடையுடன் வந்தாலும், துரோகிகளிடம் வெற்றி பெற முடியவில்லை. எனவே, யூசுப்கான் கும்பினிப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டான். அக் 15ஆம் நாள் மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டான். இருமுறை கயிறு அறுந்து கீழே வீழ்ந்தான். மூன்றாவது முறை தூக்குக்கயிறு அவனது உயிரைப் பறித்தது. அவனைக் கண்டு அஞ்சு நடுங்கிய கும்பினியர்களும், நவாபும் அவனது தலையை திருச்சிக்கும், கைகளை பாளையங்கோட்டைக்கும், கால்களை தஞ்சைக்கும், திருவிதாங்கூருக்கும் அனுப்பிவைத்தனர்.
உடலை, தூக்கிலிட்ட சம்மட்டிபுரத்தில் புதைத்தனர். 1808இல் அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டு "கான்சாஹிப் பள்ளி வாசல்" என்று அழைக்கப்படுகிறது. இன்றும் ஏழாவது தலை முறையாக அதை பராமரித்து வருகின்றனர். கும்பினியர்களை எதிர்த்ததால் முதன்முதலாக தூக்கிலிப்பட்ட வீரன் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வீரத்தின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றான். தன்னை “சுதந்திர ஆட்சியாளன்’’ என்று பறைசாற்றி கும்பினியர்களுடன் போரிட்டான் வீரமரணம் எய்தினான் 40 வயதே நிரம்பிய “கமாந்தோ கான்’’.

துருக்கியில் தமிழக பள்ளி மாணவர்கள் உட்பட 200 இந்திய மாணவ,மாணவிகள் மற்றும் மற்றும் காரணமாக தங்கியுள்ள பலர் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் தவிப்பு:

துருக்கி:

   துருக்கியில் நடைபெற்று வரும் பள்ளிகளுக்கான உலக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் சென்ற 200 இந்திய மாணவ, மாணவிகள், சிக்கித் தவிக்கின்றனர்.
   துருக்கியில் ராணுவ புரட்சி காரணமாக பதற்றமான சூழல் நிலவுவதால், போட்டி நடைபெறும் பகுதியில் இருந்து யாரும் வெளியேற வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. துருக்கியில் உள்ள ட்ராப்சோன் மாகாணத்தில் பள்ளிகளுக்கான உலக விளையாட்டுப் போட்டிகள் கடந்த 11 ஆம் தேதி தொடங்கின. தடகளம், நீச்சல், மல்யுத்தம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.
    இந்தப் போட்டியில் 20க்கும் அதிகமான தமிழர்கள் உட்பட 200 இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர். துருக்கியில் தற்போது பதற்றமான சூழல் இருப்பதால், போட்டிகள் தொடர்ந்து நடைபெறுமா அல்லது கைவிடப்படுமா என்பது போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்தியர்கள் தவிப்பு: ஹெல்ப்லைன் அறிவிப்பு:
   துருக்கியில் இந்தியர்கள் பலர் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கா அங்காரா நகரில் +905303142203, இஸ்தான்புல் நகரில் +905305671095 ஆகிய ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சுஷ்மா வேண்டுகோள்:
துருக்கியில் நிலைமை கட்டுக்குள் வரும் வரை இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழர்கள் தவிப்பு:
துருக்கியில் பள்ளி விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் அங்கு சிக்கிக் கொண்டுள்ளனர். அந்த வீரர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என வெளியுறவு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. டிராப்சோன் பகுதியில் உள்ள விளையாட்டு கிராமத்தில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

துருக்கி நாட்டை கைப்பற்றியது அந்நாட்டு இராணுவம்:

துருக்கி:


   துருக்கி நாட்டில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கிறது. பிரதமராக பினாலி எல்ட்ரீம் உள்ளார். இந்நிலையில், அரசை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு இராணுவத்தினர் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
     இதனால் இராணுவ சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
    தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு அலுவலகங்களிலும் ராணுவம் குவிக்கப்பட்டதால் துருக்கியில் பரபரப்பு காணப்படுகிறது.
    தலைநகர் இஸ்தான்புல்லில் அமைந்துள்ள அட்டாடர்க் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது.
    இராணுவத்தினரின் இந்த முயற்சிக்கு அதிபர் டைப்பி எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் தெருவில் இறங்கி போராட வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.
     இதனிடையே இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் எல்ட்ரீம், இது மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சி என்றும், அவர்கள் நினைத்தால் மட்டுமே அகற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.
    டி.வி.சானல் ஒன்றிற்கு பிரதமர் பேட்டியளித்த அவர், ”எனது ஆட்சியை கவிழ்த்து ராணுவம் கைப்பற்ற முயற்சி செய்கிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ராணுவத்தை தூண்டிவிடும் பின்னணியில் உள்ளவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.
ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை